ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
கிளிநொச்சி – வலயக் கல்விப் பணிப்பாளர், இரு அதிபர்களை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்தது… January 11, 2019 கிளிநொச்சியில் தரம் ஆறில் மாணவன் ஒருவருக்கு அனுமதி வழங்காத விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி மகா வித்தியாலம் ஆகிய பாடசாலை அதிபர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பானை அனுப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 11-01-2019 காலை பத்து மணிக்கு யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு விசாரணைக்கு வருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் ரி. கனகராஜ் அழைப்பானை அனுப்பியுள்ளார். கிளிநொச்சி மத்திய ஆரம்ப …
-
- 0 replies
- 667 views
-
-
வை எல் எஸ் ஹமீட்கிழக்கில் அண்ணளவாக 1/3 பங்கு தமிழர்களும் 2/3 தமிழர் அல்லாதவர்களும் வாழுகின்றனர். கிழக்கின் 1/3 பங்கு தமிழர்களுக்காக தமிழரல்லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்பின்மூலம் வடக்கின் ஆளுகைக்குள் வரவேண்டும். அதற்கு முஸ்லிம்களும் ஒத்துழைக்க வேண்டும்; என்பது அவர்களது கோரிக்கை, எதிர்பார்ப்பு.விடுதலைப் போராட்ட ஆரம்பகாலத்தில் வட கிழக்கு சுயாட்சிக்கும்மேல் தமிழீழத்திற்காகவே போராடுவதற்கு முஸ்லிம் வாலிபர்கள் ஆயுத இயக்கங்களில் இணைந்தார்கள். அந்தளவு தமிழர்களை ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்த சகோதர சமூகமாக முஸ்லிம்கள் கருதினார்கள்.இயக்கப்போராளிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் படைகளிடமிருந்து தப்புவதற்கு அடைக்கலம் கொடுத்தார்கள். ஆகாரமளித்தார்கள். தலைவர் அஷ்ரப் அவர்கள் “அண்ணன் அமிர்தலிங்…
-
- 8 replies
- 1.9k views
-
-
யாழில்... "பார்க் யூன் கோ" எனும் சர்வதேச பாடசாலை ஆரம்பம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் பார்க் யூன் கோ எனும் சர்வதேச பாடசாலை முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த நிகழ்வில் மகா போதி சங்கம் மற்றும் யோசிதா அறக்கட்டளையின் தலைவர் வணக்கத்திற்குரிய பனாஹல உபதிஸ்ஸ தேரர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார். இந்தப் பாடசாலைக்குரிய கட்டுமானப் பணிகளை மகா போதி அறக்கட்டளை நிறுவனம் முன்னெடுத்துள்ளது. பிரதானமாக ஆங்கில மொழி அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள இப்பாடசாலை யாழ்ப்பாணத்திலும் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 608 views
-
-
புதிய இராணுவ பிரதானிக்கு வெளிநாடுகளில் கைது ஆபத்து!- யஸ்மின் சூக்கா எச்சரிக்கை இலங்கையின் புதிய இராணுவ பிரதானி நியமனம் குறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளது. புதிய இராணுவ பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வா வெளிநாட்டுக்கு பயணிப்பாராயின், பயணிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என அமைப்பின் தலைவர் யஸ்மின் சூக்கா எச்சரித்துள்ளார். புதிய இராணுவ பிரதானி நியமனம் குறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், முக்கிய போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவை இராணுவ பிரதானியாக நியமிக்கும் ஜனாதிபதி மைத்திரிப…
-
- 0 replies
- 602 views
-
-
புதிய அரசியல் யாப்பு... தொடர்பில், தீர்மானம். புதிய அரசியல் யாப்பு தொடர்பான நிபுணர்கள் குழு அறிக்கை, அரசியலமைப்பு பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இது அரசியல் யாப்பின் வரைபு அல்லவெனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பு பேரவை இன்று 10 மணியளவில் கூடவுள்ளது. இதேவேளை புதிய அரசியல் யாப்பின் ஊடாக எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை…
-
- 0 replies
- 418 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. ஒருபுறம் இராணுவம் சுபீகரித்த மக்களது காணிகளை விடுவிப்பதாக நாட்டின் ஜனாதிபதி பிரச்சாரம் செய்யும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களது காணிகளை சுபீகரிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இராணுவ தேவைக்கு வனவள திணைக்களம் தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு வகைகளில் மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் ஒன்றான அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணி அளவீட்டு பணிகள் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியில் இராணுவம் சுபீகரித்து வைத்துள்ள நிலையில்…
-
- 1 reply
- 398 views
-
-
சிறிலங்காவிற்கு தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியல் சாசனமொன்று தேவையில்லை என்று சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைமை பீடங்களில் ஒன்றான சியம் பௌத்த பிரிவின் அஸ்கிரிய பீடம் அறிவித்துள்ளது. கண்டி அஸ்கிரி மகா விகாரையில் ஜனவரி 9 ஆம் திகதியான நேற்றைய தினம் அவரசமாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அஸ்கிரிய பீடத்தின் பதிவாளரான துணை மகாநாயக்கர் மெதகம தம்மாநந்த தேரர் அஸ்கிரி பீடத்தின் இந்த நிலைப்பாட்டை முன்வைத்திருக்கின்றார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோதல்களை ஏற்படுத்தக்கூடிய சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாசனமொன்று முன்வைக்கப்படுமானால் அது நாட்டின் இருப்பிற்கு ஏற்புடையதல்ல என்று மெதகம தம்மாநந்த தேரர் குறிப்பிடுகின்றார். குறிப்பாக 25 …
-
- 0 replies
- 504 views
-
-
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்துள்ளது. தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை குறித்த பேச்சுவார்த்தை கொழும்பு நாராஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் தொழில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் முதற் கட்டமாக தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகே, கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் 22 தோட்டக் கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்திற்கு முன்வந்து முதல் வருட சம்பள அதிகரிப்பு 625 ரூபாய…
-
- 0 replies
- 358 views
-
-
வெடுக்குநாறிமலையை ஆய்வு செய்யும் தொல்லியல் திணைக்களம் January 10, 2019 ஜனாதிபதி செயலகம் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாகவே வெடுக்குநாறிமலையை ஆய்வு செய்வதாக வவுனியா மாவட்டத்தின் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்றைய தினம் வெடுக்குநாறிமலையை ஆய்வு செய்யும் நோக்கில் கொழும்பிலிருந்து வருகை தந்திருக்கும் தொல்லியல் நிபுணர்கள்,வவுனியா மாவட்ட தொல்லியல் திணைக்களத்தினர்,நெடுங்கேணி காவல்துறையினர்,இராணுவத்தினர் போன்றோர் வருகை தந்து தற்போது ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த ஆய்வு செய்வதனை இடைநிறுத்த சென்ற ஆலய நிர்வாகத்தினருக்கும் தொல்லியல் திணைக்களத்தினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்…
-
- 1 reply
- 559 views
-
-
ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஆளுகின்றனர் ; தவராசா ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஆளுகின்றனர் என வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா தெரிவித்துள்ளார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசின் அடாவட…
-
- 0 replies
- 360 views
-
-
ஜனநாயக உரிமையை தென்னிலங்கை பேரினவாதிகளே அனுபவிக்கின்றனர் ; அனந்தி இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள் வடமாகாண மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எங்கள் இனத்தின் மீதான படுக…
-
- 0 replies
- 644 views
-
-
மண்டைத்தீவு சர்ச்சை: காணாமல் போனோர் அலுவலகம் அவதானம் செலுத்தியுள்ளது - சாலிய பீரிஸ் (நா.தனுஜா) மண்டைதீவில் உள்ள இரு கிணறுகளில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஸ்ரீதரன் எம்.பி முன்வைத்துள்ள கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், இக்கருத்து தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஏனைய ஆணையளர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், யாழ்ப்பாணம் மண்டைதீவில் இரு கிணறுகளில் 120 தமிழ் இளைஞர்களின் சடலங…
-
- 0 replies
- 304 views
-
-
முதலாவது வடக்கு மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய கலைஞர்கள் கௌரவிப்பு முதலாவது வடக்கு மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாகாண சபையில் நடைபெற்றது .மாகாண சபையின் பேரவைச் செயலக மாநாட்டு மண்டபத்தில் பேரவைத் தலைவரான சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதன் போது மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய அனைத்துக் கலைஞர்களும் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் நினைவுப் பரிசுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் பத்திநாதன், முன்னாள் பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன் , முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மாகாண முன்னாள் அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அதிகாரிக…
-
- 0 replies
- 461 views
-
-
சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற முடியும்.. எம்.கே.சிவாஜிலிங்கம் January 10, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இந்த படுகொலைக்கு …
-
- 0 replies
- 289 views
-
-
முஸ்லிம் நபர் ஒருவரை இனவாத குழு ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன் அதை காணாளி செய்து வட்ஸ்அப் ஊடாக வைரலாக பரவவும் விட்டிருந்தனர். இத்தாக்குதல்தாரிகளில் ஓருவரான காணி உத்தியோகத்தர் மயூரனுக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டது. 02/01/2019 மாலை 05.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூரை அண்மித்த கொம்மாத்துரை பிரதேசத்தில் வைத்து தனது அடியாட்களைக் கொண்டு ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவரை நிர்வானப்படுத்தி கொலை செய்ய முயற்சித்ததோடு, அம் முயற்சியை வீடியோ பதிவு செய்து வெளியிட்டதன் காரணமாக கிரான் பிரதேச செயலக காணி குடியேற்ற உத்தியோகத்தர் மயூரன் என்பவன் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,…
-
- 8 replies
- 1.3k views
-
-
யுத்தத்தில் பங்கெடுத்தவர்கள் விசாரணையில் மத்தியஸ்தம் வகிக்க முடியாது! சுமந்திரன் அதிரடி உள்நாட்டு யுத்தத்தில் பங்கெடுத்த தரப்பாக இலங்கை உள்ள நிலையில், அதில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணையில் மத்தியஸ்தம் வகிக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு இடம்பெறுமாயின் அது சுயாதீனமாகவும் நேர்மையானதாகவும் அமையாதென சுட்டிக்காட்டிய சுமந்திரன், சர்வதேச பொறிமுறையே அவசியம் என வலியுறுத்தியுள்ளார். இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில், குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சுமந்திரன் இவ்விடயத்தை வலிய…
-
- 0 replies
- 363 views
-
-
இலங்கை வரலாற்றில் செலுத்த வேண்டிய பாரிய கடன் தொகையான, 2,600 மில்லின் அமெரிக்க டொலரை எதிர்வரும் 14 ஆம் திகதி செலுத்தவெண்டியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் எதிர்கால பொருளாதார அபிவிருத்திக்கு எதிர்மறை தாக்கத்தை செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடினும், மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்க எண்ணியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/14-ஆம்-திகதி-பாரிய-கடன்-…
-
- 0 replies
- 352 views
-
-
புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் நாட்டுக்கு ஏற்படும் பாதகங்களைப் பட்டியலிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, நாட்டை ஒன்பது துண்டுகளாகப் பிரித்து சுயாட் சிக்கு சமாந்திரமான அதிகாரங்களை இந்த அரசமைப்பு வழங்கும். அதற்கே தீர்மானித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று புதன்கிழமை விடுத்துள்ள சிறப்பு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, கடன் தொகையில் தத்தளிக்கிறது நாடு 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நான்கு ஆண்டுகள் க…
-
- 0 replies
- 323 views
-
-
பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்துக் கொள்ளாமல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு ஒருபோதும் எத்தேர்தல்களிலும் வெற்றிப் பெற முடியாது. இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவது என்பது கட்சியின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் ஒரு செயற்பாடாகவே காணப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், துரதிஸ்டவசமாக ஐக்கிய தேசிய …
-
- 0 replies
- 360 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. மன்னார் மாவ ட்டத்தில் கைப்பற்றப்பட்டு வரும் கேரள கஞ்சா தொடர்பில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களுக்கு மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் வங்காலை கடற்பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (10.01.19) அதிகாலை சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் நபர் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வங்காலை கடற்பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த…
-
- 0 replies
- 309 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதேபோல இ…
-
- 0 replies
- 281 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கிளிநொச்சி பிரதேசத்திற்கு பயணம் செய்துள்ள வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று(10)நண்பகல் இரணைமடு நீர்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். இதன்போது இரணைமடு நீர்தேக்கத்தின் வான்கதவுகளில் சில குறைபாடுகள் உள்ளதாகவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகள் சரியான கண்காணிப்புக்களை மேற்கொள்ளாது அசமந்தப்போக்குடன் செயற்படுவதாகவும் அதனாலேயே அண்மையில் கிளிநொச்சி மக்கள் பாரிய அனர்த்தத்திற்கு முகம்கொடுத்ததாகவும் மக்களிடமிருந்து கிடைத்திருந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்த ஆளுநர் அவர்கள் இதுதொடர்பில் உடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவசியமான …
-
- 0 replies
- 411 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இரணைமடுகுளத்தினால் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதா, எனவும் அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் விசாரணை செய்ய புதிய விசாரணைக் குழுவை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்துள்ளார். இன்றைய 10-01-2019 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்ததிற்கு பின்னரான சவால்கள் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தின் போதே அவர் இவ்வறித்தலை விடுத்துள்ளார். ஓய்வுப்பெற்ற வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் ஒன்றின் செயலாளரைாக இருந்த பொறியியலாளர் இரகுநாதன், நியாப் திட்டத்தில் பணியாற்றி இந்திரசேன, மற்றும் ஆளுநரின் சிபார்சுக்கு அமைய மொற…
-
- 0 replies
- 399 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்.மாநகர சபை எல்லைக்குள் ஆண்டின் முதல் வாரத்திலையே 40 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ்.மாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபை எல்லைக்குள் 569 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதில் நவம்பர் மாதம் 40 பேரும் , டிசம்பர் மாதம் 173 பேரும் பாதிக்கபட்டு உள்ளனர். அதேவேளை கடந்த 2017ஆம் ஆண்டு 905 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இருந்தனர். அந்த வருடத்துடன் ஒப்பிடும் போது கடந்த வருடம் நோய் தாக்கத்திற்கு உள்ளானோர் குறைவடைந்து இருந்தனர். இந்நில…
-
- 0 replies
- 279 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 26 ஆம் திகதி புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ இன்று புதன் கிழமை (9.01.18) தெரிவித்துள்ளார். மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டு அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது 227 வது நாளாக தொடரும் அகழ்வு பணியானது இன்று புதன் கிழமை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்றது. இதன் போது…
-
- 1 reply
- 805 views
-