ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு வல்வெட்டித்துறை பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். தலைவர் பிரபாகரனின் 64-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திலும், ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. ஆயினும் இந் நிகழ்விற்கு பொலிஸார் தடையேற்படுத்தியிருந்தனர். அதாவது நிகழ்வு ஒழுங்கமைப்பு பணியில் ஈடுபட்டவர்களின் அடையாள அட்டைகளைப் பறித்துச் சென்றதுடன் அவர்களையும் அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஐpலிங்கம் தலைமையில் கேக் வெட்டுவதற்கு முயற்சித்த போது அதனையும் பொலிஸார் தடுத்திரு…
-
- 1 reply
- 411 views
-
-
தமிழர்களின் இதயத்திலே இருந்து கொண்டிருக்கும் தலைவர் பிரபாகரனை எந்த ஆட்சியாளர்களாலும் அடக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ முடியாது என்பதை அடக்குமுறையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய (27) மாவீரர் நாளில்; மாவீரர்களை நினைவு கூருவதற்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழினத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனுடைய 64 ஆவது பிறந்த தின நிகழ்வை வல்வெட்டித்துறை ஆலடியிலுள்ள அவருடைய இல்லத்திலே கொண்டாடுவதற்கு முயற்சியெடுத்திருந்தோம். இதற்கமைய அந்தக் காணியைத் துப்பரவு செய்வதற்கு நான்கு தொழிலாழியை அனுப்பியிருந்த பொழுது அவர்களைக் கடமை செய்ய விடாது த…
-
- 0 replies
- 1.9k views
-
-
தீர்வுக்காக அகிம்சையில் போராடுவோம்: அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வை கோரி, போராடிய பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த போதிலும் இலங்கை அரசாங்கம் தீர்வை இதுவரை முன்வைக்காதமையினால் நமது விடுதலைக் கனவுகளை மீண்டும் கண்முன் நிறுத்தி அகிம்சை வழியில் போராடுவோமென அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார். மாவீரர் நாள் தொடர்பில் அருட்திரு.தமிழ் நேசன் அடிகளார் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைக் கனவை இதயத்தில் தாங்கி இறப்பை தழுவிய மாவீரர்களை இன்று நாம் நெஞ்சிலிருத்தி அஞ்சலிக்கின்றோம். இம்மாவீரர்கள், நமது வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரி…
-
- 1 reply
- 755 views
-
-
November 26, 2018 கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் 2018 மாவீரர் நாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. நடந்துமுடிந்த போராட்டத்தில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2018 மாவீரர் நாள் ஏற்பாடுகள் ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. …
-
- 0 replies
- 459 views
-
-
November 26, 2018 யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்தது.எனினும் நினைவுகூருவதற்கு எந்த தடையையும் நீதிமன்றம் வழங்கவில்லை. நீதிமன்றின் இந்தக் கட்டளையை நடைமுறைப்படுத்தும் வகையில் வீரசிங்கம் சிறீதரன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு எதிரான எழுத்துமூல தடை உத்தரவை வழங்குமாறு கோப்பாய் காவற்துறையினர், தமது மனு மீதான நகர்த்தல் பத்திரம்…
-
- 0 replies
- 947 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் 64-ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப்பிறந்தநாள் நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந் நிலையிலேயே நள்ளிரவு வேளையில் பிறந்த நாள் கேக் வெட்டி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் கொண்டாடியுள்ளனர். இதே வேளை பிரபாகரனின் இன்றைய (26) பிறந்த நாளை முன்னிட்டு பிரபாரனின் சிந்தனை எனக் குறிப்பிட்டு அவரின் பல சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் பல்கலைக்கழகத்திற்குள் ஒட்டப்பட்டிருக்கின்றன. மேலும் நாளை மாவீரர் தின நிகழ…
-
- 4 replies
- 1.4k views
-
-
நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு, தமது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமை சிறிலங்காவின் தலைமை நீதியரசர், நளின் பெரேரா நியமித்துள்ளார். நவம்பர் 9 ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில், சிறிலங்கா அதிபரால், வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்த ஐந்து பேர் இந்த அடிப்படை உரிமை மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் முழுமையான அமர்வு ஒன்றே விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில், சட்டமா அதிபரும…
-
- 0 replies
- 399 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் (23-11-2018) நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான மோதலிற்கு பின்னர், இன்றைய சந்திப்பிலேயே மிகக்கடுமையான வார்த்தை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலின் உச்சக்கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய சி.சிறிதரன், அவர் பிழையாக நடப்பதாக குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற அமர்வுகள் மதிய போசணத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மதிய போசணத்தை முடித்துக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஒன்று கூடினர். அவசர சந்திப்பிற்காக அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, …
-
- 5 replies
- 2k views
-
-
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியான, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட ஆறு கடற்படை அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர இதனை உறுதி செய்துள்ளார். 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சந்தேக நபரான, கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெற்றியாராச்சிக்கு கடற்படை தளம் ஒன்றில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு அளித்தார், தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த விசாரணைகளின் முக்கிய சாட்சியான லெப்.கொமாண்டர் லக…
-
- 1 reply
- 2.7k views
-
-
எந்த ஓர் இஸ்லாமிய இனவாதியும் செய்திராத வரலாற்றுக் காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம்.கல்முனை மாநகர. மேயரால் தமிழ்பிரதேசங்களைக் குறிவைத்து கட்டவிழ்த்தப்படுகிறது. கடந்த நான்கு தினங்களுக்குமுன்னர் கல்முனை மாநகரசபை எல்லைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் குப்பைகளை சேகரிக்க வேண்டாம் என உத்தரவு பிறப்பித்த மேயர் ரக்கீப்!மடுவத்தை மருதமுனை வைத்தியசாலைகளில் மூன்றுதினங்களுக்கு முன்னர் குப்பைகள் கல்முனை மாநகரசபை வாகனம்கொண்டு சுத்தப்படுத்தப்பட்டதை எம்பார்வையில் சிக்கியுள்ளது. வக்கீல் ரக்கீப் தன்னை ஓர் இனவாதியாக மக்கள்முன் சிலையாக வடிப்பது முஸ்லிம் மக்கள் மத்தியில் நல்லதோர் அபிப்பிராயத்தையும் பார்வையையும் திருப்பி எதிர்வரும் மாகாண மற்றும் பாராளுமன்ற தே…
-
- 1 reply
- 1.1k views
-
-
மஹிந்தவின் பிரதமர் பதவி நீடிக்குமா? – 30ஆம் திகதி விசாரணை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவியை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்டரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணை 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் அதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தொடர்புண்டு என்றும…
-
- 0 replies
- 676 views
-
-
ரணிலா – சஜித்தா? : ஐ.தே.கவுக்குள் எழுந்துள்ள புதிய பிரச்சினை பிரதமர் பதவி தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்தியில் கட்சி தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினையும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஒரு பிரிவினர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து நிற்கும் நிலையில் இன்னுமொரு குழு சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவருக்கு தலைமைத்துவத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையிலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை தவிர வேறு யாருக்கேனும் பிரதமர் பதவியை வழங்க தயார் என கூறி வருவதால் கட்சிக்குள் அது தொடர்பான பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகி…
-
- 0 replies
- 616 views
-
-
"மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும்" மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். பலத்த மழை காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பணிகள் இடை நிறுத்தப்படும் வரை 231 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார். இவற்றில் 18 சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு மீட்கப்பட்ட அனைத்து மனித எச்சங்க…
-
- 1 reply
- 626 views
-
-
பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாட முனைந்தவர்களிடம் விசாரணை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த இடமான வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் அவருடைய பிறந்த நாள் நிகழ்வைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்தவர்களை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றமையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப்பிறந்த நாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திலும் பிறந்த நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்காக பிரபாகரனின் காணி மற்றும் வீடு துப்பரவுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் அடையாள அட்டைகளைப் பொலிஸார் பறிமுதல் செய்ததுடன் அவர்களையும் வ…
-
- 1 reply
- 968 views
-
-
தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: முக்கிய சாட்சி மீது தாக்குதல்? கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சாட்சியாளரை, பாதுகாப்பு படையணியின் பிரதானி அட்மிரல் ரவீந்திர குணவர்தன தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் லக்சிறி கலகமகே மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை அதிகாரி லெப். கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சிக்கு கடற்படை தளமொன்றில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அடைக்கலம் கொடுத்ததாக வாக்குமூலம் வழங்கப்பட்டது.…
-
- 0 replies
- 532 views
-
-
தென்னிலங்கை அரசியலுக்காகவே விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படவில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகப் பிரகடனம் செய்துள்ள அரசாங்கம், விடுதலைப் புலிகள் மீதான தடையை இன்னமும் நீக்காமல் இருப்பது தென்னிலங்கையில் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதேயன்றி வேறில்லையென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “உரிமைகளைப் பாதுகாக்கவும் அடக்குமுறைகள் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுபடவும் உலகெங்கும் ஆயுதப் போராட…
-
- 0 replies
- 422 views
-
-
மௌனத்தை உடைத்தார் துமிந்த திசநாயக்க – மைத்திரிக்கு எதிராக புதிய அணி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திசநாயக்க உள்ளிட்டவர்கள், தனி அணியாகச் செயற்படத் திட்டமிட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர், அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க, கடும் வெறுப்படைந்துள்ளார். அவர் ஐதேகவுக்குத் தாவப் போகிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில், பசில் ராஜபக்ச நேரடியாக அவரது வீட்டுக்குச் சென்று பேச்சுக்களை நடத்தினார். இத…
-
- 0 replies
- 869 views
-
-
குற்றச்சாட்டு தொடர்ந்தால் நானும் அம்பலப்படுத்துவேன் – மைத்திரிக்கு சாகல எச்சரிக்கை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தினால், தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்நாயக்க. வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களிடம், சிறிலங்கா அதிபர் நேற்று வெளியிட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தே, சாகல ரத்நாயக்க தனது கீச்சகப் பதிவுகளின் மூலம், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். “பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற வகையில், உயர்மட்ட விசாரணைகளில் சிறிலங்கா அதிபர் செய்த தலையீடுகளை நான் ஒருபோது…
-
- 0 replies
- 502 views
-
-
அரச நிறுவனங்களைப் பிடித்த மோசடியாளர்கள் – மைத்திரிக்கு தலைவலி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றம்சாட்டப்பட்ட சிலர் அண்மையில், முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட விவகாரம் சிறிலங்கா அதிபருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாற்றத்தை அடுத்து. ராஜபக்சவினர், அரசதுறை நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு தமது ஆதரவாளர்களை நியமித்து வருகின்றனர். சிறிலங்கவின் விமான சேவை நிறுவனத்தின் தலைவராக கபில சந்திரசேனவும், சிறிலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நாலக கொடகேஹவவும், நியமிக்கப்பட்டமை கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேட…
-
- 0 replies
- 261 views
-
-
ரணிலையோ, பொன்சேகாவையோ பிரதமராக நியமிக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர் ஐக்கிய தேசிய முன்னணி பெரும்பான்மையை நிரூபித்தாலும், ரணில் விக்கிரமசிங்கவையோ, சரத் பொன்சேகாவையோ ஒருபோதும் பிரதமராக நியமிக்கமாட்டேன் – என் வாழ்நாளில் அது ஒருபோதும் நடக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. கொழும்பில் உள்ள தனது வதிவிடத்தில் நேற்று வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வாழ்நாளில் நடக்காது நான் கூறிய வழிமுறைகளின் படி, நாடாளுமன்றத்தில் (வியாழக்கிழமை) பெரும்பான்மையை நிரூபித்தால், அதனை ஏற்றுக் கொள்வேன். பிரதமராக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்…
-
- 0 replies
- 473 views
-
-
கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் விடுதலை – பொருட்கள் பறிமுதல்! (2ஆம் இணைப்பு) யாழ். வல்வெட்டித்துறையில் கைதுசெய்யப்பட்ட வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை தவிசாளர் கர்ணானந்தராசா ஆகியோர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சகல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறித்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை சட்டவிரோத நடவடிக்கையென குறிப்பிடும் பொலிஸார், குறித்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: சிவாஜிலிங்கம் கைது! விடுதலைப் புலிகளின் …
-
- 0 replies
- 562 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தது ஏன்?: வாய்திறந்தார் மைத்திரி எனக்கெதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால் தான் கடந்த நவம்பர்-14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நேற்று(25) நடத்திய சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக் கொள்வதற்கு நவம்பர்-14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் முதலாவது பந்தியை நீக்குமாறு நிபந்தனை விதித்தேன். அதற்குக் காரணம் அதில் …
-
- 0 replies
- 280 views
-
-
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் பிரபாகரனின் பிறந்த நாள் அனுஷ்டிப்பு மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாளை, இலங்கையில் மாத்திரமின்றி வெளிநாடுகளிலும் பலர் மிகவும் விமர்சையாக இன்று (திங்கட்கிழமை) கொண்டாடி வருகின்றனர். அதனடிப்படையிலேயே நேற்று நள்ளிரவு, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கேக் வெட்டி பிரபாகரனின் பிறந்தநாளை நினைவுகூர்ந்துள்ளனர். இதேவேளை பிறந்த நாளை முன்னிட்டு ‘பிரபாகரனின் சிந்தனை’ எனக் குறிப்பிட்டு பல்கலைக்கழகத்திற்குள்ளும் சில சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், மாவீரர் தின நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்…
-
- 0 replies
- 418 views
-
-
நாட்டின் பாதுகாப்பு நிலை – பொலிஸ் உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு! நாட்டின் பாதுகாப்பு நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அனைத்து சிரேஷ்ட மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்புவிடுத்துள்ளார். இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக முன்கொண்டு செல்வது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாட்டின் சகல பகுதிகளிலும் மேலதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, தலைநகர் கொழும…
-
- 0 replies
- 439 views
-
-
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை (25-11-2018) பிற்பகல் -02.30 மணி முதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி மண்டபத்தில் இடம்பெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடந்த கால உள்நாட்டுப் போரில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது கனடியத் தமிழர் தேசிய பேரவையின் மண்வாசனை அமைப்பின் நிதிப் பங்களிப்பில் தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சே…
-
- 2 replies
- 1.4k views
-