ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
02 APR, 2025 | 09:03 AM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோய் நோயாளர்கள் சுகாதாரத் துறையால் அடையாளம் காணப்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19 ஆயிரம் பேர் புற்று நோயால் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாட்டில் புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினர் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கிடையில் சமீபத்தில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் …
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை! அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அரசின் குறித்த நடவடிக்கைகளினால் ”தற்போது சுமார் 3 சதவீதமாக இருக்கும் ஆரம்பக் கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் இது தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பெரும் அநீதி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையின் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள சுமார் பத்தாயிரம் …
-
- 1 reply
- 132 views
-
-
இலங்கையில் பாலியல் நோய்கள் அதிகரிப்பதாக எச்சரிக்கை நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர் கூறினார். கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடை…
-
-
- 5 replies
- 456 views
- 1 follower
-
-
சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு Published By: Rajeeban 24 Mar, 2025 | 09:05 PM இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரிட்டன் மேலும் தெரிவித்துள்ளதாவது பிரிட்டன் இன்று இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. வெளிநாடுகளில் ஸ்திரதன்மையை ஊக்குவிப்பது எங்களின் தேசிய பாதுகாப்பிற்குஉகந்த விடயம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான இண…
-
-
- 37 replies
- 2.1k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 MAR, 2025 | 03:20 PM நாட்டில் தூக்கமின்மை பிரச்சினைகள் அதிகரித்து வருவதோடு, 63 சதவீதமான பாடசாலை மாணவர்களுக்கு போதுமானளவு தூக்கம் கிடைப்பதில்லை என சமூக வைத்திய நிபுணர் சிராந்திகா விதானகே தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் அவசிமானது. 16 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 8.2 சதவீதமானவர்கள் 4 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு குறைவான நேரம் தூக்குகிறார்கள். கடந்த 12 மாதங்களில் மாணவர்களுக்கு கடுமையாக வாகன விபத்துக்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், …
-
-
- 5 replies
- 589 views
- 1 follower
-
-
01 APR, 2025 | 01:20 PM கிளிநொச்சி மாவட்டத்தில் 1209.22 ஏக்கர் மக்களின் காணிகளை முப்படையினரும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் வசமுள்ள காணி தொடர்பில் கேட்ட போதே அவர் செவ்வாய்க்கிழமை (01) இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களது காணிகள் பல விடுவிக்கப்படாது இராணுவத்தினர் வசம் காணப்படுகின்றது. அந்தவகையில், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 653.65 ஏக்கரும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 180.38 ஏக்கரும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 116.61ஏக்கரும், பூநகரி பிரதேசசெயலர் பிரிவில் 248.18 ஏக்கரும் என 1209.22 ஏக்கர் காணி …
-
- 3 replies
- 239 views
- 1 follower
-
-
2021 , 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது – ஜனாதிபதி April 1, 2025 பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான உரிய திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளின் நிலைமை இனியொருபோதும் ஏற்படாது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும். அதற்கான முன்மொழிவுகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் பெற்றுக்கொள்ளப்படும். மாவட்ட மட்டத்திலான தேவைகள் கோரப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஏப்ரல் 8 ஆம் திகதி நடத்தவே எதிர்பார்த்திருந்தோம். எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே மே 06 ஆம் திகதிக்கு தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது. ஊழல்வாதிகளை நீதிமன்றமே தண்டிக்…
-
- 2 replies
- 225 views
-
-
பலஸ்தீன சார்பு ஸ்டிக்கர் - ACJU விடுத்துள்ள அறிவித்தல் Tuesday, April 01, 2025 செய்திகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை எப்போதும் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும்; குறிப்பாக பாலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தொடர்ந்தேர்ச்சியான வன்முறைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த வகையில் நாம் தன்னாதிக்கம் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடொன்றின் உருவாக்கத்தை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம். அண்மையில் பலஸ்தீனத்தில் நடைபெறும் அத்துமீறல்களை…
-
- 1 reply
- 283 views
-
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிப்பு : நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உத்தரவு! Published By: DIGITAL DESK 2 01 APR, 2025 | 03:37 PM (டானியல் மாக்ரட் மேரி ) உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை புதன்கிழமை (02) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (1) இந்த மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ம…
-
- 1 reply
- 204 views
- 1 follower
-
-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரனை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது! | Virakesari.lk
-
- 9 replies
- 564 views
-
-
நிவாரணப் பணிகளுக்காக மியன்மார் செல்லும் இலங்கை மருத்துவ குழு! சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாரில் நிவாரணப் பணிகளுக்காக அனுப்ப இலங்கை மருத்துவக் குழு தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடகங்களுக்குப் பேசிய அமைச்சர், மருத்துவக் குழுவில் இலங்கை மருத்துவ நிபுணர்கள் மற்றும் தாதியர் ஊழியர்கள் உள்ளனர். மருத்துவக் குழுவுடன் சேர்த்து அனுப்புவதற்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் மூலம் மியான்மரில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் உள்ள இலங்கை தூதரகத்திலிருந்து தகவல் கிடைத்தவுடன் மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்ப…
-
- 0 replies
- 134 views
-
-
மே 09 அமைதியின்மை: உரிமை இல்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச – ஜனாதிபதி! 2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த மக்கள் போராட்டத்தின் போது அழிக்கப்பட்ட செவனகல பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு ராஜபக்ச ஒருவர் இழப்பீடு பெற்றதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இழப்பீடு பெற்ற ராஜபக்ச குறித்து விரைவில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கேள்விக்குரிய வீடு இந்த குறிப்பிட்ட ராஜபக்சவுக்குச் சொந்தமானது அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். நிலப் பத்திரம் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது, அதே நேரத்தில் வீடு மற்றொருவரின் பெயரில் உள்ளது. இருப்பினும், இழப்பீடு ஒரு ராஜபக்சவால் பெறப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அடங்கிய அற…
-
- 0 replies
- 152 views
-
-
இன்று முதல் அமுலாகும் புதிய எரிபொருள் விலை! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் வகையான இரு பெற்றோல்களும் ஒரு லீட்டருக்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட விலைகள் நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் CPC கூறியுள்ளது. 92 ஒக்டேன் பெற்றோல் – புதிய விலை 299 ரூபா 95 ஒக்டேன் பெற்றோல் – புதிய விலை 361 ரூபா இந்த விலை குறைப்புக்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப திருத்தியமைத்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவி…
-
- 0 replies
- 87 views
-
-
விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு! உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்வது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விசேட தேவையுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் உதவியாளர்கள், 18 வயதை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால், அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இருத்தல் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி ஒன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ வாக்கெடு…
-
- 0 replies
- 128 views
-
-
Published By: VISHNU 31 MAR, 2025 | 07:49 PM ஏப்ரல் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலையை திருத்தியமைக்க லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரித்து புதிய விலை ரூ.4,100 ஆக விற்கப்படும், 5 கிலோ சிலிண்டர் ரூ.168 அதிகரித்து ரூ.1,645 ஆக விற்கப்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/210779
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
வடக்கு மாகாணத்தில் 63 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்காக வருடமொன்றுக்கு 620 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவேண்டும். இந்தக் கட்டணம் இன்னமும் செலுத்தப்படாது நிலுவையிலுள்ளது என்று இலங்கை மின்சாரசபையின் வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். வடக்கிலிலுள்ள பெரும்பாலான வீதிகளில் அண்மைக்காலமாக வீதி மின்விளக்குகள் இரவு வேளைகளில் ஒளிராதுள்ளமை தொடர்பாகவும், அதனால் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பாகவும் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆரம்பகாலத்தில் வீதி விளக்குகள் மின்சாரசபையால் பொருத்தப்பட்டு, அதற்குரிய பராமரிப்புகள் மற்றும் மின்சாரப் பட்டியல் பணத்தை ஒவ்வொரு மின் பாவனையாளர…
-
- 0 replies
- 200 views
-
-
31 Mar, 2025 | 05:17 PM முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாததடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்த இளைஞனின் கைதுக்கான பல காரணங்களை தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞன் இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களில் கருத்துவெளிப்பாட்டில் ஈடுபட்டான் என தெரிவிக்கின்றனர், இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் என்றால் அது யூத எதிர்ப்பு. இந்த நாட்டில் வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன, அந்த இளைஞன் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கவேண்டும். நா…
-
- 1 reply
- 180 views
-
-
31 Mar, 2025 | 11:57 AM உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு (மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது குறித்து உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார் “மாகாண சபை முறைமை குறித்து இந்தியா எமக்குக் கூற வேண்டிய அவசியம் கிடையாது. எனினும், நாம் உறுதியளித்தபடி மாகாண சபை தேர்தலை நடத்துவோம்” என்றும் அவர் கூறியுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வ…
-
- 0 replies
- 116 views
-
-
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும் | Sri Lanka News | Ada Derana | Truth First செய்திகள் பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (30) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்தை முதல் தடவையாக பார்வையிட்ட அமைச்சர் விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும் அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார். இதன் போது விமான நிலையத்தின் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் ஹர்ச அபய விக்ரம மற்றும் ஏனைய ஊழியர்களுடன்…
-
-
- 2 replies
- 328 views
-
-
அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நிர்வாக ஒழுங்குகளுக்குள்ளாக கடமைகளை திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி அவற்றின் வாயிலாக மக்களுக்கான சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இராணுவத்தினை பயன்படுத்தி சாதாரண சிவில் நிர்வாகத்தினை செயல்திறன் குன்றியதாக மாற்றக்கூடாது. இராணுவமயமாக்கத்தினை ஊக்குவிக்க கூடாது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினை பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில், இராணுவ குழுக்கள் இணைந்து துய்மிப்புப் பணியில் ஈடுபட்டமை குறித்து தனது அதிருப்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களையோ அல்லது கட்சித் தொண்டர்க…
-
- 0 replies
- 121 views
- 1 follower
-
-
31 MAR, 2025 | 03:35 PM பொறுப்புக்கூறலினால் மாத்திரம் இலங்கையின் நீண்டகாலச் சவால்களுக்கு தீர்வைக் கண்டுவிட முடியாது என்று கூறியிருக்கும் தேசிய சமாதானப் பேரவை இனமோதலுக்கு வழிவகுத்த ஆழமான காரணிகளைக் கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்று அவசியமாகும் என்று வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் தேசிய சமாதானப் பேரவை அதில் கூறியிருப்பதாவது ; மூன்று முன்னாள் இராணுவ தலைவர்கள் உட்பட நான்கு இலங்கையர்களுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம் எடுத்த தீர்மானம் முக்கியமான ஒரு விவாதத்தை மூளவைத்திருக்கிறது. உலகின் வேறு பகுதிகளில் பாரிய வன்முறைகள் தடுக்கமுடியாத அளவுக்கு தொடருகின்ற ஒரு நேரத்தில் பிரிடடன் எடுத்திருக்கும் இந்த தீர்மான…
-
- 0 replies
- 71 views
- 1 follower
-
-
துபாயிலிருந்து வந்தவரின் பணத்தைத் திருடி காதலியிடம் கொடுத்த வாடகை வாகன சாரதி கைது Published By: Digital Desk 2 31 Mar, 2025 | 05:49 PM துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவரின் கைப்பையில் இருந்து ஒன்பது இலட்சத்து நான்காயிரத்து நானூறு ரூபா பணத்தை திருடிய வாடகை வாகன சாரதி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவது, கடந்த சனிக்கிழமை (29) துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நபர் ஒருவர் விமான நிலையத்தில் இருந்து வாடகை வாகனம் ஒன்றில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த நபர் தனது மடிக்கணினி அடங்கிய…
-
- 0 replies
- 91 views
-
-
கொழும்பில் உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டிடங்கள் பூகம்பத்திலிருந்து தாங்கும் சக்தி கொண்டது என்றும் அவை அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளவை என்றும் நில அதிர்வு நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு கூறுகையில், இலங்கை அனுபவித்த அதிகபட்ச நிலநடுக்கம் சுமார் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும், இது எந்த தாக்கத்தையும் சேதத்தையும் ஏற்படுத்தாது. இருப்பினும், தற்போது கட்டப்பட்டு வரும் மற்றும் சமீபத்திய காலங்களில் கட்டப்பட்ட அனைத்து நவீன வானளாவிய கட்டிடங்களும் மிதமான அளவிலான நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டமைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன. GSMB நில அதிர்…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை! “அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாகத் தீர்மானிக்கக் கூடிய விடயம் அல்ல” என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”தற்போது சிறையில் உள்ளவர்களில் யாரும் வெறும் சந்தேகநபர்கள் அல்ல எனவும், அனைவரும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும், எனவே முன்னைய ஜனாதிபதிகள் செய்தது போல அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது எனவும் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேலும் ”முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான கொலைச்சதி, பிலியந்தலை பேருந்து குண்டுவெடிப்பு, மத்திய வங்கி குண்டுவெடிப்பு மற்றும் தலதா மாளிகை குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களில் குறித்த …
-
-
- 2 replies
- 245 views
-
-
மீன்பிடி பிரச்சினை குறித்து இலங்கை-இந்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தை – அரசாங்கம்! பிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டிற்கு வருகை தருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மீன்பிடி தகராறு குறித்து அரசு மட்ட பேச்சுவார்த்தை விரைவில் மீனவர்கள் முன்னிலையில் நடைபெறும் என மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு அவருடன் ஒரு சந்திப்பை நடத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார். மீனவர் தலைவர் ஆர்.சகாயம் தலைமையிலான குழு, இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தையை தொடங்குமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தது. இந்த…
-
- 0 replies
- 130 views
-