Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: நாளை மறுதினம் பேச்சுவார்த்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளதாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நிதியமைச்சில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் 600 ரூபாய் என்ற அடிப்படை நிலைப்பாட்டில் தான் முதலாளிமார் சம்மேளனம் இருந்தது. ஆனால், எம்மை பொறுத்தவரை தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாய் என்பதே நிலைப்பாடாகும். மேலும் தோ…

  2. சர்வதேசத்தின் ஊடாகவே தீர்வு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தற்போதைய இலங்கை சூழ்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் தீர்வை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் இன்றுடன் 625 ஆம் நாளினை எட்டியுள்ளதென காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் எமது பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை பெற்றுத்தருமென நம்பி தொடர்ந்து ஏமாற்றம் மாத்திரமே அடைந்துள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை தங்களது பிள்ளைகளை எப்படியாவது கண்டுபிடிக்க முடியுமெ…

  3. இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடமளிக்க கூடாது – சி.வி. தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி வடக்கு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் என்றபோதிலும் அரசியல் ரீதியாக அவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக கருத வழி செய்யும் என முன்னாள் முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழர்களின் உரிமைகள், உரித்துக்கள் படிப்படியாக பறிக்கப்பட்டு வரும் நிலையில், பொருளாதார அபிவிருத்த…

  4. November 23, 2018 ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு சுமந்திரனே தலைவர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அமெரிக்கா எனவும் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்கப்போவதில்லை எனவும், கிழக்கில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ். மக்களை ஏமாற்றுவதாகவும் தமக்கு மஹிந்த ராஜபக்ஸ, கோத்தபாய ராஜபக்ஸவின் அணியே தேவை …

  5. வடக்கு – கிழக்கில் 6 நீதிபதிகளுக்கு இடமாற்றம் November 24, 2018 வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் கடமையாற்றும் மாவட்ட நீதிபதிகளுக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாகவும் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், அக்கறைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அக்கறைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.பி. போல், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நீதிவான் எம்.ஐ.எம்.ரிஷ்வி சம்பாந்துறை நீதிவானாகவும் வாழைச்சேனை மாவட்ட நீதிபதி ஏ.சி.ரிஷ்வான், மட்டக்களப்பு நீதிவானாகவும் சம்பாந்துறை நீத…

  6. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ். கோப்பாயில் 51ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்ததுள்ளது. வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் சின்னங்கள், கொடிகள் மற்றும் வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டு நிகழ்வு நடத்தப்படவுள்ளதாக பொலிஸாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் அறியப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கு…

  7. யாழில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடந்த சில தினங்களாக இறைச்சி ஆக்குவதற்காக களவாடப்பட்ட 17 பசு மாடுகள் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. நவாலி கொத்துக்கட்டி வீதி மாரியம்மன் கோவிலடி வெளியில் அவை மறைவாக அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பொலிஸார் பசு மாகடுகளை மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் வசித்துவரும் ஒருவர் நவாலியில் மாட்டிறச்சி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். அவருடைய வீட்டிற்கு பின்னால் உள்ள வெளியில் இரவோடு இரவாக பல மாடுகள் கொண்டுவந்து அடைத்து வைக்கப்படுவதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை ஒரு சிலர் தமது பசு மாட்டினை கானவில்லை என்று கூறி அப்பகுதிக்கு தேடுவதற்கு வந்துள்ளனர். இதன்போது மாரியம்மன் கோவிலட…

  8. கைதான இந்தியர் மனநிலை பாதிக்கப்பட்டவர் – மருத்துவ அறிக்கை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரை படுகொலை செய்யும் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், கைது செய்யப்பட்ட தோமஸ் என்ற இந்தியர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று மருத்துவ சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. சிறிலங்கா காவல்துறை தலைமையக உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த இந்தியரை, அங்கொட தேசிய மனநல மருத்துவ நிறுவகத்தின் மூத்த மருத்துவ நிபுணர்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கை குற்றப்புலனாய்வுப் பிர…

  9. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டுள்ளதாக பொதுநலவாய செயலாளர் நாயகம் பரொனொஸ் பட்றீசியா ஸ்கொட்லாண்டிடம் தெரிவித்துள்ளார். நான் தொடர்ந்தும் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுவேன் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகத்துடனான தொலைபேசி உரையாடலின் போதே சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜெயசூரியவை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளை பின்பற்றுமாறு நான் தெளிவாககேட்டுக்கொண்டேன் என தெரிவித்துள்ள சிறிசேன இலத்திரனியல் முறையை பயன்படுத்தி வாக்கெடுப்பை நடத்துமாறும் அல்லது பெயர்மூல வாக்கெடுப்பை நடத்துமாறும் கேட்டுக்கொண்டதாகவும் சிறிசே…

  10. November 23, 2018 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதுபோல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மஹிந்த ராஜபக்ஷ விலைக்கு வாங்கிவிட்டார் என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஜனநாயக ஆட்சி ஒழிக்கப்பட்டு, அமைக்கப்பட்டுள்ள காட்டாட்சியை மாற்றியமைக்க அனைத்து சக்திகளும் ஓரணியில் திரளவேண்டும் என்றும் அவர் கோரிக்கை வ…

  11. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) மைத்திரி -மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சியினால் அடுத்த ஆண்டு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அரசியல் நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட் வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எம்மிடம் தயாராகவே உள்ளது. டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இடைக்கால வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவும் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஜே.வி.பி.யின் உறுப்பினர் விஜித ஹேரத் எம்.பியினால் பாராளுமன்…

  12. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அதிகார மோகத்தில் மக்களை, நாட்டினை மறந்து செயற்பட்டு வருகின்றனர். நாட்டில் இடி விழுந்தாலும் பரவாயில்லை நான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றே ஜனாதிபதி நினைக்கின்றார் என சுஜீவ சேனசிங்க எம்.பி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். சுஜீவ சேனசிங்க எம்.பி, மேலும் கூறுகையில், இன்று ரூபாவின் விலை பாரிய அளவில் வீழ்ச்சி கண்டு வருகின்றது. கடன் சுமை அதிகரித்து வருகின்றது. இதனை பொதுமக்களே சுமக்க வேண்டியுள்ளது. ஆகவே சட்ட…

  13. November 23, 2018 தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக துயிலும் இல்லங்களில் புனரமைப்புப் பணி மற்றும் நிகழ்வு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மாவீரர் துயிலும் இல்லங்களல் சீரமைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள துயிலும் இல்லங்களின் முன்பாக மாவீரர் நாளை நினைவு கூறுவதற்கு ஏதுவாக பதில் இடங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதேவேளை மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றன. …

  14. மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனைகள் இன்று (23.11.18) வெள்ளிக்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த விசாரனைக்கான கட்டளை எதிர் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். B/778-2013 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் இந்த வழக்கு விசாரனைகள் இடம் பெற்று வந்தன. இதன் போது மாந்தை மனித புதைகுழியில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இலங்கையில் எந்த பல்கலைக்கழகங்களிலும், நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய முடியாது என்ற விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. அந்த மனித எச்சங்கள் …

  15. நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் ஜனாதிபதி தனது அறிவிப்பை மீளப்பெறுவார்: அரசியல் அவதானிகள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் மீளப்பெற முடியுமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமெனவும் கடந்த 9 திகதி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது. குறித்த அறிவித்தலுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய பல கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தது. இதன்போது கடந்த 13ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை இ…

    • 2 replies
    • 693 views
  16. எனது கட்சிக்கும் இடம் வேண்டும் – டக்ளஸ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் தனித்துவமான கட்சி என்ற ரீதியில் பாராளுமன்றத்தில் தெரிவுக் குழுவில் இடம் வேண்டுமென மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றம் கூடியபோது நிலையியற்குழு அமைப்பது தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு வலியுறுத்தினார். மேலும் நான் ஆளும் கட்சியில் இருக்கின்றேனோ அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின்றேனோ என்பது எமது தனிப்பட்ட தீர்மானமாகும். அந்தவகையில் அமைக்கப்படவுள்ள நிலையியற் குழுவில் எமது கட்சிக்கும் இடம் வேண்டும் என்றும…

  17. கொள்ளைகளில் ஈடுபட்டவர் இராணுவ முகாமுக்குள் தப்பிச் சென்றதாக தகவல் மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று இரவு கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் மடக்கி பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பிச்சென்று அப்பகுதியிலுள்ள இராணுவ முகாமில் புகுந்ததாகவும், அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று(செவ்வாய்கிழமை) குருக்கள்மடம் செல்லக்கதிர்காமம் ஆலய முன்றிலில் களுவாஞ்சிகுடி பொலிஸார், அப்பகுதி இராணுவ உய…

  18. நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க செனெட்டர் கடிதம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள், அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை, வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் என்று அமெரிக்க செனெட் சபையின் ஜனநாயக கட்சி உறுப்பினர் கிறிஸ் வான் ஹோலன் எச்சரித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்துவதற்கு கடினமாக பாடுபட்ட நண்பருக்கு இந்த கடிதத்தை எழுதுகின்றேன். இந்த உணர்வின் அடிப்படையில் சிறிலங்கா …

  19. நாட்டின் ஜ‌ன‌நாய‌க‌த்தை காப்ப‌த‌ற்கு இந்த‌ நாட்டின் பெரும்பான்மை ச‌மூக‌மான‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் நிச்ச‌ய‌ம் த‌ய‌ங்க‌மாட்டார்க‌ள் என்ற‌ ய‌தார்த்த‌ நிலையில் முஸ்லிம்க‌ளும் அவ‌ர்க‌ளின் க‌ட்சிக‌ளும் ஜ‌ன‌நாய‌க‌த்தை காக்க‌ப்போகிறோம் என‌ சிங்க‌ள‌ பெரும்பான்மை ம‌க்க‌ளை ப‌கைத்துகொண்டு கோஷ‌மெழுப்புவ‌தைவிட‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை எவ்வாறு காக்க‌ப்போகிறோம், முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ளை எவ்வாறு வெல்ல‌ப்போகிறோம் என‌ முய‌ற்சி செய்வ‌தே கால‌த்தின் தேவையாகும் என‌ ஸ்ரீ ல‌ங்கா உல‌மா க‌வுன்சில் த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து நிறைவேற்று அதிகார‌ம் என்ப‌தே ஒருவ‌கையில் ச‌ர்வாதிகார‌ம்தான். இத‌னை கொண்டு வ‌ந்த‌து ஐக்கிய‌ தேசிய‌க்க‌ட்சி. இந்த‌ அதிகார‌த்தை வைத்து ஜே …

    • 5 replies
    • 698 views
  20. November 22, 2018 முன்னாள் இலங்கை அணி தலைவர் சனத்ஜெயசூரிய மீது இந்திய காவல்துறையினர் பழுதடைந்த பாக்குகளை கடத்தியதாக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இந்தியாவின் நாக்பூரில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பழுதடைந்த பாக்குகளை இந்திய அதிகாரிகள் கைப்பற்றிய வேளை அதற்கும் சனத்ஜெயசூரியவுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மும்பாய் காவல்நிலையத்துக்கு சனத் ஜெயசூரிய அழைக்கப்பட்டார் எனவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குறித்த கடிதமொன்றை இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது …

  21. கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையத்தின் வசதிகளை தரமுயர்த்துவதற்கான பணிகள், இரண்டு சீன நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜய கொள்கலன் முனையத்தின், நங்கூரமிடும் ஆற்றலை வலுப்படுத்தும், ஒப்பந்தம், சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான, அமைச்சரவைப் பத்திரத்தை, துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்திருந்தார். அதேவேளை, ஜய கொள்கலன் முனையத்துக்காக, மூன்று புதிய பாரம்தூக்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தமும், மற்றொரு சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 25.7 மில்லியன் ரூபா செலவில், ஷங்காய் ஷென்ஹுவா கனரக தொழில் நிறுவனத்திடம் இருந்து மூன்று பாரம் தூக்கிகள…

  22. இலங்கையில் வட மேற்கு நகரான மன்னாரில் பெரும் கல்லறை ஒன்றில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் இந்தாண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்பு போர் மண்டலமாக இருந்த இடத்தில் உள்ள கல்லறையில் 230க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இதுபோன்று வேறொரு இடத்தில் 90 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது. 2009ஆம் ஆண்டு முடிந்த இலங்கை போரில் குறைந்தது 20,000 பேர் காணாமல் போயிருக்கலாம் என மனித உரிமை குழுக்கள் தெரிவிக்கின்றன. இலங்கை துருப்புகள் மற்றும் புலிகளுக்கு எதிராக நடந்த 26 ஆண்டுகால போரில் குறைந்தது லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட இடத்தை விரிவாக தோண்ட வேண்டும் என உ…

  23. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தை அகற்றுவதற்காக வாக்களித்தாலும், எந்தவொரு அரசாங்கத்திலும் இடம்பெறாது என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சட்டரீதியற்ற முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்பதால், தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களித்தது. ஆனால், எந்தவொரு கூட்டணியிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேராது. அது தமிழ்க் கட்சிகளுடன் தனிக்கான கூட்டணியை வைத்திருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐதேக தலைமையிலான கூட்டணியில் கூட்டமைப்பு இணைந்து கொள்ளுமா என்று ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://www.pu…

    • 1 reply
    • 1.5k views
  24. ரணிலுக்கும் மகிந்தவுக்கும் விக்கியின் பொருத்தமான பதவிகள் “தற்போதைய பாராளுமன்றத்தின் மிகுதிக் காலம் கிட்டத்தட்ட 2 வருடங்கள் முடியும் வரையில் ஒரு தேசியக் கூட்டரசை மகிந்த ராஜபக்ஷவுடன் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தி முக்கியமான விடயங்களுக்கு ஏன் பரிகாரம் தேட முடியாது. அல்லது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டாலும் பொருத்தமாக அமையும்” இவ்வாறு ஆஸ்திரேலிய பிரதித் தூதுவரிடம் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் யோசனை முன்வைத்தார். ஆஸ்திரேலிய பிரதித் தூதுவர் விக்டோரியா ஹோக்லி நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவர் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின்…

    • 4 replies
    • 790 views
  25. அரசியல் சூழ்ச்சியை அங்கீகரித்தால் ரத்தக்களரி ஏற்படும்: ஜே.வி.பி. எச்சரிக்கை நாட்டில் ஒரு அரசியல் சூழ்ச்சியே ஏற்பட்டுள்ளதென்றும், மீண்டும் ஒரு தடவை அதனை அங்கீகரித்தால் நாட்டில் ரத்தக்களரி ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் என்றும், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.