Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சரவைக் கூட்டத்தில் வடிவேல் சுரேஸ் கலந்துகொள்ளவில்லை ; ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்றைய கூட்டத்தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கலந்துகொண்டார் என வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என ஐ.தே.க மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை வடிவேல் சுரேஸ் ஐ.தே,க. உடன் இணைந்துள்ளார் எனவிம் அவர் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்தோடு நம்பிக்கையில்லா பிரேரணையில் வசந்த சேனாநயக்க தவிர்ந்த ஏனைய 122 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குற…

  2. விரைவில் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் (எம்.மனோசித்ரா) வெகு விரைவில் இடைக்கால வரவு - செலவு திட்டத்தினை சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன, எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டின் அனைத்து துறைகளுக்குமான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன் நாம் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராகவுள்ளோம். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியும் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக வேண்டும். அதனை விடுத்து நாட்டில் பிரச்சினைகளையும் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவிடாது குழப்பங்களை ஏற்படுத்துவது சிறந்ததல்ல எனவும் தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித…

  3. இலங்கை விடயத்தில் மேற்குலகம் அநாவசியமாக தலையிடுகிறது! – நாமல். இலங்கை நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் மேற்கத்தேய நாடுகளுக்கு அதிக வலியினை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அவர்களது நாட்டு நாடாளுமன்றில் இடம்பெறும் இதுபோன்ற வன்முறைகள் குறித்து வாய்திறக்காத தூதுவர்கள், இலங்கை விடயம் என்றவுடன் முந்தியடித்து கருத்து வெளியிடுவதாகவும் குற்றம் சுமத்தினார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற அவர், அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினர். அவர் மேலும் தெரிவித்த போது- ”இந்த பிரச்சினை உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் இடம்பெறுகின்றன. ஆனால் இலங்கையில் ஏற்படும்போது மாத்திரம் சில மேற்கத்தேய நாடுகளுக்கு …

  4. எப்.முபாரக், எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ், தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பௌத்த தேரர்கள் போராட்டம் நடத்திய போது, அத்தேரர்கள் மீது நீர்த்தாரைப் பிரயோகம் நடத்துவது போன்று மக்களுக்குக் காட்டி நாடகமாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ்சாட்டினார். அலரிமாளிகையில் வைத்து நேற்று (20) மாலை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே, அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அங்…

  5. பிரபாகரன் தனக்கு வழங்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை தவறவிட்டார் என்பது குறித்து நான் ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன்” யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர் என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில், “எனக்கு விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ள அவர் 2003 இல் கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன் அது நீண்ட சந்திப்பு” என குறிப்பிட்டுள்ளார். “நாங்…

  6. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி நீதிமன்றில் காவல்துறையினர் மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில் அதன் மீதான கட்டளை வெளி வரும் முன்னரே நீதிவானின் கட்டளையின் பிரதி போன்ற போலி ஆவணம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் வழக்கு இலக்கமிடப்படவில்லை. திகதியில் தவறு. தண்டனைச் சட்டக்கோவை இலக்கம் தவறாக உள்ளதுடன் , நீதிவானின் கையொப்பம் காணப்படவில்லை அத்துடன் கடிதத்தில் எழுத்துப்பிழைகள் , சொற்பிழைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/104123/

  7. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் வாரம் இன்று 21 ஆம் திகதி புதன் கிழமை ஆரம்பமாகியுள்ளது.அவர்களை இந்த இடத்திலே நினைவு கூற வேண்டியது எமது கடமை என மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.-மன்னார் நகர சபையின் 9 ஆவது அவர்வு இன்று புதன் கிழமை(21) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.இதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,, மாவீரர்கள் என்பவர்கள் தங்களுக்காகவும்,…

  8. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ஏ9 வீதியில் மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள உயரழுத்த மின் கம்பத்துடன் இராணுவத்தின் கனரக வாகனம் மோதியதில் மின் கம்பம் முறிந்துள்ளது. இன்று(21) மாலை நான்கு 45 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் மின்சார சபை அலுவலகம் என்பதனால் மின்சார சபை உத்தியோகத்தர்கள் விரைந்து செயற்பட்டு அனர்தத்தை தவிர்த்துள்ளனர். பரந்தன் பகுதியில் இருந்து இரணைடுமடு நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவத்தின் கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதனால் இவ் விபத்து எற்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/104097/

  9. November 21, 2018 A முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்;பட்ட மூன்றுமுறிப்பு பகுதியில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர் வசமிருந்த மக்களின் 59.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளுக்கான ஆவணங்களை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனிடம் 20வது சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் இந்திக்க விக்கிரமசிங்க கையளித்துள்ளார். குறித்த காணி ஆவணங்கள் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்து அவரூடாக உரிய முறையில் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எ…

  10. இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு? பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் இன்றைய நம்பிக்கையில்லாத தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார். எங்களை அடுத்த இரண்டுமூன்று நாட்களில் பெரும்பான்மையை நிருபிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டா…

  11. தமிழர் தேசம் அபகரிக்கப்படும் நிலையில் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து ரணிலுக்கு ஆதரவாகப் பேசினார் சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் 15 பேரைச் சந்தித்து இலங்கை அரசியல் நெருக்கடி தொடர்பாக கலந்துரையாடியுள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சம்பந்தன் தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது. கூட்டமைப்பின் பேச்சாளரும் ரணில் விக்கிரமசிங்கவி்ன் ஜனநாயக உரிமை மீறலுக்கு எதிராக செயற்பட்டு வருபவருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினா்கள் அனைவரும் சந்திப்பில் கலந்துகொண்டனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்…

  12. பாராளுமன்றம் புண்ணிய பூமியானதன் பின்னரே ஓய்வு பெறுவேன் : காமினி ஜயவிக்கிரம “எனது அரசியல் வாழ்விலிருந்து நான் ஓய்வு பெறுவது பாராளுமன்றத்தை சுத்தமான பூமியாக்கியதன் பின்னர்” என சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம தெரிவித்தார். பாராளுமன்றில் கடந்த அமர்வில் மிளகாய்த்தூள் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிராக நீதி கோரி பொலிஸ் தலைமையகத்தில் சற்று முன்னர் முறைப்பாடு செய்து திரும்பிய காமினி ஜயவிக்கிரம ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த காமினி ஜயவிக்கிரம, “1972 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்க தான் என்னை அரசியலிற்குள் பிரவேசிக்க வைத்தார். அன்றிலிருந்து எனது அரசியல் வரலாற்றில் பொலிஸ் …

  13. ரணில் தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல்! ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பிநிலைக்கு மத்தியில், கடந்த நாடாளுமன்ற அமர்வுகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. புதிய பிரதமரை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு வரும் அதே சந்தர்ப்பத்தில், ரணிலுக்கும் நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கவில்லையென மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது. அதன் பிரகா…

  14. எல்லாப் புகழும் மைத்திரிக்கே : மங்கள “ஜனநாயகத்திற்கு விரோதமாக, முகம் விருப்பமில்லை என்பதற்காக பதவியை பறித்து வேறோருவருக்கு கொடுத்து விட்டு பலாத்காராமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தேர்தலை நடாத்த வேண்டும் என்று கூற முடியாது” என பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்று ஊடகவியலாளரின் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மங்கள சமரவீர மெற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மங்கள, “ஜனாதிபதிக்கு விருப்பமான முகத்திற்கு பிரதமர் பதவியை கொடுக்கலாம் என ஜனநாயகத்தில் எங்கும் குறிப்பிடவில்லை மாறாக பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்றவர்களு…

  15. “சிங்கள தலைமைகளுக்காக நீதிமன்றம் சென்ற தமிழ் தலைமைகள் தமிழர்களுக்காக செல்லாதது வேடிக்கையானது” அரசாங்கம் பிரபாகரனிடம் வடக்கை மட்டும் வைத்துகொள் கிழக்கை விடு என தெரிவித்த போது, அதற்கு பிராபகரன் எனக்கு வடக்கைவிட கிழக்கு என்னுடைய இதயம் என தெரிவித்தார். கிழக்கு விடுபடக் கூடாது என்பதற்காக முள்ளிவாய்கால் பேரழிவு ஏற்பட்டது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். எனவே இவ்வளவு தியாகத்தின் மத்தியில் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய எந்த தரப்பையும் நாங்கள் அடிப்போம். இன்று சிங்கள அரசியல் தலைமைகளை பாதுகாப்பதற்காக தமிழ் தலைமைகள் நீதிமன்றத்திற்கு செல்கின்றார்கள் ஆனால் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக யாரும் நீதிமன்றத…

  16. 35 ஆண்டுகளுக்கு பின் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் உயர்வு கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்னர் 33 அடி உயர்வடைந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் 36 அடியாகக்காணப்பட்டபோதும், 1984ஆம் ஆண்டு 1983ஆம் ஆண்டு குளத்தின் அணைக்கட்டில் ஏற்பட்ட பாதிப்புக்காரணமாக 30 அடிக்கு மேலான தண்ணீரை சேமிக்கமுடியாத நிலை காணப்பட்டது. தொடர்ந்தும் குளம் புனரமைக்கப்படாத நிலையில் 2014ஆம் ஆண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டபோதும் 34 அடி 1 அங்குலமாக குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்டாலும் 30அடி வரையிலான தண்ணீரே சேமிக்கப்பட்டது, 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாண்டிலேயே …

  17. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கென நூறு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் நூறு மில்லியன் ரூபா (100Mn) நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு கிராமியக் குளங்களின் புனரமைப்புக்கு ஏழு மில்லியன் ரூபாவும் (7Mn), தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து வீதிகளுக்கும் தலா இரண்டு மில்லியன் ரூபா வீதம் மொத்தமாக முப்பது மில்லியன் ரூ…

  18. யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் விடுதலைப்புலிகள் என்னை தொடர்புகொண்டனர்- அகாசி யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர் என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார் கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் எனக்கு விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ள அவர் 2003 இல் கிளிநொச்சியில் நான் பிரபாகரனை சந்தித்தேன் அது நீண்ட சந்திப்பு என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சமாதானத்திற்கான வாய்ப்புகள் மற்றும் விடுதலைப்புலிகளிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானம் …

  19. யானை வைரமாகிறது – வைரத்துள் கை கோர்க்குமா? மணியும் அடிக்குமா? November 21, 2018 ஐக்கியதேசிய கட்சி பாரிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜாதிஹ ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உட்பட சில கட்சிகளுடன் இது தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வேண்டுகோள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் உறுப்பினர்கள் பலர் இந்த பாரிய கூட்டணியில் இணையவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரட்ணவும் அர்ஜுன ரணதுங்கவும் தனியான அமைப்பொன்றின் மூலம் இந்த கூட்டணியில் இணையவுள்ளனர். ஐக்கியதேசிய கட்சியின் இந்த முயற்சி வெற்றியடைந்ததும் புதிய பாரிய கூட்டணியில் இணையுமாற…

  20. கடித தலைப்பால் சர்ச்சை November 21, 2018 குளோபல் தமிழ்ச செய்தியாளர் பாராளுமன்ற செங்கோலின் படம் பொறித்து, பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளின் கடி­தத் தலைப்பு போன்ற வடி­வத்­தில் கடி­தத் தலைப்­பை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பயன்­ப­டுத்­து­வது சர்ச்­சை­யாகி­யுள்­ளது. இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நல்­லூர் பிர­தேச சபை­யின் உறுப்­பி­னர் ஒரு­வர் சபை­யின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளாது கடி­தத் தலைப்பு ஒன்றை தாமா­கவே உரு­வாக்­கிப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றார். அவர் பயன்­ப­டுத்­தும் கடி­தத் தலைப்­பில் அர­சின் இலட்­சினை பொறிக்­கப்­பட்­டுள்­ள­து­டன் நல்லூர் பிரதேச சபையின் பழைய இலட்­சி­னை­யும் பொறிக்­கப்­பட்­டுள்­ளது. இது­மட்­டு­மல்­லாது பாராளுமன…

  21. பயணத் தடையை.. எதிர்நோக்கும் ஆபத்தில், இலங்கை அரசியல்வாதிகள்! இலங்கை அரச தரப்பை சேர்ந்த சிலருக்கு பயணத்தடை விதிக்க சில நாடுகள் திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, வெளிநாடுகளிலுள்ள அவர்களது சொத்துக்களை முடக்குவதற்கும் குறித்த நாடுகள் கலந்தாலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாடுகள் அதிக கரிசனை கொண்டுள்ளன. இந்நிலையில், அரசியல் குழப்பநிலை நீடிக்குமானால் அதற்கு காரணமான உறுப்பினர்களுக்கு குறித்த தடையை விதிக்க எதிர்ப்பார்ப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவையே இதுகுறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …

    • 3 replies
    • 562 views
  22. முதலமைச்சர் உரையாற்றும் போது ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த உறுப்பினர்கள் மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மேல் மாகாணசபையின் புதிய சபா மண்டபத்தில் நேற்று 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், முதலமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது. முதலமைச்சர் வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பத்தரமுல்லவில் அமைக்கப்பட்ட புதிய சபா மண்டபத்தில், மாகாண சபை உறுப்பினர்களு…

    • 2 replies
    • 1.8k views
  23. சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானம்! நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான வகையில் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதென்றும், அதற்கெதிராக சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் எதிர்வரும் 24ஆம் திகதி கண்டியிலும், 27ஆம் திகதி களுத்துறையிலும், டிசம்பர் 3ஆம் திகதி கொழும்பிலும், டிசம்பர் 4ஆம் திகதி கிரிபத்கொடயிலும் உண்ணாவிரத போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசாங்கம் ஒன்று இல்லையென்றும், அதனால் புத…

  24. கண்ணிவெடி அகற்றும் பகுதிக்கு இங்கிலாந்து வீரர்கள் விஜயம்! இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சில வீரர்கள் மன்னாருக்குச் சென்றுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) அங்கு சென்ற அவர்கள், பெரியமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாக பார்வையிட்டுள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட வீரர்கள், பெரியமடு பகுதியில் இடம்பெறும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டதோடு, அதன் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்தனர். இங்கிலாந்து அரசின் நிதி உதவியுடன் ‘மெக்’ என்ற கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பு, பெரியமடு காட்டுப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்…

  25. தமிழ் மக்களிற்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகலாம்- இராஜதந்திரிகளிடம் கூட்டமைப்பு இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளனர் ; தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிற்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்ந்தால் பாராதூரமான விளைவுகள் உருவாகலாம் இது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.