ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
அலரி மாளிகையிலேயே ரணில் தொடர்ந்தும் தங்கியிருப்பார் – ஐக்கிய தேசிய கட்சி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையிலேயே ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தங்கியிருப்பார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் நேற்று(சனிக்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையின் பிரதமர் தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவே. இதன…
-
- 0 replies
- 438 views
-
-
தாழமுக்கம் சூறாவளியாக வலுப்பெறும் சாத்தியக்கூறு காணப்படுவதாக எச்சரிக்கை! அந்தமான் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 49,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மழை வௌ்ளம் மற்றும் சிறியளவிலான மண்சரிவுகளால் சுமார் 300 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணி…
-
- 0 replies
- 310 views
-
-
“பாராளுமன்ற கலைப்பு சட்ட விரோதம் – உயர் நீதிமன்றம் செல்வோம்” November 10, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்றையதினம் பாராளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகள் மிகத் தெளிவாக காணப்படுகின்றது எனவும் அதனை தவறாக அர்த்தப்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைப்பதனை உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையகமும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நாலரை ஆண்டுகளைக் கடப்பதற்கு முன்னர் அதனை ஜனாதிபதி கலைக்க முடியா…
-
- 5 replies
- 874 views
-
-
நடராஜா ரவிராஜின் நினைவு தினம் அனுஷ்டிப்பு படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 12 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவுத் தூபியின் முன்பாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இன்று நடைபெற்றுள்ளது. இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 923 views
-
-
படத்தின் காப்புரிமை Buddhika Weerasinghe இலங்கை நாடாளுமன்றத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென்று வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இலங்கை அரசியல் களமானது பரபரப்புடன் காணப்படுகிறது. இதெல்லாம் தொடங்கியது அக்டோபர் 27. அன்றுதான் திடீரென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அப்போதில் இருந்து அங்கு பல மாற்றங்களும் நிகழ்வுகளும் நடந்த வண்ணம் உள்ளன. அன்றிலிருந்…
-
- 0 replies
- 418 views
-
-
இலங்கை அரசியலில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலைக்கு சமரச முயற்சியொன்றினை முன்னெடுக்கும் பொருட்டு, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் இருவருடன், ஜனாதிபதியின் சகோதரர் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாக, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது 'பேஸ்புக்' பக்கத்தில் இது குறித்து மனோ கணேசன், விளக்கமான பதிவொன்றினை இன்று சனிக்கிழமை பதிவிட்டுள்ளார். …
-
- 0 replies
- 563 views
-
-
November 10, 2018 இலங்கையின் தலையெழுத்தை, மூடிய அறைக்குள் சில முதியவர்கள் இணைந்து தீர்மானிக்கின்றனர் என ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவர் ஜயத்மா விக்ரமநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார். ஆசியாவின் பழைமைவாய்ந்த ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனையாக, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி அமைந்துள்ளதென அவர் தனது கடுமையான விமர்சனத்தை ருவிட்டர் பதிவில் முன்வைத்துள்ளார். தற்போதைய நிலையில், நாட்டின் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அரசியல் தலைவர்கள் செயற்படுவது அவசியமென வலியுறுத்தி உள்ள ஐ.நா. தூதுவர் ஜயத்மா, குறிப்பாக தற்போ…
-
- 0 replies
- 327 views
-
-
November 10, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள அரசாங்கத்தில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அரசாங்கத்தில் அமைச்சுக் பொறுப்புக்களை பெற்ற பல சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது புதிய பிரதமர் நியமனம் , பாராளுமன்ற ஒத்திவைப்பு மற்றும் 19 அரசியலமைப்பை மீறும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளே இவர்கள் சுதந்திர கட்ச…
-
- 0 replies
- 306 views
-
-
November 10, 2018 தற்போது காணப்படுகின்ற நிலைமைகளை கவனத்தில் கொண்டு அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு சுமார் 500 கோடி ரூபா வரை தேவைப்படும் எனவும் எதுவாக இருந்தாலும் பொறுமையாக தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொது தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் எனினும் சட்டத்திற்கமையவும் தேர்தல் ஆ…
-
- 0 replies
- 474 views
-
-
இலங்கையில் திருமாவளவன் கார்த்திகை மாதம் ஈழத் தமிழர்களின் புனித மாதம். இந்த மாதத்தில்தான் மாவீரர் நாள் அங்கே கடைபிடிக்கப்படுகிறது. தமிழர்கள் வசிக்கும் பகுதியை ஆளும், வடமாகாண சபை 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தீர்மானத்தை ஒட்டி தமிழ் தேசிய பசுமை இயக்கத் தலைவரும், முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தமிழ் ஈழத்தில் இந்த ஆண்டு கார்த்திமை மாதம் பெரிய அளவில் மர நடும் விழாக்களை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று இலங்கை சென்றிருக்கிறார். தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பை ஏற்று திருமாவளவன்,…
-
- 2 replies
- 801 views
-
-
ஜனாதிபதி ஆரம்பம் முதலே அரசியலமைப்பை மீறி செயற்பட்டு வருகின்றார் – ஜே.வி.பி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பம் முதலே அரசியலமைப்பை மீறி செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்த்துள்ளோம். அத்துடன், ஜனாதிபதி ஆரம்பம் முதலே அரசியலமைப்பை மீறி செயற்பட்டு வருகின்றார். அடுத்த தேர்தலில் அவரது அரச அத…
-
- 0 replies
- 304 views
-
-
வரலாற்றில் மோசமான சாதனையை பதிவு செய்த மஹிந்த ராஜபக்ச கடந்த மாதம் 26ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார் ஜனாதிபதி. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவில்லாத மஹிந்தவை பிரதராக்கியது ஜனநாயக விரோதம் என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனாலும், தம்மிடம் 113 உறுப்பினர்களின் ஆதரவிருப்பதாக மைத்திரி கூறி வந்தார். எனினும், மைத்திரி- மஹிந்த தரப்பு எதிர்பார்த்ததை போல 113 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. பெருந்தொகைக்கு குதிரை பேர முயற்சிகள் நடந்தபோதும், அவை வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மைத்திரி- மஹிந்த தனியாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். பெரும்பான…
-
- 0 replies
- 487 views
-
-
நாடாளுமன்றைக் கலைக்க சிறிலங்கா அதிபர் முடிவெடுத்தது ஏன்? சிறப்புச் செய்தியாளர்Nov 10, 2018 | 2:13 by in செய்திகள் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு, 113 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையிலேயே சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்தார் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மகிந்த ராஜபக்ச தலைமையில் தான் நியமித்த புதிய அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடும் முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள்…
-
- 0 replies
- 339 views
-
-
’தமிழர் தாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்’ Editorial / 2018 நவம்பர் 10 சனிக்கிழமை, பி.ப. 01:11 Comments - 0 -எஸ்.நிதர்ஷன் தமிழர் தாயகத்தை மீட்டெடுத்து அதை தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை, தமிழ்த் தலைமைகள் மேற்கொள்ள வேண்டுமென, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற மரங்கள் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இதற்கு முன்னர் 2002ஆம் ஆண்டில் வன்னிக்கு வந்திருப்பதாகவும் அப்போது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை ச…
-
- 0 replies
- 271 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – அமெரிக்கா ஆழ்ந்த கவலை சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முடிவு குறித்து, அமெரிக்கா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீச்சகப் பக்கத்தில், இதுதொடர்பான பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதான செய்தி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைகிறது. இது அரசியல் நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்யும். சிறிலங்காவின் அர்ப்பணிப்புள்ள பங்காளர் என்ற வகையில், உறுதிப்பாட்டையும் செழிப்பையும் உறுதி செய்வதற்கு, ஜனநாயக அமைப்புகளும், செயல்முறைகளும் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது. http://ww…
-
- 1 reply
- 393 views
-
-
ரணிலே தொடர்ந்தும் தலைவர் November 10, 2018 சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக நியமிப்பது தொடர்பில் தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் தொடர்ந்தும் ரணில் விக்கிரசிங்கவே கட்சியின் தலைவராக செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு தலைவராக சஜித்தை நியமிப்பது தொடர்பில் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று காலை அவசர கூட்டம்ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/102864/
-
- 0 replies
- 325 views
-
-
நாளை அவசரமாக கூடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம் November 10, 2018 ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம், நாளை ஞாயிற்றுக்கிழமை அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்கவுக்கு சென்றிருந்த நிலையில் நாளை, நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்ட நிலையில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில், இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட உயர்மட்டத்தரப்பினர் அனைவரும் கலந்துகொள்ளவ…
-
- 0 replies
- 225 views
-
-
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் உத்தியோக அறிவித்தல் இன்னும் கிடைக்கவில்லை. Sri Lanka president sacks parliament after power struggle: minister Nov 09, 2018 22:05 PM GMT+0530 | 0 Comment(s) AFP - President Maithripala Sirisena sacked Sri Lanka's parliament Friday hours after his party announced he did not have a majority to get his prime minister nominee through the legislature, a minister said. Sirisena signed an official notification dismissing the 225-member assembly with effect from midnight, clearing the way for a snap election nearly two years ahead of schedule, the minister sa…
-
- 29 replies
- 3.3k views
-
-
தற்போது... இலங்கையில் நடக்கும், பிரதமர் போட்டியில்.. யாழ். கள உறவுகளின் அரசியல் அறிவை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான கருத்துக் கணிப்பு இது. ஒரு கேள்விக்கு, ஒரு வாக்கு மட்டுமே... போட முடியும். பொழுது போக்கான கருத்துக் கணிப்பு என்பதால்... அனைவரும் தயங்காமல் வாக்களிக்கலாம். இந்தக் கருத்துக் கணிப்பு... வரும் 14.11.18 அன்று, ஐரோப்பிய நேரம் காலை ஆறு மணி வரை.. இடம் பெறும். உற்சாகமாக உங்கள் வாக்குகளை செலுத்தி, உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.
-
- 16 replies
- 2.1k views
-
-
TNA மகிந்தவை ஆதரித்திருந்தால் நாடாளுமன்றம் காப்பாற்றப்பட்டு இருக்கும்….. சுப்பிரமணியன் சுவாமி November 10, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமையானது சரியான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள பாஜகவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவை ஆதரித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்துள்ளார். கட்சி தாவுபவர்களை அடிப்படையாக கொண்ட பெரும்பான்மை என்பது அரசியலமைப்பிற்கு உகந்ததாக இருந்தாலும் ஜனநாயகத்தின் தார்மீகத்தினை வாக்காளர்களே தீர்மானிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்தவுக்கு ஆதரவளித்திருந்தால் அது சிறந்த விடயமாக அமைந்திருக்கும் எனக் குறி…
-
- 0 replies
- 450 views
-
-
மைத்திரி யாவற்றையும் சுக்கு நூறாக்கினார்… மனோ கணேசன் November 10, 2018 தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையையும் இதுவரை நாட்டில் நிலவிவந்த அரசியல் சம்பிரதாயங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுக்கு நூறாக்கியுள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேற்றிரவு பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலை அறிவித்ததை தொடர்ந்து சகோதர மொழி வானொலிச் சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த செயற்பாடானது இலங்கையின் அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானது எனவும் இதற்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்…
-
- 0 replies
- 485 views
-
-
“யாப்பும் நானே 19ம் திருத்தமும் நானே” – ஜனவரி 5ல் தேர்தல் – வேட்பு மனு தாக்கல் 19ல் ஆரம்பம்… November 9, 2018 நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்த ஜனாதிபதியின் பிரகடனம் அடங்கிய விசேட வர்த்தமானி இன்றிரவு வெளியாகியுள்ளது இலங்கையின் அரசமைப்பினால் எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் 2019 ஜனவரி ஐந்தாம் திகதி புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறும் இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நவம்பர் 19 ம் திகதியில் ஆரம்பமாகி 26 ம் திகதி வரை நடைபெறும் எனவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது புதிய பாராளுமன்றத்தி…
-
- 0 replies
- 343 views
-
-
ஒப்ரேஷன் வியாழேந்திரன்: விமான நிலையம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரை… நடந்தது என்ன? November 3, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று கட்சி தாவி, அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டார். சமூக வலைத்தளம் முழுவதும் அவரது முடிவை கண்டித்து, விமர்சனங்களால் நிறைந்து போயிருக்கிறது. வியாழேந்திரன் 48 கோடிக்கு விலை பேசப்பட்டார்… மஹிந்த ராஜபக்ச நேரடியாக பேசினார்… கனடாவில் 30 கோடி கைமாறியது என சமூக வலைத்தளங்கள் முழுவதும் வியாழேந்திரன்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார். வியாழேந்திரன் எப்படி வளைத்தெடுக்கப்பட்டார், எப்படியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன, யார் எல்லாம் இந்த டீலின் பின்னணியில் இருந்தார்கள் என்ற தகவல்களை தமிழ்பக்கம் திரட்ட…
-
- 16 replies
- 2.1k views
-
-
இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் அண்மையில் வெளியிட்ட கருத்திற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, அவரிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் செய்தியில் இது குறித்து பதிவிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ஸ, “அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளீதரனின் கருத்து அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார். “முரளீதரன் நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள்” என கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் த…
-
- 6 replies
- 1k views
-
-
கொடுங்கோன்மையை தோற்கடிப்பதற்கு அணிதிரளுங்கள்- மங்களசமரவீர கொடுங்கோன்மையை தோற்கடிப்பதற்கு அனைவரும் அணி திரளவேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர கருத்து வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்துள்ளமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பெரும்பான்மையில்லாததால் நம்பிக்கையிழந்த நிலையில் உள்ள ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை சட்டத்தின் ஆட்சியை ஒழுக்கத்தை போற்றி பேணுபவர்கள் அனைவரும் உருவாகிவரும் கொடுங்கோன்மையை தோற்கடிப்பதற்கு அணி திரளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். http://www.virakesari.lk/arti…
-
- 0 replies
- 451 views
-