Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பெறுமதியான பரிசில் கிடைத்துள்ளது எனவும் அதனை உரிய முகவரியில் சேர்ப்பிப்பதற்கு வங்கியில் உடனடியாக பணம் வைப்பிலிடுமாறு கோரி அழைக்கப்பட்ட தொலைபேசியில் வந்த தகவலை நம்பிக்கை வைத்து வங்கியில் 93 ஆயிரத்து 800 ரூபா பணத்தை வைப்பிலிட்டு ஏமாற்றமடைந்த குடும்பத்தலைவர் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவரே இவ்வாறு பாதி்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கைத் துரிதமாக விசாரணை செய்து பின்னணியிலிருப்போரைக் கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் காவல்த…

  2. 36 மணி நேரமாக அனத்தத்திற்குள் சிக்கியவர்கள் விமானப் படையினரால் மீட்பு முல்லைத்தீவு குமுழமுனையில் 36 மணி நேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கி கடும் முயற்சியெடுத்தும் மீட்க முடியாது பரிதவித்த 6 பேரினை இராணுவத்துடன் இணைந்து விமானப்படையினரால் இன்று காலை மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 07.11. 2018 அதிகாலை 12.10 மணியளவில் ஏற்பட்ட குமுழமுனை நித்தகை குளம் உடைப்பெடுத்திருந்த பேரனர்த்தத்தின் போது அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகாக சென்றிருந்தவர்கள் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியினை கிராமத்து இளைஞர்களுடன் ஊடகவியலாளர் பா.சதீஸ், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் இ. மயூரன் ஆகியோரின் அபார முயற்சியினால் முதற்கட்டம…

  3. பூரணை தினத்திற்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்து, சொன்னதைச் செய்தேன்.. November 9, 2018 ஏற்கனவே தாம் தெரிவித்திருந்தது போல், பூரணை தினத்திற்கு முன்னதாக அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டதாக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற, கலாநிதி பந்துல குணவர்தன எழுதிய இலங்கை பொருளாதாரத்தின் 3 வருட முன்னேற்றம் மற்றும் பாதிப்பு என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அவர், தனது தீர்மானம் சரியானதா என பாராளுமன்றத்தில் அல்ல, மக்களிடமே வினவ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “ஏன் உங்களுக்கு 8 அல்லது 6 மாதங்கள் பொறுமையாக இருக்க முடியவில்லை என வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் …

  4. யாழ் மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக இராணுவத்தளபதி தெரிவிப்பு! யாழ்.மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ’30 வருடங்கள் துரதிஸ்டவசமாக இராணுவம் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலை உருவானது. ஆனால் ஆயுதத்தால் பேச முனைந்தவர்களுடனேயே இராணுவம் போராட்டம் நடாத்தியது. அது தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. போர் காலத்திலும், போருக்கு பின்னரும் தமிழ் மக்களுடன் இராணுவத்திற்கு எந்தவொரு பிர…

    • 11 replies
    • 1.3k views
  5. நாட்டைக் கட்டுப்படுத்தும் பிரதான துறைகள், மைத்திரி + பாதுகாப்பு அமைச்சின் வசம்….. November 9, 2018 இலங்கையின் அரசாங்க அச்சகமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே இன்று காலை காவற்துறை திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ஊடக அமைச்சும் அதன் கீழான நிறுவனங்களும் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்ட இருந்தது. இலங்கையின் அரசியல் யாப்பிற்க்கு அமைவாக பாதுகாப்புத்துறை மற்றும் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி என்பதும் அந்த நடைமுறையே 1978ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்தும் வருகிறது. இந்த நிலையில் இவ்வாறான தொடர் நகர்வுகள் நாடாளுமன்றை கலைத்து இடைக்கால அரசாங்கத்தை …

  6. இந்தியாவின் திட்டம் சீனாவிற்கு கைமாறியது: நாமல் இந்தியாவிற்கு கொடுத்த திட்டங்கள் ஒன்றும் முறையாக நிறைவேற்றபடாதமையினால் சீனாவிடம் அத்திட்டங்களை கையளித்தோமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியா டுடே செய்திப்பிரிவுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலைய திட்டங்கள் உள்ளிட்ட பலவற்றை ஆரம்பத்தில் இந்தியாவிற்கே கையளித்தோம். ஆனால் அத்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளவில்லை. மேலும் இலங்கைக்கு பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு சீனா உதவியுள்ளது. அதனடிப்படையிலேயே சீனாவிடம் திட்டங்களை கையளித்தோம். அரசியல்வாதிகள் என்ற…

  7. நான் கட்சியிலிருந்து விலகவில்லை: தவராசா ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து நான் விலகவும் இல்லை. என்னைக் கட்சி விலக்கவும் இல்லையென வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் அக்கட்சியின் முக்கியஸ்தருமான எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று (வியாழக்கிழமை) ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள், ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்கின்ற நீங்கள் மீளவும் அக்கட்சியில் இணைந்து செயற்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “ஈழ மக்கள் ஐநயாகக் கட்சியிலி…

  8. November 8, 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளில் சரிகள், பிழைகள் இருக்கலாம். அது மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவருக்கு எதிரான கருத்துக்கள் தற்போது திட்டமிட்ட வகையில் முன்வைக்கப்பட்டு வருவதனை ஏற்க முடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கட்சியிலிருந்து விலக்க வேண்டுமென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சித…

    • 4 replies
    • 1.2k views
  9. மட்டக்களப்பு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லையென முறைப்பாடு படுவான்கரை பிரதேசத்திற்குச் செல்லும் விதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன நீடித்த அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், நகர்ப்புறங்களிலிருந்து படுவான்கரை பகுதிக்குச் செல்லும் பிரதான பாதைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டதாக மாவட்ட செயலகம் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்த போதிலும் ஒழுங்கான வடிகான்கள் புனரமைக்கப்படாமையினால், பருவமழை…

    • 0 replies
    • 241 views
  10. பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களம்! சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்ட பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படும் நிலையில், பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது அத்துடன், பொதுநிறுவன அமைச்சின் கீழ் அரச வங்கிகள் மற்றும் உப நிறுவனங்கள் அனைத்தும் இதுவரையில் செயற்பட்டு வந்த நிலையில், அவை தற்போது நிதி மற்றும் பொருளாதார அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்தில் இலங்கை மத்திய வங்கி தேசிய பொருளாதார அமைச்சின் கீழ் செயற்பட்டதுடன், ஏனைய அரச வங்கிகள் அரச முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின்…

    • 0 replies
    • 864 views
  11. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி குளத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்புக்கருகில் அச்சுறுத்திய முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது .நள்ளிரவு மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்த முதலை, வீட்டில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட கோழிகளை உண்டுள்ளதுடன், குடியிருப்பாளர்களையும் அச்சுறுத்தியுள்ளது. முதலையை நீண்ட முயற்சியின் பின்னர் பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம்ஓப்படைத்துள்ளனர்.வெள்ளத்தில் முதலை குடியிருப்புக்களுக்குள் சென்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது http://globaltamil…

  12. November 9, 2018 ஜனாதிபதி மைத்திரிபால விறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயார் என, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு, உடன்படபோவதில்லையென, ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டீ.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாரென, ரணில் விக்கிரமசிங்க த இந்து பத்திரிகைக்கு தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது http://globalt…

  13. November 9, 2018 Add Comment யாழ்.கைதடியில் உள்ள நவீன் பாடசாலை மாணவர்களுக்காக ஜோன் கீல்ஸ் பிறைவட் லிமிட்டட் (JOHN KEELLS OFFICE AUTOMATION) நிறுவனத்தினால் அமைத்து கொடுக்கப்பட்ட சிமாட் வகுப்பறை திறப்புவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அப் பாடசாலையில் கல்விகற்க்கும் விசேட தேவையுடைய மாணவர்கள் தமது தொழில்நுட்ப கல்வியை வளர்த்து கொள்ளும் முகமாக சுமார் 2 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ் வகுப்பறையை ஜோன் கீல்ஸ் பிறைவட் லிமிட்டர் (JOHN KEELLS OFFICE AUTOMATION) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெனோத தொறதெனிய சம…

  14. கருஜெயசூரிய பாராளுமன்றத்தை குழப்ப முயற்சித்து வருகிறார் – நிமல் சிறிபால டி சில்வா… சபாநாயகர் கருஜெயசூரிய பாராளுமன்றத்தை குழப்ப முயற்சித்து வருகின்றார் என சிவில் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சபாநாயகரின் நடவடிக்கைகள் பாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு எதிராகவே காணப்படுகின்றது எனவும் குறிப்பாக 14ஆம் திகதி பிரதமர் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகருக்கு எவ்வத அதிகாரமும் இல்லை எனவும் மாறாக அன்றையதினம் வாக்கெடுப்பு நடத்துமாறு சபாநாயகரா…

  15. November 9, 2018 மக்களின் தேவைகளைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும், மகிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாகவும் தொழிற்சங்கங்களின் பலத்தினை நிரூபிக்கும் வகையிலும் எதிர்வரும் 12ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் ஒன்றுகூடவுள்ளதாக ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. நாட்டைப் பாதுகாப்பதற்கான உழைக்கும் மக்களின் பலம் எனும் தொனிப்பொருளில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட…

  16. November 9, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றவுள்ள சிம்மாசன பிரசங்கத்தினை கேட்பதற்கு நாட்டு மக்களும் , சர்வதேசமும் தயாராக இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக …

  17. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியா டுடேக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளர். பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு அவசியமான பலம் தங்களிடம் உள்ளது எனவும் போதியளவு ஆதரவு உள்ளது என தெரிந்த பின்னரே தாங்கள் இந்த தீர்மானத்தை எடுத’ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 14ம் திகதி நம்பிக்கையில்லா பிரேரiணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளமாட்டோம் எனவும் தேவைப்பட்டால் தங்கள் பலத்தை நிரூபிக்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை …

  18. சிவசிதம்பரத்தின் நினைவு தினம் அனுஷ்டிப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரத்தின் 26ஆவது நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா, வைரவ புளியங்குளத்திலுள்ள சிவசிதம்பரத்தின் நினைவுத்தூபியில் நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா தலைமையில் குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.மயூரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம், நகரசபை உறுப்பினர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாரின் திருவுருவச்சிலைக்…

  19. வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவன்ச சத்தியப்பிரமாணம் வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையில் படிப்படியாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை, வீடமைப்பு அமைச்சானது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சஜித் பிரேமதாசவிடம் இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/வீடமைப்பு-அமைச்சராக-விமல/

  20. சாட்சிகளை மறைக்கவே வேன் 72 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது-நீதிமன்றுக்கு அறிவித்தது சி.ஐ.டி. கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டியவுக்கு செல்லும் போது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் பயணித்த வேனானது, வெலிசறை கடற்படை முகாமுக்குள் 72 துண்டுகளாக வெட்டப்பட்டமையானது சாட்சிகளை மறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே சந்தேகிக்கப்படுவதாக சி.ஐ.டி. நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வாவுக்கு அறிவித்தது. குண்டு செயலிழக்கச் செய்வது குறித்த நிபுணத்துவம் பெற்ற, கடந்த 10 வருடங்களாக அத்துறையில் உள்ள பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உதவி பொலிஸ் அத்தியட்சர் திமுத் சுரங்க சமரநாயக்…

  21. ஐ.தே.கவின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பில் இன்று மாலை!!! Published by Vijithaa on 2018-11-09 11:28:31 ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது இன்று மாலை 4 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. பிலியந்தலை நகர், மருதானை ரயில்வே நிலையம், மொரட்டுவை ரயில்வே நிலையம், பெலேக்கடைச் சந்தி மற்றும் நுகேகொடைச் சந்தி ஆகிய இடங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணியானது நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/44140

  22. விசேட மேல் நீதிமன்றில் கோட்டா இன்றும் முன்னிலை! முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் இன்றும் முன்னிலையாகியுள்ளார். டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாய் அரச நிதியைப் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரகெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கோட்டா உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசாங்க…

  23. காணிகளை விடுவிப்பதற்கு 2300 மில்லியன் கோரும் படைத்தரப்பு - வியாழேந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சித் தாவிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான வியாழேந்திரனும் பங்குபற்றியுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவருக்காக கதிரையும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் இறுதி நேரத்தில் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றாததையடுத்து அவருக்காக ஒதுக்கப்பட்ட கதிரைஅப்புறப்படுத்தப்பட்டது. …

  24. மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம் - ஜனாதிபதி மைத்திரி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை.அது குறித்து நான் சிந்திக்கவில்லை. மஹிந்தவுடன் இணைந்து நாம் அடுத்த கட்ட செயற்பாட்டை மேற்கொள்வோம். அரசாங்கத்தை முன்னெடுப்போம்.இந்த விடயத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாக இருந்தால் அதற்கும் மாற்றுத் திட்டத்தை நான் வைத்துள்ளேன். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

  25. துருப்புச்சீட்டை பயன்படுத்த இடமளிக்க வேண்டாம்:மைத்திரி சூளுரை தற்போது நான் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் என்னை எவரும் சீண்டினால் பல துருப்புச்சீட்டுக்களை பயன்படுத்த நேரிடும். இதனால் வித்தியாசமான விபரீதங்களை சந்திக்கவேண்டி ஏற்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் நாங்கள் பெரும்பாண்மையை நிரூபிப்போம். இதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஆட்சியை கைப்பற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இருப்ப…

    • 1 reply
    • 522 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.