Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொல்.திருமாவளவன் யாழ்ப்பாணம் வருகிறார்… விக்னேஸ்வரனுடன் ஒரே மேடையில்! November 7, 2018 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அடுத்த வாரம் யாழ்ப்பாணம் வருகிறார். வடமாகாண மரநடுகை மாதத்தில் கலந்து கொள்ளவே திருமாவளவன் யாழ்ப்பாணம் வருகிறார். வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு வரும் 10ம் திகதி, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும், மலர் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் கலந்து கொள்கிறார். …

  2. ரணிலே எனது பிரதமர்- மகிந்த ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து விலகினார் மனுச நாணயக்கார மகிந்த ராஜபக்ச அமைச்சரவையில் பிரதியமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் சட்டவிரோத அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளிற்கு துணைபோகக்கூடாது என்ற முடிவிற்கு வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். மனுச நாணயக்கார தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது மகிந்த ராஜபக்சவை நீங்கள் பிரதமராக நியமித்து பாராளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தியதை தொடர்ந்து கடந்த சில நாட்கள் குழப்பம் மிகுந்தவையாக காணப்படுகின்றன. அவ்வேளை நான் உங்களுடன் பேச்சுவார்த்த…

  3. விக்னேஸ்வரன் சுயமாக கட்சியிலிருந்து விலகிவிட்டார் தமிழரசுக் கட்சி அறிவிப்பு Nov 07, 20180 விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளது.விக்கினேஸ்வரன் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்ததையடுத்து அவர் சுயமாக இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென அக்கட்சி மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/விக்னேஸ்வரன்-சுயமாக-கட்ச/

  4. கோத்தாவின் வாகனம் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து கொழும்புச் செய்தியாளர்Nov 07, 2018 by in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அவரது மனைவியும் பயணித்த வாகனம், இன்று காலை விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாந்தோட்டை- மெதமுலானவில் உள்ள தமது இல்லத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, ஹக்கம பகுதியில், சிறிய உழவு இயந்திரத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. உழவு இயந்திரத்தில் மோதிய கோத்தாபய ராஜபக்சவின் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து. மரம் ஒன்றுடன் மோதி நின்றது. இந்தச் சம்பவத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கோ, அவரது மனைவிக்கோ எந்தக் காயங்களும் ஏற்படவில்லை. அவர்கள் மற்றொரு வாகனத்தில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர். …

  5. 14ம் திகதி பாராளுமன்றம் கூடும்போது மகிந்தவுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு November 7, 2018 எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்றம் கூடும்போது மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடப்படும் என என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற கட்சிதலைவர்களின் சந்திப்பின் போது ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். எதிர்வரும் 14 ம் திகதி பாராளுமன்றத்தில் சம்பிரதாய அமர்வொன்று மாத்திரமே இடம்பெறவேண்டும் எனவும் பாராளுமன்ற பாரம்பரியத்தினை பின்பற்றி அன்று அதனை ஒத்திவைக்கவேண்டும் எனவும் ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்…

  6. உடனடியாக பாரளுமன்றை கூட்டாவிட்டால் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிக்கப்படலாம் November 7, 2018 1 Min Read இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உடனடியாக பாரளுமன்றை கூட்டுமாறு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்;துள்ளது. மேலும் பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதமானால் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஹெதர் நவுட் (Heather Nauert ) இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக காண்பதற்காக இலங்கை ஜனாதிபதியை பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கூட்டுவது தாமதம…

  7. சட்டவிரோத சதி முயற்சியால் முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய இருவரும் இரண்டாவது சட்டவிரோத சதிக்காக தற்போது கூடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாமல் சட்டவிரோதமாக பிரதமரை நியமித்து, அமைச்சரவை ஒன்றை உருவாக்கிய மைத்திரி- மஹிந்த அமைப்பு தற்போது, நாட்டின் அரசமைப்பை முற்றாக மீறும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முயற்சிக்கின்றனர். சில வேளைகளில் இன்று இரவு கூட நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். தவறான அரசியல் முடிவுகளை எடுத்து, அதன்மூலம் நாட்டை அழிக்க முயற்சிப்பதன் ஊடாக 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது தமக்கு ஏற…

  8. November 7, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். சமல் ராஜபக்ஸ சுகாதார அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எஸ்.பி.திசாநாயக்க நெடு…

  9. யாழ் மாநகர முதல்வரின் அன்பான வேண்டுகோள் நகரை சுத்தம் செய்பவர்களும் மானிடப்பிறவிகளே

    • 0 replies
    • 319 views
  10. பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு இணைப்பு சம்மந்தமாக திரு.கயேந்திரகுமார் அவர்களினால் வழங்கபட்ட பதில்

    • 0 replies
    • 413 views
  11. ஜனாதிபதியின் நடவடிக்கையால் நாடு செயலிழந்துள்ளது என சாடியுள்ள மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவான முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிசேன இலங்கையை உலகநாடுகள் மத்தியில் நகைச்சுவைபொருளாக்கியுள்ளார் என தெரிவித்துள்ள குமார வெல்கம பிரதமர் யார் என்ற விவகாரத்திற்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வை காணவேணடும் என தெரிவித்துள்ளார். எமது நாடு அதளபாதளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் அரச அலுவலகங்களில் எவரும் பணிபுரியாத நிலை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். அரச ஊழியர்கள் யார் உண்மையான பிரதமர் என தெரியாமல் தடுமாற்றத்த…

  12. குளோபல் தமிழ் செய்தியாளர் வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக இயல்புக்கு மாறான காலநிலை காணப்படுகின்றது. இந் நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இன்று அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைந்து காணப்பட்டதுடன் அரச த திணைக்களங்களின் அன்றாடச் செயற்பாடு மற்றும் பல்வேறு தொழில்துறை சார்ந்த நடவ…

  13. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு திறந்த கடிதம் தேவநேசன் நேசையா- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்.. குறிப்பு: 1959 ல் இருந்து நாட்டில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரும் 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தேசிய கௌரவ விருது பெற்றவருமான கலாநிதி தேவநேசன் நேசையா என்பவரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் எழுத்துரு நகல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. 07.11.2018 மேன்மை மிகு மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி, இலங்கை. உங்கள் மேன்மைக்கு, இலங்கையின் விசுவாசமான ஒரு குடிமகனா…

  14. படத்தின் காப்புரிமை Getty Images இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்கிறார் ரணில். எந்தக் கேள்விக்கும் நீண்ட விளக்கத்தை அளிப்பவரல்ல ரணில். பெரும்பாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்கிறார். இலங்கை அரச அதிகாரத்தின் மையமாக கருதப்படும் அலரி மாளிகையில் இருந்தபடி, பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் ரணில் விக்ரமசிங்க. அந்தப் பேட்டியிலிருந்து: கே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதா? ப. இந்த…

  15. வடக்கில் மாவட்ட மற்றும் ஆதார மருத்துவ மனைகளுக்கு வழங்கப்பட்ட சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்று மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு சுகாதார அமைச்சு இவற்றை வழங்கியுள்ளது. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைகளுக்கும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி, செட்டிகுளம் ஆதார மருத்துவ மனைகளுக்கும் தலா இரண்டு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. https://newuthayan.com/story/19/சிறுநீரகங்களைச்-சுத்திகரிக்கும்-இயந்திரங்கள்-இய…

  16. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு தேசாபிமானி, தேசபந்து, லங்கா புத்திர, மானகீத்தவாதி ஆகிய கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வறுமைகோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், இராணுவ உயர்நிலை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 25 மாணவர்களுக்கு புலமைப்பரிசிலும், 50முதியவர்களுக்கு கண்புரைசத்திரசிகிச்சைக்கு உரிய உதவியும், தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைகளுக்கு உடுபுடவைகளும் வழங்கி வைக்கப்பட்டது http:…

  17. வடக்கு – தெற்கு மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட அரசியல்வாதிகள் தீர்க்கவில்லை – முரளி குற்றச்சாட்டு வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட அரசியல்வாதிகள் பூர்த்தி செய்யவில்லை என இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிபிசிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே முத்தையா முரளிதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கை மக்கள், அரசியல்வாதிகளிடம் இருந்து ஜனநாயகம் மட்டுமன்றி உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் எதிர்பார்க்கின்றனர். அரசியல்வாதிகள் தெற்கிலும், வடக்கிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்யவ…

  18. November 7, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான, ரஞ்சித் மத்தும பண்டாரவின் செயற்பாடு சட்டவிரோதமானது மட்டுமல்ல தேசிய ரீதியில் பெறுமதியற்றதென அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளரும…

  19. 3 தனது கோரிக்கைகள் செவிசாய்க்கப்படாவிட்டால் தற்போதுள்ள அரசாங்கத்தை எதிர்க்கத் தயாராக இருப்பதாக கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். கிழக்கில் இதுவரை எந்தவித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை எனவும் மூன்றரை வருடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியிடமே நிதி அமைச்சு காணப்பட்டபோதும் அக்கட்சி எவ்வித அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை எனவும் வியாழேந்திரன் குறிப்பிட்டார். கிழக்கில் முஸ்லிம் சமூகம் துரித அபிவிருத்தியை அடைந்துள்ளது. பிள்ளையான் காலத்தில் துரித அபிவிருத்தி நடந்தது. இப்போது பிள்ளைகளுக்கு மலசலகூடங்கள் கூட இல்லை. 50,000 வீடுகள் கட்டப்படவில்லை. அரசியலிலிருந்து 50,…

    • 2 replies
    • 615 views
  20. கொள்கைப் பிரகடனத்தின் பின் ஒருநாள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்… எதிர்வரும் 14ம் திகதி சட்டரீதியாக கூடவுள்ள நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியினால் புதிய கொள்கைப் பிரகடணம் வாசிக்கப்பட உள்ளதாகவும், அதன்பின்னர் பாராளுமன்றம் ஒரு நாளைக்கு பிற்போடப்பட உள்ளதாகவும் வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், 14ம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க தேவையில்லை என்றும், அன்றைய தினம் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

  21. இலங்கையில் இடம்பெற்றது ஆயுதமற்ற சதிப்புரட்சி.. November 7, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில்விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதை ஆயுதங்களை பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி என சபாநாயகர் கருஜெயசூரிய வர்ணித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார் என ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் விடயங்களை சதிப்புரட்சி என்றே வர்ணிக்கலாம் என ஐந்தாம் திகதி வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தூதரகங்களுக்கும் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள …

    • 2 replies
    • 600 views
  22. விடுதலை புலிகளின் பெயரை கூறி சிலர் பிழைப்பு நடத்துகின்றனர் – நாமல் குற்றச்சாட்டு! வேலுப்பிள்ளை பிரபாகரன் இறக்கவில்லை என கூறுபவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளிகள் இல்லை என கூற வேண்டும் அப்படி செய்யாமல் இந்த குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்க கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை கூறி சில அரசியல் வாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன் போது தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் பிரபாகரன் என்னும் உயிரிழக்கவில்லை என்றும், அவர் உயிர…

    • 1 reply
    • 452 views
  23. சிறிசேன பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரினார்- சஜித் பிரேமதாச ஜனாதிபதி சிறிசேன தன்னை பிரதமராக்குவதற்கு முன்வந்தது உண்மை என ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் சஜித்பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார். எனினும்; கொள்கை அடிப்படையில் சிறிசேனவின் இந்த வேண்டுகோளை நான் நிராகரித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பயந்து இதனை நிராகரிக்கவில்லை மாறாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது கொள்கை அடிப்படையில் சிறந்த விடயமல்ல என நான்க கருதினேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கா ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து …

    • 1 reply
    • 433 views
  24. மகிந்தவுக்காக கட்சியின் யாப்பில் திருத்தம் செய்கிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி? சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்புச் செய்வது குறித்த முக்கியமான செயற்குழுக் கூட்டம் நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. நாளை பிற்பகல் 4 மணியளவில் பத்தரமுல்லவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும கலந்து கொள்ளவுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டங்களில் பங்கேற்பதை சிலகாலமாக தவிர்த்து வந்த மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பது முக்கிய அம்சமாகும். இந்த செயற்குழுக் கூட்டத்தில், கட்சியை மறுசீரமைப்பது மற்றும், கட்சியின் யாப்பில் திரு…

    • 0 replies
    • 627 views
  25. MY3 + MR – சிங்கள மொழி தேசிய கீதம் – தமிழ் புறக்கணிப்பு – குண்டு துளைக்காத அங்கி….. November 7, 2018 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் பேரணி ஒன்று நேற்றுமுன்தினம் (05.11.18) நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துக்கொண்டு உரையாற்றியிருந்தனர். இந்நிகழ்வின் இறுதியில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியக் கீதம் இசைக்கப்பட்டிருந்ததோடு, தேசியக் கீதம் இசைக்க தொடங்கியதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கை அசைப்பதைக் அவதானித்திருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.