ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
November 6, 2018 நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவது குறித்து இன்னமும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஸ பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், பதவியேற்ற பல புதிய அமைச்சர்களின் பதவியேற்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பத்திரம் இதுரை நாடாளுமன்றத்துக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களிலும் மேலும் பலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நிலையில், உறுப்பினர்கள் ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சியுடன் இணையும் சந்தர்ப்பம் உள்ளதால், நாடாளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்க முடியாதுள்ளதாகவும் ,…
-
- 0 replies
- 211 views
-
-
மீண்டும் ஈ.பி.டி.பிக்குள் நுழைந்தார் தவராசா… வடக்கு முதலமைச்சர் வேட்பாளரும் அவரே! November 6, 2018 நிதி முரண்பாடுகள் காரணமாக கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட முன்னாள் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவை மீண்டும் அணைத்துக் கொண்டுள்ளது ஈ.பி.டி.பி. நேற்று ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தவராசா ஒன்றாக இணைந்து ஜனாதிபதி செயலகத்திற்கும் சென்றிருந்தனர். ஈ.பி.டி.பியின் கொழும்பு வீடு விற்பனை சமயத்தில் , சில கோடி ரூபா பணத்தை தவராசா பங்கு தொகையாக கோரியிருந்தார். இதனால் அதிர்ச்சியும், அதிருப்தியுமடைந்த ஈ.பி.டி.பி அவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவை எடுத்தது. அதற்கான முயற்சிகளிலும் இறங்கியது. தவராசாவின் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பறிக்க முய…
-
- 1 reply
- 632 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க - தேசிய தீபாவளி நிகழ்வில் மாற்றி மாற்றி சொன்ன டக்ளஸ் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலைமையில் தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மஹிந்த ரஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் சமயலத் தலைவர்களும் கலந்துகொண்டனர். இதில் முதலில் பேச அழைக்கப்பட்ட மீள்குடியேற்றும் மற்றும் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேச்சை ஆரம்பிக்க முன் ஜனாதிபதியை வரவேற்றார். அப்போது கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று விளித்தார். அரங்கமே சற்று புருவமுயற்ற உடனே சுதாரித்துக்கொ…
-
- 1 reply
- 476 views
-
-
ரணிலை ஓரினச்சேர்க்கையாளர் என்றா மேடையில் குறிப்பிட்டார் மைத்திரி?: புது சர்ச்சை! November 5, 2018 கொழும்பில் இன்று நடந்த மக்கள் பலம் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரட்டை அர்த்த வசனத்தில் ரணில் விக்கிரமசிங்கவை கிண்டல் அடித்தார் என்ற விமர்சனம் கிளம்பியுள்ளது. ரணில் ஓரினச்சேர்க்கையாளர் என்று குறிப்பிடும் விதமாக, “வண்ணத்துப்பூச்சி குழு“ என மைத்திரி கிண்டலடித்ததாக கண்டனங்கள் எழ ஆரம்பித்துள்ளன. இன்றைய பேரணியில் உரையாற்றிய மைத்திரி, “ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் வண்ணாத்துப்பூச்சிகள் குழு ஒன்றுதான் அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை எடுத்தது. ஜனாதிபதியாகிய நானோ, அமைச்சர்களோ முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. வண்ணத்திப்பூச்சிகளின் குழுவின் ஆட்…
-
- 3 replies
- 958 views
-
-
சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேவிபி தலைவர்களுடன் நேற்று பிற்பகல் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, சிறிலங்கா அதிபரை இரா.சம்பந்தன் சந்தித்துள்ளார். நாடாளுமன்றத்தை வரும் 14ஆம் நாள் கூட்டுவதற்கு சிறிலங்கா அதிபர் முடிவெடுத்த நிலையில், முன்னதாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான இறுதி சமரச முயற்சியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது. எனினும், இந்தச் சந்திப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை. http://www.puthinap…
-
- 0 replies
- 388 views
-
-
‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயருக்கு சிறைதண்டனை’ Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 11:52 Comments - 0 புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் நேற்று(05) நடத்தப்பட்ட “ஜன மஹிமய” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டினால் அவருக்கு சிறைதண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவருக்கு பிரதமர் ஆசனத்தை வழங்கப்போவதில்லை என சபாநாயகர் கருஜெயசூரிய விடுத்தி…
-
- 0 replies
- 384 views
-
-
ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானியை சவாலுக்குட்படுத்த முடியாது - உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாராளுமன்ற கூட்டத்தொடரை பிற்போடும் வகையில் ஜனாதிபதி பிறப்பித்த கட்டளை அடங்கிய அதி விசேட வர்த்தமானியை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த முடியாது என சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார். சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா தேமுனி டி சில்வா இதனை உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார். பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை ஒத்திவைத்து ஜனாதிபதி இட்ட கட்டளை உள்ளடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி பொது நல வழக்குகளை த…
-
- 0 replies
- 261 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் அமெரிக்கத் தூதுவர் பேசுகிறார்… November 6, 2018 இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை, இன்று (06.11.18) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பானது எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://globaltamilnews.net/2018/102155/
-
- 0 replies
- 202 views
-
-
தீய சக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலை நாட்டப்படுகின்ற ஒரு நாளாக தீபாவளி அமையவேண்டும்.. November 6, 2018 இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஒன்றினை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகள் என்பன பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்த சூழ்நிலையில், இந்த தீபத்திருநாளானது தீய சக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலை நாட்டப்படுகின்ற ஒரு நாளாக அமைவதோடு, எமது மக்கள் நிரந்தரமான சமாதானத்தையும் உண்மையான சுதந்திரத்தினையும் அடைய இந்நன்னாள…
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கையின் தற்போதைய நிலைமை மிக மோசமானது – ஐ.நா இராஜதந்திரி கடந்த கால யுத்த நிலைமையை விட தற்போதைய நிலைமை மிக மோசமானது என அல்ஜீரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஐ.நா இராஜதந்திரியுமான லக்தர் பிரஹிமி தெரிவித்துள்ளார். நெல்சன் மண்டேலாவினால் நிறுவப்பட்ட சமாதானம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் செயற்படும் ‘த எல்டர்ஸ்’ அமைப்பினூடாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையின் முப்பது வருடகால யுத்த நிலைமைகளின் போது கூட தற்போதுள்ள நிலையினைப் போன்றதொரு மோசமான அரசியலமைப்பு நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கவில்லை. நாட்டின் தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைப் பாதுகாப்பதுடன், நாடாளுமன்றத்தின்…
-
- 0 replies
- 302 views
-
-
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (5) தினம் விடுமுறை வழங்குமாறுஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தீபத்திருநாள் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் தீபாவளி தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விடுமுறையை வழங்குமாறும் எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலை நடாத்தி அந்த விடுமுறைக்கான தினத்தினை சரி செய்து கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் வட மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (4) அறிவித்தல் வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் . https://newuthayan.com/story/16/வடக்கு-பாடசாலைகளுக்கு-நாளை-விடுமுறை.html
-
- 6 replies
- 687 views
-
-
புதுடெல்லி – மகிந்த இடையில் நம்பிக்கையோ, புரிந்துணர்வோ கிடையாது – பேராசிரியர் முனி சிறப்புச் செய்தியாளர்Nov 05, 2018 | 2:37 by in செய்திகள் புதுடெல்லிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எந்தவிதமான பரஸ்பர நம்பிக்கையே புரிந்துணர்வோ கிடையாது என்றும், ராஜபக்சவின் மீள் வருகையையிட்டு இந்தியா நிச்சயம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியும், தெற்காசிய விவகாரங்களுக்கான நிபுணருமான பேராசிரியர் எஸ்.டி முனி தெரிவித்துள்ளார். The Straits Times இதழில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றிலேயே பேராசிரியர் எஸ்.டி முனியின் கருத்து இடம்பெற்றுள்ளது. “வெளிப்படையாக எதையும் கூறாவிடினும், ராஜபக்சவின் மீள்வருகை இந்தியாவுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கவில…
-
- 2 replies
- 540 views
-
-
“என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள்” November 5, 2018 “என் அன்புக்குரிய தமிழ், முஸ்லிம் மக்களே நான் உங்களிடம் கேட்பது, இந்த நாட்டை கட்யெழுப்ப உதவி செய்யுங்கள். நான் உங்களை நம்புகின்றேன். நீங்கள் எப்போதும் என்னை நம்ப வேண்டும். இன்று உங்களுக்கு நல்ல காலம் என தமிழில் உரையாற்றும் போது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ” மக்கள் மகிமை ” பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ப…
-
- 2 replies
- 2.5k views
-
-
ஜனாதிபதிக்கும் சம்பந்தனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று(திங்கட்கிழமை) மாலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதினால் வழங்கப்பட்டுள்ள புதிய பிரதமர் நியமனம் மற்றும் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை உடனடியாக கூட்டுமாறு இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில…
-
- 0 replies
- 473 views
-
-
November 5, 2018 Add Comment Share This! “தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக ” முன்னாள் முதலமைச்சரை வரவேற்று கிளிநொச்சியில் சுவரொட்டிகள். வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரனை வரவேற்று கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒ்டப்பட்டுள்ளன. தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக வருக தடை தகர்த்து தமிழர் எம் உரிமை காக்க உங்களுடன் நாங்கள் என எழுதப்பட்ட வசனங்களுடன் கிளிநொச்சி நகரெங்கும் குறித்த சுரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சுவரொட்டியின் கீழே வன்னி மக்கள் என எழுதப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24 ஆம் திகதி வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய தனது கட்சியை அறிவித்திருந்தார் என்ப…
-
- 1 reply
- 553 views
-
-
கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளுக்கு பணிப்பாளர்கள் நியமனம் November 5, 2018 கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி தள வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக தகுதிவாய்ந்த பணிப்பாளர்கள் இல்லாமல் இருந்த குறைபாட்டை நீக்கும் முகமாக மருத்துவ நிர்வாக முதுமாணி பயிற்சியை பெற்றுக்கொண்ட வைத்திய கலாநிதி .த. மஹேந்திரன் மத்தியசுகாதார அமைச்சினால் சாவகச்சேரி தள வைத்தியசாலைக்கு உடனடியாக செயட்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார் இதேவேளை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மருத்துவ நிர்வாக முதுமாணி பயிற்சியை பெற்றுக்கொண்டவைத்திய கலாநிதி தங்கராஜா காண்டீபன் நியமிக்கப்பட்டுள்ளார் அத்தோட…
-
- 0 replies
- 543 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜே.வி.பி.க்கும் இடையில் அவசர சந்திப்பு! நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் விடுதலை முன்னணி சந்திக்கவுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐ.தே.க. தீர்மானித்துள்ளது. இவ்விடயத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், ஐ.தே.க.வின் பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன் பின்னணியில் இடம்பெறவுள்ள இச்சந்…
-
- 2 replies
- 607 views
-
-
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து எம்மை வெளியேற்ற வேண்டும் என கஜேந்திரகுமார் கோரியுள்ளார் என அறிந்து கொண்டோம். அவர் என்ன செய்ய போகிறார் என ஏன் இன்னும் மக்களுக்கு சொல்லவில்லை. ஊடகவியலாளர்களுக்கும் எதுவும் சொல்லி இருக்க மாட்டார் என தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.. ஏனைய கட்சிகளை , மர்ரைவர்களை விமர்சிப்பதன் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்று கொடுக்கலாம் எனவோ தனது அரசியலை முன்னெடுக்கலாம் எனவோ நினைப்பது தவறு. தமிழ் மக்களுக்கு அவர் என்ன செய்ய போகிறார். அஹிம்சை ரீதியாக போராட போகிறாரா ? அல்லது ஆயுத ரீதியாக போராட போகிறாரா ? அல்லது தொடர்ந்து ஏனையவர்களை விமர்சித்துக்கொண்டு தான் இருக்க போகின்ற…
-
- 1 reply
- 723 views
-
-
மைத்திரியின் அரசியல் அழிவு ஆரம்பம்: சுமந்திரன் ஆவேசம்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூறுபோட நினைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் இறுதிக்காலம் ஆரம்பமாகிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில், அதாவது தமிழ் மக்களது வாக்குப் பலத்தில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கூட்டமைப்பைக் கூறுபோட நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இது அவரது அர…
-
- 6 replies
- 935 views
-
-
மைத்திரியை சந்தித்த கையோடு ரணிலை சந்தித்த ஹக்கீம் -றிசார்த் November 5, 2018 ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசார்த் பதியூதீன் ஆகியோருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் இச் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் இரவு றிசார்த் பதியூதீனை அழைத்து பேச்சுவார்த்தையில் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பாராளுமன்றத்தை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது. இதேவேளை நேற்றுக் காலை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை அழைத்து அரசாங்கத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அனைவரும் ஒன்றி…
-
- 1 reply
- 474 views
-
-
ஒரே பார்வையில் MY3 MR “113 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று விட்டோம்” November 5, 2018 பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினை பெற்று விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 4 வருடங்களின் பின்னர் ஒரே மேடையில் இருப்பது மகிழ்ச்சி… 4 வருடங்களின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் ஒரே மேடையில் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் இடம்பெறும் மக்கள் பேரணியில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நவம்பர் மாதம் என்பது ஆச்சிரயமூட்டும் மாதமாகும். 2014ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதம் …
-
- 0 replies
- 396 views
-
-
சபாநாயகரின் அறிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்கிறார் சரத் அமுனுகம.. November 5, 2018 சபாநாயகர் கட்சி ரீதியாகவும் கட்சிக்கு ஆதரவாகவும் அறிக்கை வெளியிடுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (05.11.18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார். இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு புதிய அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் முன்னர் இருந்த நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த அறிக்கையை தாங்கள் கண்டிப்பதாகவும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசியல் ரீதியான நெருக்கடியாக நிலமையை …
-
- 0 replies
- 617 views
-
-
ரணில் விக்கிரமசிங்க இல்லாத இணை அரசாங்கம் தயாரா? November 5, 2018 முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரட்ணவும் ஜோன் அமரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்க இல்லாத அரசாங்கமொன்றை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசியப்பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆட்சியமைக்கும் முயற்சிகளிற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறிசேன தனது அடுத்த கட்ட திட்டத்தை முன்னெடுத்துள்ளார் என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொது எதிரணியில் ஒரு பகுதியினர் மற்றும் ஐக்கியதேசிய கட்சியினரை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிசேன முயல்கின்றார் என கொழ…
-
- 0 replies
- 767 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனநாயகத்தை மீறியதாகக் குற்றம் சுமத்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு காந்திப்பூங்காவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 'ஜனாதிபதியே ஜனநாயகத்தைக் காப்பாற்று' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, அரசாங்கத்தில் இணைந்து பிரதியமைச்சர் பதவி பெற்றுக் கொண்ட, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு எதிராகவும் பதாதை ஏந்தப்பட்டிருந்த…
-
- 0 replies
- 898 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்று திங்கட்கிழமை (5.11.18) 100 ஆவது நாளாக தொடர்சியாக இடம் பெற்று வருகின்றது. தெடர்ச்சியாக மழை பெய்து கொண்டு இருக்கின்ற போதும் மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்பட்டும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணியானது இடம் பெற்று வருகின்றது கடந்த வியாழக்கிழமைக்கு பின் இன்று திங்கட்கிழமை காலை 100ஆவது தடவையாக அகழ்வுப் பணியானது இடம் பெற்றது. இது வரையான அகழ்வு பணிகளின் முடிவின் படி 216 க்கு அதிகமான மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதில் 209 அதிகமான மனித எச்ச…
-
- 0 replies
- 239 views
-