Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏறி செல்ல பயன்படுத்தப்படும் ஏணி அறுந்து விழும் நிலையில் காணப்படுகின்றது எனவும் புதிய ஏணியை மாற்ற காவற்துறையினர் அனுமதிக்கவில்லை எனவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். குறித்த ஆலயம் அமைந்துள்ள பகுதி தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது எனவும் அப்பகுதிக்கு எவரும் செல்ல கூடாது எனவும் நெடுங்கேணி காவற்துறையினர் தடை விதித்தனர். அதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்ததை அடுத்து , ஆலயத்திற்கு சென்று வருவதற்கும் வழிபாடுகளை மேற்கொள்ளவும் தடையில்லை எனவும் ஆலயத்தில் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க கூடாது என காவற்துறையினர் உத்தரவிட்டனர். அந்நிலையில் குறித்த ஆலயத்திற்கு அமைச…

  2. கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட மூன்று பிரதான வீதிகளில் மறைகாணி (சி.சி.ரி.வி) பொருத்த நல்லூர் பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தி, கொக்குவில் புகையிரத நிலைய வீதி மற்றும் இராமசாமி பரியாரியார் சந்தி ஆகிய இடங்களில் மறைகாணி (சி.சி.ரி.வி) பொருத்துமாறு கோப்பாய் காவற்துறையினர் நல்லூர் பிரதேச சபையிடம் கோரி இருந்தனர். அதனை அடுத்தே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திகளில் வாகன நெரிசல்கள் அதிகமாக உள்ளதாகவும் , அப்பகுதிகளை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதாகவும் அதனால் அப்பகுதிகளில் மறைகாணி(சி.சி.ரி.வி) பொருத்துவதன் ஊடாக அவற்றை கட்டுப்படுத்த முடியும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். …

  3. யாழ்ப்பாணத்தில் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க அமெரிக்கா முன்வருகை போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தவகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள வரலாற்றுக்கு முந்திய கலைப்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கும் இரண்டு வருட திட்டமொன்றை அமெரிக்க பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் ஆரம்பித்துவைத்தார். இத்திட்டத்துக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கலாசார பாதுகாப்புக்கான தூதுவர்கள் நிதியத்தின் கீழ் 23 மில்லியன் ரூபா ($140,000) வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மீளவும் பெறமுடியாத சிதைவடையும் நிலையிலுள்ள வரலாற்றுக்கு முற்பட்ட மட்பாண்டங்கள், பித்தளை மற்றும் செப்பு …

    • 0 replies
    • 403 views
  4. காஞ்சிரம்குடா படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு அம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிர்நீர்த்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16ஆவது ஆண்டு படுகொலை நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து அகழ் விளக்கேற்றி கண்ணீரோடு அனுஷ்டித்தனர். குறித்த படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பானது அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் திருக்கோவில் 02 சுப்பர்ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இதன்போது பொது அகழ் விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்…

  5. ஊடகவியலாளர் மீது தாக்குதல் ; கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சியில் பணிபுரிகின்ற பிராந்திய தொலைக்காட்சி ஒள்றின் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள ந்லையில் குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ள்பபட்ட குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது நேற்று செவ்வாய் கிழமை மாலை கிளிநொச்சி நகரிலிருந்து திருநகரில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு உந்துருளியில் சென்றிருக்கொண்டிருந்த போது திருநகர் சுடலை வீதியில் அரசியல் கட்சி ஒன்றின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் …

  6. மானிப்பாயில், ஹெராயின் போதை பொருளை வைத்திருந்த மூவர் கைது… October 10, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… ஹெராயின் உட்பட போதை பொருளை உடமையில் வைத்திருந்த மூவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மானிப்பாய் பிப்பிலி மயான பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை மானிப்பாய் காவற்துறையினர் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருவரின் உடமையில் இருந்து 550 மில்லிகிராம் ஹெராயின் போதை பொருளும் , மற்றுமொருவரின் உடமையில் இருந்து 50கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர். கைதான மூவரும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்…

  7. இலங்கை ஒலுவில் துறைமுகம்: மக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக போராட்டம்… October 10, 2018 1 Min Read இலங்கையின் அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்து, ஒலுவில் பிரதேச மக்கள் கடந்த சனிக்கிழமை முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஒலுவில் துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் தங்கியிருந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலுள்ள படகுகள் பயணிக்கும் வழியை மணல்…

  8. நல்லாட்சியின் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம்: கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (புதன்கிழமை) சந்தித்தார். அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியல் கைதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருகின்றனர். அதுமாத்திரமின்றி அவர…

    • 1 reply
    • 336 views
  9. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 5 ஆவது முறையும் அழைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு சாட்சி வழங்குவதற்கே ஜனாதிபதியும், பிரதமரும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக வருகை தருமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்கப்பட்டுள்ள ஐந்தாவது அறிவி…

    • 0 replies
    • 514 views
  10. பசில் ராஜபக்ஷவே எனது தெரிவு: ஆனால் மஹிந்தவே இறுதி முடிவெடுப்பார்- ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கோட்டா அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படவேண்டுமென தாம் விரும்புவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இறுதிமுடிவை எடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் தீர்மானத்தை எடுத்துவிட்டார் எனத் தாம் நினைக்கவில்லை எனவும் கோட்டா கூறியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று பேசியபோதே அவர் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். http://athavannews.com/பஸில்-ராஜபக்ஸவே-எனது-தெர/

  11. வனவள திணைக்களம், மீள்குடியேற்றத்தை தடுத்துவரும் பகுதிகளுக்கு, வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு கள விஐயம் October 9, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு குறித்த கிராமங்களுக்கு செல்லவுள்ளது. அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் மாகாணசபை உறுப்பினர்கள் குழு 17ம் திகதி குறித்த கிராமங்களுக்கு செல்லவுள்ளது. இது குறித்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபையின் கடந்த 133 ஆவது அம…

  12. புலிகளின் காலத்திலேயே சிங்கள குடியேற்றங்கள் தடுக்கப்பட்டன… மகாவலியை பற்றி புட்டுப்புட்டு வைத்த முதலமைச்சர்! October 9, 2018 யுத்தம் இடம்பெற்ற காலத்திலேயே தமிழ்பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாமல் நிலங்கள் பாதுகாக்கப்பட்டன. சிங்கள குடியேற்றங்களும் யுத்தத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார் வடக்கு முதலமைச்சர். வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களிற்கு அனுப்பி வைத்துள்ள வாராந்த கேள்வி பதிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார கேள்வி பதிலில் மகாவலி திட்டத்தின் மூலம் முல்லைத்தீவில் எப்படி நில அபகரிப்பு நடைபெறுகிறது என்பதை விலாவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. “உயர் நிலத்தில் இருந்து மணலை பதிவான நிலங்களுக்கு வா…

  13. யாழில் தொடரும் வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசம்: பீதியில் மக்கள். யாழ்ப்பாணம் கோண்டாவில் ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இத்தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படாதபோதும், கடைக்கு பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. கடையிலுள்ள பொருட்களை கொத்தி நாசமாக்கி, சேதப்படுத்திச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்தோடு, அப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவட…

  14. சீரற்ற காலைநிலை: மக்களுக்கு எச்சரிக்கை! வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் அடைமழை பெய்துவருகின்றது. குறிப்பாக மேல், மத்திய, தென் மற்றும் ஊவா மகாணங்களில் பெய்துவரும் அடைமழை தொடர்ந்தும் நீடிக்கின்றது. மழை பெய்யும் நேரங்களில் இடியுடன் காற்றும் பலமாக வீசுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொழும்பு, இரத்மலானை, களுத்துறை, காலி, இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறித்த மழைவீழ்ச்சி இன்று (புதன்கிழமை) காலையும் நீடிக்கின்றது. குறித்த மாவட்டங்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதோடு, 17 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. சுமார் 12,…

  15. மாநகர சபை எல்லைக்குட்பட்ட தங்குமிடங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்! யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட தங்குமிடங்களை பதிவு செய்யுமாறு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவுறுத்தியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வர்த்தக அல்லது சேவை நோக்கில், நீண்ட மற்றும் குறுகியகால அடிப்படையில் செயற்படும் விடுதிகள், சிறிய விடுதிகள், விடுதிகளாக பயன்படுத்தப்படும் வீடுகள் உள்ளிட்ட தங்குமிடங்களையே பதிவுசெய்யுமாறு கோரப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் நடைமுறைக்கு ஏற்பட எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் குறித்த பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்…

  16. வாகன நெரிசல் – நாடாளுமன்ற அமர்வுக்கு தலைக்கவசம் இன்றி பயணித்த அமைச்சர்! நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் காரணமாக கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை மறித்து ஏறிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரசாங்க ஓய்வுதியம் பெறும் நபர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றுக்கு செல்லும் பிரதான வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுக்கு சென்ற அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசமும் வீதியில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும்…

  17. ஓய்­வு­பெற்­றவர்கள்- அர­சி­ய­லுக்கு வரக்­கூ­டாது – சுமந்­தி­ரன் எம்.பி.!! பதிவேற்றிய காலம்: Oct 9, 2018 ஒய்வு பெற்ற அரச உத்­தி­யோ­கத்­தர்­களை அவர்­களது துறை சார்ந்த விட­யங்­க­ளில் ஆலோ­ச­னைக்­கா­க­வும் பக்­க­ப­ல­மா­க­வும் ஈடு­ப­டுத்த யோச­னை­களை முன்­வைக்க வேண்­டிய தேவை உள்­ளது. ஒய்வு பெற்­ற­வர்­கள் அவர்­க­ளின் துறையை விட்டு அர­சி­ய­லுக்கு வரக்­கூ­டாது. இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். தேசிய ஓய்­வூ­தி­யர் தின விழா யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித…

    • 7 replies
    • 1.1k views
  18. ” உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால் தீர்வு கிடைக்குமா’ – நாமலிடம் சிறிதரன் கேள்வி! “ உங்கள் தந்தை ஆட்சிக்கு வந்தால், இணைந்த வடக்கு, கிழக்கில் அரசியல் தீர்வை வழங்க தயாரா? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியுமா” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உரையாற்றினார். இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச “ தமிழ் மக்களுக்கு 2015 இல் வழங்கிய வாக்க…

  19. 2019 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு சட்டத்தில் இரா.சம்பந்தனுக்கு 9 கோடி! அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் தெளிவூட்டும் 2019 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு 9 கோடியே 48 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதிக்கு 1347 கோடியே 71 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும், பிரதமருக்கு 166 கோடி 74 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் நிதியாண்டின் தேவைக்கா…

  20. உண்ணாவிரதமிருந்த கைதிகளில் ஐவர் வைத்தியசாலையில் Editorial / 2018 ஒக்டோபர் 09 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:53 Comments - 0 தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, அநுராதபுரம் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும், அரசியல் கைதிகள் 55 பேரில், ஐவர் சுகயீனமுற்றநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. சுகயீனமுற்ற கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், குற…

  21. இலங்கை மீதான கண்காணிப்பை நீடிக்கு வரைவு – அடுத்த வருடம் சமர்ப்பிக்கப்படும்!! பதிவேற்றிய காலம்: Oct 9, 2018 இலங்கை மீதான ஐ.நாவி­ன­தும் பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­ன­தும் கண்­கா­ணிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­து­டன் முடி­வு­றும் நிலை­யில், அதனை மேலும் 2 ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கும் தீர்­மான வரைவு ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் ஜெனிவாக் கூட்­டத் தொட­ரில் கொண்டு வரப்­ப­டும் என்று, இலங்­கைக்கு கடந்த வாரம் பய­ணம் மேற்­கொண்ட பிரிட்­ட­னின் ஆசிய மற்­றும் பசு­பிக்­குக்­கான அய­லு­ற­வுத்­துறை பணி­ய­கத்­தின் இரா­ஜாங்க அமைச்­சர் மார்க் பீல்ட் தெரி­வித்­துள்­ளார். அமைச்­சர் மார்க் பீல்ட்­டுக்­கும் கொழும்­பைத் தள­மா­கக் கொண்ட சிவில் அமைப்­புப் பிர­தி­நி­தி­க­ளுக்­கும் இடை­யில்…

  22. மட்டக்களப்பு மாவட்டத்தின் தளவாய் பிரதேசத்தி 100 வருடங்கள் பலமை வாய்ந்த காளிகோயிலை ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லீம் காணி உத்தியோகத்தர் ஒருவர் பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கும் போது தளவாய் பிரதேசத்தி உள்ள தமிழர்களின் காணிகள் மற்றும் அரச காணிகளுக்கு வெள்ளைக் காரர்களின் ஆட்சியில் கொடுக்கப்பட்டதாக கூறி காணி உறுதிகளை கொண்டு வந்து காடுகளை அழித்தும் தமிழ் குடும்பங்களை எழுப்பியும் காணி அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்த தளவாய் வடபத்திர காளியம்மன் கோயில் அமைந்துள்ள காணியையும் அதனை சுற்றியுள்ள சுமார் 25 ஏக்கர் காணியை தனியார் காணி என்று கூறி ஏறாவூரைச் ச…

  23. விசாரணைகளில் சர்வதேச பங்களிப்பு: ஒக்ஸ்வேர்ட் உரையில் பிரதமர் ரணில் நிராகரிப்பு போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியமற்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்று ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். ‘தற்போதைய நிலையில் இந்த விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என நாம் காணவில்லை ‘ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோடிட்டுக்காண்பித்திருப்பதாக ஒக்ஸ்போர்ட் யூனியனின் டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவது தொடர்பாக 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத…

  24. யாழில். ஏற்பட்டு உள்ள கால நிலை மாற்றத்தால் வயோதிபர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறையினர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் கடோற்கசன் மற்றும் மீசாலை வடக்கை சேர்ந்த 96 வயதுடைய முருகன் கிருஷ்ணன் ஆகிய இருவருமே அவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி காவற்துறையினர், கால நிலை மாற்றத்தால் தற்போது ஏற்பட்டு உள்ள குளிர் கால நிலையால் இருவரும் உயிரிழந்தனர் என சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்தனர். http://globaltamilnews.com/

  25. சாவகச்சேரியில் எட்டு திருட்டு தேங்காய் பறித்தவரை எட்டு நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டு உள்ளது. மட்டுவில் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து எட்டு தேங்காய்களை திருடினார் எனும் குற்றசாட்டில் ஒருவரை சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நேற்றைய தினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். http://globaltamilnews.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.