ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143294 topics in this forum
-
பிள்ளையான் சிறைவைப்பு ’மோசமான நடவடிக்கை அரசாங்கத்துடன் இணைந்து, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு பாடுபட்ட பிள்ளையானை, நல்லாட்சி அரசாங்கம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளமையானது, மோசமான நடவடிக்கையாகும் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு, நேற்று(29) சென்ற அவர், அங்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்தித்தார். அவருடன், சட்டத்தரணிகள் இருவரும் வருகை தந்திருந்தனர். இதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்…
-
- 3 replies
- 1.8k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அரசாங்கம் அழுத்தமான தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தல்! காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்ற ஒரு அழுத்தமான தீர்வை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வுனியாவில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு, கிழக்கு இணைப்பாளர் அன்ரனி யேசுதாசன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘அரசாங்கத்திடம் நாம் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றோம். அந்தவகையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பல வருடங்களாக எந்தவித…
-
- 2 replies
- 305 views
-
-
கொமாண்டோ அணி விவகாரம் – விசாரணைகள் தீவிரம் கார்வண்ணன்Oct 01, 2018 | 4:26 by in செய்திகள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகளைக் கொண்ட, கொமாண்டோ அணி ஒன்றை அமைக்க அனுமதி கோரப்பட்டமை குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்னதாக, இதுபற்றிய அதிகாரபூர்வ கோரிக்கை நாலக சில்வாவினால், முன்வைக்கப்பட்டதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி லதீப், குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சாட்சியமளித்திருந்தார். மினி யூஸி மற்றும் எம்.பி 5 போன்ற நவீன துப்பாக்கிகளைக் கையாளும் வகையிலான கொமாண்டோ அணி ஒன்றுக்கு பயிற்சி அளிக்குமாறு சிறப்பு அதிரடிப்படையிடம் கோரப்பட்ட…
-
- 0 replies
- 714 views
-
-
’ஜனாதிபதி தான் முதலாவது சாட்சி’ Editorial / 2018 ஒக்டோபர் 01 திங்கட்கிழமை, மு.ப. 05:30 Comments - 0 -எஸ்.நிதர்ஷன் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் தொடர்பாக உண்மைகள், தமக்குத் தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையில், ஜனாதிபதியே முதலாவதாகச் சாட்சியமளிக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அத்தோடு, உண்மையைக் கண்டறியும் வரை, பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான முயற்சிகளை எதிர்ப்பதாகவும், அக்கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனது இல்லத்தில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர…
-
- 0 replies
- 603 views
-
-
திருநெல்வேலியில் வாள்வெட்டுக் குழு தாக்குதல் – மூவர் கைது – வாள்களும் மீட்பு October 1, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்றிருந்த இளைஞரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர், வாளால் வெட்ட துரத்தி சென்றுள்ளார்கள். குறித்த இளைஞர் உயிரை காப்பற்றுவதற்காக தப்பி ஓடிச்சென்று அருகே உள்ள கிணற்றினுள் குதித்துள்ளார். இதனையடுத்து அவரை துரத்திச்சென்ற வாள்வெட்டு குழுவினர் கற்களை கிணற்றினுள் வீசி அவர்மேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அந்த நேரம் அப்பகுதியால் சென்ற காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றதனையடுத்து வாள்வெட்டுக்குழுவினர் தப்பிச்சென்றுள்ளனர்.இருப்பினும் சம்பவத்து…
-
- 0 replies
- 315 views
-
-
வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாப்பை விக்னேஸ்வரன் மீறிவிட்டார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார். மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஆளுனரின் கையில் இன்னமும் நிதி உள்ளது.” என்று குறிப்பிட்டார் http://www.puthinappalakai.net/2018/09/30/news/33180
-
- 2 replies
- 931 views
-
-
2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 2019ஆம் ஆண்டில் பாதுகாப்புக்காக 306.1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக, 290 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் இது மேலும் அதிகரிக்கவுள்ளது. சிறிலங்கா இராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சுக்கே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அடுத்த ஆண்டுக்கா…
-
- 1 reply
- 624 views
-
-
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடரும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடரும் நிறைவடைந்திருக்கின்றன. இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமை பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் 3வாரங்கள் நடைபெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை 28ஆம் திகதி அக் கூட்டத்தொடர் நிறைவடைந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது கூட்டத்தொடர் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி நிறைவடைந்திருக்கிறது. 9 நாட்களை கொண்ட இக் கூட்டத்தொடரில் ஐ.நா.பொச்சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர். ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் வேறு. நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா.பொச்சபை கூட்டத்தொடர் வேறு என்…
-
- 0 replies
- 963 views
-
-
கொத்துக்குண்டுகளின் எச்சங்கள் கண்டுபிடித்துள்ளமை குறித்து, இலங்கை பதிலளிக்க வேண்டும்…. September 30, 2018 இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொள்பவர்கள் கொத்துக்குண்டுகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவேண்டும் என சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மீன் சூகா கோரிக்கை விடுத்துள்ளார். கொத்துக்குண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் குறித்த அமைப்பின் தலைமைப்பொறுப்பை இலங்கை பொறுப்பேற்றுள்ளதன் காரணமாக இலங்கை தனது நாட்டில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைப்பது குறித்து தெளிவுபடுத்தவேண்டும் எனவும் அவர…
-
- 1 reply
- 557 views
-
-
மைத்திரி + ராஜபக்ஸக்கள், படுகொலை சூழ்ச்சியும், வெளியாகும் தகவல்களும்… September 30, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஸக்கள் படுகொலை சூழ்ச்சி தொடர்பாகவும், பிரிதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா குறித்தும், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைகளில் இருந்து நாளாந்தம் பல முக்கிய தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதன்படி தற்போது நாலக டி சில்வா கொமாண்டோ பயிற்சியளிக்க கோரியமை தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் பயங்கரவாத தடுப்புப் பிரவைச் சேர்ந்த ஒரு குழுவினருக்கு கொமாண்டோ பயிற்சியளிக்குமாறு, அப்பிரிவின் பிரதிப் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா கேட்டுக்கொண்டதாக, விசேட அதிரடிப்படையின் அதிகாரியான எம்…
-
- 0 replies
- 474 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில், “எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்ப, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகிறேன். முரண்பாட்டு அரசியலைத் தொடர நான் விரும்பவில்லை. எனக்கு அளிக்கப்பட்ட ஆணையின் படியே செயற்பட்டிருக்கிறேன். எனது ஆற்றலைக் கொண்டு, அதனைச் செய்திருக்கிறேன். எமது மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு…
-
- 0 replies
- 738 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளும் சிறைகளில் இருக்கலாம்: உறவினர்கள் சந்தேகம்! வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளும் சிறைகளில் இருக்கலாம் என்பதற்காகவே தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த நாட்டில் பிரச்சினை முடிந்துவிட்டது நல்லாட்சி நடைபெறுகின்றது என்று கூறிக்கொண்டாலும் இன்னும் எமது பிரச்சினை தீர்க்கப்படவில்லை. எங்களை அறியாமலே எமது பிரச்சினை த…
-
- 0 replies
- 571 views
-
-
சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான அனைத்து வதந்திகளையும் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மறுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்நிலையம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வளிமண்டலவியல் திணைக்களம் இத்தகைய ஆபத்துக்கள் தொடர்பில் விழிப்புடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் கடற்கரை பிரதேசங்களை சுனாமி தாக்கும் என்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அந்நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட சுனாமியால் பலர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் வைத்தியசாலையில் அனுமதி…
-
- 0 replies
- 761 views
-
-
மைத்திரியின் அதிரடி முடிவுகள்? Editorial / 2018 செப்டெம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 10:22 Comments - 0 மைத்திரியின் அதிரடி முடிவுகள்? ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ள நிலையில், அரசியலில் பல அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. மேலும் அந்த செய்தியில், நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஓய்வுபெறுவதால், அவரது பதவிக்கு ஜனாதிபதி மற்றொருவரை நியமிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உ…
-
- 0 replies
- 326 views
-
-
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கேரள கஞ்சா மீட்பு September 30, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நான்கு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு ஏழு மணியளவில் சந்தேகத்திடமான வாகனம் ஒன்று செல்வதனை அவதானித்த கிராமத்தின் இளைஞர்கள் அந்த வாகனத்தை பின்தொடர்ந்துள்ளனர் இளைஞர்கள் பின்தொடர்வதனை அவதானித்த அவர்கள் குறுக்கு வீதிகள் ஊடாக வேகமாக பயணித்த நிலையில் வழி தவறி குளப் பாதை ஒன்றினுள் நுழைந்து, வாகனத்தில் இருந்து நான்கு பொதிகளை எறிந்து விட்டு தொடர்ந்து வாகனத்தை விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர் . அவர்கள் எறிந்த பொதிகளைப் பார்வையிட்ட பொழுது சுமார் ஒரு கிலோ அளவிலான நான்கு கேரள கஞ்சா பொதிகள் காணப்பட்டுள்ளன. இதன்…
-
- 0 replies
- 279 views
-
-
ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் தேசிய சுற்றாடல் தின நிகழ்வு : September 30, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தேசிய சுற்றாடல் தினத்தையொட்டி எதிர் வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் மற்றும் சவால்கள்’ என்ற தொனிப்பொருளில் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். குறித்த நிகழ்வு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன் ராஸ் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் றிஸாட் பதியுதீன் சுற்றாடல் அதிகார சபை உயரத…
-
- 0 replies
- 298 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், நேற்று (28) மாலை நடைபெற்ற சிநேகபூர்வக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடல், தமிழகப் பத்திரிகையாளர்கள், சட்டத்தரணி மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிகள் குழாமுக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், கட்சியின் ம…
-
- 6 replies
- 1.2k views
-
-
இயற்கை திரவ வாயு மின் நிலையம் – இந்தியா கைவிட்டதால் மீண்டும் நுழைந்தது சீனா சிறப்புச் செய்தியாளர்Sep 29, 2018 | 4:51 by in செய்திகள் சம்பூரில் இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியா கைவிட்டதை அடுத்து, சிறிலங்காவின் முதலாவது இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை சீனா அமைக்கவுள்ளது. இந்த மின் நிலையம் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் என்றும், இதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அம்பாந்தோட்டை இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை சிறிலங்கா, சீன அரசாங்கங்கள்,மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன இணைந்து கூட்டு முயற்சியாக அமைக்கவுள்ளன. இதன் மூலம், 300 மெகா…
-
- 0 replies
- 446 views
-
-
மழைக்கு மத்தியிலும் அரசியல் கைதிகளை விடுவிக்கும் போராட்டம் யாழில் இடம்பெற்றது…. September 29, 2018 சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தொடர் மழைக்கு மத்தியிலும் இப் போராட்டம் நடைபெற்றது. அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டுமென்க் கோரி சிறையிலையே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் பல தரப்பினர்களும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை மேற்…
-
- 0 replies
- 341 views
-
-
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச ஈடுபாடு இருக்கும் என்ற இரண்டு பிரேரணைகளுக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் தற்போது சர்வதேச தலையீடுகள் இல்லாத செயற்பாடுகளே கையாளப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளமை தீர்வு விடயத்தில் எமக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். அரசியலமைப்பு உருவாக்கத்திலும் சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்காது ஜனாதிபதி செயற்படும் விதம் தமிழ் மக்களை ஏமாற்றுவதை போன்றே அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதில் இலங்கையின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தி…
-
- 8 replies
- 1.3k views
-
-
புலிகள் கொழும்பின் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்பதனை நான் கேள்விப்படவில்லை.. September 29, 2018 கொழும்பின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்பதனை தான் கேள்விப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் கடைசி இரண்டு வாரங்களில் விடுதலைப்புலிகள் சென்னையிலிருந்தோ அல்லது வேறு ஏதோவொரு காட்டுப்பகுதியில் இருந்தோ கொழும்பின் மீது விமானதாக்குதலை மேற்கொண்டு கொழும்பை அழிக்க திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியுயோர்க்கில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய தெரிவித்து கோத…
-
- 3 replies
- 970 views
-
-
இறுதி யுத்தத்தில் சரணடைந்த 12,191 விடுதலைப்புலிகளில் ஒருவரை தவிர ஏனைய அனைவரையும் விடுதலை செய்துவிட்டோம்: இராணுவம் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரண் அடைந்த 12,191 பேரில் ஒருவரை தவிர அனைய அனைவரையும் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்துவிட்டதாக வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் பணிப்பாளர் கேணல் அசேல ஒபயசேகர தெரிவித்துள்ளார். 12190 பேரை புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைத்துவிட்டுள்ளதாகவும் ஒருவர் மட்டுமே இன்னமும் வவுனியா முகாமில் இருப்பதாகவும் பூந்தோட்டம் முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட 3 முன்னாள் போராளிகளை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் கூறினார். இவாறு விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கள் , மீன்பிடி உபக…
-
- 2 replies
- 666 views
-
-
மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் மட்டக்களப்பு சிறைசாலைக்கு சென்ற நாமல், சிவநேசதுறை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாடியதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பில் வைத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவ்விடயம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி உள்ளிட்ட அரசுடனான உறவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பின்பற்றி வந்த அணுகுமுறைகளை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அரசின் ஆட்சிக் காலம் முடிவடையவுள்ளதாலேயே, தமது போக்கில் வழிமுறையில் சற்று மாற்றம் செய்யவேண்டிய நிலை எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் கடந்த தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது. கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பருத்த…
-
- 9 replies
- 1.8k views
-
-
அரசியல் கைதிகளின் விடயம் காளிகோவில் திருவிழா அல்ல…. September 29, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் கொழும்பில் பிரதமர், சம்மந்தன், நீதி அமைச்சர், சுமந்திரன் என தீர்மானம் எடுக்க கூடியவர்கள் பலர் கூடி பேசிய போது அங்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை இந்த நிலையில் பிறிதொரு தினத்தில் கூடி பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிறிதொரு தினத்தில் பேசுவதற்கு இதுவொன்றும் காளி கோவில் திருவிழா அல்ல உயிர்களோடு சம்மந்தப்பட்ட விடயம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று கிளிநொச்சியில் ஊட…
-
- 0 replies
- 445 views
-