Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் (சங்கு) வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டதாகவும் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தமையானது குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளது. முதலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரால் கூறப்பட்டது. பின்னர் ஊடக சந்திப்பிலும் அது உறுதிப்படுத்தப்பட்டது. ஊடகசந்திப்பு முடிவடைந்து சில நிமிடங்களில் மீள ஊடக சந்திப்பு நடைபெற்றுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் இதன்போது குறித்த வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்…

  2. 21 Mar, 2025 | 02:03 PM இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார் என தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கிய நாடுகளிற்கு அளித்த வாக்குறுதியை வழங்குங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாணசபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள் என தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையை இந்த விவகாரங்களிற்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை நான் …

  3. 21 Mar, 2025 | 04:45 PM 161ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல் தின நிகழ்வு பம்பலப்பிட்டி பொலிஸ் சிரேஷ்ட படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுச் சின்னத்திற்கு முன்பாக, பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் நடைபெற்றது. நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, இரத்தம் சிந்தி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் உச்சபட்ச தியாகத்தை நினைவு கூரும் வகையில் பொலிஸ் மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் வெள்ளிக்கிழமை (21) பொலிஸ் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பொலிஸ் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தும் அணிவகுப்பைத் தொடர்ந்து, பதி…

  4. 21 Mar, 2025 | 04:42 PM சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட, மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி.அஜந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, அனுமதியற்ற வகையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு, உரிய ஆவணங்கள் இன்றி சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமையை கண்டறிந்தனர். அவற்றினை சான்று பொருட்களாக கைப்பற்றிய சுகாதார பரிசோதகர் , கடை உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். குறித்த வழக்கு வியாழக்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக்கொ…

  5. 20 MAR, 2025 | 04:01 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) முல்லைத்தீவில் இரண்டு மனிதர்களுக்கு ஒரு படை என்ற ரீதியிலும், யாழ்ப்பாணத்தில் 14 மனிதர்களுக்கு ஒரு படை என்ற விகிதத்திலும் படை குவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எந்த வகையில் நியாயமாகும். யுத்தம் முடிந்தால் நன்மை கிடைக்கும் என்று நம்பியிருந்த மக்களுக்கு குண்டு விழாத நாட்டில் வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை அதிகரித்து செல்வதையே காண முடிகிறதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார…

  6. 20 Mar, 2025 | 02:37 PM கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று அதிகரித்துள்ளது. பதின்ம வயது கர்ப்பம் என்பது நிகழும்போது தாய்க்கும், சேய்க்கும், சமூகத்துக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு பதின்ம வயதுப் பெண் சரியாக முதிர்ச்சி அடையாமல், தனது தேவைகளை சரியா அறிந்துகொள்ளாமல், கல்வியறிவு போதியளவு இல்லாமலும் இருக்கலாம். இவ்வாறான சூழ்நிலையில் கர்ப்பத்தை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஆயத்தப்படுத்தும் தன்மை போதாமல் இருக்கிறது. இது கு…

  7. இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி! இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளை இந்தியாவின் அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிலோவாட் மணி நேரத்திற்கு 7 காசுகளாக விலையை மாற்றியமைக்க தனது நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என சுட்டிக்காட்டியுள்ளது. ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் செய்துகொள்ளப்பட்ட அசல் உடன்படிக்கைக்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளோம். மேலும் அதானி Green Energy SL Ltd இன் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் திட்ட அளவுருக்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மேலும் த…

      • Thanks
    • 4 replies
    • 284 views
  8. இலங்கை இராணுவத்தினரால் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரேமாவதி மனம்பேரி மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டவர்களுக்கான நீதி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போது மேற்கண்ட விடயம் தொடர்பில் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் “பட்டலந்த என்பது, 1988 – 1989 காலப்பகுதியில் நாட்டில் இருந்த ஜேவிபி போராளிகளை கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இடம். அது தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கை இவ்வளவு காலம் கிடப்பில் இருந்து தற்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச நேர்காணலினால் பேசுபொருளாகியுள்ளது. இந்த படுகொலைகள் தொடர்பாக, அக்காலப்பகுதியில் முன…

  9. Published By: DIGITAL DESK 2 20 MAR, 2025 | 08:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இராணுவத்தில் இருந்து விலகியவர்கள் அனைவரும் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முறையற்றது. சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பொது திட்டங்களை வகுக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை ஏற்ற…

  10. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியைசச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி தேர்தலைப் பொறுத்த வரை வடக்கு – கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் தமிழ் மக்களின் கையில் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோளாக இருக்கிறது. ஜனநாயக தமழ் தேசியக் கூட்டணி பெரும்பாலன சபைளில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெ…

  11. 20 Mar, 2025 | 08:58 AM விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான், கருணா பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே இவர்கள் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்யபோவார்கள் அல்ல மக்கள் தெளிவாக விழிப்படைய வேண்டும் என சமூக செயற்பாட்டாளரும் சுயேச்சைக்குழுவாக தேர்தலில் போட்டியிடும் விமலசேன லவக்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச சபையில் சுயேச்சைக்குழுவில் போட்டியிடுவதற்கா நேற்று புதன்கிழமை (19) பழைய கச்சேரியில் வேட்புமனுதாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கோறளைப்பற்று பிரதேச சபையில் 14 வட்டாரத்திலும் போட்டியிடுவதற்காக …

  12. 20 Mar, 2025 | 05:27 PM யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் இன்று வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது. மார்ச் 2020 இல் சுனில்ரத்நாயக்கவிற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து நீதிமன்றத்தில…

  13. 0 Mar, 2025 | 05:28 PM அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின் (INDOPACOM) கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ இன்று வியாழக்கிழமை (20) தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் சர்வதேச பாதுகாப்பிற்கு இலங்கை ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்தார், மேலும் இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் கருத்தின் அடிப்படை உலகளாவிய செழிப்புக்கு அவசியம் என்பதை வலியுறுத்தினார். ஜனநாயக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மையை பராமரிக்க நீடித்த அமெரிக்க-இலங்கை உறவு இந்த ஈடுபாடுகள் வலுப்படுத்துகின்றன. இந்த ஈடுபாடுகள் ஜனநாயக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான நீடித்த அமெரிக்க-இலங்கை உறவு வலுப்படுத்துகின்றன. …

  14. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பப்படுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வணக்கஸ்தலங்கள் பொது நிகழ்வுகள் மற்றும் வீடுகளில் அதிக ஒலி எழுப்பப்படுவதால் கல்வி கற்கும் மாணவர்கள் வயோதிபர்கள் மற்றும் கற்பிணித் தாய்மார்கள் உட்பட பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. வணக்கஸ்தலங்கள் மற்றும் ஒலி வழங்குநர்கள் குறித்த பிரதேசத்திற்குள் ஒலி எழுப்புவதற்கு இனி மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . குறித்த அறிவிப்பு வடமராட்சிகிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தியால் விடுக்கப்பட்டு அனைத்து பிரதேசங்…

  15. தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) நிராகரித்துள்ளது. இந்த மனு இன்றைய தினம் பரிசீலிக்கப்பட்டதையடுத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு! | Virakesari.lk

  16. Simrith / 2025 மார்ச் 18 , பி.ப. 07:00 - 0 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு பிறப்பித்த தடுப்புக்காவல் உத்தரவு சட்டவிரோதமானது என்றும் மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கியது, மனுதாரருக்கு ரூ. 100,000 இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஹெனாகம, பொக்குனுவிட்ட பகுதியைச் சேர்ந்த காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவுக்கு பதிலளிக்கும் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததா…

  17. பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தலைமறைவானால் சொத்துக்கள் முடக்கப்படும்! பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்தால் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தடை செய்யும் உத்தரவை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட சுற்றுநிரூபம் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின் பிரகாரம் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் பதில் பொலிஸ் மாஅதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரது சொத்துக்கள், தடை செய்யப்பட்ட நாள் முதல் ஒரு வருட காலப்பக…

  18. 17 Mar, 2025 | 05:24 PM யாழில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு மீனவர்கள் சனிக்கிழமை (15) ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து IDAY-A-0035 JFN நீலம் மற்றும் வெள்ளை நிற படகில் மீன்பிடிக்கச் சென்றனர். ஆனால் அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார். காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை! | Virakesari.lk

  19. இனப்படுகொலைகள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும்! [Thursday 2025-03-20 06:00] http://seithy.com/siteadmin/upload/sritharan-100125-seithy.jpeg தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை நடந்த இனப்படுகொலைகள் தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்டத்தின் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பட்டலந்த வதைமுகாம் தொடர்பான செய்திகள் தற்போது மிகப் பரவலாக…

    • 0 replies
    • 117 views
  20. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்காக இன்று பிற்பகல் 1.30 மணி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தாக தேர்தல்கள் ஆணைக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1425971

  21. “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ பிள்ளையான் வியாழேந்தின் வேட்பு மனுதாக்கல்! தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக” போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலுpகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார் அதன்படி வேட்புமனுக்கள் கையளிக்கும் இறுதி நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் இராஜஙாக் அமைச்சர்களான சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் இதேபோன்று ஆளும் தேசிய மக்கள் சக்தி மட்டக்க…

  22. முப்படையைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கைது! சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத மற்றும் கடமைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் துய்யகொண்டாவின் உத்தரவின்படி, சேவையில் இருந்து விலகிச் சென்ற முப்படை அதிகாரிகளை சட்டரீதியாக கைது செய்யும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி நேற்று (19) வரை சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படையைச் சேர்ந்த 1,604 படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1,444 பேரும், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 160 பேரும் கைது செய்யப்பட்டடுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 1,394 இராணுவத்தினர்…

  23. இலங்கையில் சிஐஏயின் இரகசிய தளம்-கென்னடி கொலை குறித்த ஆவணங்களில் தகவல். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜோன்எவ் கென்னடி கொலைகுறித்த ஆவணங்கள் மூலம் இலங்கையில் சிஐஏ தளம் இயங்கியது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 80 ஆயிரம் பக்க ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு காணக்கிடைக்கிறது. கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று வெள்ளை மாளிகையின் துணை ஊடகச் செயலாளர் ஹாரிசன் ஃபீல்ட்ஸ் கூறினார். ஆவணங்கள் எந்தவித திருத்தங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்ந…

  24. வாகன இறக்குமதி விதிமுறைகள் திருத்தம்; புதிய வர்த்தமானி வெளியீடு! இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வெளியிடுவதற்கு பரிசோதனை உறுதிபடுத்தல் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதித்தல் மற்றும் ஆவணங்களின் ஆன்லைன் அங்கீகாரத்தை அனுமதித்தல் உள்ளிட்ட முக்கிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025 மார்ச் 19 ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். இலங்கை சுங்கத்திலிருந்து வாகனங்களை விடுவிப்பதில் வாகன இறக்குமதியாளர்களால் கூறப்படும் பல தடைகளைச் சுற்றியுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங…

  25. தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது! தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அனுப்பி வைத்த கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்க்க முடியாத காரணத்தினால் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்ய முடியவில்லை என தெரிவிக்கிறோம் - என்றுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடாது!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.