ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
மகன் உயிருடன் இருக்கிறாரா? தெரியாமலே தேடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ''மகனைத் தேடி, போகாத இடமில்லை. காணாமல் போனோர் குறித்து எங்கு கூப்பிட்டாலும் போவேன். எனக்கு எனது மகன் வேண்டும். எனது மகனின் உடல் கிடைக்கவில்லை. மகனுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யவில்லை. என் மகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். மகன் திரும்ப…
-
- 2 replies
- 448 views
-
-
விரட்டி விரட்டி வீடியோ எடுத்த தமிழ் ஊடகவியலாளர்! தப்பி ஓடிய சிங்கள புலனாய்வாளர்!! வன்னியில் சம்பவம் வவுனியா வடக்கு பிரதேசத்தில் இந்தியாவில் இரந்து நாடு திரும்பிய மக்களின் பிரச்சனைகளை ஆவணப்படுத்துவதற்காக சென்ற ஊடகவியலாளரை புகைப்படம் எடுத:து செய்தி செகரிப்பதற்கு அச்சுறுத்தல் விடுத்த புலனாய்வுப்பிரிவை சேர்ந்த நபரை ஊடகவியலாளர் துரத்தி துரத்தி வீடியோ எடுத்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காஞ்சிம்மோட்டை காட்டுப்பூவரசன்களத்தில் பகுதியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மக்கள் தற்காலிக வீடுகளை அமைப்பதற்கு வன இலாகாவினர் தடை செய்து வருகின்றனர். இந் நிலையில் குறித்த மக்களின் இன்னல்களை தொடர்பில் ஆவணப்படம் ஒன்றினை எடுப்பதற்காக வவுனியா ஊடகவ…
-
- 0 replies
- 687 views
-
-
இலங்கையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்லும் பிரேரணையை ஏற்றுக் கொண்டது வட மகாண சபை இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்லல். வேண்டுமெனவும், இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறும், வடகிழக்கு பிரதேசத்தில் ஐ.நா.சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதற்கு உதவுமாறும் ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளை கோருகின்ற பிரேரணை வட மாகாண சபை அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்விலே குறித்த பிரேரணையை வட மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்வைத்ததையடுத்து இதனை மாகாண ச…
-
- 0 replies
- 505 views
-
-
மன்னார் மாவட்ட நீதிவானுக்கு திடீர் இடமாற்றம் மன்னார் மாவட்ட நீதிவனாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரனுக்கு கொழும்பிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. நேற்று புதன் கிழமை மாலை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இட மாற்றக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்,இன்றைய தினம் கொழும்பில் தனது கடமையை அவர் பெறுப் பேற்க்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட நீதவனாக ரீ.ஜே.பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டு மூன்று மாதங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்கு விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். மேலும் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து தனது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, சில வழக்கு வி…
-
- 5 replies
- 869 views
-
-
பலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்தியாவின் திட்டம் சிறிலங்கா அரசினால் நிராகரிப்பு பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து சிறிலங்கா விமானப்படையே சாத்திய ஆய்வை மேற்கொள்ளப் போவதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை இந்தியாவிடம் கையளிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கூட்டு எதிரணி குற்றம்சாட்டி வரும் நிலையில், கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். “பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக இந்தியா முன்வைத்த திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா விமானப்படை இந்தப் பணியை முன்னெடுக்கும். இதற்குத் தேவைப்படும் 1.2 பில்…
-
- 4 replies
- 668 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ஆறுமுகன் தொண்டமான் இராஜினாமா செய்துள்ளார். இ.தொ.க. தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இ.தொ.க. வின் பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜா கட்சியின் தேசிய சபையின் அங்கீகாரத்தோடு ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதி பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். http://thinakkural.lk/article/17649
-
- 1 reply
- 504 views
-
-
ஈழத்தின் வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாக் காலத்தில் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றையதினம் ஒரு லட்சத்துக்கு அண்மித்த பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியப் பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதுதவிர வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த மக்களும் அதிகளவில் கலந்துகொண்டுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து அதிகளவான மக்கள் வந்துபோவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 25 நாட்களைக் கொண்ட நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கடந்த 16ஆம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமானது. எதிர்…
-
- 0 replies
- 1.7k views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: வடக்கு-கிழக்கில் போராட்டங்கள்! சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்திலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அம்பாறையிலும் இருவேறு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். அத்தோடு, இம்முறை சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைசார் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள வாகன தொடரணி நேற்று முன்தினம் கொழும்பில் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது. இன்று குறித்த பேரணி யாழ்ப்பாணம் சென்றடையவுள்ளதோடு, அங…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கைக்கு இரண்டு ரோந்து படகுகளை வழங்கியது ஜப்பான்! ஜப்பானிய அரசாங்கத்தின் மானிய உதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஜப்பான் அன்பளிப்புச் செய்துள்ள 1.8 பில்லியன் யென் ( 2.6 பில்லியன் இலங்கை ரூபா) பெறுமதியிலான இரண்டு ரோந்துப் படகுகளும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று(புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. சுதந்திரமானதும் , திறந்ததும், ஸ்திரமானதும் மற்றும் சுபீட்சம் நிறைந்ததுமாக, இந்து – பசுபிக் சமுத்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இலங்கைக்கு இந்த கப்பல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரோந்துப் படகுகளுக்கு எஸ்எல்சிஜிஎஸ் சமுத்திர ரக்ஷா மற்றும் எஸ்எல்சிஜிஎஸ் சாம ரக்ஷா என இ…
-
- 11 replies
- 1k views
-
-
சுஷ்மாவை சந்தித்தார் பிரதமர்: அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவி வழங்க தயார்! இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக வியட்நாம் சென்றுள்ள பிரதமர், இன்று (திங்கட்கிழமை) சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது அவர், இலங்கையில் வீடமைப்பு, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்தில் முதலீடு செய்ய இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புகளை இருக்கும் என தெரிவித்ததாக, ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். மேலும் அபிவிருத்தி பணிகள் மூலம் பிராந்திய உறவுகளை கட்டியெழுப்பவும் அபிவிருத்தி செய்யவும் எமது திட்…
-
- 4 replies
- 803 views
-
-
சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவன் கஜனின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு(படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட இரண்டு யாழ் பல்கலை கழக மாணவர்களின் ஒருவரான கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராஜா கஜனின் குடும்பத்தினருக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சினால் புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 13 இலட்சத்து 50 ரூபா நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புதிய வீட்டினை அமைச்சர் சுவாமிநாதன் கஜனின் தாயார் நடராஜா ச…
-
- 6 replies
- 1.1k views
-
-
கோத்தா காலத்திலேயே சிங்கள குடியேற்றம் (ரொபட் அன்டனி) மத்திய அரசுடன் விக்கி பேச முன் வரவேண்டும் என்கிறது அரசாங்கம் முல்லைத்தீவில் அரசாங்கம் எந்தவொரு சிங்களக்குடியேற்றத்தையும் செய்யவில்லை. சிங்கள குடியேற்றங்கள் கோத்தபாய ராஜபக் ஷவின் காலத்திலேயே இடம்பெற்றன. தற்போதைய அரசாங்கத்தில் எது வும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் தன்னிடம் சாட்சிகள் இருப்பதாக வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் கூறியுள்ளார். அவ்வாறு சாட்சிகள் இருந்தால் அவை தொடர்பில் விக்கினேஸ்வரன் மத்த…
-
- 1 reply
- 704 views
-
-
வட மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இந்த அமர்வின் போது, இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவும் இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறும், வடகிழக்கு பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு உதவுமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை கோருகின்ற பிரேரணை விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன் இன்று நடைபெறவுள்ள அமர்வில் குறித்த பிரேரணையை நிறைவேற்றுவதற்காக சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளவாங…
-
- 3 replies
- 529 views
-
-
யார் கட்டினால் என்ன – வீடு கட்டப்பட வேண்டும் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை இந்தியா கட்டினால் என்ன சீனா கட்டினால் என்ன யப்பான் வந்து கட்டினால என்ன. எங்களுக்குத் தேவை வீடு கட்டப்படல் வேண்டும் என்பதே என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் ன்று 29-08-2018 கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட அவர் கிளிநொச்சி மாவடட்ச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வீட்டுத்திட்டம் தொடர்பில் அமைச்சர் மனோகணேசனுக்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை இது …
-
- 2 replies
- 755 views
-
-
7 பாடசாலைகள் வலி வடக்கில் விடுவிக்கப்படவேண்டியுள்ளன - எஸ். சுகிர்தன் வலிகாம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் ஏழு பாடசாலைகள் உள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், மயிலிட்டி றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, காங்கேசன் துறை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை காங்கேசன் துறை மகாவித்தியாலம், வசாவிளான் சி.விவேலுப்பிள்ளை வித்தியாலயம், பலாலி மேற்கு அமெரிக்கன் மிசன் பாடசாலை, சித்திவிநாயகர் வித்தியாலயம், ஆகியவை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இன்னும் விடுவிக்கப்படவேண்டிய பாடசாலைகளாக உள்ளது. இதேவேளை அண்மையில் ஜனாதிப…
-
- 0 replies
- 424 views
-
-
அட்மிரல் விஜேகுணரத்னவை கைது செய்ய நீதிவான் உத்தரவு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிவான், லங்கா ஜெயரத்ன நேற்று உத்தரவிட்டார். 2008-09 காலப்பகுதியில் கொழும்பு நகரப் பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று கோட்டே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபராகத் தேடப்பட்டு வந்த நேவி சம்பத், விசாரணையில் இருந்து தப்பிக்க வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு, அட்மிரல் விஜேகுணரத்ன உதவினார் என்பதை நிரூபிக்க சாட்சியங்கள் உள்ளன என்று என்று குற்றப் புலனாய்வுப…
-
- 1 reply
- 599 views
-
-
ஐ.நாவின் சிறப்பு நிபுணர் சிறிலங்கா வருகிறார் வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி அடுத்தவாம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், எதிர்வரும் செப்ரெம்பர் 3ஆம் நாள் கொழும்பு வரும் அவர், 11 ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருந்து நிலைமைகளை அவதானிப்பார். தமது பயணத்தின் நோக்கம், தகவல்களை சேகரித்து, மனித உரிமைகள் நிலைப்பாட்டிலிருந்து கடன் மற்றும் பிற நிதிய கடப்பாடு தொடர்பான கேள்விகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்று ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூ…
-
- 1 reply
- 507 views
-
-
விக்கியின் நாடகத்தை கஜேந்திரகுமார் இயக்குகிறார்? வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறாயின் அங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். இங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். ஆனால் தன்னை மகா வீரராக பேசுகின்ற விக்கினேஸ்வரன் தனது பிள்ளைகள் இருவரையும் சிங்களவர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு மணம் முடித்தவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள். அங்க…
-
- 21 replies
- 2.3k views
-
-
மட்டு. வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவில் எரிக்கப்படுவதற்கு கண்டனம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவு பகுதியில் எரிக்கப்படுவதற்கு அப் பகுதி மக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக வைத்தியசாலை கழிவுகள் எரிக்கப்படுவதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் மண்முனை வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட திராய்மடு பகுதியில் கடந்த காலங்களில் எரிக்கப்பட்டு வந்த நிலையில் மண்முனை பகுதி மக்கள் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டதையடுத்தே கழிவுகள் அப் பகுதியில் கொட்டப்பட்டு எரிப்பது நிறுதப்பட்டது.…
-
- 0 replies
- 460 views
-
-
விக்கியை மட்டுமே யுத்த நினைவுச் சின்னங்கள் உறுத்துகின்றன – பொதுமக்களை அல்ல… வடக்கில் புதிய இனக் குடியேற்றத்தை உருவாக்கும் எந்தத் தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர இதனைத்; தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் அண்மைய உரை தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் வட மாகாணத்தில் யுத்த நினைவு சின்னங்கள் இருப்பது விக்னேஸ்வரனுக்கு மாத்திரமே பிரச்சினையாக உள்ளது எனவும் மக்களுக்கு அல்லவெனவும் அவர…
-
- 2 replies
- 612 views
-
-
நேற்று நடைபெற்ற வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் பின்னர் பதிவாகிய கருத்துகள்
-
- 0 replies
- 457 views
-
-
முல்லைத்தீவில் இன்று பாரிய போராட்டத்துக்கு அழைப்பு மகாவலி அதிகார சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்ற முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவில் இன்று பாரிய கண்டனப் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நோக்கிய பேரணி ஆரம்பமாகி, தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான தென்னமரவாடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய இடங்களில் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்துள்ள மகாவலி அதிகாரசபை, அங்கு சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. …
-
- 12 replies
- 2.8k views
-
-
கேப்பாப்புலவில் 60 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட வேண்டியுள்ளது முல்லைத்தீவு கேப்பாப்புலவுப் பகுதியில் தற்போது 60 ஏக்கர் காணியை மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டியிருப்பதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கிளிநொச்சியில் இன்று தெரிவித்தார் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தினருக்கு புதிய வீட்டினை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையில், கடந்த மூன்று வருடங்களில் படையினரிடமிருந்து 6009 ஏக்கர் காணி விடுவிக்கப…
-
- 0 replies
- 582 views
-
-
வடக்கை நோக்கி நகரும் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரசார பேரணி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் பதிலை வலியுறுத்தி சர்வதேச மன்னிப்பு சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணி வடக்கை நோக்கி நகரவுள்ளது. அதன்படி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை (வியாழக்கிழமை) குறித்த பிரசார பேரணி வடக்கு நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கை மற்றும் பதிலை கோரியும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரமொன்று சிவில் சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் சர்வதேச மன்னிப்பு சபையினால் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பிரசாரத்தின் ஆரம்ப நிகழ்வு காலி முகத்தி…
-
- 1 reply
- 489 views
-
-
அடுத்த வார இறுதிக்குள் மயிலிட்டி பாடசாலை மக்கள் வசம் என்கிறார் வேதநாயகன் மயிலிட்டிப் பாடசாலையை விடுவிக்குமாறு ஜனாதிபதி விடுத்த உத்தரவிற்கு அமைவாக குறித்த பாடசாலையினை அடுத்த வார இறுதியில் எம்மிடம் கையளிப்பதாக இராணுவத் தளபதி உறுதிமொழி வழங்கியுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மயிலிட்டிக்கு கடந்த 23 ஆம் திகதி வருகை தந்த ஜனாதிபதி மயிலிட்டிப் பிரதேசத்தின் மீள் குடியேற்றத்திற்கு அப் பகுதிப் பாடசாலை விடுவிப்பு இன்றியமையாதது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராய தெரிவித்து வந்த நிலையில் குறித்த பாடசாலையினை விரைவில் விடுவிக்குமாறு ஜனாதிபதியும் உத்தரவிட்டிருந்தார். குறித்த உத்தரவின் பிரகாரம் பாடசாலை விடுவிப…
-
- 0 replies
- 377 views
-