ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
முன்னாள் போராளிகள் சிலரை ஆசை வார்த்தைகள் கூறி இராணுவத்தினர் தம் வசப்படுத்தி வைத்துள்ளார்கள் (வீடியோ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சிலரை ஆசை வார்த்தைகள் கூறி இராணுவத்தினர் தம் வசப்படுத்தி வைத்துள்ளார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை கைதடியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்பின் முடிவில், சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையி…
-
- 0 replies
- 395 views
-
-
திலீபனின் தூபியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தோரை அச்சுறுத்தியமைக்கு யாழ்.மாநகர சபையில் கண்டனம் தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை கண்டித்து யாழ்.மாநகர சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று காலை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , யாழ்.மாநகர சபை ஊழியர்களை அச்சுறுத்தியமைக்கு மாநகர சபை உறுப்பினர்கள் தமது கடும் கண்டனங்களை தெரிவித்தனர். கடந்த 14 ஆம் திகதி மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அ…
-
- 0 replies
- 377 views
-
-
வடக்கு- − கிழக்கு இணைப்பு முஸ்லிம்கள் தனித்து செல்ல விரும்பினால் ஆதரிக்கவூம் தயார் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் வாழ்விடங்களை தீர்மானிக்கும் விடயத்தில் விட்டுக் கொடுக்க முடியாது ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்து பிரிந்தவர்ளை மீள இணைப்பதற்கான முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியவையே. ஆனால் அந்த இணைவு வெறுமனே பிரிந்தவர்களை ஒன்றிணைப்பதாக அல்லாமல் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுடன், அர்த்தபூர்வமானதாய் அமைய வே…
-
- 10 replies
- 1.9k views
- 1 follower
-
-
புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் தலைவர்களிடம்...! சிங்களவருக்கும் பாதிப்பு...? தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராஜா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது, 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களிடம் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்கள் தற்பொழுது எங்குள்ளது என …
-
- 8 replies
- 1.8k views
-
-
வடக்கில் வளங்களுக்கேற்ற மாணவர்கள் இல்லை: வட மாகாண கல்வி அமைச்சருடனான பிரத்தியேக நேர்காணல்
-
- 0 replies
- 246 views
-
-
யாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை யாழ்.பொலிஸாரால் மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 30 சிறிய பொதிகளாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ…
-
- 0 replies
- 343 views
-
-
முதலமைச்சர் விக்கி - வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். வடமாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அரசியல் நிலமைகள் தொடர்பில் குறித்த குழுவினர் முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டனர். http://www.virakesari.lk/article/38803
-
- 0 replies
- 317 views
-
-
யானைகளின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் (மூதூர் நிருபர்) பொன்சேகாவிடம் சம்பந்தன் வலியுறுத்தல் திருகோணமலை மாவட்டத்தின் பல கிராமங்களில் வாழும் மக்கள் காட்டு யானை களின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் மக்களைப்பாதுகாக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள்விடுத்துள்ளார். திருகோணமலைக்கு நேற்று வருகைதந்திருந்த அமைச்சர் பீல்மார்சல் சரத்பொன்சேகாவிடமே இந்தக் கோரிக்கையை அவர் விடுத்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்றுக்காலை நடந்த வனவிலங்குகள்…
-
- 1 reply
- 534 views
-
-
சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே நோக்கம் – சுமந்திரன் சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே புதிய அரசியலமைப்பின் நோக்கம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இரத்தினபுரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும், இதுவரை நாம் 3 அரசியலமைப்பைக் கொண்டிருந்த போதிலும், ஒரு சமூக ஒப்பந்தத்தைக் கூட கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தெற்கைச் சேர்ந்த 6 முதலமைச்சர்களால் பரிந்துரைக்கப்பட்ட அதிக…
-
- 5 replies
- 755 views
-
-
வடக்கில் 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு வடக்கு- கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் உள்ளிட்ட, 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் தெரிவித்துள்ளார். "தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை வேறு இடங்களுக்கு நகர்த்தி, டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக, அந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக, அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இராணுவ முகாம்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையைப் பூர்த்தி செய்வதற்காக, இந்த நிதியை விடுவிப்பதற்கு திறைசேரி அதிகாரிகள் கடந்த …
-
- 0 replies
- 589 views
-
-
விலைவாசி அதிகரிப்பை எதிர்கொள்ள எளிமையாக வாழப் பழகவேண்டும் வடக்கு முதலமைச்சர் எடுத்துரைப்பு விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், ஆடம்பர வாழ்க்கை முறைமைகளைத் தவிர்த்து எளிமையான வாழ்க்கை முறைக்குத் திரும்புவதன் மூலமும் உற்பத்தியைப் பெருக்க உழைப்பதன் மூலமும் சுகமானதும் சுதந்திரமானதுமான ஒரு வாழ்க்கை முறைமையை முன்னெடுக்கலாம். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஆத்திசூடி வீதியில் உள்ள கலைமகள் சனசமூக நிலையத்தின் 65ஆவது ஆண்டு விழாவும், பிரதேச மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வும் நேற்று மா…
-
- 0 replies
- 394 views
-
-
விக்கினேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் (ரி.விரூஷன்) இல்லையேல் ஆபத்து; ரெலோ எச்சரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பா ளராக தற்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரனையே களமிறக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைமைக்கு தாம் வலியுறுத்தி வருவதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது. கூட்டமைப்பை விட்டு விக்னேஸ்வரன் வெளியேறுவது என்பது தமிழ் மக்களுக்கு பாரிய ஆபத்தை தேடிக் கொடுக்கும் செயலாகும்என்று சுட்டிக்காட்டியுள்ள ரெலோவானது இவ் விடயத்தை கூட்டமைப்பின் தலைமைக்கும் அதேபோன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்வர…
-
- 1 reply
- 386 views
-
-
பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை அதிரடிப்படையின் உதவியை கோரும் மக்கள் சட்டவிரோத மணல் அகழ்வு கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி மக்கள் தங்களின் பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினைத் தடுத்து நிறுத்த விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் இறங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக பளை பிரதேசத் தின் பல இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இரவு பகலாக இடம்பெற்று வருகிறது. ஆனால் பொலிஸாரின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும், பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் துணையுடன் மணல் அகழ்வு இடம்பெறுகிறது என்றும் தெரிவிக்கும் பிரதேச மக்…
-
- 1 reply
- 311 views
-
-
அம்பாறையில் வரட்சி 20,338 பேர் பாதிப்பு (அட்டாளைச்சேனை மேலதிக நிருபர்) கடும் வரட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 20,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு பௌஸர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அம்பாறை மாவட்ட மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சிக் கால நிலையினால் பாதிக்கப்படுபவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி, தமண, லாகுகல ஆகிய…
-
- 0 replies
- 316 views
-
-
சிங்களக் குடியேற்றங்கள் இந்திய -– இலங்கை உடன்பாட்டுக்கு முரண் ஓமந்தை, ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் கண்டனம் வடக்கு- – கிழக்கில் குறிப்பாக முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இந்திய- – இலங்கை ஒப்பந்தத்துக்கு முரணானவை என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கு- – கிழக்கின் நிலத் தொடர்பைத் துண்டிக்கும் விதமாக சிங்களக் குடி…
-
- 0 replies
- 278 views
-
-
விடுதலைப் புலிகளோ இல்லை! இந்தியாவோ இங்கே ஆயுதங்களோடு வரப்போவதில்லை!....சுரேஷ் பிரேமசந்திரன்.
-
- 0 replies
- 311 views
-
-
வீட்டுத் திட்டத்தில் தில்லு முல்லு- அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்த மீள்குடியேற்ற அமைச்சு!! வலி. வடக்கில் கடந்த ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப்பரப்பில் மக்களின் மீள்குடியமர்வுக்காக நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டி ருந்தது. அந்தக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டு, வெட்டிக் குறைக்கப்பட்டு அரைநிரந்தர வீடுகளுக்கே மீள்குடியேற்ற அமைச்சினால் அமைச்சரவைப் பத்திர வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் நிலப் பரப்பிலும் மக்களை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு ஆயிரத்து 650 மில்லியன் ரூபா த…
-
- 0 replies
- 485 views
-
-
அம்பாந்தோட்டையை வசப்படுத்தியது சீனாவின் இராணுவ மூலோபாயம் – பென்டகன் சீனா தனது இராணுவ மூலோபாயத்தின் ஒரு அங்கமாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசுக்கு, இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் தொடர்பாக பென்டகன் சமர்ப்பித்துள்ள ஆண்டு அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் டிஜிபோட்டியில் சீனா தனது இராணுவத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்களில் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது. சீனாவின் பாதை மற்றும் அணைத் திட்டம், பீஜிங்கின் நலனுக்காக ஏனைய நாடுகளின் நலன்களை வடிவமைக்கும் நோக்கம் கொண்டது. …
-
- 0 replies
- 283 views
-
-
விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் – சபாநாயகருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரை தொடர்பாக, சட்ட மா அதிபரிடம் சபாநாயகர் ஆலோசனை கோரியிருந்தார். இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம், தமது ஆலோசனையை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு அனுப்பியுள்ளது. அதில், விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு அழைப்பு விடுத்த விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக, நிலையியல் கட்டளை விதிமுறைகளின் அடிப்படையில் சபாநாயகர்…
-
- 0 replies
- 384 views
-
-
கிளிநொச்சியில் விகாரைகள் கட்டத் திட்டமா? – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ஆளுனர் A வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், கிளிநொச்சியில் இரண்டு விகாரைகளைக் கட்டுவதற்கு, ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய குற்றச்சாட்டை வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மறுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், கிளிநொச்சியை சிங்கள பௌத்த மயப்படுத்த ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்றும், இரண்டு விகாரைகளை கட்டுவதற்கு ஆளுனர் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குர…
-
- 0 replies
- 335 views
-
-
“கடற்புலிகளைத் தடுக்க முடிந்தது, வாஜ்பாயினால் தான்“ – ரணில் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், சிறிலங்காவின் உண்மையான நண்பனாக இருந்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு உதவியவர் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை காலமான வாஜ்பாயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில், கையெழுத்திட்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “மிகச் சிறந்த பிரதமர்களில் ஒருவராக வாஜ்பாய் இருந்தார். அவர் சிறிலங்காவின் உண்மையான நண்பன். எல்லா நேரங்களிலும் அவர் சிறிலங்காவின் பக்கம் நின்றார். முன்னர் நா…
-
- 0 replies
- 244 views
-
-
விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன்- விஜயகலா யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன். விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று அரசாங்க நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டன. இந்தநிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள விஜயகலா மகேஸ்வரன், ”நான் எதனைக் கூறினேனோ அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். நான் கூறிய கருத்தை விலக்கிக் கொண…
-
- 9 replies
- 837 views
- 1 follower
-
-
இந்தியாவிடமே வழங்க வேண்டும்: காலத்தை கடத்தாது வீடுகளை நிர்மாணிக்கக் கோருகின்றது கூட்டமைப்பு (ஆர்.யசி) வடக்கிற்கான வீட்டுத்திட்டம் அமைப்பதை அரசாங்கம் இந்தியா விற்கே கொடுக்க வேண்டும். எமது மக்களின் கலாசாரத்திற்கும் எமது பிரதேச காலநிலைக்குமான தகுந்த வீடுகளை இந்தியாவே நிர்மாணிக்க முடியும் என தமிழ் தேசியக் கூட் டமைப்பு தெரிவித்துள்ளது. யாருக்கு வீட்டுத்திட்டத்தை கொடுப்பது என பேசிக்கொண்டு காலத்ததை கடத்தாது எமது மக்களுக்கான வீடுகளை உடனடியாக அரசாங்கம் அமைந்துக்கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தை இந்தியாவுக்கா அல்லது சீனாவுக்கா கொடுப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என …
-
- 2 replies
- 555 views
-
-
(2012 ஆம் ஆண்டில் ஜுனியர் விகடனில் வெளியான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணல் இங்கு காலத்தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது) ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மையானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர், ‘விடுதலைப்புலிகள் நடத்திய சகோதரச் சண்டை காரணமாகத்தான் இந்த இனஅழிப்பு நடந்தது’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் திசை திருப்பப் பார்க்கிறார். இஞ்சி இருக்கா என்றால் இல்லை என்ற…
-
- 50 replies
- 5.6k views
-
-
முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க டக்ளஸூக்கு இந்தியா பச்சைக்கொடி (ஆர்.ராம்) தீவிர பிரசார தயார்ப்படுத்தல்களில் ஈ.பி.டி.பி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாரளாக களமிறங்குவதற்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியுள்ளதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து அடுத்துவரும் காலத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தீவிர பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முழுமையான தயார்ப்படுத்தல்களில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி களமிறங்கியுள்ளதாக அக்கட்சியின் உள்ளகத…
-
- 2 replies
- 475 views
-