Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று ஆரம்பம் 17 MAR, 2025 | 04:27 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் புதன்கிழமை (19) முதல் சனிக்கிழமை (22) வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விபரிப்பொன்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்றது. இதன் போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அதன் முழு விபரமும் வருமாறு: வருடந்தம் நடைபெறும் யாழ்ப்பாணப் …

  2. வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் முறுகல் பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக திங்கட்கிழமை (17) முறுகல் நிலை தொடர்ந்து வருகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை தொழிலாளி ஒருவர் நாளாந்தம் இரண்டு படகுகளில் 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து கரைவலை தொழில் புரிந்து வருகின்றனர் ஆனால் ஏனைய மீனவர்களின் வலைகள், படகு, இயந்திரங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை தொடர்ந்து உருவாகி வருகிறது வெற்றிலைக்கேணியில் இருந்து 150 மேற்பட்ட கயிறுகளை பாவித்து குறித்த கரைவலை…

  3. Published By: VISHNU 17 MAR, 2025 | 04:49 AM (எம்.வை.எம்.சியாம்) பட்டலந்த முகாம் ஆட்கொலை விவகாரத்துடன் தொடர்புடைய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இது அரசியல் பழிவாங்கல் அல்ல. எனவே தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளருமான புபுது ஜெயகொட தெரிவித்தார். அநுராதபுரத்தில் இடம்பெற்றக் கூட்டமொன்றில் சனிக்கிழமை (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் இடம்பெற்ற குற்றங்க…

  4. 16 MAR, 2025 | 02:56 PM பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார். 1987 -89 இல் ஜேவிபியின் கிளர்ச்சி உச்சகட்டத்தில் இருந்தவேளை பியகமவில் காணப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய நிறுவனங்களிற்கு பாதுகாப்பை வழங்கிய பாதுகாப்பு படையினருக்கு தங்குமிடங்களை வழங்குமாறு அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவிவகித்த ரஞ்சன் விஜயரட்ண எனக்கு விடுத்த உத்தரவை நான் நடைமுறைப்படுத்தியது குறித்தே பட்டலந்த ஆணைக்குழு என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளது என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 1987 இல் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்…

  5. மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது! மெதிரிகிரிய பகுதியில் அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மெதிரிகிரியவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1425382

  6. உள்ளூராட்சி தேர்தல்; வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பம்! எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று (17) தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று தொடங்கும், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் முடிந்ததும் தேர்தல் திகதி அறிவிக்கப்படும். இதற்கிடையில், உள்ளுராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தபால் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, தங்…

  7. Published By: DIGITAL DESK 3 30 SEP, 2024 | 04:38 PM 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் நடைபெறும் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதேவேளை, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார். அத்துடன், அடுத்த சாதாரண தர பரீட்சையை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கே உத்தேசித்துள்ளோம். பரீட்சைக்கான உரிய திகதிகள்…

  8. 11 MAR, 2025 | 09:10 AM திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி இன்று செவ்வாய்க்கிழமை (11) அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்து பதவியேற்கிறார். கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவருமே இன்று பதவியேற்கின்றனர். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் சுமார் 28 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளார். 1967ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி யாழ்ப்பாணம், வ…

  9. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதைக்கப்பட்ட உண்மைகளும் சிதைக்கப்பட்ட மனித உரிமைகளும் பட்டலந்த இருட்டில் இருந்து சூரிய ஒளிக்கு வந்துள்ளதாக அமைச்சர் விமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்க விடயமாகும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஜேவிபியினருக்கு எதிரான பட்டலந்த வதைமுகாம் கொடுமைகள் ஜே.வி.பி யினர் ஆட்சியதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், சுமார் 37 ஆண்டுகளுக்கு முந்திய உண்மைகளை வெளிக்குக் கொண்டு வந்துள்ளனர். அதாவது ஜே.வி.பி. யினர் ஆட்சிக்கு வந்ததால்தான் ஜே.வி.பி யினருக்கு எதிரான சட்டவிரோ…

  10. 16 MAR, 2025 | 05:16 PM (இராஜதுரை ஹஷான்) பொலிஸ் சேவை உட்பட பாதுகாப்பு சேவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது என பாதாள குழுக்கள் கருதுகின்றன. அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலனாகவே பொலிஸ் திணைக்களத்துக்கும், பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் முரண்பாடுகள…

  11. சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் காவல்துறையினருடன் நட்பாக இருப்பதால் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்(N. Vedanayagam) தெரிவித்துள்ளார். அத்துடன், இது ஆபத்தான நிலைமையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி(Kilinochchi) கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று(16.03.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். போர்ச் சூழல் அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “2003ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரையில் இந்த மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் பணியாற்றியிருக்கின்றேன். கடந்த போர்ச் சூழலிலும் கல்விக்கான வசதிகள் உள்ளிட்ட சகல…

  12. 16 MAR, 2025 | 02:12 PM (எம்.நியூட்டன்) கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது என யாழ்.பல்கலைக்கழக இரசாயனவியல் துறைப் பேராசிரியர் க.சசிகேஷ் தெரிவித்தார். சட்டத்தரணி செல்வஸ்கந்தனால் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட மகாஜனன் கணித விஞ்ஞான திறன்காண் போட்டிப்பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (15) தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர் துரையப்பாப்பிள்ளை மண்டபத்தில் நடைற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினரீக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கணித விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது. இது கவலையான விடயமாக உள்ளது. கணித விஞ்ஞான …

  13. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இது தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியேற்பட்டால் அதனை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னதாக ஒன்லைன் ஊடாக சமர்ப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இதற்கான வசதியினை WWW.Doenets. LK என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக்கொள்ள முடியு…

  14. வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு! வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் நிலையம் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நி…

  15. 16 MAR, 2025 | 10:52 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாட்டில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமாயின் உண்மைகள் ஆராயப்பட வேண்டும். அந்த நடவடிக்கை நம்பகத்தன்மையானதாக இருக்க வேண்டும். மஹிந்தவின் ஆட்சியில் மக்கள் விடுதலை முன்னணி இராணுவ தீர்வை தீவிரமாக ஆதரித்தது. அவ்வாறான நிலையில் உண்மையில் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் செயன்முறைக்கு ஆதரவளிக்குமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. கடந்த கால அரசாங்கங்களின் போக்கில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டு மென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் வெளிவிவகாரம், வெ…

  16. 16 MAR, 2025 | 09:46 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கையிலுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே தற்போதுள்ள ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்துக்கு ஏற்றினோம். ஆனால் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்தாமலும் எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் இருந்து வந்தால் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுமென கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். அத்துடன், லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் தொடர…

  17. Published By: DIGITAL DESK 2 16 MAR, 2025 | 09:16 AM (ஆர்.ராம்) இலங்கையுடனான வெளிநாட்டுக் கடன்மறுசீரமைப்பை மேற்கொண்டதன் காரணமாக சீனாவின் பிரதான ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்ஸிம் வங்கிக்கு 7பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். அத்துடன், தெற்காசியாவில் இலங்கை, இந்தியா, சீனா ஆகியன ஒன்றிணைந்து 'கூட்டுச் செயற்றிட்டமொன்றை' முன்னெடுக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தில் சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் ஊடகப்பிரதிநிதிகளுக்கும் இடையில், சீன அரசாங்கத்தின் செயற்பாட்டு அறிக்கை மற்றும் வெளிவிவகார கொள்கை மற்றும் உறவகள் பற்றிய உரையாடல் நடைபெற்றது. இதன்போது …

  18. இசைப்பிரியாவுக்கும் , கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கும் நீதி கிடைக்காதா? – சாணக்கியன் சாடல். அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த வன் கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நாட்டிலே இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு நீதி வழங்க ஏன் அரசாங்கம் முன்வரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (15) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதற்கு ஏன் இந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் நடவடிக்கை எட…

  19. Published By: DIGITAL DESK 2 15 MAR, 2025 | 05:12 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர் யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது. சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் காலத்துக்கு பொருத்தமற்றவையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி …

  20. 5 Mar, 2025 | 05:42 PM (எம்.மனோசித்ரா) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே (ஜே.வி.பி.) கற்றுக் கொடுத்தது. எனவே தற்போது நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த இயலுமைய இந்த அரசாங்கத்துக்கே காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். கண்டியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்மிக்க நிலையிலேயே காணப்படுகிறது. நாட்டில் கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜே.வி.பி. தான் முதன் முதலில் ஆரம்பித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி. தான் இவற்றை கற்றுக் கொடுத்தது. 1984, 1985…

    • 1 reply
    • 214 views
  21. Published By: VISHNU 14 MAR, 2025 | 03:37 AM (ஆர்.ராம்) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தில் வியாழக்கிழமை (13) நண்பகல் நடைபெற்ற சந்திப்பின்போது, சமகால நிலைமைகள் சம்பந்தமாக உரையாடப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிட்டார். குறிப்பாக, அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் நிலைப்பாடுகள், மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து நேற்று மாலை, அ…

  22. 15 MAR, 2025 | 05:29 PM கைத்தொழில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட ஆனால் இதுவரை விடுவிக்கப்படாத காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக உற்பத்திக் கைத்தொழில்களை பயனுள்ளதாக முன்னெடுத்தல், ஒருங்கிணைத்தல், அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய சவா…

  23. 15 Mar, 2025 | 05:30 PM மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் இந்த நியமனத்தை வழங்கினார். மடு திருப்பதியில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானத்தின் நிறைவில் வெள்ளிக்கிழமை (14) இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. ஒரு மறைமாவட்டத்தில் குரு முதல்வர் பதவி என்பது மறைமாவட்ட ஆயருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் பதவியாகும். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் மன்னார் மாவட்டத்தின் முருங்கன் கிராமத்தில் காலம்சென்ற சந்தான் பாவிலு தம்பதியருக்கு பதினொர…

  24. 15 Mar, 2025 | 06:55 PM (எம்.நியூட்டன்) தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இலங்கை இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாக அமைச்சர் கச்சத்தீவில் தமிழக மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முறை இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. இம்முறை பங்கேற்றிருந்தனர். கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடலில்…

  25. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மனித உரிமை பேரவையில் அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து பாரியளவில் வேறுபட்டிருக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அதுதொடர்பான விடயங்களை அரசாங்கம் தெளிவாக தெரிவித்திருக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த மாதம் 25ஆம் திகதி இடம்பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.