ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கிற்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் அரசியல் அரங்கில் ஒலிக்கத்தோங்கியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடை பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார். அவரின் கருத்தை வழி மொழிந்ததாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் வடகிழக்கு இணைப்பிற்கு தயக்கமின்றி நாம் ஆதரவு வழங்குவோம் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார். வடக்கு கிழக்குக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு …
-
- 1 reply
- 795 views
-
-
யாழில் தொடரும் வாள்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? யாழ் நகரிலுள்ள வீடொன்றில் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. யாழ் இராமநாதன் வீதி கலட்டி ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகத்தை துணிகளால் கட்டியபடி மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சென்ற ஆறு நபர்கள் குறித்த வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் தொடர்ந்து வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்தும் அங்கிருந்த கணினி மற்றும் கதிரைகளை குறித்த கும்பல் சேதப்படுத்தியதுடன் அவற்றை தீ …
-
- 1 reply
- 246 views
-
-
உதயங்க வீரதுங்க இலங்கை வர விருப்பம் தெரிவித்துள்ளார் அரச சிரேஷ்ட சட்டவாதி உதார கருணாரத்ன கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவிப்பு (எப்.எம். பஸீர்) ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூது வர் உதயங்க வீரதுங்க நாடு திரும்பி அவருக்கெதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சமஷ்டி நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டுமென அரச சிரேஷ்ட சட்டவாதி உதார கருணாரத்ன கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு நேற்று அறிவித்தார். மிக் விமான கொள்வனவின்போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று கோட்டை நீதிவா…
-
- 0 replies
- 626 views
-
-
முள்ளியவளையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இளைஞரின் சடலம் மீட்பு…. முல்லைத்தீவின் முள்ளியவளை பகுதியிலுள்ள காட்டிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞரின் தலைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்தே சடலம் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிருக வேட்டையின் ப…
-
- 0 replies
- 504 views
-
-
“தமிழருக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை – விக்கிக்கு சகுணம் பிழைக்க வேண்டும்” நாசமறுப்பான்.. மாகாண சபையில் அமைச்சர்களைப் பதவி நீக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை ஆளுநருக்கே உண்டு என இன்று சிறிலங்கா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சட்டத்தரணியும், முன்னாள் அமைச்சரும், தமிழ்த் தேசிய வாதியும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவருமான டெனீஸ்வரனும், அவரது ஆதரவாளர்களும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரானவர்களும் மாபெரும் வெற்றியாக கொண்டாடி மகிழ்கின்றனர். மறுபுறம் தமிழ் மக்களின் உரிமை மீட்பர்களாகிய இவர்கள், மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை, குப்பையும் கொட்ட முடியாது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடமே அதி…
-
- 1 reply
- 427 views
-
-
சீன நிறுவனம் வேண்டாம்- 40 ஆயிரம் வீடுகளையும் இந்தியாவிடம் வழங்குங்கள்- ரணிலிடம் கூட்டமைப்பு கோரிக்கை!! வடக்கு– கிழக்கு மாகாணத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 40ஆயிரம் வீடுகளுக்குரிய ஒப்பந்தத்தை சீனாவின் தொடருந்து நிறுவ னத்துக்கு வழங்க வேண்டாம். இந்தியாவுக்கு அந்த ஒப்பந்தத்தை வழங்குங்கள். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நேரில் கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் கோரிக்கையை சாதகமாக ஆராய்வதாக தலைமை அமைச்சர் இந்தச் சந்திப்பில் உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்…
-
- 12 replies
- 963 views
- 1 follower
-
-
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியை மஹிந்த மறுப்பாரா? அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? ரஞ்சன் கேள்வி (எம்.எம்.மின்ஹாஜ்) தேர்தல் பரப்புரைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வுக்கு 7.9 மில்லியன் டொலர்களை சீனா வழங்கியதாக அமெரிக்க பிரபல ஊடகம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு முன்னாள் ஜனாதிபதி உடன் பதில் வழங்க வேண்டும். பிக்கு ஒருவர் கூட பணம் பெற்றுள்ளார். எனவே முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசியல் சகாக்களும் தாம் ஒரு சதம் கூட சீனாவிடம் இருந்து பெறவில்லை என்று கூறுவார்களாயின் அதனை நாட்டு மக்களுக்கு சான்று மூலம் உறுதிப்படுத்த வேண்டும். இல்லையேல் செய்தி வெளி…
-
- 0 replies
- 618 views
-
-
சிறுத்தை கொலை வழக்கில் -மேலும் 4 பேர் சரணடைவு!! கிளிநொச்சியில் சிறுத்தை ஒன்று அடித்துச் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று வரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றால் எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்று 10 பேரைத் தாக்கிக் காயப்படுத்தியது. அதனைக் கட்டுப்படுத்த முயன்ற வனஉயிரிகள் திணைக்கள அதிகாரிகளையும் அது தாக்கியது. இதையடுத்து கிராமத்தவர்க…
-
- 0 replies
- 184 views
-
-
"அழுத்தங்களை தொடர்ந்தும் பிரயோகிப்போம்" ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளபோதிலும் பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கான அழுத்தங்களை தொடர்ந்து பிரயோகிப்போம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் எடுத்துரைத்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை நேற்று முன்தினம் மாலை அமெரிக்கத் தூதுவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்தச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன்போது அதுல் கெசாப் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐ.நா.மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிய…
-
- 2 replies
- 433 views
-
-
சுழிபுரம் சிறுமி படுகொலை: மேலும் இருவர் கைது யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் 6 வயதான சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்படைய இருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட 6 வயதான சிவனேஸ்வரன் ரெஜினா என்ற சிறுமியின் உடல் கடந்த திங்கட்கிழமை கிணறொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/?p=696224-சுழிபுரம்-சிறுமி-படுகொலை:-மேலும்-இருவர்-கைது
-
- 0 replies
- 504 views
-
-
யாழ்.மாநகரசவை தீயணைப்பு சேவைக்கு புதிய கட்டடம்-திறந்து வைத்தார் முதல்வர் ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு சேவைக்கு என 15 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்டால் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டடம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சால் 90 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா நிதியையும் மாநகர சபைக்கு கிடைத்த முத்திரை வருமானம் ரூபா 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா நிதியையும் கொண்டு அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான தீயணைப்புச் சேவையை வழங்கிவரும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இதுவரை காலமும் ந…
-
- 0 replies
- 295 views
-
-
கிளிநொச்சியில் பல ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வெட்டுவதற்கு முயற்சி : கிளிநொச்சி பழைய வைத்தியசாலை வளாகத்திலுள்ள பல்லாண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்றினை வெட்டி அழிப்பதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தினரால் நடவடிக்கை எடுக்கப்படுவவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பழைய வைத்தியசாலையின் மகப்பேற்றுவிடுதிக்கு (தற்போது செயற்கை அவய உற்பத்தி நிலையம் மற்றும் காகிதாதிகள் களஞ்சியம் ஆகியன தற்காலிகமாக இயங்கும் கட்டடங்களுக்கு) அருகாமையில் காணப்படும் ஆலமரத்திற்கே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. மேற்படி கட்டிடங்களுக்கு அபாயம் நேரிடலாம் என்ற கோதாவில் மிகவும் தந்திரமான முறையில் இந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கைக…
-
- 1 reply
- 366 views
-
-
2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள் பாதையின் இரு மருங்கிலும் மிகப்பெரிய பதாகைகளை கண்டிருக்க தவறியிருக்கமாட்டார்கள். இந்நிறுவனங்கள் அனைத்தும் 30 வருடகாலமாக போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காகவுமே இங்கு வருவதாகக் கூறினார்கள். மக்களும் விவசாயத்தை மீள ஆரம்பிப்பதற்கு, அடமானம் வைத்த பொருட்களை மீட்பதற்கு, சுயதொழில்களை ஆரம்பிப்பதற்கு, வீடுகளைத் த…
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்கள் மீது சிறிலங்கா படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்தார்கள்- வெளிவந்தது மற்றொரு ஆதாரம் விடுதலைப் புலிகளுடனான சண்டைகளின் போது சிறிலங்காப் படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்து வருகின்றது என்கின்ற உண்மையை தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இந்த விடயங்களை ஐ.பீ.சி. தமிழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தது. சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் சிறிலங்கா அரச படையினர் யுத்தக் களத்தில் இரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பில் பிரகீத் எக்னலிகொட என்கின்ற சிங்கள ஊடகவியலாளர் பல தளங்களில் செய்தி வெளியிட்டதுடன், அவ்வாறு அவர் செய்தி வெளியிட்ட காரணத்தினால் அவர் கடத்தப்பட்டு…
-
- 0 replies
- 453 views
-
-
கோத்தா தொடர்பில் வேறு கருத்துக்களும் உள்ளன பொருத்தமான நேரத்தில் தகுதியான வேட்பாளரை களமிறக்குவேன் கோத்தபாய ராஜபக் ஷ பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர் என்று பலர் கூறுகின்றனர். அதற்காக அவர் தெரிவுசெய்யப்பட்டுவிட்ட வேட்பாளர் என்று அர்த்தமில்லை. அவர் தொடர்பில் வேறு கருத்துக்களும் உள்ளன என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குறிப்பிட்டுள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். செவ்வியின் முக்கிய விடயங்கள் வருமாறு: கேள்வி: சுதந்திரக்கட்சியிலிருந்து வெளிவந்துள்ள 16 பேர் கொண்ட குழுவை உங்கள் அணியில் இணைத்து…
-
- 0 replies
- 334 views
-
-
24ஆவது நாளும் மனித எழும்பு கூடு அகழ்வு பணிகள் தொடர்கிறது மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 24ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில் இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை தாங்கிவருகின்றார். மன்னாரில் மனித எச்சங்கள் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கும் நோக்குடன் அகழ்வு செய்யப்பட்டு வரும் புதைகுழி இடத்தை இன்று பெரிதாக்கி அகழ்வு செய்யப்பட்டபோது தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் தென்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மன்னாரில் சதொச விற்பனை நிலைய கட்டிட …
-
- 0 replies
- 234 views
-
-
29 ஆண்டுகளாக கணவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என தவிக்கும் ரோஹனவின் மனைவி மன்றில் மனு மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹன விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு அவரின் மனைவி ஸ்ரீமதி சித்ராங்கனி மனுத் தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில் சட்டமா அதிபர் உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி உலபனே பிரதேசத்தில் ரோஹன விஜயவீர கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தனது கணவர் இது வரை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பது தொடர்பில் சட்டரீதியாக இது வரை அறிவிக்கப்படவில்லை எனவும் எந்தவொரு நீதி மன்றிலும் தனது கணவரை ஆஜர் செய்யவுமில்லை எனவும் சித்ராங்கணி மனு…
-
- 0 replies
- 216 views
-
-
றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரத்தில் ஆர்ப்பாட்டம் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், அரச சார்பற்ற சி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் , பொது மக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர். சங்கானை பிரதேச செயலரிடம் மனு கையளிப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை பொலிஸாருக்கும் ஆர்ப்ப…
-
- 3 replies
- 586 views
-
-
அதிபர் தேர்தலில் இந்தியாவினால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் – மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் இந்தியாவினால், பாரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “இந்த தேர்தலின் இறுதி முடிவுகளில் மேற்குலகம் மற்றும் இந்தியாவினால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவுக்கு செல்வாக்கைச் செலுத்துகிறது. அத்தகைய தலையீடுகளைச் சமாளிக்கும் வகையில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க…
-
- 2 replies
- 317 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு அண்மையில் ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தலையீடு இருந்ததால் ஒரு பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் டொசி உளவு பிரிவில் பணியாற்றியவர் ஒருவர் என்று அவர் கூறியுள…
-
- 0 replies
- 357 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் அபாயம்! முல்லைத்தீவு மாவட்டம் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக வட. மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வு இரண்டு அமர்வுகளாக நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிகமுக்கியமானது. கடந்த காலங்களில் கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்ற பலர் இன்று உயர் பதவிகளை வகித்து வருகின்றார்கள். ஆனால் இப்போது பலரும் நகர்ப்புறப் பாடசாலைகளை நோக்கி …
-
- 0 replies
- 284 views
-
-
மயிலிட்டி துறைமுகத்தில் புதிய மாற்றம்! யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினால் குறித்த அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய நவீனமயப்படுத்தப்படவுள்ள மயிலிட்டி துறைமுகப் பகுதியை மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட அதிகாாிகள் நேற்று (வியாழக்கிழமை) சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர், வலி,வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரி…
-
- 0 replies
- 274 views
-
-
நாங்கள் உண்மையில் ராஜபக்சாக்கள் குறித்து அச்சம் அடைகிறோம் முன்னைய மகிந்த ஆட்சியை பகிரங்கமாக விமர்சிக்கிறார் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேள்வி: நீங்கள் 2020ஆம் ஆண்டின் அரசதலைவர் வேட்பாளர் பற்றி சாடைமாடையாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்தான் அந்த வேட்பாளரா? பதில்: ஆம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே நடைபெறவுள்ள அரசதலைவர் தேர்தலில் கட்சிசார்பான வேட்பாளர். கே: ஆனால் வேறுவிதமான கதைகளும் கட்சியின் உள்மட்டத்தில் நி…
-
- 0 replies
- 430 views
-
-
இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே! ஆதாரத்துடன் கூறும் சி.வி. விக்னேஸ்வரன் “இதுவரை சிங்கள அறிஞர்களால் குறிப்பிட்டு வரப்பட்ட வரலாறு பிழையானது. உண்மையை உள்ளவாறு உரைப்பது தவறாகாது. சினமூட்டுதல் தவறு என்றால் எமது உண்மை வரலாறு எஞ்ஞான்றும் வெளிவராது போய்விடும். ஆகவே, சினமூட்டியேனும் உண்மைகளைவெளிக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது விருப்பம்” என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்திற்கு ஒரு கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கேள்வி - இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டு வருகின்றீர்களே! சிங்களப் பேராசிரியர்கள் இதுவரை கூறிவந்ததை முற்றாக மாற்றும் வண்ணம் உங்…
-
- 2 replies
- 2k views
-
-
கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் றெஜினாவின் இழப்பே இறுதி இழப்பாக இருக்கும் – டக்ளஸ் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சமூக நலன்கருதியும் மக்களின் பாதுகாப்பு கருதியும் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதனூடாகவே எமது சமூகத்தில் இன்னொரு றெஜினாவை கொடிய வன்முறைக்கு காவுகொடுக்காது பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் மரணத்துக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்…
-
- 1 reply
- 284 views
-