Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தரம் 9 வரை கல்விச் சீர்திருத்தத் திட்டம்! ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் இரத்தினபுரி மாவட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த ஆண்டில் 2 மற்றும் 7 ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், 2028 ஆம் ஆண்டில்…

  2. எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்! நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக அமையவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சட்டமூலத்துக்கு எதிரான சட்டப்பூர்வ சவாலைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 121(1) இன் படி, இந்தத் உயர் தீர்ப்பு சபாநாயகருக்குத் தெரிவிக்கப்பட்டது. இன்று (6) நாடாளுமன்றத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த சபாநாயகர், சட்டமூலத்தின் எந்த விதிகளும் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை எ…

  3. அவசரகால சட்டம் பேரிடர் நிவாரணத்திற்கல்ல, மக்கள் எதிர்ப்பை அடக்கவே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: Vishnu 07 Feb, 2026 | 05:53 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டித்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற முடியாது. நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் தேவைப்படும் அதிகாரமாகவே. இது பார்க்கப்படுகிறது. நாங்கள் இதற்கு எதிராகவே வாக்களிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற…

  4. கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலை காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள…

  5. புத்தளம்-மன்னார் வீதியில் அணை கட்டும் திட்டம் மீது எச்சரிக்கை – ரிஷாத் பதியுதீன் 05 Feb, 2026 | 05:32 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) புத்தளம் -மன்னார் வீதியில் பாரிய அணை ஒன்றை கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால் அந்த பாதை நிரந்தரமாக மூடப்படும் அபாயம் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த தவறான தீர்மானத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அது நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்திவிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.…

  6. தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ தமிழர்களுக்கு எதிராக நாங்கள் யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். இராணுவத்தினரை புகழ்வதை இந்த ஆட்சியாளர்கள் விரும்புவதில்லை. வடக்கு மக்களின் மனங்களையும், புலம்பெயர் அமைப்புக்களையும் வெற்றிக்கொள்ளும் வகையில் செயற்படுவதற்காக அரசாங்கம் தெற்கில் இனவாதத்தை தூண்டி விடுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாங்கள் துற…

      • Like
    • 2 replies
    • 208 views
  7. புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது Feb 6, 2026 - 09:30 PM வேலணை - புங்குடுதீவு, வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு அபாயகரமான கோடாலி உள்ளிட்ட ஏனைய சில பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. புங்குடுதீவுப் பகுதியில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பல்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரா…

  8. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைக்கும் தீர்மானம் February 5, 2026 யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டை முழுமையாகப் புனரமைத்து அதனை அவரின் சகோதரிக்கு ஒப்படைக்க வேண்டுமென்று வல்வெட்டித்துறை பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த யோசனை வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் சபைக்கு முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையை சபைக்கு முன்வைத்து சபையில் உரையாற்றிய அவர், ‘‘உலகில் அநேகமான தலைவர்களின் வீடுகள் இவ்வாறு புனரமைக்கப்பட்டு அடுத்த சந்ததியினர் பார்வையிடுவதற்காகப் பாதுகாக்கப்படுவதால் சகலரும் பிரபாகரனின் வீடென்று கூறும…

  9. மட்டக்களப்பில் சடலத்துடன் போராட்டம்.! Vhg பிப்ரவரி 05, 2026 மட்டக்களப்பு, வந்தாறுமூலைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கறடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை எனும் இடத்தில் கடந்த (16) ஆம் திகதி இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று, குறித்த நபர் அவரது வயலில் இருந்தபோது குழுவாகச் சென்ற நபர்கள் சிலர் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியும் வெட்டியும் அடித்தும் உள்ளனர். இதில் படுகாயமடைந்தவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 20 நாட்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04.02.2026)ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இன்று (05.02.2026)ஆம் திகதி உயிரிழந…

  10. நிபா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை 06 Feb, 2026 | 12:55 PM இலங்கையில் நிபா வைரஸ் (NiV) பரவலைக் கண்டறியவும், அதற்குப் பதிலளிக்கவும் சுகாதாரத் துறை தனது தயார்நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இலங்கையின் முதன்மை ஆய்வகமான வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் (Medical Research Institute - MRI) நிபா வைரஸைக் கண்டறியும் திறனை அதீத தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்று சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனைகளை மேற்கொண்டு வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும். இதற்காக நவீன தொழில்நுட்பக் கருவிகள் ஆய்வகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் வட்டாரம் தெரிவித்துள்ளது. நிபா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப்…

  11. 🚨யாழில். மணல் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் – 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று கைது செய்த காவல்துறையினா் adminFebruary 6, 2026 யாழ்ப்பாணத்தில் காவல்துறையினாின் கட்டளையை மீறி 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் செல்லப்பட்ட முன்னாள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரைகாவல்துறையினர் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்துள்ளனர். பருத்தித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை காவல்துறையினா் நிறுத்தச் சொன்னபோது, சாரதி வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்தி தப்பியோடியுள்ளார். சுமார் 20 கிலோமீட்டர் தூரம் காவல்துறையினா் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்றுள்ளனர். ஒரு கட்ட…

  12. யாழ் சுதுமலை பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம்! யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் இன் ஏற்பாட்டில் சுதுமலை அம்மன் ஆலய வளாகமும் அதனைச் சூழ உள்ள பிரதேசமும் புகையிலை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மானிப்பாய் பரிஸ் அரிமா கழகத்தினர் அனுசரணை வழங்கியிருந்தார்கள். இதில் கிராம சேவையாளர் சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலை மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். https://athavannews.com/2026/1463439

  13. அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு 05 Feb, 2026 | 05:45 PM (நா.தனுஜா) பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைக்குத் தீர்வுகாண்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு…

  14. இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 05:16 PM 100 அடி நீள பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதிஅமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன ஆகியோர் சனிக்கிழமை (10) திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்னவும் கலந்து கொண்டார். இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய நில இணைப்பை மீட்டெடுக்கும் வகையில், கண்டி-ரானலை வீதியில் உள்ள B-492 வீதியில் இந்திய இராணுவத்தின் 19வது பொறியாளர் படைப்பிரிவால் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது. தித்வாவுக்கு…

  15. சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்! சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் கராப்பிட்டிய மற்றும் வென்னப்புவ பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வென்னப்புவ துறைமுகத்தில் இருந்து சென்ற இலங்கை மீனவ படகுமீது இந்திய கடலோர காவல்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளiமை அண்மையில் தெரியவந்தது குறித்த மீனவர்கள் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் …

  16. 2026ல் 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள்; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய 05 Feb, 2026 | 02:53 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2026 ஆம் ஆ ண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என்று பகிரங்கமாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய …

  17. தனியார் பேருந்துத் துறையின் 30 ஆண்டு சட்டச் சிக்கலுக்கு தீர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க 05 Feb, 2026 | 02:52 PM நாட்டின் தனியார் பேருந்துத் தொழில்துறையினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வந்த மிகப்பாரிய சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2026 ஜனவரி 17ஆம் திகதியிடப்பட்ட 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயணிகள் சேவை அனுமதிப்பத்திர ஒழுங்குவிதிகள் இதற்கான அவசியமான சட்ட ஏற்பாடுகளை வழங்குகின்றன. இந்த புதிய விதிமுறைகளின் கீழ் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை இரு தரப்பினரும் பூர்த்தி செய்யும…

  18. முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறித்த விபரம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரச பாடசாலைகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆரம்பக் கட்ட அனுமதி 2023 ஆம் ஆண்டில் 3,882,688 ஆக இருந்த மொத்த மாணவர் எண்ணிக்கை, 2024 இல் 3,816,234 ஆகவும், 2025 இல் 3,747,544 ஆகவும் குறைந்துள்ளது. இது 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சுமார் 3.48 சதவீத ஒட்டும…

  19. யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்! adminFebruary 4, 2026 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை 07.30 மணிக்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தர…

  20. இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு! 05 FEB, 2026 | 12:08 PM இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை (05) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். நாட்டின் 42வது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர், இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237871

  21. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம்! 05 Feb, 2026 | 11:13 AM (ஸ்டெப்னி கொட்பிறி) மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. “இந்திய கலாசார உறவுகளுக்கான சபை”யின் விசேட அழைப்பின் பேரில் டில்வின் சில்வா தலைமையிலான குழு இன்று வியாழக்கிழமை (5) இந்தியாவின் புதுடில்லி நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. இந்த குழு இந்தியாவின் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் விஜயம் றே்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்க…

  22. சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்! இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந் நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் ஆதரவை தெரிவித்திருந்தன. இவ்வாறான சூழ்நிலையில் கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்த போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அங்கு ஆரம்பமான போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த போராட்டத்தில் பல்கலைக…

  23. நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி Published By: Vishnu 05 Feb, 2026 | 04:38 AM ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி…

  24. புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்! வரலாற்று சிறப்பு மிக்க தேவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சியானது இன்றைய தினம் (05) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஹுணுபிட்டி கங்காராம விகாரையில் ஆரம்பமாகவுள்ளது. இன்று (05) காலை முதல் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள், 24 மணி நேரமும், வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இந்த புனித சின்னங்களை இந்நாட்டு மக்கள் தங்கள் கண்களால் கண்டு வழிபடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான வசதிகளும், ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் வி…

  25. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர 04 Feb, 2026 | 06:13 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார். கொழும்பில் புதன்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.