Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2025 ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் இன்று(25.02.2025) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. குழு நிலை விவாதம் 2025ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவு செலவுத் திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெ…

  2. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதியை சென்றடைந்துள்ளனர். தீடையில் தத்தளித்தவர்களை கடலோரக் காவல்படையினர் மீட்டு கடலோர காவல் குழும பொலிஸாடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (a) Tamilmirror Online || இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதிகள்

  3. காணி மோசடிகள் உட்பட பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரித்து, நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தவர் என்று அறியப்படும் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் குணரோஜனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான இணைப்பு பிரிவுக்கு பொறுப்பதிரியாக அவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் குணரோஜன் காணி மோசடிகள், பண மோசடிகள் உள்ளிட்ட வழக்குகளை துரிதமாகவும் நிரூபிக்க கூடிய வகையிலும் முன்னேடுத்து நீதிமன்றின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என்று பலராலும் பாராட்டுப்பெற்றவர். தெ…

  4. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், கூல்பார், உணவகங்கள், தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் கடந்த 10ஆம் திகதி திருநெல்வேலி பகுதியில் உள்ள கூல்பார்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது கூல்பார் ஒன்றில் திகதி காலாவதியான சோடாக்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டறியப்பட்டு, அவை பொது சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கூல்பார் உரிமையாளரிற்கு எதிராக பொதுசுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் மேலதிக நீதிவான் நீதிமன்றில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி தா…

  5. பாலியாறு நீர்வழங்கல் திட்டத்திற்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனினும் தற்போது பரீசினைக்குட்படுத்தி இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கிடு செய்யுமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்ட மக்கள் முகம்கொடுத்துவரும் நீர்விநியோகப் பிரச்சனை தொடர்பாக தாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறீர்கள் என நான் திடமாக நம்புகிறேன். கடந்த ஏழு தசாப்தங்களாக யாழ்ப்பாண மாநகர பிரதேச, தீவக மற்றும் தென்மராட்சி மக்கள் குறிப்பாக நியாயமான சுகாதாரமான நீர் விநியோகத்திற்கு ஏங்கியிருக்கிறார்கள். வட மாகாணசபை, யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கான நீர்விநியோகத்துக்க…

  6. 25 Feb, 2025 | 06:22 PM (நா.தனுஜா) இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், திங்கட்கிழமை (24) தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை…

  7. 25 Feb, 2025 | 07:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நீதிமன்றத்தில் சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வாரங்களில் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை எனது பாதுகாப்பு தொடர்பான கரிசனையை ஏற்படுத்துகின்றது.ஆகவே இரண்டு பாதுகாப்பு உத்தியோஸ்த்தர்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போது மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் நான் எதிர்கொண்ட சம்பவமொன்று எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுகிறது.இம்மாதம்( பெப்ரவரி) 12ஆம் திகதி இரவு யாழ். வலம்புரி ஹோட்டலில் என் ம…

  8. இரண்டு மாதங்களில் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இன்று வரை 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 11 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலால் மேற்கொள்ளப்பட்டவை என்றும் எஞ்சிய 6 சம்பவங்கள் காணி தகராறு போன்றவற்றால் இடம்பெற்றவையாகும் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/315446

  9. நாமலின் உயிருக்கு அச்சுறுத்தல்; சாகர காரியவசம்! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்சவை அரசாங்கம் “குழிக்கு” அனுப்பும் என்று தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி பேசும் போதே சாகர காரியவசம் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார். இந்த அறிக்கை குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்திய SLPP பொதுச்செயலாளர், இது நாமல் ராஜபகசவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலைக் குறிக்கிறது. நாமல் ராஜபக்சவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால், அவருக்கு தீங்கு விளைவிக்க அரசாங்கம் சதி செய்து வருகின்றது. இதுபோன்ற ச…

  10. 7 கோள்களும் ஒரே அணிவகுப்பில்; இலங்கையர்களுக்கு அரிதான சந்தர்ப்பம்! இன்றைய நாட்களில் சூரிய குடும்பத்தின் 7 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று (25) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை இலங்கையர்கள் பார்க்க முடியும் என கொழும்பு, பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும் இந்தக் காலகட்டத்தில் பொதுவான பாதையில் செல்வதைக் காணலாம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த சாட்சியின் போது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ககோள்களை வெற்ற…

  11. Published By: DIGITAL DESK 2 25 FEB, 2025 | 03:52 PM கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் பரவுகின்ற வீதத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் இதனை கட்டுப்படுத்த தொடர்ச்சியான வேலை திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொழுநோய் தொடர்பில் இலங்கையிலே இரண்டாவது இடத்தினை மட்டக்களப்பு மாவட்டம் வகிக்கின்ற காரணத்தினால் பொதுமக்களுக்கு இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்றிட்டங்கள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை அலுவலகத்தினால் முன்நெடுக்கப்பட்டுள்ளன. தேசிய தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு செவ்வாய்கிழம…

  12. னகராசா சரவணன் இன்றைய நவீன யுகத்திலும் மலசலகூடம், நீர்,மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக போராடும் மக்கள் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதில் இலங்கையின் சில பகுதி மக்களும் விதிவிலக்கல்ல. மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் இன்றுவரை மலசலகூடம், கிணறு, மின்சாரம் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் 30 குடும்பங்கள் வாழ்ந்துவரும் அவலம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாலமீன் மடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மக்களே இந்த அவல வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய இந்த பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகள் தொடக்கம் அரச அதிகாரிகள் வரை எவரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பற்றைக்காடுகளில் மலசலம் கழிக்க செல்லும் பெண்களை வீடீயோ எடுத்து முகநூலில் பதிவிட…

  13. 25 FEB, 2025 | 03:24 PM முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. 33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/207632

  14. சிறீதரன், கஜேந்திரகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! பெரமுன கோரிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிறீதரன் ஆகியோர், தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அந்த விகாரை உடைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டில் இன்று இனவாதத்தைப் பரப்புவது யார்? தேவநம்பியதீசன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு முன்னால் வந்து சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ்ப் பிரிவினைவாத அரசியல்வாதிகள் போராட்டம் நடத்துகின்றனர். அதுமட்டுமல்ல விகாரை இடிக்கப்படும் எனவும்…

  15. 1989 கிளர்ச்சி தொடர்பில் சபையில் சூடான வாதம் 1989 கிளர்ச்சியின் போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் இன்று சபையில் சூடான வாதங்கள் வெடித்தன. 1989 பொதுத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் கவிரத்னே முன்னாள் அமைச்சரான தனது தந்தை எட்டு பேரைக் கொலை செய்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர பொய்யான கூற்றைச் சொன்னதாக குற்றம் சாட்டியபோது வாக்குவாதம் வெடித்தது. “என் தந்தை யாரையும் கொலை செய்ததில்லை.ஏனெனில் அவருக்குப் பைத்தியம் இல்லை,” என்று திருமதி கவிரத்னே கூறினார். இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர, 1989 ஆம் ஆண்டு மாத்தளையில் …

  16. முகநூலில் ஜனாதிபதியின் போலி புகைப்படம் குறித்து விசாரணை! பிரபல பாதாள உலகக்குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துரே மதுஷின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டதாகக் கூறப்படும் புகைப்படத்தைப் பகிர்ந்த முகநூல் கணக்கு தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத் தகவல் திணைக்களம் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் (IGP) கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தரங்க லக்மால் என்ற நபரால் இந்த படம் முகநூலில் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தவறான தகவல்களை பகிர்ந்துள்ளமை சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்…

  17. ரெலோவுக்கு அழைப்பு விடுத்த - தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் Vhg பிப்ரவரி 25, 2025 எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) கலந்துரையாடலுக்கு வருமாறு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற அமர்வுகள் இட…

      • Like
    • 2 replies
    • 312 views
  18. ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை! இஸ்லாம் மததத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக அவருக்கு 1500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஜூலை 16 அன்று, கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை ஒழிக்க வேண்டும்” என்று அவர் கூறினார். இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர். https://athavannews.com/2025/1415834

  19. கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த நான்கு கைதிகள் மாயம்! பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த நான்கு கைதிகள் இன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர் தப்பிச் சென்றவர்கள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் காலி பொத்தல, அக்மீன மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் வெலிகந்த பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் . இதேவேளை உணவுப் பற்றாக்குறை மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் படையினருடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் கண்டகாடு மறுவாழ்வு மையத்திலிருந்து கைதிகள் தப்பிச் சென்றதாக இதற்கு முன்னர் பல தகவல்கள் வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422929

  20. ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் 6 மணி நேரம் விசாரணை! ‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்’ என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 2 ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை கடந்த வௌ்ளிக்கிழமை (21) பெற்றுள்ளனர். ‘தையிட்டி விகாரையை இடிக்க வாரீர்..’ என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள் பகிரப்பட்டன. குறித்த பதிவுகள் பகிரப்பட்டு சில மணிநேரங்களில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த பதிவு போலியானது என தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பு ஒன்றினையும் நடாத்தி அது போலியான விளம்பரங்கள் என அறிவித்திருந்தார். அந்நிலையில் கடந்த வ…

  21. Published By: VISHNU 25 FEB, 2025 | 02:35 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயராக இல்லையென்பதனை உங்களுக்கு சொல்லுகின்றேன். எமது சகோதரர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள். நாங்கள் பில்லியன், ரில்லியன் கணக்கான நிதியை கொண்டு வருகின்றோம். பிச்சை போடுகின்றோம். தலதா மாளிகைக்கு குண்டுவைத்த ரோஹன விஜேவீர பயங்கரவாதியல்ல, ஆனால் எமது பிரபாகரனை பயங்கரவாதி என்பீர்கள் ஏனெனில் நாங்கள் தமிழர்கள் என யாழ் மாவட்ட சுயேட்சை உறுப்பினர் இராமநாதன் அச்சுனா கடுமையாக சாடினார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற …

  22. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதலாவது அமர்வு இதுவாகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினர் ஜெனீவா சென்றுள்ளனர். இதில் பங்கேற்றுள்ள, இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நட்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதி…

  23. பொலிஸ் காவலின் கீழான கொலைச் சம்பவங்களால் நீதிக்கட்டமைப்பின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழப்பு; பக்கச்சார்பற்ற உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 10:33 PM (நா.தனுஜா) நாட்டின் சட்டவாட்சி மீது வலுவான அச்சுறுத்தலைத் தோற்றுவித்துள்ள அண்மைய பொலிஸ்காவலின் கீழான கொலைச் சம்பவங்கள் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இச்சம்பவங்கள் குறித்து உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் தோற்றுவிக்கும் வகையில் அண்மையில் பதிவான கொலைச் சம்பவங்கள் …

  24. 24 FEB, 2025 | 10:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் தோட்ட மக்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவிக்கும் 7322மில்லியன் ரூபாவில் 4100 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகும். வீட்டுத்திட்டத்துக்கான இந்திய அரசாங்கத்தின் 3500 மில்லியன் ரூபாவும் நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுத்ததாகும். அந்த பெருமை எங்களுக்கே சேரவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவி்த்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் …

  25. காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்களப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை போதையில் நின்ற காடையர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்தியதில் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த முன்னாள் அதிபரொருவர் உயிரிழந்துள்ளார். சி.விசுவாசம் (வயது 63) என்ற ஓய்வுநிலை அதிபரே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: புலம்பெயர் தேசத்தில் இருந்து வருகைதந்த ஒருவர் வைத்த மதுவிருந்தில் பங்கு பற்றியவர்கள், போதையின் உச்சத்தில் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியால் பௌத்த மத குருமார்கள் பயனித்த பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பூநகரி பிரதேசத்துக்குத் தனியார் வகுப்புக்குக் கற்பிக்கச் சென்று கொண்டிருந்த ஓய்வுபெற்ற அதிபர் மீதும் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.