ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
முடியுமானால் நேருக்கு நேர் வாருங்கள்- அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி சவால் முடியுமானால் நேருக்கு நேர் வந்து கருத்துத் தெரிவிக்குமாறு நாட்டிலுள்ள பிரதான அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். நேற்று (04) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். திருட்டு, மோசடி, ஊழல், வீண்விரயம், துஷ்பிரயோகம் மற்றும் கொலை என்பன தொடர்பில் நேர்மையாக நேருக்கு நேர் வந்து கருத்துத் தெரிவிக்குமாறும் அரசியல் தலைவர்களை ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். எந்தவொரு அரசாங்கம் வந்தாலும், லஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாதிருந்தால் மாத்திரமே உரிய முறையில் அபிவிருத்திப் பணியை முன…
-
- 0 replies
- 573 views
-
-
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க மாட்டார்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊழல், மோசடிகளின் மூலம் பணம் சம்பாதித்த நபர்களை மக்கள் மீளவும் ஆட்சியில் அமர்த்த மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். ஊழல் மோசடிகளின் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையிட்டவர்கள் மீளவும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொள்ள பிரயத்தனம் செய்கின்றார்கள். மக்கள் இந்த முயற்சிகளை முறியடிப்பார்கள் எனவும் அவர் இதன்போது …
-
- 0 replies
- 114 views
-
-
போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள் – என்கிறார் வடக்கு ஆளுனர் சிறிலங்காவில் போரின் போது நடந்த குற்றங்களையெல்லாம் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று, மூன்று அரசியல் கைதிகளின் உறவினர்களைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இப்போது போர் முடிந்து விட்டது. எனவே போர்க்காலத்தில் நடந்த சம்பவங்களையெல்லாம் மறந்து விட வேண்டும். அவற்றை நெஞ்சில் வைத்துக் கொண்டு கோபத்தில் செய்யும் செயல்களால் எந்தப் பயனும் இல்லை. எனவே, போரில் நடந்த குற்றங்களை மறந்து விட்டு, அனைவரும் அமைதியாக வாழ வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.pu…
-
- 1 reply
- 267 views
-
-
மகிந்தவிற்கு யாழில் இப்படியொரு வரவேற்பா? எல்லாவற்றையும் மறந்த தமிழர் தரப்பு… மகிந்த யாழ்ப்பாணத்திற்குச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. அவரைப் பார்ப்பதற்கு கூட்டம் அலைமோதியிருப்பதை புகைப்படங்களில் காணமுடிகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தனது அமைச்சரவையில் இருந்த மைத்திரிபாலவை எதிர் நோக்க வேண்டிய வேளையிலும், தோல்வியே தனக்கு கிட்டும் என்று தெரிந்தும், தான் கொலை செய்து எஞ்சியிருந்த மக்களிடத்தே, போய், தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசுக்கு வாக்களியுங்கள் என்று கோரியிருந்தார். தன்னை தானே தமிழினத்திற்கான எதிரி என்பதை அவர் அன்றே உறுதிப்படுத்தியிருந்தார். தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு கிடைப்பது தள்ள…
-
- 4 replies
- 516 views
-
-
சிறிலங்காவுடன் உயர்மட்ட உறவுகளை எதிர்பார்க்கும் இந்தியப் பிரதமர் சிறிலங்காவுடன் உயர்மட்டங்களிலான உறவுகளை பேணிக்கொள்ள விரும்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”எமது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள், வரலாறு, கலாசார அடிப்படையில், உண்மையான பன்மைத்துவத்துடன் வளர்ந்து வந்திருக்கிறது. இந்தப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது எமது பொறுப்பும், எதிர்பார்ப்பும் ஆகும். எமது நாடுகளில் உள்ள மக்களின் பரஸ்பர நன்மைக்காக, உயர் மட்டங்களில், குறிப்பாக பொருளாதாரத் துறையில், நமத…
-
- 5 replies
- 369 views
-
-
இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொள்வதற்கு இலங்கை வந்திருந்த இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வைத் தொடர்ந்து இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதியும் அவரது பாரியாரும் இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சொபி ஆகியோரை வரவேற்றனர். பிரித்தானிய அரச குடும்பத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பையேற்று சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வில் பங்குபற்றியமைக்காக எட்வர்ட் இளவரசருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, 1954 ஆம் ஆண்டு இடம்பெற்ற பி…
-
- 0 replies
- 178 views
-
-
இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் – கேப்பாபுலவிலும் வவுனியாவிலும் போராட்டங்கள்… இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் கேப்பாபுலவிலும் வவுனியாவிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்கான போராட்டம் கடந்த ஆரம்பித்து இன்றுடன் 339 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கறுப்பு நிற ஆடை அணிந்து எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும், மௌன விரதப் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தார். பூர்வீக மக்கள் அகதி வாழ்வில் வரும் நிலையில், ஜனநாயக இலங்கையில் சுதந்திர தின விழாவ…
-
- 1 reply
- 227 views
-
-
கஜேந்திரகுமாருக்கு நடந்ததே சுரேஷூக்கு நடக்கப்போகிறது கஜேந்திரகுமாருக்கு நடந்ததே சுரேஷூக்கு நடக்கப்போகிறது எதிர்வு கூறுகிறார் சரா எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால் எவ்வாறு நிராகரிக்கப்பட்டு – தூக்கி எறியப்பட்டாரோ, அதேபோன்றுதான் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் நடக்கும். மக்கள் எப்போதும் ஒற்றுமையான பலமான அணியைத்தான் தேர்வு செய்வார்கள். அப்படிப்பட்ட அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
-
- 1 reply
- 340 views
-
-
தேர்தல் துண்டுபிரசுரத்துடன் வேட்பாளர் கைது புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேர்தல் துண்டுபிரசுரத்துடன் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு 11.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். விசுவமடு மூங்கிலாற்கு பகுதியில் ஈ.பி.டி.பி கட்சி மற்று ஜக்கிய தேசிய கட்சியின் துண்டுபிரசுரங்களை ஒட்ட முற்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் விசுவமடு பிரதேச வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வேட்பாளரிட…
-
- 1 reply
- 206 views
-
-
லசந்த படுகொலை!! லசந்த படுகொலை!! உயர்மட்ட அதிகாரிகள் விரைவில் கைதாவர் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மூவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லசந்த படுகொலை தொடர்பில் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர…
-
- 0 replies
- 191 views
-
-
சீனத் திட்டங்களுக்கான தாராளமயப் போக்கு இந்திய திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா ? இலங்கையை கூர்மையாக அவதானிக்கும் டில்லி லியோ நிரோஷ தர்ஷன் தெற்காசிய கடற்பரப்பில் இலங்கையின் முக்கியத்துவம் தொடர்பில் பல்வேறு கணிப்புகள் முன்வைக்கப்படுகின்றன. சீனாவின் அதீத ஆதிக்கம் இந்தியாவின் கரிசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் இதன் வெளிப்பாடுகள் பல்வேறு எல்லைகள் நோக்கி விஸ்தரிக்கப்பட்டிருக்கும் என்று தெரியவருகிறது. சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் ஆசிய கடற்பரப்பில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையானது , குறிப்பாக இலங்கை உள்ளிட்ட தெற்கா…
-
- 0 replies
- 180 views
-
-
வைரலாகும் யாழ். மூதாட்டியின் காணொளி! உள்ளூராட்சி மன்ற தேர்தல் பரபரப்பாகியுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் தேர்தல் பிரசார கூட்டம் சூடுபிடித்துள்ளதுடன், ஒவ்வொரு பிரதான கட்சிகளும் பரஸ்பரமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. உள்ளூராட்சி மன்ற தேர்தலானது தென்னிலங்கையில் ஒரு கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், வடக்கில் இன்னொரு கட்டத்தை அடைந்துள்ளது. புதிய கூட்டணிகள், பிளவுகள் என வடக்கு அரசியல் பரபரப்பாகியுள்ளது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை இலக்கு வைத்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வ…
-
- 1 reply
- 308 views
-
-
யாழில் சுதந்திர தின கொண்டாட்டம் இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், இன்று(04.02.2018) யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்றது. இதன்படி, யாழ். மாவட்டத்திற்கான சுதந்திர தின நிகழ்வுகள், யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று காலையில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம அதிதியாக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர், மற்றும் காவல்துறையினரின் அணுவகுப்புகள் மற்றும் சமய கலை கலாசாரங்களை அடையாளப்படுத்தும் விதமான ஊர்வலங்களும் இடம்பெற்றன. தமிழ் மற்றும…
-
- 1 reply
- 438 views
-
-
முடிவுகளில் மாற்றமில்லை என்பதை தமிழ் மக்கள் உணர்த்த வேண்டும்!! முடிவுகளில் மாற்றமில்லை என்பதை தமிழ் மக்கள் உணர்த்த வேண்டும்!! மூதூரில் வைத்து சம்பந்தன் கோரிக்கை தமிழ் மக்களின் முடிவுகளைப் பன்னாட்டுச் சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான தொரு நிலையில் நாங்கள் பல மாக இருக்கின்றோம், பலமாக இருப்போம். எங்கள் முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தத் தேர்தலின் ஊடாக தமிழ் மக்கள் அறிவிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட…
-
- 1 reply
- 231 views
-
-
“நாம் பெற்றவைகளை விட இழந்தவைகள் விஞ்சி நிற்கின்றன” “கடந்தகாலமானது சந்தேஷமும் பூரிப்பும் மிக்க தருணங்களை விட துக்கமும் கவலைகளையும் கொண்ட தருணங்களையே அதிகம் தந்துள்ளது” http://globaltamilnews.net/2018/65112/
-
- 0 replies
- 320 views
-
-
அரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா? : சித்தார்தன் இடைக்கால அறிக்கைகள் எல்லாம் சேர்த்து இறுதியாக அரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்ற நிலை வரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தன் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்ணன் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், சுதந்திரத்திற்கு பிற்பாடு ஆட்சிக்கு வந்த கட்சிகள் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் …
-
- 0 replies
- 234 views
-
-
இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும் எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள், அன்று இரவு 7 மணிக்கும், 8 மணிக்கும் இடையில் வெளிவரத் தொடங்கும் என்று சிறிலங்காவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு 10ஆம் நாள், மாலை 4 மணியுடன் முடிவடையும். உடனடியாக, அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே, அந்தந்த வட்டாரத்துக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் முடிந்து மூன்று, நான்கு மணி நேரங்களில் சிறிய சபைகளின் முடிவுகளை, அதிகாரபூர்வமாக அறிவிக்கக் கூடியதாக இருக்கும். எனினும், பெரிய மாநகரசபைகளின் முடிவுகளை வெளியிட அதிக நேரம் தேவைப்ப…
-
- 0 replies
- 297 views
-
-
மர்மமான கொலை தொடர்பில் முறையான விசாரணை நடாத்தக் கோரிக்கை! யாழ்ப்பாணம் - இளவாலை, சேந்தான்குளம் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரின் கொலை தொடர்பில், முறையான விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேற்குறித்த வியடம் தொடர்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடமாகாண இணைப்பாளர், அன்ரனி யேசுதாசன் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் வசித்து…
-
- 0 replies
- 253 views
-
-
70 ஆவது சுதந்திர தினம் ; உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு சுதந்திரதின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். சுதந்திர தேசமாக ஏழு தசாப்தங்களை கடந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானிய எலிசபெத் மகாராணி விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகள் சிறந்த நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய மகாராணி, எதிர்வரும் காலங்களில் இரு நாட்டு மக்களுக்கு மத்தியில் இருந்துவரும் உறவுகள் மேலும் பலமடையும் என தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார். இந்த வ…
-
- 2 replies
- 659 views
-
-
கூட்டமைப்பை உடைக்க மக்களே இடமளியாதீர்கள்! -முன்னாள் போராளி கூட்டமைப்பை உடைக்க மக்களே இடமளியாதீர்கள்! -முன்னாள் போராளி உலக அரங்கில் ஈழத்தமிழன் வளர்ந்துவிட்டான் என்பதற்காகப் பல நாடுகள் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தன. அந்த வளர்ச்சி தற்போது அரசியல் ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக பலம் பெற்றுவிட்டதால் கூட்டமைப்பை அழிக்கவே பல முனைகளிலும் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. அதற்கு எவரும் இடமளித்துவிடாதீர்கள். …
-
- 0 replies
- 402 views
-
-
வடக்கில் இன்று மக்கள் போராட்டம்!! வடக்கில் இன்று மக்கள் போராட்டம்!! சுதந்திர தினம் கறுப்பு நாளாக் கடைப்பிடிப்பு இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் அதைக் கறுப்பு நாளாக அறிவித்து வடக்கு மாகாணத்தில் பல இடங்களி்ல் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட கேப்பாபிலவுக் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேப்பாபிலவு மக்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நட…
-
- 0 replies
- 280 views
-
-
சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வு – மாணவிகளின் மடிக்கணினி நடனத்துக்குத் தடை சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் இன்று, ‘ஒரே நாடு’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. காலிமுகத்திடலில் இன்று காலை சுதந்திர நாள் நிகழ்வுகள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்வர். இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பிரித்தானிய இளவரசர் எட்வேர்ட் அழைக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேசியக் கொடியை ஏற்றி வைத்து இன்று காலை 9.13 மணியளவில் உரையாற்றுவார். அத…
-
- 0 replies
- 238 views
-
-
டக்ளசுக்கு எதிரான சாட்சியங்களை முன்னிலைப்படுத்த தவறிய காவல்துறை அதிகாரிக்கு பிடியாணை சூளைமேடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஈபிடிபி செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கு எதிராக, சாட்சிகளையும், சான்றுகளையும் முன்னிலைப்படுத்தத் தவறிய காவல்துறை அதிகாரிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 1986ஆம் ஆண்டு சென்னை- சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகினர். அதன் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்த வழக்க…
-
- 0 replies
- 128 views
-
-
சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர் இன்று கொண்டாடப்படும் சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் வரவேற்பு விருந்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார். சுதந்திர நாளன்று பாரம்பரிய முறைப்படி, சிறிலங்கா அதிபரால் இராப்போசன வரவேற்பு விருந்து ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்பது வழக்கம். இம்முறையும், இந்த விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. சுமார் 600 விருந்தினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அழைப்பிதழ் அனுப்பப்பட்ட வெளிநாட்டு தூதுவர்கள், மற்றும் இராஜதந்திரிகள், பிரம…
-
- 0 replies
- 168 views
-
-
யாருடைய பொக்கற்றுக்குள்ளும் நாங்கள் இல்லை சித்தார்த்தன் கூறுகிறார் (புளியந்தீவு நிருபர்) ஐக்கிய தேசியக் கட்சியானாலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். யாருடைய பொக்கற்றுக்குள்ளும் நாங்கள் இல்லை. நாங்கள் தமிழ் மக்களின் பொக்கற்றுக்குள் இருக்கிறோம் என்று சொன்னால் நியா யம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வேறு எவருடைய பொக்கட்டுக்குள்ளும் போக மாட்டோம் என்று புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். நேற்றைய தினம் வௌ்ளிக்கிழமை பகல் மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கக்கட்ட…
-
- 3 replies
- 378 views
-