ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
கூட்டு அரசு தொடர்வதற்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கும் புதிய அரசமைப்பு உருவாக்கும் செயற்பாடு தொடரவேண்டுமென்றால் கூட்டு அரசு நீடிக்கவேண்டும். தேசிய நல்லிணக்க அரசின் மூலமே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. கூட்டு அரசு தொடர்ந்து பயணிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற தைப…
-
- 1 reply
- 155 views
- 1 follower
-
-
ஜனாதிபதிக்கு பதவிமோகமா.? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது பதவி மேலுள்ள மோகம் அதிகரித்துவிட்டது. தான் தொடர்ந்தும் ஜனாதிபதி யாக இருக்கவேண்டும் என்ற ஆசையிலேயே நீதிமன்ற ஆலோசனையினை பெறுகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விசாரணையினை வெளிப்படையாக செய்தவர்களுக்கு விசாரணை அறிக்கையினை ஏன் வெளியிட முடியாதுள்ளது எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சி…
-
- 0 replies
- 116 views
-
-
கடற்படை புலனாய்வு பிரிவின் மற்றொரு உறுப்பினர் கைது.! கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் விவகாரம் தொடர்பில் கடற்படையின் புலனாய்வு பிரிவின் சிப்பாய் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் இன்று கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்குத் தெரிவித்தார். கடத்தப்பட்ட 11 பேர் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் திருகோ…
-
- 0 replies
- 197 views
-
-
ஜனாதிபதி, பிரதமருக்கு வலியுறுத்துவதாக சம்பந்தன் தெரிவிப்பு.! நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை, அடுத்த தைப்பொங்கலுக்குள் எமக்கான நிரந்தர அரசியல் தீர்வுகிடைக்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமருக்கு வலியுறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், தமிழர்களை பொறுத்த வரையில் தைப்…
-
- 0 replies
- 108 views
-
-
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு விரைவில்.! நாட்டின் சகல மக்களும் எதிர்பார்க்கும் தீர்வுகள் அனைத்தையும் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்கவே நான் முயற்சித்து வருகின்றேன். சகல அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாட்டை வெற்றிகொள்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு விரைவில் பெற்றுத்தரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய தைப்பொங்கல் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதில் உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், தைப்பொங்கல் நிகழ்வை தமிழ் மக்களின் முக்…
-
- 0 replies
- 173 views
-
-
இரணைமடு நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட 98 வது ஆண்டில் 98 பானைகளில் பொங்கல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்டு நீர்பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டு 98 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட பொங்கல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இரணைமடுகுளத்தின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுப்படுகின்ற கமக்கார அமைப்புக்களை சேர்ந்தவர்கள் 98 பானைகளில் பொங்கி விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு இரணைமடு கமக்கார அமைப்புகளினால் ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் பொங்கல் விழா ஏற்பாடு இடம்பெறுவது வழக்கமாகவுள்ளது. இன்றைய நிகழ்…
-
- 1 reply
- 594 views
-
-
யாழில் மீண்டும் பரபரப்பு: இருவேறு வாள்வெட்டுக்களால் இருவர் படுகாயம்! யாழில் வெவ்வேறு பகுதிகளில் இரு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தவ வாள்வெட்டுச் சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.ஆணைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி மடம் பகுதியிலும் இன்று (15) இரவு இந்த வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் கந்தையா திருநீலகண்டசிவம் (வயது 49) மற்றும் நாகமணி ஜெனிஸ்ரன் (வயது 24) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 385 views
-
-
வடக்கு கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருப்பது கிழக்கு முஸ்லிம்கள் பற்றி சிந்திக்காத அவரது எதேச்சதிகாரத்தையும் தமிழ் பேரினவாத வெறியையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவரும் அ.இ.மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை பட்டியல் வேட்பாளருமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் அவர் மேலும் கூறியதாவது, வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் வட மாகாண முதலமைச்சர் அடிக்கடி தான் தோண்றித்தனமான கருத்துக்களை முன் வைத்து வருகிறார். வடக்கும் கிழக்கும் விக்னேஸ்வரனின் தந்தை வழி சொத்தல்ல. இங்கு பல்…
-
- 9 replies
- 919 views
-
-
“தமிழர்களால் நாங்கள் பெருமையடைகிறோம்” பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே பிரித்தானியா மட்டுமல்லாது உலகலாவிய தமிழ்ச் சமூகத்தினருக்கு பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியை வீடியோவாக வெளியிட்டுள்ள அவர், “பிரிட்டன் பல்வேறு வழிகளில் வளர்ச்சியை பெற்றதற்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களால், நாங்கள் பெருமையடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பழமையான இந்த பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தை முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகி…
-
- 4 replies
- 874 views
-
-
ஆணையாளர்களின் நியமனத்தில் மைத்திரிபால சிறிசேன தலையீடு ஆணையாளர்களின் நியமனத்தில் மைத்திரிபால சிறிசேன தலையீடு அரசமைப்புச் சபையின் முன்மொழிவை மாற்றுமாறு பணிப்பு அரசமைப்புச் சபையால், காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் ஆணையாளர்களாக நியமிப்பதற்கு 7 பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில் அவற்றில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார் என்று உதயன் நம்பகரமாக அறிந்தான். …
-
- 1 reply
- 159 views
-
-
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குகிறது இந்தியா காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் ( 6.9 பில்லியன் ரூபா) கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் நேற்று கையெழுத்திட்டுள்ளன. புதுடெல்லியில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்காவின் நிதி அமைச்சின் செயலர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச 2010ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு …
-
- 11 replies
- 598 views
-
-
அமெரிக்கா அதிருப்தி : வடக்கு முதல்வருடனான சந்திப்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விசனம் தெரிவிப்பு (ஆர்.யசி) பொறுப்புக்கூறல் விடயத்திலும் நல்லிணக் கத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதிலும் அரசாங் கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் தருவதாக அமெரிக்க தூது வர் அதுல் கேஷாப் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக் ஷவின் கதைகளை கூறி வாக்குறுதிகளை மீறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பொறுப்புக்கூறல் விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் அழுத் தம் கொடுக்க வேண்டும் என விக்கினேஸ்வரனும் தூதுவரிடம் வலியுற…
-
- 1 reply
- 259 views
-
-
புலிச் சின்னத்துடன் புத்தகம் தென்னிலங்கையில் மீட்பு புலிச் சின்னத்துடன் புத்தகம் தென்னிலங்கையில் மீட்பு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன வெளிநாட்டு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்பட ஆயுதங்களை காலி கரந்தெனிய மடக்கும்புர பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். பல்வேறு துப்பாக்கிகளை பயன்படுத்துவது தொடர்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழு…
-
- 0 replies
- 351 views
-
-
18 வருடங்களின் பின்னர் வரையப்படும் இலங்கையின் பூலோக வரைப்படம்!!! இலங்கையில் பூகோல ரீதியிலான வரைபடத்தை புதிதாக தயாரிப்பதற்கு நில அளவை திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய இலங்கை வரைபடம் 1:50 000, 92 ஸ்கோப்பிங் வரைபடமாக அமைந்துள்ளதாகவும். இதில் 65 ஸகோப்பிங் பணிகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன் எஞ்சிய 25 ஸ்கோப்பிங் வரைபடங்கள் எதிர்வரும் சில மாதங்களில் பூரணப்படுத்தப்படவுள்ளதாகவும் அரச நில அளவையாளர் பி.எம்.பி உதய காந்த தெரிவித்தார். 18 வருடங்களிற்கு பிறகு வரையப்படும் வரைபடத்தில் இக்காலப்பகுதியில் இலங்கை நிலப்பரப்பில் மாற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. புதிய வரைபடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்பு நகரமும் உள்வாங…
-
- 0 replies
- 418 views
-
-
‘விடுதலை என்று பேசுபவர்களின் பின்னாலிருப்பது சுயலாப அரசியலே’ “மார்க்கத்தின் பெயரில், சமூக விடுதலை என்று பேசுபவர்களின் பின்னணியில் இருப்பது சுயலாப அரசியலன்றி வேறெதுவுமில்லை” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் பாலமுனை வேட்பாளர்களை ஆதரித்து, நேற்றிரவு (14) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, “தேர்தல் பிரசாரங்களில் என்னை நோக்கி சில கேள்விகளைத் தெ…
-
- 0 replies
- 224 views
-
-
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த ரயிலில் தீ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் தீப் பிடித்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த குறித்த கடுகதி ரயிலின் இயந்திரப் பெட்டியில் தீ பரவியுள்ளது. மீசாலை - சாவகச்சேரிப் பகுதியில் குறித்த ரயில் நிறுத்தப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ரயில் சாரதிகளும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர். இயந்திரக் கோளாறு காரணமாகவே தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீயினால் எவருக்கும் பாதிப்பு…
-
- 0 replies
- 284 views
-
-
போதைப்பொருள் அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம் பெருந்தொகையான கொக்கெய்ன் போதைப்பொருள் அழிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆரம்பமாகியது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 928 கிலோகிராம் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருள்களே இவ்வாறு அழிக்கப்படுகின்றன. இந்த அழிக்கும் நடவடிக்கை கட்டுநாயக்கவில் இடம்பெற்று வருகின்றது. http://www.virakesari.lk/article/29403
-
- 0 replies
- 148 views
-
-
பிரதமர் மக்களை ஏமாற்றிவிட்டார் : ரணிலின் நடனம் அழகானது என்கிறார் மஹிந்த (ஆர்.யசி) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நடனம் நெளிவு சுளிவுகளுடன் அமைந்தாலும் நடனத் தின் பின்னணி மோசமானது. மத்திய வங்கி ஊழலை திசை திருப்பும் நோக்கமே இது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று பெல்மதுளை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். இந்த அரசாங்கம் பயணிக்கும் பாதை மிகவும் மோசமானது, மக்களையும் கலாசாரத்தையும் அழிக்கும் நடவடிக்…
-
- 0 replies
- 269 views
-
-
மஹிந்த ராஜபக் ஷவின் ஊழலை அம்பலப்படுத்தி தண்டிப்போம் : ரணில் ஊழலற்ற தலைவர் என்கிறார் சந்திரிகா (ஆர்.யசி) ஜனாதிபதியோ பிரதமரோ எந்தவித ஊழலிலும் ஈடுபடாத தலைவர்கள். அரசாங்கத்தில் ஒருசில ஊழல்வாதிகள் உள்ளனர். அவர்களை அப்புறப்படுத்தும் வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினுள் இடம்பெற்றுவருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் ஊழலையும் விரைவில் அம்பலப்படுத்தி தண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வேயன்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் …
-
- 0 replies
- 157 views
-
-
பொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி ஆரம்பம் பொங்கல் விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறைப் பகுதியில் பட்டம் விடும் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. வல்வை விக்னேஸ்வரா சனமூக நிலையத்தினரால் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதில் கடற்தொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். http://newuthayan.c…
-
- 12 replies
- 890 views
-
-
முதுகெலும்பிருந்தால் கட்சியைவிட்டு விலகி அரசியல் செய்யுங்கள் : ஜனாதிபதி புதிய கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என ஊடகக் கலந்துரையாடலில் குறிப்பிடுகின்றவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியல்லாது வேறு கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு கூறுவது நகைப்புக்கிடமானதாகும் என்றும் மனச்சாட்சிக்கேற்ப அரசியலில் ஈடுபடுமாறு தாம் அவர்களுக்கு கூறுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று பிற்பகல் ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் செயலாளரும் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் க…
-
- 0 replies
- 142 views
-
-
சீனாவின் இரண்டாவது கட்ட கொடுப்பனவும் சிறிலங்காவுக்கு கிடைத்தது அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்குப் பெற்றுக் கொண்டதற்கான இரண்டாவது கட்டக் கொடுப்பனவை, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்று சிறிலங்காவிடம் வழங்கியுள்ளது. இதன்படி, சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் 97.365 மில்லியன் டொலருக்கான காசோலை நேற்று சிறிலங்கா துறைமுக அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.12 பில்லியன் டொலருக்கு, சீன நிறுவனம் கடந்த டிசெம்பர் மாதம் குத்தகைக்குப் பெற்றுக் கொண்டது. இதற்கான முதற்கட்ட கொடுப்பனவாக 292 மில்லியன் டொலரை வழங்கியிருந்தது. இந்தநிலையில், இரண்டாவது கட்டக் கொடுப்பனவு நேற்று வழங்கப்பட்…
-
- 0 replies
- 156 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்பில் இந்தியாவால் எதுவும் முடியாது!! வடக்கு – கிழக்கு இணைப்பில் இந்தியாவால் எதுவும் முடியாது!! இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவிப்பு வடக்கு -– கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கான அழுத்தங்களை இந்தியாவால் வழங்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது. அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து திட்ட வட்டமாகத் தெரிவித்தார். வடக்கு -– கிழக்…
-
- 0 replies
- 206 views
-
-
‘கூட்டமைப்புக்கு பாடம் புகட்டப்படும்’ “யாழ். முஸ்லிம்களின் வாழ்வுரிமை பறிப்பதற்காக, அரசியல் வியாபாரங்களை தற்போது செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், மக்கள் நல்ல பாடத்தை கற்பிப்பார்கள்” என சமூக சேவகர் கே.எம் நிலாம் தெரிவித்தார். இது தொடர்பில், அவர் ஊடகங்களுக்கு இன்று (14) கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது, “எமது மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுகின்றேன். ஆனால், எமது வட்டார மக்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்தவர்கள் பசப்பு வார்த்தைகளை கூறி பணம் கொடுத்து திசை திருப்பப் பார்க்கின…
-
- 3 replies
- 692 views
-
-
இலங்கையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு மதுபானம் விற்பதற்கான தடை நீக்கம்.. கொழும்பு: இலங்கையில் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் விதிக்கப்பட்டு இருந்த தடையை அரசு திரும்ப பெற்றது. இலங்கையில் கடந்த 1979ம் ஆண்டு முதல் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், மதுபானங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்கள் பணியாற்றவும் அரசு தடை விதித்திருந்தது. எனினும், பல இடங்களில் பெண்கள் மதுபானங்களை விற்பதிலும், மதுபானங்களை பரிமாறும் சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். மேலும், பெண்களுக்கு தடையை மீறி மதுபானங்களும் விற்கப்பட்டன. இந்நிலையில், பெண்களுக்கு மதுபானங்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் விதிக்கப்பட்ட தடையை …
-
- 9 replies
- 770 views
-