ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் தடுப்பில் இருந்தவர் விடுதலை (ரி.விரூஷன்) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எட்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ உறுப்பினர் ஒருவருக்கு பிணையில் செல்வதற்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இவ் வழக்கானது விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டிருந்த போதே மேற்படி உத்தரவானது நீதிபதி உபாலி குணவர்த்தனவினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்…
-
- 0 replies
- 247 views
-
-
பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்! பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்! பாலியல் தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்க செய்ய வேண்டும் என்று சபையில் நேற்றுக் கொந்தளித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இத்தகைய ஆசிரியர்களுக்கு உடனடியாகவே சாவுத் தண்டனை வழங்கப்பட்டுவிடும் என்று சக உறுப்பினர் புவனேஸ்வரனும் அதனை ஆமோதித்தார். …
-
- 1 reply
- 806 views
-
-
கூட்டமைப்பின் வெற்றியை யாராலும் அசைக்க முடியாது கூட்டமைப்பின் வெற்றியை யாராலும் அசைக்க முடியாது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கில் தரமான – பொருத்தமான வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கும். கூட்டமைப்பின் வெற்றியை எவராலும் அசைக்க முடியாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். “கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தற்போது வேட்பாளர் தெரிவில் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்கள் தெரிவில் இளையோர…
-
- 3 replies
- 663 views
-
-
"இலங்கையில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை" நன்றி கடிதம் அனுப்பினார் ஜனாதிபதி இலங்கையில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்று பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியமாக நன் றிக் கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள் ளார். இறுதிப் போரில் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டது போல 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும், இறுதிப் போரில் 7000 தொடக்கம் 8000 வரையானவர்களே கொல்லப்பட்டனர் என்றும், அவர்களில் கால்வாசிப் பேர் சாதாரண உடையில் இருந்த புலிகள் என்றும் கடந்த ஒக்டோபர் மாதம் பிரித்…
-
- 4 replies
- 601 views
-
-
வடக்கை தனிநாடாக பிரித்து தந்துவிடுங்கள் புலம்பெயர்ந்தோர் முதலீடு செய்வார்கள் என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வடமாகாணத்திற்கான முதலீடுகளை புலம்பெயர்ந்தவர்களிடத்திலிருந்து நாங்கள் பெற்றுக்கொள்வதென்றால் வடக்கை தனிநாடாக பிரித்து தந்துவிடுங்கள். அதன் பின்னர் நாங்கள் இந்த அரசாங்கத்திடம் எதனையும் கேட்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்று…
-
- 15 replies
- 1k views
-
-
வெளிச்சத்துக்கு வரும் உண்மை; பிக்கு கைதாகலாம்! ‘தலபூட்டுவா’ என்ற யானையின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அரச உயரதிகாரி ஒருவரும் புத்த பிக்கு ஒருவரும் கைது செய்யப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. கல்கமுவவில் தந்தங்களைக் களவாடுவதற்காகக் கொல்லப்பட்ட இந்த யானையின் கொலையுடன், கல்கமுவ விவசாயப் பொறியியலாளர் மற்றும் கல்கமுவ, பொல்பித்திகமவில் உள்ள பௌத்த ஆலயம் ஒன்றின் பிக்கு ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையும் முழுமையான விசாரணைகளுக்கு உட்படுத்திய பின்னர் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். இதே குற்றத்தின் கீழ் இதுவரை…
-
- 0 replies
- 363 views
-
-
கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்படுகின்றன. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி நகரில் அண்மைக் காலமாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களே உடைக்கப்பட்டு வருகின்றன. நள்ளிரவில் வியாபார நிலையங்களை உடைக்கும் திருடர்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிச் செல்கின்றனர். இதில் அதிகளவு பணத்தையே எடுத்துச் சென்றுள்ளனா் தெரிவிக்கப்படுகின்றது. கனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் சமீப காலமாக பதினைந்துக்கு மேற்பட்ட கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. இதில் பலர் கிளிநொச்சி காவல்துறை ந…
-
- 3 replies
- 863 views
-
-
36 மணிநேர எச்சரிக்கை! நாட்டில் பரவலாகத் தற்போது பெய்து வரும் மழை, அடுத்த 36 மணிநேரத்துக்குத் தொடர வாய்ப்பிருப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் பிற்பகல் இரண்டு மணியளவில் இடியுடன் மழை பெய்யலாம் என்றும் தென்மேற்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை நேரத்திலும் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை உட்பட மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, நாடு முழுவதும் காலை நேரங்களில் பனிமூட்டம் சற்று அதிகமாகக் காணப்படவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழ…
-
- 1 reply
- 638 views
-
-
வவுனியா நகரசபைக்கு ரெலோ போட்டியிடாது: தமிழரசுக் கட்சியின் முடிவால் அதிருப்தி தமிழரசுக் கட்சியுடன் பங்கீடு தொடர்பில் இணக்காடு இல்லாமையால் வவுனியா நகரசபையில் ரெலோ போட்டியிடுவதில்லை என முடிவு எடுத்துள்ளதாக தெரியவருகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகியவற்றில் வவுனியா நகரசபையில் ரெலோ இரு தொகுதிகளில் போட்டியிட கேட்டிருந்தது. எனினும், அவ்விரு இடங்களில் ஒன்றை தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டுள்ளதுடன், மற்றைய இடத்தை புளொட் அமைப்புக்கு வழங்கியுள்ளது. இதன்காரணமாக ரெலோ அமைப்பு அதிருப…
-
- 0 replies
- 283 views
-
-
சுதந்திரக்கட்சி இரண்டு பட்டதால் ஐ.தே.க.வுக்கு கொண்டாட்டமா? உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த நடவடிக்கைகள் சூடு பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் இத்தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் பல திட்டங்களை வகுத்து செயற்பட்டு வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதற்கிடையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் கூட்டு எதிரணியின் இணைவு தொடர்பில் அதிகமாகவே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இந்த எதிர்பார்ப்பு இப்போது சாத்தியப்படாமல் போயுள்ளது. இக்கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இல்லை. இந்நிலையில் இக்கட்சிகளிடையே காணப்படும் விரிசல் நிலையானது ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் ஆதிக்கம…
-
- 1 reply
- 371 views
-
-
சிமெந்து கூட்டுத்தாபன காணியில் காங்கேசன் துறைமுகம் அபிவிருத்தி! சிமெந்து கூட்டுத்தாபன காணியில் காங்கேசன் துறைமுகம் அபிவிருத்தி! சிமெந்துக் கூட்டுத்தாபனத்திடமிருந்து 50 ஏக்கர் காணியைப் பெற்று காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக நடவடிக்கைகாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. துறைமுக மற்றும் கப்பல்துறை விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தின…
-
- 0 replies
- 338 views
-
-
மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை! யாழ்.மாவட்டதில் மோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் இருவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது குறித்து மேலும் தெரியவருவதாவது...... குறித்த இரு சமுர்த்தி உத்தியோகஸ்தர்களும் வறிய மக்களுக்கு கொடுக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகளில் பெருந்தொகையான பணத்தினை மோசடி செய்துள்ளனர்.கணக்காய்வுகளின் போது குறித்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது குறித்த இருவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேவேளை குறித்த இருவரும் ஒரு அரசியல் கட்சியின் செ…
-
- 0 replies
- 196 views
-
-
முன்னாள் விடுதலைப் புலிகள் எழுவருக்கு தலா 56 வருடம் கடுழிய சிறைத் தண்டனை : விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளுக்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட, ஏழு முன்னாள் போராளிகளுகளும், கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த ஏழு பேருக்கும் தலா 56 ஆண்டுக்கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன்னார், வவுனியா, சாவகச்சேரி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இவர்கள், கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி…
-
- 2 replies
- 612 views
-
-
பிரமிட் வியாபார முறைமையை முன்னெடுக்கும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு இடைகால தடை:- தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குளோபல் லைப் ஸ்ரைல் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று இடைக்கால தடைவிதித்துள்ளது. குறித்த நிறுவனமானது இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமையை ஒத்த வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. வர்த்தக முறை. நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் பொருள் ஒன்றினை ஒருவர் முன்னதாக ஒரு தொகை பணத்தினை கொடுத்து பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அவர…
-
- 3 replies
- 667 views
-
-
வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினையில் வட மாகாணம் முதலிடம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வறுமை மற்றும் வேலையில்லாப் பிரச்சினை என்பனவற்றில் வட மாகாணம் முதல் இடத்தை வகிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தரப்படுத்தலின் அடிப்படையில் அதிகளவு வறுமையான மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வடக்கின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாகாணத்தில் அதிகளவு வேலையில்லாப் பிரச்சினை காணப்படுவதாகத…
-
- 0 replies
- 257 views
-
-
பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க பசுபதிப்பிள்ளை முடிவு வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். குறித்த பாதீட்டில் கிளிநொச்சி தொடர்பில் விஷேட அபிவிருத்தி முறைகள் அல்லது விஷேட வேலைத் திட்டங்கள் குறித்து எதுவும் இல்லாமையே தான் இந்த முடிவு எடுத்தமைக்கான காரணம் என அவர் கூறியுள்ளார். வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி தொடர்பில் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக, பசுபதிப்பிள்ளை மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பசுபதிப்பிள்ளை தமி…
-
- 0 replies
- 194 views
-
-
அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 29 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் இவர்கள் இன்றைய தினம்(14) கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/அவுஸ்திரேலியாவில்-நாடு-கடத்தப்பட்ட-இலங்கையர்கள்/175-208860
-
- 0 replies
- 155 views
-
-
ரணில் – பஷில் டீல் பிளவுக்கு காரணம் கூட்டு எதிரணியிலிருந்து இன்னும் பலர் வருவார்கள் என்கிறார் டிலான் (ரொபட் அன்டனி) ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர் பஷில் ராஜபக் ஷவுக்கும் இடையில் காணப்படும் டீல் காரணமாகவே சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிரணிக்கும் இணைந்துகொள்ள முடியாமல் போனது என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். கூட்டு எதிரணியும் சுதந்திரக் கட்சியும் இணையாமையின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளூராட்சிமன்ற தேர்த லில் நன்மை ஏற்பட்டுள்ளது என்பதன…
-
- 0 replies
- 203 views
-
-
ஓரணியில் உறுதிப்பாட்டை மக்கள் நிரூபிக்க வேண்டும் திருமலையில் வேட்பு மனு தாக்கலின் பின்னர் சம்பந்தன் அழைப்பு (மூதூர் நிருபர்) தமிழ் மக்களின் இறைமையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கக்கூடிய அரசியல் தீர்வைக்காண்பதே எமது குறிக்கோள். அதனை அடையும் இலக்குடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அதனை அடைந்து கொள்வதற்கு மக்கள் ஓரணியில் திரண்டு உறுதியாக இருக்கின்றனர் என்பதனை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். திருகோணமலை மாவட்டத்தில் நான்கு பிரதேச சபைகளுக்கு நேற்று புதன்கிழமை வேட்பு மனுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்தது. அதன்…
-
- 0 replies
- 157 views
-
-
ஆகக் குறைந்த சித்தியுடன் மருத்துவத்துறைக்குள் நுழைய அமைச்சரவை அங்கீகாரம் மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த தரத்தை, வைத்திய கட்டளைகள் சட்டத்தின் கீழ் அமைகின்ற ஒழுங்கு விதிகளாக கொண்டுவருவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. மருத்துவக் கற்கைகளுக்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. இத்தரத்தை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்து சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் ஆகிய தரப்புகளுக்கு இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த கற்கை நெறிகளுக்காக பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ளப்படுகின்ற மாணவர்கள் இந்நாட்டின் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் மற்றும் பௌ…
-
- 4 replies
- 990 views
-
-
முன்னேற்றகரமான அரசியல் நகர்வு!! இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற்றதைத் தொடர்ந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசியங்கள் மேலும் கூர்மையடைந்தன. மூன்றும் தனித் தனி இனங்களாக அடையாளப்படுத்தப்பட்டு அதன் அடிப்படையிலான தேசிய எழுச்சி வீரியம் பெற்றது. இதன் பக்க விளைவாக அந்தந்த தேசிய இனங்களுக்கானவையாக மட்டுமேயான கட்சிகள் தோற்றம் பெற்றன. அந்தக் கட்சிகள் தாம் சார்ந்த இனத்தின் வாக்குகளை இலகுவாகக் கவர்வதற்காக இனவாதத்தைக் கையில் எடுத்தன என்பது வ…
-
- 0 replies
- 300 views
-
-
யாழ்.கொழும்பு சேவையில் ஈடுபடும் இராணுவத்தினரின் பேருந்தில் போதை பொருள் கடத்தப்படுகின்றது (வீடியோ இணைப்பு) யாழ்.கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரின் பேருந்துக்களில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ஜக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துக்கள் மீது கடந்த இரு வாரங்களாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கையால் பயணிகள…
-
- 0 replies
- 518 views
-
-
ரயில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது ! நாடளாவிய ரீதியில் ரயில் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், வேலைநிறுத்தம் குறித்து ஆராயவென அமர்த்தப்பட்டிருக்கும் அமைச்சர் குழுவினரோடு ரயில்வே ஊழியர்கள் இன்று முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் சமரச முயற்சி எட்டப்பட்ட நிலையில் குறித்த போராட்டத்தை கைவிடுவதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வேயின் பதின்மூன்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து 7 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று குறித்த போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 314 views
-
-
எமது பிரதேசத்தில் தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளோம் என கருணா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தேர்தல் திணைக்களத்தில் செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், கூட்டமைப்பால் ஏமாற்றப்பட்ட மக்களுக்காகவும், முஸ்லிம் அரசியல்வாதிகளால் ஏற்படும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்ற மக்களின் விடிவுக்காகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தமிழ் மக்களின் எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு சிறந்த அரசில் தலைமைத்துவத்தை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்…
-
- 5 replies
- 754 views
-
-
யாழில் நீண்டநாட்கள் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் மடக்கிபிடிப்பு! யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் வழிப்பறி கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸாா் தெரிவித்துள்ளனா். குறித்த கைதுநடவடிக்கை நேற்றுமுன்தினம்(11) இடம்பெற்றதாக மானிப்பாய் பொலிஸாா் தெரிவித்தனா்.சங்கானை பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரின் 1 ½ பவுண் சங்கலியினை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்தெடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதன் போது, அவ்விடத்தில் உள்ள கடை ஒன்றில் மென்பானம் அருந்திக்கொண்டிருந்த இரகசிய பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற பொலிஸார், வழிப்பறியில் …
-
- 4 replies
- 579 views
- 1 follower
-