ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
உள்ளூராட்சி தேர்தல் விவகாரம் : வர்த்தமானிக்கு இடைக்கால தடை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு;அமைச்சருக்கும் அழைப்பாணை (எம்.எப்.எம்.பஸீர்) உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை, அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் நிர்ணயம் செய்து, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட 2006/44 எனும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி வாக்காளர்கள் ஆறுபேரினால் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் இலக்கம் 373/2017 எ…
-
- 0 replies
- 342 views
-
-
வெள்ளை வானில் இளைஞரை ஏற்றிச் சென்ற பொலிஸ்! – யாழ்.நகரில் சம்பவம்!! யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் கட்டாயப்படுத்தி இழுத்து வெள்ளை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. யாழ்ப்பாணம், இராமநாதன்வீதி, கலட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகரில் உள்ள புடைவை விற்பனை நிலையத்தில் இந்த இளைஞர் பணியாற்றுகின்றார். வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் இளைஞரை வானில் ஏறுமாறு கூறியுள்ளனர். இளைஞர் மறுத்துள்ளார். பொலிஸார் இளைஞரைப் பிடித்து இழுந…
-
- 8 replies
- 698 views
-
-
"பிரபாகரனின் பாதையில் பயணிக்கும் வடமாகாணசபை" (ஆர்.யசி) பிரபாகரனின் பாதையில் பயணித்து மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவே வடக்கின் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். கலவரத்தின் மூலமாக தமிழர்களை அழிக்கும் முயற்சிகளை கைவிடவேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சியினர் தெரிவித்தனர். வடமாகாண கல்வி அமைச்சரின் செயற்பாட்டில் விக்கினேஸ்வரன் மௌனம் காக்கக்கூடாது எனவும் அக்கட்சியினர் குறிப்பிட்டனர். அண்மையில் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக கூறி தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் ஜாதிக ஹெல உறுமைய இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் …
-
- 1 reply
- 344 views
-
-
சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட 50 தமிழர்கள் தொடர்பான நேர்காணல் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருந்தது. இவர்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் முட்கம்பிகளால் தாக்கப்பட்டமை உட்பட பல்வேறு மீறல்களால் உடல் மற்றும் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவ அறிக்கைகள் மற்றும் உளவியல் வல்லுனர்களின் மதிப்பீடுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வில் சிறிலங்கா கலந்து கொண்ட வேளையில், அசோசியேட்டட் …
-
- 0 replies
- 316 views
-
-
மீண்டும் எழுச்சி பெறும் மாவீரர்கள் தினம் 2005 ஆம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாணத்திலும் 2009ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு கிழக்கு முழுவதிலும் நேற்று முதல் மீண்டும் மாவீரர் வாரம் பகிரங்கமாக ஆரம்பமாகியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஆங்காங்கே இரகசியமாக நடந்து வந்த இத்தகைய நிகழ்வுகள், போர்க் காலத்தில் நடந்ததைப் போலவே துயிலும் இல்லங்களில் நிகழ்வுகளை நடத்துவது வரை முன்னேறியிருக்கின்றது. போர்க் காலங்களில் மாவீரர் வாரமும் மாவீரர் தினமும் பெரும் எழுச்சியுடன் நடைபெறும். துயிலும் இல்லங்கள் இந்தக் காலப்பகுதியில் உ…
-
- 1 reply
- 370 views
-
-
வடக்கில் மணல் பிரச்சினைக்கு நடவடிக்கை இல்லை வடக்கில் கனியவளத் திணைக்களம் அமைத்தல் மற்றும் மணல் தட்டுப்பாட்டுக்கான முடிவை எட்டுவது தொடர்பில் மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவெடுப்பது என முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுத்த நிலையில் இன்று வரை எந்த முன்னேற்றமும் கிடையாது என கட்டுமானத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் உள்ள தடங்கல் தொடர்பில் ஆராயும் சிறப்புக் கூட்டம் கடந்த யூலை 31ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன் மற்…
-
- 1 reply
- 306 views
-
-
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக இம்மானுவேல் பெர்னாண்டோ நியமனம் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக கடமையாற்றிய கலாநிதி பீடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக திருத்தந்தை அறிவித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்தார். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைத்து இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இந்த அறிவிப்பை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை வெளியிட்டார். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் மத்தியில் குறித்த விசேட அறிவித்தல் வழங்கப்பட்டு…
-
- 1 reply
- 251 views
-
-
இரண்டு பிள்ளையார் சிலைகள் உடைப்பு : மூன்று பிள்ளையார் சிலைகள் திருடல் : மன்னாரில் சம்பவம் மன்னாரில் பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டுள்ளதோடு, பிள்ளையார் சிலைகள் மற்றும் தேவாலயத்தின் உண்டியல் என்பன உடைக்கப்பட்ட சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை நான்காவது தடவையாக இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிள்ளையார் சிலை மூன்றாவது தடவையாக கடந்த மாதம் 17ஆம் திகதி அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்ட நிலையில் உடனடியாக க…
-
- 11 replies
- 782 views
-
-
வடக்கு முதலமைச்சர் குறித்து தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் கூட்டமைப்பில் செயற்பட வேண்டுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.அவர் தொடர்ந்தும் கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். தமது கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதிலும் ஈடுபட்டுள்ளார். தனது தேர்தல் அறிக்கையில் இருந்து கூட்டமைப்பு பிளவுபடாது இருந்திருக்குமேயானால், அதில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்காது எனவும், ஒற்றையாட்சி நிலைப் பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டமை, மிகப்பெரிய தவறு எனவு…
-
- 2 replies
- 366 views
-
-
வடமாகாண ஆளுநர் மீதான கட்டளையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு மனு! வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரிதாஸன் ஜேகூ வெளிநாடு சென்று கல்வியைத் தொடர மாகாண ஆளுநர் விடுப்பை வழங்கி அனுமதிக்கவேண்டுமென யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய உறுதிகேள் எழுத்தாணை மீதான கட்டளையை ஆட்சேபித்து சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீடு செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு ஊடாக இந்தக் கட்டளை மீது ஜனவரி 3ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவைப் பெறவும் சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூஇ புலமைப் பரிசில்பெற்று ஆஸ்திரேலியாவுக்கு மேற்கல்வி …
-
- 0 replies
- 229 views
-
-
சுரேஸ் பிரேமசந்திரனின் பிரிந்து செல்லும் நிலைப்பாடு குறித்த கருத்துக்கு பதிலளிக்க தயாரில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ள கருத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆனால், தமிழ் மக்கள் ஒற்றுமைக்காக, கட்சிகளுக்கு அப்பால், எமது மக்களின்; கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது மிக முக்கியமானது. இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் இன்று (22) மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய…
-
- 0 replies
- 293 views
-
-
தமிழர் தரப்புக்களது ஒற்றுமை சிதறடிக்கப்படுவது நியாயமா? நாட்டின் பொது நிர்வாகத் துறையானபோதிலும் சரி, இல்லையேல் கலை, கலாசார விடயங்களுடன் தொடர்புபட்ட துறையான போதிலும் சரி, இன்றைய காலகட்டத்தில், அதிலும் மிக அண்மைக்காலமாக நாட்டு மக்களது வாழ்வியலில் அரசியல் தலையீடு, அரசியல் கலப்பு தவிர்க்க முடியாததொரு அம்சமாக ஆகிவிட்டுள்ளது. அபிவிருத்தி அடைந்த மேலைநாடுகள் பலவற்றிலும் அரசியல் ஒரு தனித்துறையாகச் செயற்பட்டு அரசியல் நாகரிகத்துடனான, கனவான்தனத்துடன் கூடிய, ஒரு பொருத்தமான, தேவையான முடிவுகளை மேற்…
-
- 0 replies
- 309 views
-
-
நிகழ்வுக்கு தன்னை அழைக்காததால் அதிகாரிகளிடம் சினந்த விவசாய அமைச்சர் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தை நீர்ப்பாச னத்துக்காக திறக்கும்போது தன்னை அழைக்கவில்லையெனத் தெரிவித்து அதிகாரிகளைக் கடிந்து கொண்டார் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன். இது பற்றி மேலும் தெரியவருவதாவது: கிளிநொச்சி மாவட்ட இரணைமடுக் குளத்தில் கடந்த இரண்டு வருட காலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த பெரும் சீரமைப்பின் பின்னர் பாசனத்துக்காக நேற்று முன்தினம் முதன் முதலாக நீர் திறந்துவிடப்பட்டது. அது ஒரு நிகழ்வாக கனகாம்பிகை அம்மன் ஆலயத்திலும் அதனைத் தொடர்ந்து வட்டக்கச்சி ஒற்றைக்கைப் …
-
- 0 replies
- 234 views
-
-
சவால் விடுத்த சுமந்திரனுக்கு பதிலடி: பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு Report us Thamilin Tholan 5 hours ago தமிழ் தேசியம் பேசுவோருக்கு சவால் விடுப்பதாக கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே சட்ட ஆலோசகர் சுகாஸ், சுமந்திரனுக்கு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் சௌத்தரநாயகத்தின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட சுமந்திரன் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில், …
-
- 0 replies
- 378 views
-
-
உலகத் தமிழர் பேரவைக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு தமிழர்களின் குரலாக ஒலிக்கவேண்டிய உலகத்தமிழர் பேரவையானது, அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று, தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டத்தில், நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலிலேயே, இந்தக் குற்றச்சாட்டுக்கள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 230 views
-
-
சிவில் உடையில் நின்ற பொலிஸாரை பிடிக்க சீருடையில் சென்ற பொலிஸ்! பொலிஸாரை பிடிப்பதற்காக பொலிஸாரே வந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. கோவில் ஒன்றில் நீண்டநேரமாக நின்றிருந்த குழுவினர் மேல் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் வாள்வெட்டு குழுவினர் நிற்பதாக எண்ணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அவர்கள் சிவில் உடை தரித்த பொலிஸார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஒன்று நேற்று(21) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.... உரும்பிராய் பகுதியில் உள்ள இந்துக்கோவில் ஒன்றின் முன்றலில்…
-
- 10 replies
- 608 views
-
-
கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல் வாதிகளேபிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர் என ஞானசார தேரர் கூறியுள்ளார். இராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள பொதுபலசேனாவின்அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் பேதே பொதுபலசேனஅமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர்மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் , கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல் வாதிகளேபிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர். பதுர்தீன் முஜிபுர்ரஹ்மான் போன்றவர்கள் அங்கு சென்றுள்ளதாக பிரச்சினைபூதாகரமாகியுள்ளது. ரிஷாத் பதியுதீன் தற்போது அதிகம் துள்ளுகிறார். விரைவில்அவருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் அவர் யார் …
-
- 4 replies
- 704 views
-
-
வடமாகாண புதிய கல்வி அமைச்சர் ரவிகரனா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சரின் அமைச்சு பதவியை பறிப்பதற்காக முழு வீச்சில் மாகாண சபையின் ஆளும் கட்சி குழு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கல்வி அமைச்சராக உள்ள க. சர்வேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் மாகாண சபை தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினராகி தற்போது அமைச்சராகி உள்ளார். அந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தாம் வீட்டு சின்னத்தில் இணைந்து போட்டியிட மாட்டோம் எனவும் பொது கூட்டணி அமைத்து , தமிழ் தேசிய மக்கள் பேரவையின் ஆசீர்வாதத்துட…
-
- 0 replies
- 490 views
-
-
கைமோசக் கொலைக்கு மற்றுமோர் அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் மருமகனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைமோசக்கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மாமனாருக்கு 7ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும், அவரது மகனுக்கு 2ஆண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் சரத்பாபு என்பவரை அவரது மனைவியின் தந்தையும் மற்றும் இரண்டு சகோதரர்களும் இணைந்து கொலை செய்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்டமா அதிபரால் வழ…
-
- 0 replies
- 281 views
-
-
மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க வேண்டும் : 27 ஆம் திகதி எழுச்சி நாள் என்கிறார் சிவாஜிலிங்கம் இலங்கையை இறுதியாக ஆண்ட ஆங்கிலேயர்கள் சுதந்திரத்தை சிங்களவர்களிடம் மாத்திரம் கொடுத்துவிட்டு சென்றமையாலேயே இன்று வரை தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ள வடக்குமாகாண சபை உறுப்பினம் எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாகவும் 27ஆம் திகதியை தேசிய எழுச்சி நாளாகவும் அனுஷ்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்…
-
- 1 reply
- 245 views
-
-
வடக்கு கல்வி அமைச்சரின் நிகழ்வில்- எந்தக் கொடிக்கும் இடமில்லை!! வடக்கு கல்வி அமைச்சரின் நிகழ்வில்- எந்தக் கொடிக்கும் இடமில்லை!! இலங்கைத் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் மறுத்திருந்தமை தெற்கு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்வி அமைச்சர் நேற்றுக் கலந்துகொண்ட நிகழ்வில் எந்தக் கொடியும் ஏற்றப்படவில்லை. நிகழ்வில் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் அந்த இடத்திலேயே இந்த விடயத்தைச் சுட்டிக்காட…
-
- 1 reply
- 335 views
-
-
போதை பொருள் வியாபாரியை கைது செய்ய தவறும் உப பொலிஸ் பரிசோதகருக்கு யாழ்.நீதிமன்று கடும் எச்சரிக்கை யாழில். ஹொரோயின் போதை பொருள் வியாபாரியை கைது செய்ய தவறிய போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகருக்கு யாழ்.நீதிமன்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கொழும்பில் இருந்து வந்திருந்த போதை பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் யாழ்.நகரை அண்டிய பகுதியில் ஹொரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்ற சாட்டில் இளைஞர்கள் இருவரை கைது செய்தனர். கைது செய்யபட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்திய வேளையில், சந்தேக நபர்களான இரு இளைஞர்களும் “எமக்கு போதை பொருள் பாவிக்கும் பழக்கம் உண்டு. நாம…
-
- 2 replies
- 441 views
-
-
கிந்தோட்டை சம்பவம் போன்று பல பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து : இரு மணி நேரத்தில் நாடு இரத்த பூமியாகுமென்கிறார் ஞானசார தமிழர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்திருந் தால் இந்தளவுக்கு முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆபத்துக்களை மக்கள் எதிர்கொண்டிருக்க மாட்டார்கள் . இரண்டு மணித்தியாலத் தில் நாட்டை இரத்த பூமியாக மாற்றும் அளவிற்கு முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன என்று பொதுபலசேனா அறிவித்துள்ளது. முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்புகள் நாட்டில் தீவிரமடைந்துள்ளன. கிந்தோட்டை போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே உடனடியாக ச…
-
- 5 replies
- 513 views
-
-
பிணை முறி விவகாரத்தில் தண்டனை நிச்சயம் அழுத்தம் தொடரும்; சுதந்திரக்கட்சி அறிவிப்பு (ஆர்.யசி) மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில் குற்றவாளிகளை தண்டிக்கும் வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் அழுத்தம் கொடுக் கும். ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் பிணைமுறி ஊழல் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பிணை முறி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீது பூரண நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவ…
-
- 0 replies
- 252 views
-
-
‘சாய்ந்தமருது அபிலாஷைக்கு சம்பந்தன் ஐயா உதவ வேண்டும்’ “சாய்ந்தமருது பிரதேசத்துக்கான உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத்தருவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா முன்வர வேண்டும்” என, சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வை.எம்.ஹனிபா ஹாஜியார் வேண்டுகோள் விடுத்தார். சாய்ந்தமருது, கடற்கரை ஹுதா திடலில், மீனவ சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு (21) இடம்பெற்ற தனி உள்ளூராட்சி மன்றத்துக்கான மக்கள் எழுச்சிக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “மூன்று தசாப்த காலமாக சாய்ந்தமருது மக்கள் கோர…
-
- 1 reply
- 382 views
-