ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
கோத்தாவுக்காக எழுதியவரை அச்சுறுத்திய ஞானசாரதேரர் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையின் ஊடகவியலாளருக்குப் பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. நாரம்மலவில், பௌத்த பிக்கு ஒருவரின் தாயாரின் இறுதிச்சடங்கிற்கு சென்றிருந்த ஞானசார தேரர், அங்கு ஐலன்ட் நாளிதழின் ஊடகவியலாளர் சந்திரபிரேமவுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ‘நீயா சந்திர பிரேம? உன்னை அறைந்து விடுவேன். நீ எழுதிய புத்தகத்தைப் பற்றி எனக்குத் தெரியும்’ என்று ஞானசார தேரர், அந்த ஊடகவியலாளரை எச்சரித்துள்ளார். இ…
-
- 0 replies
- 349 views
-
-
இலங்கையில் பொழியவுள்ள கடும் மழை; வெள்ள எச்சரிக்கையும் விடுப்பு வட மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்குள் பெய்யவுள்ள கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகீழ் பருவ மழை கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகிறது. குறிப்பாக நீரேந்துப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்த் தேக்கங்களும் நிரம்பி வருகின்றன. என்றபோதும், அந்தமான் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இலங்கை நோக்கி நகர்வதால், எதிர்வரும் 26ஆம் திகதி வரை இலங்கையில் கடுமையான மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தாழமுக்க நகர்வினால் வட மாகாணம் மற்றும் மத்த…
-
- 0 replies
- 248 views
-
-
கல்முனை முஸ்லிம்களின் பூர்வீகமே ! கோடிஸ்வரனுக்கு பதிலடி! கல்முனை நகரம் தமிழர்களின் பாரம்பரிய நகரம் என்றும், அதை முஸ்லீம்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்றும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளால் பரப்பப்பட்டு வருவது இனங்களுக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு இழி செலாகும். அவர்களின் வரலாற்றுப் பின்னணி தெரியாத இக்கூற்றை பொய்யென நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளன.கல்முனை முதலாம் வட்டாரத்தில் வாடி வீட்டுத் தெருவில் ‘பிசர்’ என்னும் பெயருடைய ஒரு ஆங்கிலேயன் அரசாங்கத்திடமிருந்த 38 ஏக்கர் காணியை வாங்கி அதில் தெங்குப் பயிர் செய்கையை 50 ஆண்டுகளாகச் செய்த பின் அவனிடம் மனேஜர் வேலை பார்த்து வந்த இராஜநாயகம் என்னும் தமிழருக்கு அதனை நன்கொடையாகக் கொடுத்து…
-
- 26 replies
- 2.4k views
-
-
கட்சியை ஒன்றிணைப்பதற்கு சகல தரப்புடனும் பேச்சு சு.க. மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு; பிணைமுறி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்கிறார் ஜனாதிபதி (ஆர்.யசி) பிளவுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை மீண்டும் ஒன்றிணைக்க ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி தீவிர முயற்சி எடுப்பதெனவும் சகல தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதெனவும் நேற்றைய மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விடயத்தில் உரிய குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியக…
-
- 0 replies
- 269 views
-
-
சிறுதேர்தலை நடத்த ஏன் தயங்குகின்றீர்கள் : சபையில் மஹிந்த கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இர ண்டரை வருடங்கள் கடந்தும் தாமதமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிறு தேர்தலை நடத்துவதற்கு ஏன் தயங்குகின்றீர்கள் என்று மஹிந்த ராஜபக் ஷ கேள்வி எழுப்பியதையடுத்து சபையில் ஆளும் எதிர்தரப்பினரிடையே சர்ச்சையேற்றபட்டது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் கமத்தொழில், மகாவலி அபிவித்தி மற்றும் சுற்றாடல், நீர்ப்பாசன மற்றும் நீர் வளமுல முகாமைத்துவம், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நில…
-
- 0 replies
- 198 views
-
-
உள்ளூராட்சி தேர்தல் விவகாரம் : வர்த்தமானிக்கு இடைக்கால தடை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு;அமைச்சருக்கும் அழைப்பாணை (எம்.எப்.எம்.பஸீர்) உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை, அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் நிர்ணயம் செய்து, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் வெளியிடப்பட்ட 2006/44 எனும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி வாக்காளர்கள் ஆறுபேரினால் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் இலக்கம் 373/2017 எ…
-
- 0 replies
- 343 views
-
-
வெள்ளை வானில் இளைஞரை ஏற்றிச் சென்ற பொலிஸ்! – யாழ்.நகரில் சம்பவம்!! யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இளைஞர் ஒருவரை பொலிஸார் கட்டாயப்படுத்தி இழுத்து வெள்ளை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. யாழ்ப்பாணம், இராமநாதன்வீதி, கலட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கூட்டிச் செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகரில் உள்ள புடைவை விற்பனை நிலையத்தில் இந்த இளைஞர் பணியாற்றுகின்றார். வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருந்தபோது வெள்ளை வானில் வந்த கோப்பாய் பொலிஸார் இளைஞரை வானில் ஏறுமாறு கூறியுள்ளனர். இளைஞர் மறுத்துள்ளார். பொலிஸார் இளைஞரைப் பிடித்து இழுந…
-
- 8 replies
- 699 views
-
-
"பிரபாகரனின் பாதையில் பயணிக்கும் வடமாகாணசபை" (ஆர்.யசி) பிரபாகரனின் பாதையில் பயணித்து மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தவே வடக்கின் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். கலவரத்தின் மூலமாக தமிழர்களை அழிக்கும் முயற்சிகளை கைவிடவேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கட்சியினர் தெரிவித்தனர். வடமாகாண கல்வி அமைச்சரின் செயற்பாட்டில் விக்கினேஸ்வரன் மௌனம் காக்கக்கூடாது எனவும் அக்கட்சியினர் குறிப்பிட்டனர். அண்மையில் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக கூறி தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் ஜாதிக ஹெல உறுமைய இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் …
-
- 1 reply
- 345 views
-
-
சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்பட்ட 50 தமிழர்கள் தொடர்பான நேர்காணல் அறிக்கை ஒன்றை கடந்த வாரம் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருந்தது. இவர்கள் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை, பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் முட்கம்பிகளால் தாக்கப்பட்டமை உட்பட பல்வேறு மீறல்களால் உடல் மற்றும் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவ அறிக்கைகள் மற்றும் உளவியல் வல்லுனர்களின் மதிப்பீடுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வில் சிறிலங்கா கலந்து கொண்ட வேளையில், அசோசியேட்டட் …
-
- 0 replies
- 316 views
-
-
மீண்டும் எழுச்சி பெறும் மாவீரர்கள் தினம் 2005 ஆம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாணத்திலும் 2009ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு கிழக்கு முழுவதிலும் நேற்று முதல் மீண்டும் மாவீரர் வாரம் பகிரங்கமாக ஆரம்பமாகியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஆங்காங்கே இரகசியமாக நடந்து வந்த இத்தகைய நிகழ்வுகள், போர்க் காலத்தில் நடந்ததைப் போலவே துயிலும் இல்லங்களில் நிகழ்வுகளை நடத்துவது வரை முன்னேறியிருக்கின்றது. போர்க் காலங்களில் மாவீரர் வாரமும் மாவீரர் தினமும் பெரும் எழுச்சியுடன் நடைபெறும். துயிலும் இல்லங்கள் இந்தக் காலப்பகுதியில் உ…
-
- 1 reply
- 370 views
-
-
வடக்கில் மணல் பிரச்சினைக்கு நடவடிக்கை இல்லை வடக்கில் கனியவளத் திணைக்களம் அமைத்தல் மற்றும் மணல் தட்டுப்பாட்டுக்கான முடிவை எட்டுவது தொடர்பில் மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவெடுப்பது என முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுத்த நிலையில் இன்று வரை எந்த முன்னேற்றமும் கிடையாது என கட்டுமானத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் உள்ள தடங்கல் தொடர்பில் ஆராயும் சிறப்புக் கூட்டம் கடந்த யூலை 31ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரன் மற்…
-
- 1 reply
- 306 views
-
-
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக இம்மானுவேல் பெர்னாண்டோ நியமனம் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக கடமையாற்றிய கலாநிதி பீடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக திருத்தந்தை அறிவித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்தார். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைத்து இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் இந்த அறிவிப்பை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை வெளியிட்டார். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் மத்தியில் குறித்த விசேட அறிவித்தல் வழங்கப்பட்டு…
-
- 1 reply
- 252 views
-
-
இரண்டு பிள்ளையார் சிலைகள் உடைப்பு : மூன்று பிள்ளையார் சிலைகள் திருடல் : மன்னாரில் சம்பவம் மன்னாரில் பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டுள்ளதோடு, பிள்ளையார் சிலைகள் மற்றும் தேவாலயத்தின் உண்டியல் என்பன உடைக்கப்பட்ட சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை நான்காவது தடவையாக இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிள்ளையார் சிலை மூன்றாவது தடவையாக கடந்த மாதம் 17ஆம் திகதி அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்ட நிலையில் உடனடியாக க…
-
- 11 replies
- 783 views
-
-
வடக்கு முதலமைச்சர் குறித்து தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ந்தும் கூட்டமைப்பில் செயற்பட வேண்டுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.அவர் தொடர்ந்தும் கூட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். தமது கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதிலும் ஈடுபட்டுள்ளார். தனது தேர்தல் அறிக்கையில் இருந்து கூட்டமைப்பு பிளவுபடாது இருந்திருக்குமேயானால், அதில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்காது எனவும், ஒற்றையாட்சி நிலைப் பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டமை, மிகப்பெரிய தவறு எனவு…
-
- 2 replies
- 366 views
-
-
வடமாகாண ஆளுநர் மீதான கட்டளையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு மனு! வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரிதாஸன் ஜேகூ வெளிநாடு சென்று கல்வியைத் தொடர மாகாண ஆளுநர் விடுப்பை வழங்கி அனுமதிக்கவேண்டுமென யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய உறுதிகேள் எழுத்தாணை மீதான கட்டளையை ஆட்சேபித்து சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீடு செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு ஊடாக இந்தக் கட்டளை மீது ஜனவரி 3ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவைப் பெறவும் சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூஇ புலமைப் பரிசில்பெற்று ஆஸ்திரேலியாவுக்கு மேற்கல்வி …
-
- 0 replies
- 229 views
-
-
சுரேஸ் பிரேமசந்திரனின் பிரிந்து செல்லும் நிலைப்பாடு குறித்த கருத்துக்கு பதிலளிக்க தயாரில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ள கருத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆனால், தமிழ் மக்கள் ஒற்றுமைக்காக, கட்சிகளுக்கு அப்பால், எமது மக்களின்; கொள்கைக்காகவும், லட்சியத்திற்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும், மக்களின் விடுதலைக்காகவும், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது மிக முக்கியமானது. இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் இன்று (22) மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தமிழ் தேசிய…
-
- 0 replies
- 293 views
-
-
தமிழர் தரப்புக்களது ஒற்றுமை சிதறடிக்கப்படுவது நியாயமா? நாட்டின் பொது நிர்வாகத் துறையானபோதிலும் சரி, இல்லையேல் கலை, கலாசார விடயங்களுடன் தொடர்புபட்ட துறையான போதிலும் சரி, இன்றைய காலகட்டத்தில், அதிலும் மிக அண்மைக்காலமாக நாட்டு மக்களது வாழ்வியலில் அரசியல் தலையீடு, அரசியல் கலப்பு தவிர்க்க முடியாததொரு அம்சமாக ஆகிவிட்டுள்ளது. அபிவிருத்தி அடைந்த மேலைநாடுகள் பலவற்றிலும் அரசியல் ஒரு தனித்துறையாகச் செயற்பட்டு அரசியல் நாகரிகத்துடனான, கனவான்தனத்துடன் கூடிய, ஒரு பொருத்தமான, தேவையான முடிவுகளை மேற்…
-
- 0 replies
- 309 views
-
-
நிகழ்வுக்கு தன்னை அழைக்காததால் அதிகாரிகளிடம் சினந்த விவசாய அமைச்சர் கிளிநொச்சி இரணைமடுக் குளத்தை நீர்ப்பாச னத்துக்காக திறக்கும்போது தன்னை அழைக்கவில்லையெனத் தெரிவித்து அதிகாரிகளைக் கடிந்து கொண்டார் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன். இது பற்றி மேலும் தெரியவருவதாவது: கிளிநொச்சி மாவட்ட இரணைமடுக் குளத்தில் கடந்த இரண்டு வருட காலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த பெரும் சீரமைப்பின் பின்னர் பாசனத்துக்காக நேற்று முன்தினம் முதன் முதலாக நீர் திறந்துவிடப்பட்டது. அது ஒரு நிகழ்வாக கனகாம்பிகை அம்மன் ஆலயத்திலும் அதனைத் தொடர்ந்து வட்டக்கச்சி ஒற்றைக்கைப் …
-
- 0 replies
- 234 views
-
-
சவால் விடுத்த சுமந்திரனுக்கு பதிலடி: பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு Report us Thamilin Tholan 5 hours ago தமிழ் தேசியம் பேசுவோருக்கு சவால் விடுப்பதாக கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் பகிரங்க விவாதத்திற்கு அழைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே சட்ட ஆலோசகர் சுகாஸ், சுமந்திரனுக்கு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி நிமலன் சௌத்தரநாயகத்தின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட சுமந்திரன் பல கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில், …
-
- 0 replies
- 378 views
-
-
உலகத் தமிழர் பேரவைக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு தமிழர்களின் குரலாக ஒலிக்கவேண்டிய உலகத்தமிழர் பேரவையானது, அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று, தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியத் தமிழர் பேரவையின் பொதுக்கூட்டத்தில், நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலிலேயே, இந்தக் குற்றச்சாட்டுக்கள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 230 views
-
-
சிவில் உடையில் நின்ற பொலிஸாரை பிடிக்க சீருடையில் சென்ற பொலிஸ்! பொலிஸாரை பிடிப்பதற்காக பொலிஸாரே வந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. கோவில் ஒன்றில் நீண்டநேரமாக நின்றிருந்த குழுவினர் மேல் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் வாள்வெட்டு குழுவினர் நிற்பதாக எண்ணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அவர்கள் சிவில் உடை தரித்த பொலிஸார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஒன்று நேற்று(21) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.... உரும்பிராய் பகுதியில் உள்ள இந்துக்கோவில் ஒன்றின் முன்றலில்…
-
- 10 replies
- 609 views
-
-
கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல் வாதிகளேபிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர் என ஞானசார தேரர் கூறியுள்ளார். இராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள பொதுபலசேனாவின்அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் பேதே பொதுபலசேனஅமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர்மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் , கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல் வாதிகளேபிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர். பதுர்தீன் முஜிபுர்ரஹ்மான் போன்றவர்கள் அங்கு சென்றுள்ளதாக பிரச்சினைபூதாகரமாகியுள்ளது. ரிஷாத் பதியுதீன் தற்போது அதிகம் துள்ளுகிறார். விரைவில்அவருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் அவர் யார் …
-
- 4 replies
- 705 views
-
-
வடமாகாண புதிய கல்வி அமைச்சர் ரவிகரனா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சரின் அமைச்சு பதவியை பறிப்பதற்காக முழு வீச்சில் மாகாண சபையின் ஆளும் கட்சி குழு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கல்வி அமைச்சராக உள்ள க. சர்வேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் மாகாண சபை தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாண சபை உறுப்பினராகி தற்போது அமைச்சராகி உள்ளார். அந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தாம் வீட்டு சின்னத்தில் இணைந்து போட்டியிட மாட்டோம் எனவும் பொது கூட்டணி அமைத்து , தமிழ் தேசிய மக்கள் பேரவையின் ஆசீர்வாதத்துட…
-
- 0 replies
- 491 views
-
-
கைமோசக் கொலைக்கு மற்றுமோர் அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் மருமகனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைமோசக்கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மாமனாருக்கு 7ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும், அவரது மகனுக்கு 2ஆண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் சரத்பாபு என்பவரை அவரது மனைவியின் தந்தையும் மற்றும் இரண்டு சகோதரர்களும் இணைந்து கொலை செய்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்டமா அதிபரால் வழ…
-
- 0 replies
- 282 views
-
-
மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க வேண்டும் : 27 ஆம் திகதி எழுச்சி நாள் என்கிறார் சிவாஜிலிங்கம் இலங்கையை இறுதியாக ஆண்ட ஆங்கிலேயர்கள் சுதந்திரத்தை சிங்களவர்களிடம் மாத்திரம் கொடுத்துவிட்டு சென்றமையாலேயே இன்று வரை தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ள வடக்குமாகாண சபை உறுப்பினம் எம்.கே.சிவாஜிலிங்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாகவும் 27ஆம் திகதியை தேசிய எழுச்சி நாளாகவும் அனுஷ்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்…
-
- 1 reply
- 246 views
-