Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/315130

  2. 05 Feb, 2025 | 12:52 PM நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உத்தரவாத விலையை அரசாங்கம் இன்று புதன்கிழமை (05) அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை, நெல் கொள்முதல் செய்யும் விலைகளை அறிவிப்பதற்காக இன்று (05) விசேட ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். அரிசி சந்தையின் போக்கு மற்றும் விவசாயிகளின் உற்பத்திச் செலவுகளை மதிப்பீடு செய்த பின்னரே விலைகள் தீர்மானிக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். நாட்டு நெல் ஒரு கிலோவுக்கு 120 ரூபாய்க்கும். ச…

  3. 05 Feb, 2025 | 02:43 PM வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக நேற்று செவ்வாய்க்கிழமை (04) இரவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அண்மைய நாட்களாக கால்நடைகள் இரவு நேரங்களில் வீதிகளில் நிற்பதனால் அதிக வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிரதேசசபையினர் பொலிஸாரின் உதவியுடன் ஒட்டுசுட்டான், கற்சிலைமடு, மந்துவில், சிவநகர், கோம்பாவில், கைவேலி ஆகிய பிரதேசங்களில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை நேற்றைய தினம் நடைபெற்றது. குறித்த நடவடிக்கையில் 100க்கும் அதிகமான மாடுகள் புதுக்க…

  4. 05 Feb, 2025 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த சிறப்புரிமை மீறல் பத்திரத்தில் உள்ள விடயங்களைத் தவிர்த்து சபையில் உரையாற்றிய ஏனைய அனைத்து விடயங்களும் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார். சட்டம் அனைவருக்கும் சமமானது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி எவரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது. தயவு செய்து அந்த சட்டத்துக்கமைய நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நோக்கி சபாநாயகர் குறிப்பிட்டார் பாராளுமன்றம் புதன்கிழமை (5) சபாநாயகர்…

  5. கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பாதையினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளமையால் 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு மாணவர்கள் ஒரு கிலோ மீற்றர் பயணம் செய்கின்றமை தொடர்பில் இலங்கை இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது. பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியினை அடிப்படையாக கொண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜ் இன்று (5) இக்கடிதத்தை எழுதியுள்ளார். கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்கள் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தங்களுடைய பாடசாலை மைதானத்துக்கு தினமும் ஒரு கிலோ மீற்றர் தூரம் நடந்த…

  6. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானம்! கடந்த அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் (Online Safety Act) பல புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தினை சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்தச் சட்டத்தின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றில் இதனைத் தெரிவித்தார். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டவிரோதமானது என்று மனுக்கள் சுட்டிக்காட்டுகின்றன. டிரான்ஸ்பரன்…

  7. 05 FEB, 2025 | 11:17 AM ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (4) அலரி மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பு இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தியது. சந்திப்பின்போது இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலின்போது கடந்த காலங்களில், குறிப்பாக இலங்கையின் மறுசீரமைப்பு திட்டத்துக்காகவும் உலக மற்றும் பிராந்திய சவால்களுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்காகவும் ஜப்பானின் ஆதரவுக்காகவும் பிரதமர் நன்றி தெரிவி…

  8. Published By: RAJEEBAN 05 FEB, 2025 | 09:56 AM யுஎஸ்எயிட்டின் நிதி உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். யுஎஸ்எயிட்டின் திட்டங்கள் மூலம் நன்மையடைந்த அரசசார்பற்ற அமைப்புகளின் விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச திட்டங்களில் யுஎஸ்எயிட் அமைப்பின் தலையீடுகள் குறித்து மேற்குலக ஊடகங்கள் எழுப்பியுள்ள கரிசனைகள் குறித்து அவர் சமூக ஊடகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான உதவிகள் என்ற போர்வையில் உலக நாடுகளில் அமைதியின்மையை ஏற்ப…

  9. 04 FEB, 2025 | 09:11 PM (செ.சுபதர்ஷனி) கடந்த வருடம் அரச வைத்தியசாலைகளுக்கு அவசியமான இன்சுலின் உள்ளிட்ட நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து கொள்வனவுக்காக மாத்திரம் சுமார் 7300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்துக் கொள்வனவுக்காக செலவிடப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் திங்கட்கிழமை (03) , புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வைத்திய பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்…

  10. Published By: DIGITAL DESK 2 04 FEB, 2025 | 03:11 PM (இராஜதுரை ஹஷான்) அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட தரப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக கூட்டணியமைக்க முயற்சிக்கிறார்கள். மக்களாணையை மலினப்படுத்த போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வரவு செலவுத் திட்டத்தை தொடர…

  11. லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம் Published By: Rajeeban 05 Feb, 2025 | 11:47 AM சண்டேலீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் சட்டமாஅதிபர் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. சட்டமா அதிபர் பதவி விலகவேண்டும்,லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்வதன் பின்னால் உள்ள …

  12. இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி நியமனம்! இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், இராணுவத் தளபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 45 ஆவது பிரதி பதவிநிலை பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, கஜபா படைப்பிரிவில் இணைந்து பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரி ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு இராணுவத்தில் ஒரு கெடட் அதிகாரியாக இணைந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/இலங்கை_இராணுவத்தின்_புதிய_தலைமைத்_தளபதி_நியமனம்!

  13. யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்! மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமானது 60 குருதிக் கொடையாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் சீ.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியினரால் குருதி சேகரிப்பு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் , விசேட அதிரடிப் படையினர், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு 60 பேர் குருதிக்கொடை வழங்கினார்கள். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெய…

  14. 04 FEB, 2025 | 06:26 PM (நமது நிருபர்கள்) இலங்கையில் 77ஆவது சுதந்திர தினம் வடக்கு, கிழக்கில் கரிநாளாக பிரகடனம் செய்யப்பட்டு இன்றைய தினம் (4) அனுஷ்டிக்கப்பட்டதோடு பாரிய கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, இனப்படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் முதலி…

  15. Published By: DIGITAL DESK 7 04 FEB, 2025 | 05:26 PM முல்லைத்தீவில் உள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு இன்று (4) சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டும், இலங்கையின் தேசியக் கொடிகள் அப்பகுதி நகர சுற்று வட்டாரத்தில் பறக்கவிடப்பட்டும் சுற்றுவட்ட வீதி அலங்கரிக்கப்பட்டும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. https://www.virakesari.lk/article/205793

  16. Published By: DIGITAL DESK 2 04 FEB, 2025 | 01:16 PM யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 77 ஆவது தேசிய சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்…

  17. Published By: DIGITAL DESK 3 04 FEB, 2025 | 12:53 PM இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை இணைத்து வாகன பேரணி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. இப்பேரணியானது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்தகர மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்ச ஆகியோர் கலந்து கொண்டதுடன், மாவட்ட செயலாளரால் குறித்த பேரணியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் இப்பேரணியானது பஜார் வீதியின் ஊடாக வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்…

  18. கிளிநொச்சியில் இடம் பெற்ற சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம்! கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சிச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் …

  19. முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகளை வழங்குவதற்காக வரும் தரப்பினரின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி, ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அத்தகைய அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும் முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொலிஸ் நிலையங்களுக்கு வரும் தரப்பினரின் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனவும் முறைப்பாடுகள் நிராகரிக்கப்படுவதாகவும் எழுத்து மூலமும் வாய்மொழி மூலமும்…

  20. மன்னார்: கனிய மணலை அகழும் முயற்சில் சர்வதேச நிறுவனங்கள்! February 4, 2025 இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் முயற்சில் சர்வதேச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹேமந்த விதானகே, முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ”இந்த நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள், தற்போது பணியில் இல்லாத இராணுவ அதிகாரிகள் உட்பட, ஓரளவு அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடியவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பணத்திற்காக பாதாள உலகத்தினருக்காக கொலைகளை செய்பவர்கள் இராணுவத்தில் இருப்பதாக ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான ஜனாதிபதி அறிவித்து சில…

  21. மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை 04 Feb, 2025 | 12:02 PM இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் தலைமையில் சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த கைதிகள் 16 பேர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/205764

  22. ’’அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும்’’ - கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இலங்கை மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவரும் பரந்த அரசியல், பொருளாதார மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கு கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்தார். 77வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் சிறப்பு வழிபாட்டின் போது பேசிய கர்தினால் ரஞ்சித், புதிய அரசியலமைப்பு, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் ரத்து செய்தல் மற்றும் அதிகாரம் சலுகைகளை அனுபவிப்பதை விட மக்களுக்கு சேவை செய்ய அரச தலைவரை வழிநடத்தும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "தற்போதைய அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் அதிகாரம் மற்றும் சலுகைக…

  23. ஈஸ்டர் தாக்குதல் வழக்கு; கோத்தாபய கைதாவார்- முன்னாள் அமைச்சர் கம்மன்பில ஆருடம் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைதுசெய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சுவிற்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்துவரவும் அரசாங்கம் தீர்ம…

  24. சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேசய மக்கள் சுதந்திர தினமாக கருதுவது கிடையாது. சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர். …

  25. யாழ், மன்னார் மாவட்ட செயலகங்களில் சுதந்திர தின நிகழ்வுகள்! adminFebruary 4, 2025 இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ் மாவட்ட செயலர் அணிவகுப்பு மரியாதைகளை தொடர்ந்து 08.04 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு , தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து , மதகுருமார்களின் ஆசியுரை இடம்பெற்று , மாவட்ட செயலரின் உரை இடம்பெற்றது . மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வு. ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை (4) காலை மன்னார் மாவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.