ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142772 topics in this forum
-
யாழ். பல்கலையில் பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை! adminJanuary 27, 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் தற்போது இயங்குநிலையில் இல்லை என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன், அது தொடர்பில் வெளிவரும் அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை பேணுவது தொடர்பாக பல்கலை நிர்வாகம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பது இயங்கு நிலையில் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஏனென்றால் யாழ்ப்பாண பல்கலைக்கழ…
-
- 0 replies
- 227 views
-
-
27 JAN, 2025 | 10:05 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச வசிப்பதற்கு வீடு இல்லை என்றால் அவருக்கு வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் தயார் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி நானும் அமைச்சர்களும் மாளிகைகளில் வசிக்க ஆரம்பிக்கவில்லை முன்னாள் ஜனாதிபதியால் ஏன் அதனை செய்ய முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார். பொதுமக்களின் வரிப்பணத்தில் மாளிகைகளில் வசிப்பது நியாயமான விடயம் இல்லை, நாங்கள் எவரையும் பழிவாங்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாங்கள் நாட்டை புதியதிசையில் இட்டுச்செல்கின்றோம், வெளியேறுங்கள் என நாங்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு மு…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
26 JAN, 2025 | 07:13 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ரணில் விக்ரமசிங்க நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும்போது நாட்டு மக்களே அவரை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலியில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் காலி தொகுதி அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், …
-
- 1 reply
- 199 views
- 1 follower
-
-
உறவுகளின் போராட்டம் நீத்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்ட சங்கத்தின் நிர்வாக தெரிவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத்தெரிவு நேற்று இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி பதவியில் இருந்து விலகியதன் காரணமாக இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் புதிய நிர்வாகத்தெரிவு முல்லைத்தீவு போராட்ட இடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றிருந்தத…
-
- 1 reply
- 201 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியின்(Itak) உட்சண்டை தற்போது இன்னோர் பரிமாணத்தைப் பெற்றுள்ளது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீதரன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட பயணத்தடை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் இரட்டை ஊடகப் பேச்சாளரில் ஒருவருமான சுமந்திரனை விசாரணை செய்யுமாறு நாடாளுமன்றத்தினை கேட்டிருக்கின்றார். இவரது இந்த உரையுடன் இதுவரை காலமும் நீதிமன்றத்தினை நோக்கி நகர்ந்த கட்சியின் உட்சண்டை தற்போது நாடாளுமன்…
-
- 0 replies
- 136 views
-
-
மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக வடக்கின் சிவில் சமூகங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன. இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காமல் பழிவாங்கியுள்ளது என்ற குற்றச்சாட்டும் இதன்போது முன்வைக்கப்படுகின்றது. மேலும், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்றும் சில கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. …
-
- 1 reply
- 254 views
-
-
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் தெரிவித்தார். இலங்கையின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் இதன்போது வழிகாட்டுதல் வழங்கினார். இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்க தேவையாயின் எந்த நேரத்திலும் அதற்கு உதவி வழங்க அவர் உடன்பாடு தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே தூதுவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப…
-
-
- 2 replies
- 259 views
- 1 follower
-
-
தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தேங்காய் மரங்களை வெட்டுவதற்கு முன்பு தனிநபர்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற புதிய கொள்கையை தெங்கு தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை பணிப்பாளர் சமன் ஹேவகே தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/314877
-
-
- 3 replies
- 374 views
- 1 follower
-
-
26 JAN, 2025 | 02:25 PM “இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் இந்தியா நிரூபித்துள்ளது” என குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே, “நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன. நம் எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் 76ஆவது குடியரசு தின செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. “இலங்கை இந்தியாவின் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது. இந்தியாவும் இலங்கையும் சக ஜனநாயக நாடுகள் மாத்திரமல்ல. நாங்கள் நமது பன்முகத்தன்மை மற்றும் முனைப்புடமை ஆகியவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம். நாங்கள் நாகர…
-
-
- 3 replies
- 161 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியின் அதிரடி முடிவு : அதிர்ச்சியில் பலர் யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற பேரவைக் கூட்டத்தினை தொடர்ந்து கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் தன்னுடைய பதவி விலகியுள்ளார். மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைகளால் யாழ்.பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளை தட்டிக் கேட்டமை, மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சீரிய முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக பேரவை ஒத்துழைப்பு வழங்காமை போன்ற காரணங்களால் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் ரீதியில் அழுத்தங்கள்.. யாழ் பல்கலையில் சம காலத்தில் தமிழ் இனத்துக்கும் எதிர்காலத்துக்கும் நம்பிக்கைத்தரகூடிய ஒரு ஆளுமை பல்கலையின் பேரவையின் முடிவின…
-
- 5 replies
- 607 views
- 1 follower
-
-
இரு ஜனாதிபதி மாளிகைகள் மாத்திரமே அரசாங்க தேவைக்கு பயன்படுத்தப்படும் January 26, 2025 3:02 pm கொழும்பு மற்றும் கண்டியில் காணப்படும் இரு ஜனாதிபதி மாளிகைகளை தவிர்த்து அனைத்து ஜனாதிபதி மாளிகைகளையும் ஏனைய நோக்கங்களுக்காக பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவற்றை ஹோட்டல்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்காக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். அதன்படி, அவற்றின் இருப்பிடம் மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் அவை எந்த நோக்கத்திற்கு ஏற்றவை என்பதை அரசாங்கம் மிக விரைவில் தீர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் அமைச்சரவையின் தீர்மானத்தின்படி, பொது நிர்வாக அமைச்சகம் அறிக்கைகளைக் கோரியுள்ளது. ஹ…
-
- 0 replies
- 134 views
-
-
யாழ். செல்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது யாழ். மாவட்டச் செயலகத்தில் விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அங்கத்தவர்களுடனான சந்திப்பொன்றிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் உள்ளன. இதனை விடவும், தென்மராட்சியில் ஆலய நிகழ்வொன்றில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனினும் இதற்கான உறுதிப்படுத்தல்கள் இன்னமும் செய்யப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந…
-
- 3 replies
- 251 views
-
-
அரசாங்க ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படைச் சம்பள அதிகரிப்பு - ஜனாதிபதி அநுர பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையைப் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக பிரஜைகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் அரச சேவையில் சரியான தரவு கட்டமைப்பொன்…
-
- 0 replies
- 132 views
-
-
சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு January 26, 2025 12:23 pm இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் சந்திப்பொன்று யாழில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலொன்றுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவ்வாறான அழைப்பு எதுவும் இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்கு உரிய முறையில் வரவில்லை எனவும் அவ்வாறு அழைப்பு வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அண்மையயில் தெரிவித்திருந்த…
-
-
- 7 replies
- 460 views
- 1 follower
-
-
ஓமந்தையில் ரயில் தடம்புரள்வு January 26, 2025 06:20 pm யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலின் ஒரு பெட்டி இன்று (26) மாலை 4 மணியளவில் தடம் புரள்வுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், தற்போது ரயிலின் தடம்புரள்வை சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பதிவான முதல் ரயில் தடம் புரள்வு சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=199334
-
- 0 replies
- 161 views
-
-
ஜனாதிபதி நிதியம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி நிதிய அலுவலகத்தின் சேவைகளை நாடளாவிய ரீதியில் உள்ள 361 பிரதேச செயலக அலுவலகங்களிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டு இது தொடர்பில் முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் இத் திட்டத்தை நாடளாவிய ரீதியில…
-
- 2 replies
- 211 views
- 1 follower
-
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாத…
-
-
- 32 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அரசாங்கத்தின் நிறுவனமாக இயக்குவதற்கு நடவடிக்கை! adminJanuary 26, 2025 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். ht…
-
- 0 replies
- 161 views
-
-
யாழில் இந்திய குடியரசு தினம் adminJanuary 26, 2025 இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றியதுடன் நிகழ்வுகளும் இடம்பெற்றன யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை எற்றிவைத்தார். தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2025/210339/
-
- 0 replies
- 201 views
-
-
வடக்கில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைக்கு அடிமை adminJanuary 26, 2025 யாழ் . விசேட நிருபர் – ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு இலக்காகி இருக்கின்றார்கள். எமது இளைய சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது? இது ஆபத்தான நிலைமை. இதனைத் தடுப்பதற்கு இளையோர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடும் தளங்கள் தேவை. அதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நல்லூர் இளங்கலைஞர் மன்றம் புனரமைக்கப்பட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரி…
-
-
- 2 replies
- 369 views
-
-
பலாலியில் உள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்தில் அஞ்சலி! adminJanuary 26, 2025 இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி யாழ் . மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் Y A B M யஹம்பத் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கடந்த 1987ஆம் ஆண்டு முதல் 90ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் அமைதிப்படை எனும் பெயரில் இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தனர். அக்கால பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் போது, உயிரிழந்த இந்திய இராணுவத்தினரின் நினைவிடம் பலாலி இராணுவ தலைமையகம் அமைந்து…
-
-
- 7 replies
- 435 views
-
-
நாட்டை வந்தடையவுள்ள 4,500 மெற்றிக் தொன் உப்பு. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் 12,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், முதலாவது தொகுதி நாட்டை வந்தடையவுள்ளது நாட்டில் நிலவும் உப்பு தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக 2025 ஆண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்ட…
-
- 0 replies
- 195 views
-
-
இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம். தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கை கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது. ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டிற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலகளவில் 100 வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு தற்போது 96 வது இடத்தில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது இலங்கை கடவுச்சீட்டு வலுவடைந்து வருவதாக ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் 102வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு தொடர்ந்து முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு குறிப்பிட்டுள்ளது. இலங்கையர்கள் 44 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். https://a…
-
- 0 replies
- 138 views
-
-
26 JAN, 2025 | 09:50 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையிலான உத்தேச இருதரப்பு அரசியல் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்திற்கான திகதி இன்னும் நிறைவுப்படுத்தப்படாத நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாத்திற்கு முன்னர் இந்த விஜயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது 15 ஒப்பந்தங்கள் வரை நிறைவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் யாவும் இருநாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட…
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 சந்தேகநபர்கள் கைது 25 Jan, 2025 | 05:19 PM கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 10 பேரும், புதையல் தோண்ட பயன்படுத்திய ஸ்கானர் மற்றும் நீர்ப்பம்பி உள்ளிட்ட உபகரணங்களுடன் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மே…
-
- 0 replies
- 177 views
-