ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
தமிழர் தாயக தலைநகரான திருக்கோணமலையை ஆக்கிரமித்து நிற்கும் சொறீலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க ஈரூடகப் படை பயிற்சியாளர்கள் இணைந்து சிறீலங்காவுக்கான ஈரூடகப் படைப்பிரிவை உருவாக்கி வருகின்றனர். ஈழப்போர்களின் காலத்தில் கூட சிறீலங்காவிடம் ஈரூடகப் படையணி இருந்திராத நிலையில்.. போர்க்குற்ற.. மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை சுமக்கும் சிறீலங்காவுக்கு அமெரிக்க ஏகாதபத்தியம்.. ஈரூடக் படையணியை உருவாக்க உதவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சம்பூர் தமிழர் நிலப்பரப்பு சிங்கள ஈரூடகப் படைகளின் தேவைக்காக சிறீலங்கா கடற்படையால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் மட்டும் ஈரூடகப் படையணியை வைத்திருந்ததோடு.. 2006 க்குப் பின்னரான.. யாழ் குடா மீட்புக்கான ஒரு சண்டையில்.…
-
- 2 replies
- 677 views
-
-
"இலங்கைக்கு சகல உதவிகளும் வழங்கப்படும்"; : ஐ.நா செயலாளர் நாயகம் பலமான நல்லிணக்கத்துடன் சுபீட்சமான தேசமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனைத்துவகையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்தார். இலங்கை தேசத்துடன் மிக நெருக்கமாக செயற்பட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த, உலகின் முன்மாதிரி தேசமாக எழுந்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக உதவும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய நாடுகள்…
-
- 0 replies
- 306 views
-
-
இப்படியும் பொலிஸ் அதிகாரியா? : ஆச்சரியப்பட வைத்த நேர்மை பொலிஸ் அதிகாரியின் செயற்பாடு வங்கி நிர்வாகத்தினரை வியக்க வைத்துள்ளது. கோரிக்கைக்கு அதிகமான பணத்தை வங்கி வழங்கிய நிலையில், அந்தத் தொகையை மீண்டும் வங்கியிலேயே பொலிஸ் அதிகாரி ஒப்படைத்துள்ளார். இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்ததாவது: மகனின் கல்விக்காக இடைக்கிடையே பணம் அனுப்பி வைப்பேன். இதற்காக வங்கியின் சிலாபம் கிளைக்குச் சென்று எனது வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மீளப்பெற்றேன். வங்கியில் வழங்கப்பட்ட பணத்தை நான் கணக்கிட்டு பார்க்காமல் மாரவில வங்கிக்குக் கொண்டு சென்று அந்தப் பணத்தில் 5 ஆயிரம் ரூபா மா…
-
- 1 reply
- 421 views
-
-
அமெ. உதவி இராஜாங்கச் செயலர் நவம்பரில் இலங்கைக்கு வருவார் Share அமெரிக்காவின் அரசியல் விவகார உதவி இராஜாங்கச் செயலர் தோமஸ் செனன் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வைச் சந்தித்தபோதே இலங்கைக்கான தனது பயணத்தைப் பற்றித் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் 72ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போதே அமெரிக்காவின் அரசியல் விவகார உதவி இராஜாங்கச் செயலர் தோமஸ் செனனை, …
-
- 0 replies
- 397 views
-
-
கிழக்கு சபையின் இறுதி அமர்வு நாளை எதிர்வரும் 30ஆம் திகதியுடன் ஆயுட்காலம் முடிவடையும் கிழக்கு மாகாணசபையின் இறுதி அமர்வு நாளை திங்கட் கிழமை நடைபெறவுள்ளது. 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் எட்டாம் திகதி கிழக்கு மாகாணத் தேர்தல் நடைபெற்றது. சபை நடவடிக்கைகள் செப்ரெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகியது. 5 ஆண்டு காலப் பதவிக் காலம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இந்தக் காலப் பகுதியில் கிழக்கு மாகாணசபை 85 அமர்வுகளை நடத்தியுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதியின் பின்னர் கிழக்கு மாகாணசபை ஆளுநரின…
-
- 0 replies
- 231 views
-
-
மாந்தை சந்தியில் கோர விபத்து – 19 வயது இளைஞன் உயிரிழப்பு!! Share மன்னார்-யாழ் பிரதான வீதி மாந்தை சந்தியில் நேற்று சனிக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். திருக்கேதீஸ்வரத்தில் இருந்து வந்த 4 இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது,மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொரியுடன் மோதி விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞன் சம்பவ…
-
- 0 replies
- 416 views
-
-
சக்தி டிவி செய்திகள் 23 09 2017 , 8PM
-
- 0 replies
- 379 views
-
-
விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சாத்தான் வேதம் ஓதுவது போன்றது வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சாத்தான் வேதம் ஓதுவது போன்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா விமர்சித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் உட்பட வடமாகாண சபை நிர்வாகம் தமிழ் மக்களின் விடயங்களில் அக்கறையும், ஆற்றலும் அற்றவர்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியா – தேக்கவத்தையில் அமைக்கப்பட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாய…
-
- 0 replies
- 469 views
-
-
ஒற்றுமையை ஏற்படுத்த தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கம் இறுதி சந்தர்ப்பம் வீ.ஆனந்தசங்கரி (செயலாளர், தமிழர் விடுதலைக் கூட்டணி மிக அவதானமாக பரிசீலித்ததன் பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் கவலை தருகின்றது என்றும், அதிலிருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதால் அக்கூட்டமைப்பை உடனடியாக கலைக்கும்படி தமிழர் விடுதலை கூட்டணி வேண்டுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் தமிழர் விடுதலை கூட்டணியினராகிய நாமே என்பதால் அதனை கலைக்குமாறு கேட்பதற்கு எமக்கு சகல உரிமையும் உண்டு. தப்பான வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை ஒரு சிலர் சுயநலம் கருதி பயன்படுத்துவதால் நாம் எடுக்கு…
-
- 0 replies
- 433 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மனோவின் கூட்டணி அதிருப்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கடும் அதிருப்தியில் இருக்கின்றது எனத் தெரியவருகின்றது. தமிழர் சார்ந்த விவகாரங்க ளின்போது தாம் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டு வருகின்றது என்று முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர் நேற்றுத் தெரிவித்தார். ‘நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப் பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டவரைவில் இருந்த சில சரத்துகள் மலையகத் தமிழ்ப் பிரதிநிதித்துவத் துக்கு அச்சுறு…
-
- 0 replies
- 211 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு விஜயம் Published by Kumaran on 2017-09-23 15:11:57 கல்முனையில் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரா.சம்பந்தன் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில் இன்று சனிக்கிழமை (23) வாழைச்சேனைக்கு விஜயம் செய்து, காகித ஆலையைப் பார்வையிட்டார். காகித ஆலையைப் புனரமைப்பது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஆலையின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். தற்போது நட்டத்தில் இயங்கி…
-
- 5 replies
- 460 views
-
-
ஆவா குழுவின் செயற்பாடுகள் முடக்கம் வடமாகாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலில் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாந்து, வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபத்து தென்னக்கோன், கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்த்தன, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னாந்து, முல்லைதீவு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கந்தவத்த, மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிறிவர்த்தன மற்றும் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், அந்தரங்க செயலர் ஜே.எம்.சோமசிறி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது மக்களுக்கு பீதியூட்டும் வகையில் செ…
-
- 1 reply
- 294 views
-
-
புதிய அரசியல் யாப்புக்கான வழிநடத்தில் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளிநாட்டு இராஜதந்திரிகள் வரவேற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இடைக்கால அறிக்கை தொடர்பாக வழிநடத்தல் குழுவின் எம்.ஏ.சுமந்திரன், ஜெயம்பதி விக்கிரமரட்ண ஆகியோர் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், நீண்ட இழுபறிக்குப் பின்னர் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசமைப்பு நிர்ணய சபையான நாடாளுமன்றதில் சிறிலங்காப் பிரத…
-
- 1 reply
- 475 views
-
-
வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்ைக முற்போக்கானது புதிய அரசியலமைப்பொன்றின் உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் பிரதான அறிக்கையை முற்போக்கானதாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பார்க்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கியதேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அவ்வறிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது இணக்கத்தை வழங்குவது குறி…
-
- 2 replies
- 331 views
-
-
வவுனியா, புளியங்குளம் பாடசாலை வகுப்பறையின் அவலத் தோற்றம் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புளியங்குளம் ஆரம்ப பாடசாலையின் இணைப்பாட விதானச் செயற்பாட்டுக்கான கொட்டகை சிதைவடைந்து மாணவர்களால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது. இப் பாடசாலை புளியங்குளம் இந்துக் கல்லூரியில் இருந்து பிரிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தரம் 1 முதல் 5 வரையிலான இப் பாடசாலையில் தற்போது 135 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஒரு கட்டடத்தில் சிறியதாக பிரிக்கப்பட்ட 5 வகுப்பறைக…
-
- 1 reply
- 353 views
-
-
வெளிநாட்டுப் புலிகளுக்கு எதிராக ஜெனிவாவில் நாளை ஆர்ப்பாட்டம் Share இலங்கைக்கு வெளியில் வாழ்கின்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை ஒழிப்போம் என்று வலியுறுத்தி ஜெனிவாவில் நாளை 24ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளத ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அலுவலகத்துக்கு முன்னாலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றும், சிங்களத் தேசியவாத அமைப்புகளின் கோரிக்கையின் பிரகாரமே புலம்பெயர் வாழ் சிங்களவர்களால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒரு…
-
- 0 replies
- 346 views
-
-
மங்களவின் கையெழுத்திடப்பட்ட புதிய 5000 ரூபா தாள் சந்தையில் மங்கள சமரவீர, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பதவி ஏற்றப்பின்னர் முதன் முறையாக கைச்சாத்திட்ட ஐயாயிரம் ரூபா தாள் நேற்று சந்தையில் விடப்பட்டது. குறித்த விநியோக நிகழ்வு நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்றது. http://www.virakesari.lk/article/24800
-
- 2 replies
- 487 views
-
-
வரலாற்றில் முதற்தடவையாக தமிழ்க் கட்சிகள் இணக்கம் வரலாற்றில் முதற்தடவையாக தமிழ்க் கட்சிகள் ஒரே தேசத்தை உருவாக்குவதற்கும் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கும் உடன்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) தெரிவித்தார். தமிழ் கட்சிகள் முதன் முறையாக தமது பாரம்பரிய நிலைப்பாட்டை தளர்த்தியிருப்பதாக கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் மூலம் இந்நாட்டின் பிரச்சினைக…
-
- 1 reply
- 375 views
-
-
ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களுக்கு வரவிருந்த ஆபத்து குறைக்கப்பட்டுள்ளது மாகாணசபைகள் சட்டத்துக்கு கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முறையில் எமது ஒற்றுமைக்கும், கூட்டணிக்கு வெளியே ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு கேட்போர் கூடத்தில் மட்டக்குளிய வட்டார செயற்குழு கூட்டம்…
-
- 0 replies
- 319 views
-
-
குளோபல் தமிழ் போரத்தின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அமெரிக்கத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குளோபல் தமிழ் போராம் அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புலம்பெயர் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக அருட்தந்தை இமானுவெல் இலங்கைக்கு பயணம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும் அருட்தந்தை இமானுவெல் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அருட்தந்தை இமானுவெலை சந்திக்க கிட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்கத் தூதுவர் கேசப் தெரிவித்துள்ளார். மஹிந்த அரசாங்கத்தினால்கு;…
-
- 6 replies
- 801 views
-
-
நல்லூர் கந்தனும் சோனகனாமே !!!!!! இந்தாள் மட்டும் தமிழ் படத்தில் நடித்து இருந்தால் வடிவேல் உண்மையாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் டுபாயில் கக்கூஸ் கழுவி தான் பிழைப்பு நடத்த வேண்டி வந்த்திருக்கும் !!!!!
-
- 14 replies
- 1.7k views
-
-
மதில்மேல் பூனையாக கட்சிகள் காத்திருப்பு Share புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியாகிவிட்டது. 2015 தை மாதத்திலும் பங்குனி மாதத்திலும் அரச தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள், ஆட்சி மாற்றத்துக்கு உட்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டது. அந்தச் சபையால் நியமிக்கப் பட்ட வழிகாட்டல் குழுவில் நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவம் வகிக்கும் அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் இடமளிக்கப்பட்டது. அந்தக் குழு 2016ஆம் ஆண்டுபங்குனி மாதம் …
-
- 0 replies
- 255 views
-
-
சுகாதார அமைச்சர் ராஜித நெடுந்தீவுக்கு வருகிறார் Share நெடுந்தீவு மருத்துவமனையில் காணப்படும் குறைபாடு களைக் கண்டறிவதற்கு யாழ்ப்பாணம் வருமாறு சுகா தார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று விரைவில் இங்கு வருவதாக ரஜித தெரிவித்துள்ளார். நெடுந்தீவு மருத்துவமனையின் குறைபாடுகள் மருத்துவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் ராஜிதவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன் அந்தப் பகுதிக்கு வருமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் நாடாளுமன்றில் வைத்து நேற்று அழைப்பு விடுத்தார். இந்த…
-
- 0 replies
- 263 views
-
-
ஸ்ரீலங்காவில் தொடரும் சித்திரவதை : யாழ். சிறையில் கைதி மீது தாக்குதல் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட கைதியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்கப்பட்ட கைதி புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குற்றச் செயல் ஒன்றிற்காக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கைதி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
-
- 0 replies
- 763 views
-
-
யாழ்ப்பாணம் அல்லது திருகோணமலையில் இந்தியாவின் ஆந்திரமாநிலத்தின் கைத்தொழில் நடைக்கூடம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, ஆந்திர மாநில கைத்தொழில் அமைச்சர் அமர்நாத் ரெட்டி சிறிலங்கா அரசாங்கத்துடன் ஏற்கனவே பேச்சுக்களை நடத்தியுள்ளார். அடுத்த சில வாரங்களில் சிறிலங்கா அரசாங்கத்துடன் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. கடல்வழிப் போக்குவரத்து வசசதிகளைக் கொண்ட சிறிலங்கா, கடலுணவு, மருந்து மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு ஆந்திர மாநிலம் சிறந்த இடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற…
-
- 0 replies
- 319 views
-