ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
பாகிஸ்தானிய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் மேற்படிப்பினை தொடர்வதற்கு புலமை பரிசிலினை வழங்கியுள்ளது. மருத்துவ துறையை சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கும் பல் நிபுணத்துவ துறையையில் ஒரு மாணவனுக்குமான புலமைப் பரிசில்கள் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காஸிம் குரேஸியினால் வழங்கப்பட்டது. வருடா வருடம் பாகிஸ்தானிய அரசாங்கம் க.பொ.த சாதாரண மற்றும் க.பொ.த உயர் தரத்தில் கல்வி கற்கும் நூறு மாணவர்களின் மேற்படிப்பிற்காக மொஹமட் அலி ஜின்னா புலமை பரிசில் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://metronews.lk/article.php?category=news&news=8015#sthash.n0kLKfTu.dpuf
-
- 0 replies
- 374 views
-
-
யாழ்அச்சுவேலியில் இராணுவத்தினர் தேர் இழுத்தனர் – (படங்கள் இணைப்பு) அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழாவின் போது அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் தேர் இழுத்தனர். அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது ஆலயத்திற்கு இராணுவ சீருடையில் வந்த இராணுவத்தினர் தமது மேலங்கியை கழட்டி தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இராணுவத்தினரின் திடீர் செயற்பாட்டை கண்ணுற்ற பக்தர்கள் செய்வதறியாது இருந்தனர். http://globaltamilnews.net/2018/89487/
-
- 7 replies
- 859 views
-
-
Published By: DIGITAL DESK 5 10 APR, 2023 | 12:09 PM கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மே 29 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/152554
-
- 4 replies
- 711 views
- 1 follower
-
-
வவுனியாவில் பொலிஸார் மீது கிளேமோர்த் தாக்குதல் - பண்டார வன்னியன் Saturday, 17 February 2007 10:45 வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் வீதிச்சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா பொலிஸார் மீது இன்று காலை 9:45 மணியளவில் கிளேமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது ஏற்பட்ட சேத விபரம் பற்றித் தெரியவரவில்லை. http://sankathi.org/news
-
- 0 replies
- 799 views
-
-
வவுனியா நிருபர் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, 2011 ஐக்கியனாடுகள் அறிக்கையினை வைத்து சிறிலங்கா தலைவர்களை கைது செய்ய முடியும் என இலங்கையின் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணி விஜெதாஸ பிபிசி இற்கு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையானது அதனை தயாரித்தவர்கள் அதிகாரங்கள் இல்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அறிக்கை மிகவும் சக்திவாய்ந்த தொன்றாக இருக்கின்றது. இந்த அறிக்கையினை வைத்து வெளினாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், உள்ளூர் நீதிமன்றங்களின் உதவியுடன் பிடியாணை பிறப்பிக்க முடியும். அவ்வாறு பிடியாணை பிறப்பித்தால் இலங்கையின் அரசியல் தலைவர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் என்போர் வெளினாடுகளுக்கு செல்லும் வேளை கைது செய்யப்படலாம். அதற்கான சக்தியினை நிபுணர் குழு அறிக்கை கொண்ட…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐனாதிபதி தேர்தலின் பின் அமையும் அரசு தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை நிச்சயமாக வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களை நேற்று கொழும்பில் எதிரணியின் ஊடக இல்லத்தில் சந்தித்த அவர் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில்; தற்போதைய அரசு போன்று, பாராளுமன்றத் தெரிவுக்குழு போன்று காலத்தை இழுத்தடிக்காது, குறித்த கால எல்லைக்குள் தீர்வினை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; பெரும்பாலும் மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வாக அது இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மகிந்த அரசாங்கம் பறி…
-
- 0 replies
- 616 views
-
-
வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவிலில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை சிசிரிவி காணொலிப் பதிவின் ஊடாக நிரூபிக்க முடியும் என யாழ்ப்பாணம் பொலிஸார் வழங்கிய உறுதிமொழியையடுத்து அவர்களை எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கொக்குவில் பிரம்படி லேன், புது வீதி ஆகிய இடங்களிலுள்ள 2 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுப்பட்ட குற்றச்ச…
-
- 0 replies
- 326 views
-
-
வெடிமருந்துகள் அடங்கிய விடுதலைப் புலிகளின் படகை பிடித்து துறைமுகத்துக்கு கொண்டு வந்த விவகாரம், கடலோர காவல்படைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வெடிமருந்துகளை கண்டுபிடிக்கும் நிபுணர்கள் குழுவை கலந்து ஆலோசிக்காமல், துறைமுகத்தில் புலிகளின் படகை எட்டு நாட்கள் நிறுத்தி வைத்தது குறித்து கடலோர காவல் படையினரிடம் விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய, இலங்கை கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த "ஸ்ரீ ராமஜெயம்' என்ற படகை, இந்திய கடலோர காவல்படையினர் பிடித்தனர். அப்படகு விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவுக்கு சொந்தமானது. அப்படகில் ஏராளமான சமையல் பொருட்களுடன், ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் இருந்தன. இதுதவிர கையெறி குண்டுகள், மனி…
-
- 35 replies
- 10.3k views
-
-
விடுதலைப் புலிகளுடனான போரில் 75 வீதத்தை தாம் ஆட்சியில் இருந்த போது நிறைவு செய்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் வசம் இருந்த பெரும்பாலான இடங்கள் கைப்பற்றப்பட்டு விட்டன. எனது ஆட்சியின் போது 1995ம் ஆண்டு யாழ்ப்பாணம் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் அதனை வைத்துக் கொண்டு தாம் காகம் போல கரைந்து கொண்டிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டால், வடக்கில் மஹிந்த அரசின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து அங்கு மக்கள் நிம்மதியாக உண்டு, உறங்க முடியாத அபாய நிலை ஏற்படும். எனக்கு மனநோய் இல்லை. அந்த நோய் ஏற்படக்கூடாது என்பதற்காகத்…
-
- 1 reply
- 488 views
-
-
மோட்டார் சைக்கிளால் மோதி, இளைஞர்களை தாக்கவில்லை என்கிறது காவற்துறை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி, காவற்துறையினர் தாக்கினார்கள் என இளைஞர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதேவேளை , இளைஞர்கள் தான் மோட்டார் சைக்கிளில் சென்று, காவற்துறையினருடன் மோதுண்டார்கள் என கோப்பாய் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். கொக்குவில் பொற்பதி பகுதியில் இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில், கொக்குவில் பொற்பதி வீதியை சேர்ந்த 19 வயதுடைய ஏ.டெனிஸ்வரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாடச…
-
- 0 replies
- 259 views
-
-
மலையகத்தில் கைதுகள் அதிகரிப்பு மலையகத்தின் பல பகுதிகளிலும் தோட்டத் தொழிலாளர்கள் உட்படத் தமி ழர்கள் கைதுசெய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. ஏன், எதற்கு என்று தெரியாமல் பலரையும் பொலிஸார் திடீர் திடீரெனக் கைதுசெய்து கூட்டிச்செல்வதால் அங்கு தமிழர்கள் மத்தியில் பதற்றம் உருவாகியுள்ளது. மலையகத்தின் தோட்டத் தொழிலாளர் கள் வகைதொகையின்றி கைது செய்யப் படுகின்றனர். அதிகாலை வேளையில் பொலிஸ் ஜீப்புகளிலும் பஸ்களிலும் வரும் பொலிஸார் 60 வயதைக் கடந்த ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர். இதனால் இப்பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 4.00மணிக்கு பண் டாரவளை, பூனாகலை தோட்ட மேற்பிரி வுக்கு பொலிஸ் ஜீப்பிலும் பஸ்ஸிலும் வந்த பொலிஸார் அத் தோட்டத்தை…
-
- 0 replies
- 703 views
-
-
அவதி' முகாம்கள்! கவின் மலர் படங்கள் : வி.செந்தில்குமார், ச.வெங்கடேசன் ''இருக்குறம்!'' ''எப்படி இருக்கீங்க?' என்று தமிழ்நாட்டின் இலங்கை அகதி கள் முகாம்களில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், இப்படியான விரக்தி தொனிக்கும் பதிலையே எதிர்கொள்ள நேர்கிறது. ஈழம் - கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், அந்நிய மண்ணில் கையேந்தி நிற்கும் அவலத்துக்கு இணையாக எதைச் சொல்வது? முகாம்களில் ஒரு குடும்பத்துக்கு பத்துக்குப் பத்து அளவில் வீடு. பலர் முன்னும் பின்னும் இழுத்துக்கட்டி இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களும் முகஞ்சுளிக்கும் வாழ்க்கைத் தரத்தில்தான் பல முகாம்களின் நிலை அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கே, 'தமி…
-
- 0 replies
- 1k views
-
-
வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீதான எறிகணை வீச்சு: சிறிலங்கா அரசுக்குள் முரண்பாடு ஜஞாயிற்றுக்கிழமைஇ 4 மார்ச் 2007இ 07:28 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ கடந்த மாதம் 27 ஆம் நாள் மட்டக்களப்பில் இடம்பெற்ற மோர்ட்டார் எறிகணைத் தாக்குதலில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மயிரிழையில் உயிர்தப்பியது தொடர்பாக சிறிலங்கா அரசாங்க தரப்புக்களுக்கிடையில் பெரும் கருத்து முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன. பேரனர்த்த முகாமைத்துவ அமைச்சு தமது ஆலோசனைகளை கேட்கவில்லை என பாதுகாப்பு அமைச்சும்இ வெளிவிவகார அமைச்சும் குற்றம் சுமத்தியிருக்கின்றன. எனினும் இராஜதந்திரிகளின் உயிருக்கு ஆபத்தான சம்பவத்துக்கு யார் பொறுப்பானவர்கள் என்பது தொடர்பாக வாக்குவாதங்கள் பல மட்டங்களில் எழுந்தியிருக்கின்றன. தாம் பயணத்திற்க…
-
- 0 replies
- 679 views
-
-
ஜெயலலிதாவுக்கு மகிந்தா வாழ்த்து …! தமிழக இன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை கிட்லரும் தமிழின அழிப்பின் கதாநாயகனுமான மகிந்தா வாழ்த்து செய்து அனுப்பி வைத்துள்ளார் . அவரது வாழ்த்து செய்தியினை இந்தியா சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உத்தியோக பூர்வமாக ஜெயலலிதவுக்கு அனுப்பி வைத்துள்ளார் . அம்மா மகிந்தாவை போர்குற்ற நீதி மன்றில் நிறுத்த வேண்டும் என கூறிய நிலையில் இந்த வாழ்த்து அறிக்கை அம்மாவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது ..!
-
- 0 replies
- 895 views
-
-
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று நேற்று இரவு பேருவளை கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோரது வாகனங்கள் மீது சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அங்கிருந்து வெளியேறும் போது ஐக்கிய தேசிய கட்சியின் பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜமாலின் வீட்டிற்கு முன்னால் ஆளுமை கட்சி ஆதரவாளர்கள் சிலர்…
-
- 0 replies
- 335 views
-
-
வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் வடக்கில்லை - விக்கி தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதாக பலர் கூறிவருகின்றனர். உண்மையில் வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் இல்லை என்பதால் தான், அதை நிரப்ப முடியாமல் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த கேள்வி பதிலில் முதலமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, “பதவி வெற்றிடங்கள் என்பது ஒரு நிலை. வேலை வாய்ப்பற்றவர்கள் என்பது பிறிதொரு நிலை. இரண்டையும் சேர்த்து எம்மைக் குறை கூறாதீர்கள். குறிப்பிட்ட பதவி வெற்றிடங்கள…
-
- 1 reply
- 426 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கம் ! 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, மஹிந்த ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கான தடையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முற்றாக நீக்கியுள்ளார். இந்நிலையில் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நபர்களின் கடவுச்சீட்டுகளை மீண்டும் ஒப்படைக்கவும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார். 2022 மேமாதம் இடம்பெற்ற பதிவான வன்முறை மற்றும்…
-
- 1 reply
- 256 views
-
-
பிந்திய செய்திகள் அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக அரசு ஆலோசனை Share பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் என்பனவற்றை நீக்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன என்று சட்டமா அதிபர் மொஹான் பீரீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பனவற்றை நீக்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. எனினும் இதுபற்றி இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. அவசரகாலச்சட்ட விதிகளில் எவற்றை நீக்கலாம், எவற்றை தொடர்ந்து வைத்திருக்கலாம் என்பது பற்றி ஆராயப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் 1978ம் ஆண்டில் தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் 6 மாதங்களுக்கு ஒரு…
-
- 0 replies
- 751 views
-
-
கடனைப் பெறுமாறு சிறிலங்காவை சீனா நிர்ப்பந்திக்கவில்லை சீனாவிடம் கடனைப் பெற்றுக் கொள்ளுமாறு சிறிலங்கா நிர்ப்பந்திக்கப்படவில்லை என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். சீனாவின் குளோபல் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக மேற்குலக ஊடகங்கள், மற்றும் அதிகாரிகள், சீனா கடன் பொறியைப் பயன்படுத்தி, முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தை வசப்படுத்தி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வணிகப் பாதைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், சிறிலங்காவுக்கான சீன தூதுவர் கரு…
-
- 0 replies
- 256 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது – 18ம் திகதி நால்வர் கைது – மன்னிப்புச்சபை கவலை 27 May, 2023 | 11:43 AM பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை அரசாங்கம் புறக்கணிக்கின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. முகமட் அஸ்வர் முகமட் அனாஸ் முகமட் ஹபீர் ஜபீர் முகமட் சித்தீக்…
-
- 0 replies
- 295 views
-
-
நாங்களே எங்கள் சொந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம்! காலிமுகத் திடலில் முழங்கிய மஹிந்தர் வெள்ளி, 27 மே 2011 11:06 சர்வதேசத்தைப் பயன்படுத்தி ஒரு சில பிரிவினைவாத குழுக்கள் முன்னெடுத்துவரும் அழுத்தங்கள் சாத்தியமாகப்போவதில்லை. இலங்கை தனது உள்நாட்டு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றுவரும் யுத்த வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் பிரிவினைகளை ஏற்படுத்த தொடர்ந்தும் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன…
-
- 1 reply
- 710 views
-
-
"மிஸ்டர் பிரபாகரன்''என்று கூறுவதில் தவறேதுமில்லை : மங்கள 'மிஸ்டர் பிரபாகரன்' என்று கூறுவதில் தவறேதுமில்லை. சிங்கள மக்கள் எதிரியையும் நண்பனாக கவனிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். எனினும் மஹிந்த ராஜபக் ஷ முதலில் பிரபாகரனுக்கு 'மிஸ்டர்' என்று அழைத்தவர். அதேபோன்று 600 பிக்குகளை கொன்ற கருணா அம்மானுக்கு 'மாண்புமிகு அமைச்சர்' என்ற நாமம் சூட்டியவரும் மஹிந்தவே ஆவார் என்று மாத்தறை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை ஜனவரி 9ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன வெற்றி வாகை சூடிய பின்பு ராஜபக் ஷ குடும்பத்தினருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அவர்களது பாதுகாப்பு உறுதிப்படு…
-
- 0 replies
- 430 views
-
-
7 பாடசாலைகள் வலி வடக்கில் விடுவிக்கப்படவேண்டியுள்ளன - எஸ். சுகிர்தன் வலிகாம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் ஏழு பாடசாலைகள் உள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், மயிலிட்டி றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, காங்கேசன் துறை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை காங்கேசன் துறை மகாவித்தியாலம், வசாவிளான் சி.விவேலுப்பிள்ளை வித்தியாலயம், பலாலி மேற்கு அமெரிக்கன் மிசன் பாடசாலை, சித்திவிநாயகர் வித்தியாலயம், ஆகியவை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இன்னும் விடுவிக்கப்படவேண்டிய பாடசாலைகளாக உள்ளது. இதேவேளை அண்மையில் ஜனாதிப…
-
- 0 replies
- 421 views
-
-
தெற்கில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தம்புள்ள வர்த்தக மத்திய நிலையம் [22 - March - 2007] தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் என அழைக்கப்படும் புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய வர்த்தக சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுடனான வர்த்தகத்தைச் செய்து வந்த இரண்டு முக்கிய நிலையங்களாக கந்தளாயும் கிளிநொச்சியும் இருந்தன. வடக்கில் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்ட பின்னர் இந்த இரண்டு நகரங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வந்த வடக்கு, கிழக்கு சம்பந்தப்பட்ட வர்த்தகச் செயற்பாடுகள் தம்புள்ளவுக்கு மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தம்புள்ள பிரதான வர்த்தக நகரமாக மாறியது. தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் என அழைக்கப்பட்ட இந்த நிலையம் நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தக…
-
- 3 replies
- 2.4k views
-
-
அதிபரின் பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார் மைத்திரி JAN 12, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரான மைத்திரிபால சிறிசேன, இன்று தனது கடமைகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று மதியம் நடந்த நிகழ்வில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்களும், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், மதகுருமாரும் பங்கேற்றனர். கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, மைத்திரிபால சிறிசேன, கடந்த 9ம் நாள் சுதந்திர சதுக்கத்தில் நடந்த நிகழ்வில், நீதியரசர் சிறீபவன் முன்னிலையில் பதவியேற்றுக் …
-
- 0 replies
- 387 views
-