Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் பொறுமையுடன் செயற்படுமாறு ஜானாதிபதியின் செயலாளர் சம்பந்தனிடம் கோரிக்கை கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த புதன்கிழமை மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியின் செயலாளருடன்; கலந்துரையாடியதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் ஜானாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ , எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் முல்லைத்தீவு, கேப்பாபிலவுக் காணி விடயம் தொடர்பாக தான் பாதுகாப்புச் செயலாளருடனும், இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரியுடனும் பொதுவாகக் கலந்துரையாடியுள்ளதாகவும் குறித்த கோரிக்கை தொடர்பாக அவர…

  2. சக்தி டிவி செய்திகள் 01 08 2017 , 8PM

  3. துரோகம் இழைத்தவர் கருணா – யு.எல்.எம்.என். முபீன் தெரிவிப்பு தமிழ், முஸ்லிம் மக்களை நம்ப வைத்து அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் கருணா. அவ்வாறனவர் தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார். இது அவரது இனத்துவேசத்தையும், சுயநல அரசியல் நோக்கத்தையும் எடுத்துக் காட்டுக்கிறது. இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான யு.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு கூறினார். தனது சுயநல அரசியலுக்காக தமிழ் முஸ்லிம் மக்களின் உறவைச் சீர்குலைத்து அதில் குள…

  4. சிறப்புக் குழுக்கள் அமைத்து வடக்கில் அமைதி – பொலிஸ்மா அதிபர் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வடமாகாணத்தில் அமைதியான நிலை ஏற்படுத்தப்படும். இவ்வாறு பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார். இன்று கிளிநொச்சிக்குச் சென்ற பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது- நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளோம். வடக்கில் நடக்கும் சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். அது எமது கடமையாகும். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் த…

  5. வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும் தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் கனதியான, காத்திரமான அதிகளவு பணிகளை செய்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாகிர், மீள் குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் யாசீன், மீள் குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் றிபாய் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் கூறியதாவ…

    • 6 replies
    • 787 views
  6. முப்படைகளைக் களமிறக்குவதை ஏற்க முடியாது – மாவை. சேனாதிராசா யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடத்த வாள்வெட்டுச் சம்பவங்களைக் காரணம் காட்டி முப்படைகளை பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். அரச தலைவரும், தலைமை அமைச்சரும் சிறந்த நிர்வாகத் திறமையும், நேர்மைப் பண்புகளையும் கொண்ட பொலிஸாரை வடக்கு, கிழக்கில் கடமைகளில் ஈடுபடுத்துவதன் ஊடாக போதைப் பொருள் கடத்தல்களையும், வாள்வெட்டுச் சம்பவங்களையும் கட்டுப்படுத்த முன்வர வேண்டும். பொலிஸார் நேர்மையாகச் செயற்படும்போது பொதுமக்கள் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்க…

  7. ராஜீவ் கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காத்திரமான அதிகாரப் பகிர்வு இந்த நாடு எங்களுடையது, சுயாட்சி அதிகாரங்கள் உண்டு, இந்த நாட்டை சேர்ந்தவர்கள் நாம் என்ற உணர்வை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா இலங்கை மீது கொண்டு…

  8. இந்தியாவின் ஐதராபாத் நகரில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெற்றது. இப் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்று இலங்கை திருநாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார் யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவியான ஸ்ரீபாலகிருஷ்ணன் வனோஜா. இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 மாணவர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் ஒரே ஒரு தமிழ் மொழி மூல மாணவியாக இவர் கலந்துகொண்டிருந்தார். கணிதபாட ஒலிம்பியாட் பிரிவு - 2 இற்காக இடம்பெற்ற போட்டியிலேயே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/othersports/03/129865?ref=home-feed

    • 0 replies
    • 329 views
  9. பொலிஸாருக்கு இடையில் பனிப்போர் -எம்.றொசாந்த் யாழ். மாவட்டத்தில் ஒரே தரத்தில் கடமையாற்றும் இரண்டு தமிழ் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடையில், பனிப்போர் இடம்பெற்றுவருவதாகவும், அதன் தொடர்ச்சியாக, பொது இடங்களில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்புக் காரணமாகவே, இவ்வாறு இவர்களுக்கிடையில் முரண்பாடும் வாய்த்தர்க்கமும் ஏற்படக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் ஒருவர், கோப்பாய் பகுதியில் உள்ள தனியார் தங்குமிடமொன்றில் வாடகைக்குத் தங்கியுள்ளார். குறித்த தங்குமிடத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) சென்ற மற்றைய அதிகாரி, "…

  10. கடந்த 27 ஆண்டுகளாக யாழ். மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்டது. 1990ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி பலாலியில் போர் வெடித்ததை அடுத்து, மயிலிட்டிப் பகுதியில் இருந்த மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அந்த பகுதியில் இருந்த பல இடங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயிலிட்டி அம்மன் ஆலயம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. க…

    • 0 replies
    • 541 views
  11. காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவில் 7 தேசிய உணவு உற்பத்தி திட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா இடம்பெற்றது. இந்த விழா நேற்றைய தினம் காரைதீவு விவசாய போதனாசிரியர் பா.குணநீதராசா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் வலய உதவி விவசாய பணிப்பாளர் அழகுமலர் ரவீந்தீரன் மற்றும் நிந்தவூர் வலய விவசாய போதனாசிரியர்கள், காரைதீவு பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விவசாயிகளும் கலந்துக் கொண்டனர். http://www.tamilwin.com/community/01/153806?ref=home-feed

    • 0 replies
    • 524 views
  12. ஊடகவியலாளர்கள் பண மோசடியெனச் செய்தி; விசாரணைக்கு பூஜித் உறுதி -எம்.றொசாந்த் “யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளமொன்றில் வெளியாகிய செய்தி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உறுதி வழங்கியுள்ளார். யாழ். ஊடகவியலாளர்கள் மூவர், துபாயில் பண மோசடியில் ஈடுபட்டதாக, சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. துபாயில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில், இலங்கையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் பணியாற்றியதாகவும், அவர்கள் அந்த நிறுவனத்தின் 1,198,000 துபாய் டினாரை மோசடி செய்ததாகவும், செய்தி வெளி…

    • 2 replies
    • 411 views
  13. பெற்றோரை இழந்து 31 சிறுவர்கள் நிர்க்கதி - நடராசா கிருஸ்ணகுமார் கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்கின்ற 8,203 சிறுவர்களில், தாயையும் தந்தையும் இழந்து 31 சிறுவர்கள் உள்ளனரென, பிரதேச செயலகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தந்தையை மட்டும் இழந்த சிறுவர்கள் 325 பேரும், தாயை மட்டும் இழந்த சிறுவர்கள் 40 பேரும், தந்தையைப் பிரிந்து வாழும் சிறுவர்கள் 13 பேரும், தாயைப் பிரிந்து வாழும் சிறுவர்கள் 12 பேரும், மாற்று வலுவுள்ள சிறுவர்கள் 65 பேரும், மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் 03 பேரும், சிறுவர்கள் இல்லங்களில் 96 சிறுவர்களும், சீர்திருத்தப் பாடசாலைகளில் 13 …

  14. தமிழர்கள் வாழ்கின்ற தாயகப் பிரதேசத்தில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தாமாக உருவானதாக நாம் கருதவில்லை. திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதொன்றாகவே காணப்படுகிறது என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார். இதனை வலுப்படுத்தும் முகமாகத் தான் யாழ். குடாநாட்டிற்கு வருகை தந்த இலங்கையின் பொலிஸ்மா அதிபர் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலுடன் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்திக் கருத்துக்கள் கூறியிருக்கின்றார். இன்று செவ்வாய்க்கிழமை (01) முற்பகல் யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவித்…

    • 1 reply
    • 254 views
  15. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியவர் முன்னாள் போராளி – முப்படைகளையும் களத்தில் இறக்கி கைது செய்வோம். – காவல்துறைமா அதிபர் சூளுரை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொக்குவில் பகுதியில் காவல்துறையினர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்தியவர்களில் பிரதான சந்தேகநபர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் எனவும் தற்போது ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கும் நபர் என காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட காவல்துறைமா அதிபர் யாழ்.தலைமை காவல் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார். அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

    • 11 replies
    • 735 views
  16. சுவிஸ் மாணவி பாலியல் துஷ்பிரயோகம் ; முச்சக்கரவண்டிச் சாரதி கைது சுவிஸிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த 22 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி அநுராதபுரத்தில் இரவுநேரக் களியாட்டங்களில் கலந்துகொண்டு விட்டு, பின்னர் தான் தங்கியிருந்த விடுதிக்கு செல்ல முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு நிறுத்தி அதில் ஏறியுள்ளார். அச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் மாணவியை விடுதிக்கு அழைத்துச் செல்லாமல் வேறு இடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதி குறித்த சுவிஸ் மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்…

    • 1 reply
    • 353 views
  17. சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய மதவாச்சி மாமாவுக்கு கடூழிய சிறை வவுனியா போகஸ்வேவ பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய மதவாச்சி மாமா என அழைக்கப்படும் முத்துபண்டாகே செனரத் அனுர சாந்த சரத்குமார என்ற நபருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வவுனியா போகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முத்துபண்டாகே செனரத் அனுர சாந்த சரத்குமார (வயது 56) என்பவரை வவுனியா பொலிஸார் கைது செய்து வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதன் அடி…

  18. பிரித்தானிய மகாராணியிடமிருந்து இளைஞர் தலைமைத்துவ விருதுவென்ற இரு இலங்கையர்கள் இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் பிரித்தானிய மகாராணியிடம் இருந்து விருதுவென்ற இலங்கையர்களான ரகிதமாலேவன மற்றும் செனெல்வன்னியாரச்சி ஆகிய இரு இளைஞர்களும் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். இந்த இரு இளைஞர்களும் இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ள பெருமையை பாராட்டிய ஜனாதிபதி, அவர்களது எதிர்காலத்திற்காக தனது ஆசிகளை தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளில் உள்ள மக்களிடம் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனிப்பட்டதிறன்களை பொதுமக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக பயன்படுத்தும் இளைஞர் யுவதிகளை அடையாளம் காண்பதற்காக இந்…

  19. நல்ல தெரிவு இன்றி அல்லாடும் மக்கள் அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்­தில் கொழும்பு அரசு கையெ­ழுத்­திட்­ட­தைத் தொடர்ந்­தும், அண்­மை­யில் பெற்­றோ­லி­யத் துறை ஊழி­யர்­கள் வேலை நிறுத்­தத்தை அறி­வித்­த­தும் படை­யி­ன­ரைக் கள­மி­றக்கி நில­மை­யைக் கட்­டுப்­பாட்­டில் கொண்­டு­வர முயற்­சித்­ததை அடுத்­தும் அரசு மீதான எதிர்ப்­பலை எகி­றி­யி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட எல்லா ஊட­கங்­க­ளும் அரச எதிர்ப்­புச் செய்­தி­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கும் நில­மையே இருக்­கி­றது. ஊட­கங்­கள் அர­சுக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­கின்­றன என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் ஏற்­க­னவே குற்­றஞ் சாட்­டி­யி­ருக்…

  20. மண் அகழ்வில் பெறப்பட்ட நிதி எங்கே? – சுமந்திரன் எம்.பி. கேள்வி வடமராட்சி கிழக்கில் அகழப்பட்ட மண் மூலம் பெறப்பட்ட நிதி எங்கே? என்று கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். வடமராட்சி, மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். மகேஸ்வரி நிதியத்துக்கு எதிரான வழக்கில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் மண் அகழ அனுமதி பெறப்பட்டுள்ளது என்று வழக்கில் நீதிமன்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் மகேஸ்வரி நிதியம் சட்டத்துக்குப் புறம்பான வகையில் பெற்றுக்கொண்ட நிதியை மீள ஒப்படைக்குமாறு நீதிமன்று குறிப்பிடவில்லை. புத…

  21. வாக்­கு­று­தி­க­ளுக்கு ஏற்ப அர­சாங்கம் துணிந்து அர­சியல் தீர்வை முன்­வைக்க வேண்டும் சம்­பந்தன் வலி­யு­றுத்தல் ; சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சியம் என்­கிறார் (திரு­கோ­ண­மலை நகர்) ஒரு காலத்தில் இலங்கை மீது நல்­ல­பிப்­பி­ரா­யத்தை சர்­வ­தேசம் கொண்­டி­ருக்­க­வில்லை. அந்­நி­லைமை தற்­பொ­ழுது மாறி­யுள்­ளது. நம்­பிக்­கை­களும் நல்­ல­பிப்­பி­ரா­யமும் தொடர்ந்து நீடிக்­க­வேண்­டு­மாயின் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை துணிந்து இலங்கை அரசு முன்­வைக்க வேண்டும் என்று எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். தேசிய ஒருங்­கி­ணைப்பு நல்­லி­ணக்க அமைச்சின் ஏற்­பாட்டில் திரு­கோ­ண­மலை இந்து கலா­சார மண்­ட­பத்தில் மாவட்ட அர­சாங்க அதிபர்…

  22. யாழ். நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த துப்பாக்கிச்சூடு நீதிபதியை இலக்கு வைத்ததா? இல்லையா? என்பதை விசாரணை செய்ய வேண்டும், ஆனால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இது திடீரென ஏற்பட்ட சம்பவமாகவே உள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பூரண விசாரணைகள் நடைபெறுகின்றன. இதனால் மேலதிகமாக என்னால் எதையும் கூறமுடியாது என்றும் க…

    • 0 replies
    • 313 views
  23. தமிழ் வர்த்­த­கரின் ரூ.26 கோடி பெறுமதியான காணியை போலி உறுதி ஊடாக விற்க முயற்சி பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் தமிழ் வர்த்­தகர் ஒரு­வரின் 26 கோடி ரூபா பெறுமதியான காணியை போலி காணி உறுதிப் பத்­திரம் ஊடாக 5 கோடி ரூபாவுக்கு விற்­பனை செய்ய முயன்ற திட்­ட­மிட்ட கும்பல் ஒ ஒன்­றினை கொழும்பு மோசடி தடுப்புப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். அந்த திட்­ட­மிட்ட கும்­ப­லி­ட­மி­ருந்து மேலும் நூற்றுக் கணக்­கான ஆவ­ணங்கள் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில் இத்­த­கைய மோசடி நட­வ­டிக்­கைகள் ஏதும் இந்த கும்­பலால் அந்த ஆவ­ணங்­களை பயன்­ப­டுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா என்­பதைக் கண்­ட­றிய விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த சம்­பவம் தொடர்பில் …

    • 4 replies
    • 554 views
  24. கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்தப் பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 மாணவர்கள் தோற்றவுள்ளனர். 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இந்த மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. மூன்று இலட்சத்து 56 ஆயிரத்து 778 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இரண்டு பரீட்சைகளுக்கு முன்னரும் பாடசாலை சூழலை சுத்தப்படுத்துமாறு சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு அதிபர்களுக்கும் கல்வ…

    • 0 replies
    • 232 views
  25. படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது மயிலிட்டி முறைமுகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவது குறித்தும் மீனவர்களுடன் அமெரிக்க துணை தூதுவர் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பின் போது அரசியலமைப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் செயலகத்தின் செயற்பாடுகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக …

    • 0 replies
    • 382 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.