ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143349 topics in this forum
-
யாழில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை..! யாழ்ப்பாணம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் கலாச்சார முறைப்படி இடம்பெற்ற திருமணம் அப் பகுதி மக்களை பெருமைப்படவைத்துள்ளது . ஜேர்மனியைச் சேர்ந்த ஆங்கில…
-
- 15 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் நல்லூரில் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் கைது! யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பின் வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் சம்மந்தப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் காரியாலயத்துக்குக் கொண்டு சென்று பொலிஸ் விசாரணையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் மாலையில் நல்லுர் கோவிலின் பின் வீதியில் இரு இளைஞர்கள் கைகலப்பில் ஈடுபட்டபோது வீதித் தடை ஏற்பட்டது. அதே நேரம் அவ்வழியால் வந்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபத…
-
- 3 replies
- 1.1k views
-
-
நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். நீதிபதியின் வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரித்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். http://uthayandaily.com/story/13202.html
-
- 0 replies
- 249 views
-
-
மஞ்சள் நிறத் திரவம் குறித்து உடன் விசாரணை வேண்டும் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் வேம்படி அதிபர் கோரிக்கை யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் வானத்தில் இருந்து கொட்டிய மஞ்சள் நிறத் திரவத்தால் 16 மாணவிகளும்,ஒரு ஆசிரியையும் பாதிக்கப்பட்டனர். இதற்கான காரணத்தைக் கண்டறிந்து உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் பிரிவினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் பாடசாலை அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம். நேற்று முன் தினம் பாடசாலையின் காலைக் கூட்ட நேரத்தில் 7.25 மணி தொடக்கம் 7.50 மணி வரையான நேரத்தில் ம…
-
- 0 replies
- 230 views
-
-
வவுனியாவில் வாள்வெட்டு : இருவர் காயம் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பெரிஸார் தெரிவித்தனர். மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மீது குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள்வெட்டில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்ந…
-
- 0 replies
- 238 views
-
-
வடக்கு மாகாண சட்டத்தரணிகள் நாளை புறக்கணிப்பு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் உண்மையான தாக்குதலாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை திங்கள்கிழமை வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்த தாக்குதல் நீதித்துறை மீதான அச்சுறுத்தாகும். அதனைத் திட்டமிட்டுச் செய்தோரை நீதிக்கும் முன் நிறுத்தும் பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. எனவே உண்மையான தாக்குதலாளியைக் கைது செய்து நீதியின் முன் ந…
-
- 0 replies
- 351 views
-
-
“கொமிசன் பெற்ற அமைச்சர்” சூடானது வட மாகாண சபை ஆலயங்களுக்கு நிதி வழங்கியதில் ‘கொமிசன்’ பெற்ற அமைச்சர் யார்? என்ற வாதத்தால் வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வு கொஞ்சம் சூடானது. பின்னர் கடந்த கால அமர்வுகளைப் போல் அல்லாது அமைதியாக உரிய நேரத்துக்கு நடந்து முடிந்தது. வடக்கு மாகாணசபையின் 99ஆவது அமர்வு, சிறப்பு அமர்வாக நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் அறிவிப்புடன் சபை தொடங்கியது. வந்திட்டேன்னு சொல்லு அமைச்சுக்கள் மீதான மீளாய்வு விவாதத்துக்கு கோரிக்கை விடுத்த எதிர்க்க ட்சித் தலைவர் தவராசாவோ, சிவாஜிலிங்கமோ சபை தொடங்கும் போது அவைக்குள் இருக்கவில்லை. எதிர்க் கட்சித் தலைவரைக் காண…
-
- 1 reply
- 357 views
-
-
சம்பந்தன், விக்கினேஸ்வரன் நாளை சந்தித்துப் பேச்சு (நமது நிருபர்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வர னுக்கும் இடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடமாகாண சபை அமைச்சர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்ததை அடுத்து அவருக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் பெரும் முரண்பாடான நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து இடம்பெற்ற சமரச பேச்சுவார்த்தையில் இணக்கப்…
-
- 7 replies
- 348 views
-
-
’ரூ.144 மில்லியனை அனந்தி பொறுப்பேற்க வேண்டும்’ " வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாயை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும்" என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று (21) நடைபெற்றது. இதன் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாய் பணத்தை மாகாண சபை பெற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோ…
-
- 5 replies
- 516 views
-
-
யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்பொழுது யாழ். போதனா வை…
-
- 18 replies
- 1.9k views
-
-
அத்துமீறி குடியேறியவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் ; சுமண ரத்தினதேரர் பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் 10 தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின் காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்ற…
-
- 23 replies
- 2.1k views
-
-
சக்தி டிவி செய்திகள் 22th July 2017, 8PM
-
- 0 replies
- 523 views
-
-
முஸ்லிம்கள் தமது பிரதேசங்களிலும் சிறுபான்மையாக மாறும் அபாயம் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணியாக எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்க வேண்டும். அல்லாது போனால் தற்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலும் சிறுபான்மையாக மாற வேண்டிய அபாயம் உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸனலி தெரிவித்தார். முஸ்லிம் கட்சிகளை இணைத்து முஸ்லிம் கூட்டணி அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணியாக செயற்பட வேண்டும் என்பதில் மக்கள் உ…
-
- 1 reply
- 447 views
-
-
சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க பங்களிப்புச் செய்ய வேண்டும் – ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் டக்ளஸ் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் தமிழ்மக்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பங்களிப்பைச் செய்ய வேண்டும் எனவும் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் தீர்வானது தமிழ்மக்களுக்கு நியாயமானதாகவும், பெரும்பான்மை சிங்கள மக்கள் உட்பட சகோதர முஸ்லிம்களுக்கும் ஏற்புடையதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற சந…
-
- 0 replies
- 201 views
-
-
இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்துக்கு கூட்டமைப்பு கண்டனம் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது யாழ்.நல்லூர் கோயில் பின் வீதியில் வைத்து இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது எனக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சற்று முன்னர் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக…
-
- 0 replies
- 306 views
-
-
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கடலோரக் காவற்படையினர் மீது வடமராட்சி கிழக்கில் தாக்குதல் வடமராட்சிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நிலமையைப் பார்வையிட இலங்கைக் கடற்படைத் தளபதி சென்றுள்ளார். இதனால் வல்லிபுர வீதியின் இரு மருங்கிலும் கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக மணல் கடத்தலில் ஈடுபட்டோரை மறித்துச் சோதனையிட முற்பட்ட கடலோரக் காவற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் காவற்கடையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. வடமராட்சி ந…
-
- 1 reply
- 296 views
-
-
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பதவி நீக்கிவிட்டு ச.தொ.ச. விவகாரத்தை விசாரணை செய்யுங்கள் பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புக்கள் கோரிக்கை (க.கமலநாதன்) அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிலிருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டிருக்கின்றன என்றால் அதன் பின்புலத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தி உள்ளது என்பதே வெளிப்படையாகின்றது. எனவே அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பதவி விலக்கிவிட்டு ச.தொ.ச. நிறுவனத்திற்கு சீனி ஏற்றிச் சென்ற வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்துங்கள் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்தார். பொதுபலசேனா அமைப்பின…
-
- 6 replies
- 435 views
-
-
சீருடையினர் இருவர் மீது முள்ளியில் வாள்வெட்டு!! வடமராட்சி, முள்ளியில் சீருடையினர் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது. இனந்தெரியாதவர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. அதேவேளை, நேற்று மணல் கடத்தலில் ஈடுபட்டோரை மறித்துச் சோதனையிட முற்பட்ட கடலோரக் காவற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதனால் காவற்கடையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் நிலைமையைப் பார்வையிட இலங்கைக் கடற்படைத் தளபதி இன்று அந்தப் பகுதிச் சென்றிருந்தார். http://uthayandaily.com…
-
- 0 replies
- 456 views
-
-
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எவரும் பூச்சாண்டி காட்ட முடியாது சைட்டம் நிறுவனத்தை அரசுடமையாக்கமாட்டோம் நேர்காணல் : ரொபட் அன்டனி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதற்காக 35 வருடங்களாக போராடி வருகின்றேன். அன்று இருந்த நிலைமையை விட இன்று ஒரு தீர்வுத் திட்டத்தை காண்பதற்கான நிலைமை இலகுவானதாக மாறியுள்ளது. அதனால் தற்போதைய சூழலில் தீர்வுத் திட்டங்களுக்கு எதிராக யாரும் இன்று இந்த நாட்டில் பூச்சாண்டி விளையாட்டு காட்டிக்கொண்டிருக்க முடியாது என்று இணை அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்வதற்கு முன்னிற்போம். அதேபோன்று பாதிக்க…
-
- 0 replies
- 333 views
-
-
சவூதி இளவரசர் இலங்கையில்... சவூதி அரேபியாவின் இளவரசரான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், நேற்று இலங்கையை வந்தடைந்தார். 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த சவூதி இளவரசரை, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்று பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், அஷ்ஷெய்யித் மசூர் மௌலானா ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர். (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/சவூதி-இளவரசர்-இலங்கையில்/46-201099
-
- 0 replies
- 321 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை மிக முக்கியம் – ஜெப்ரி பெல்ட்மன் வடக்கு மாகாண சபையில் நடந்த விடயங்களை அறிந்திருக்கின்றோம். என்றும் உங்களின் ஒற்றுமை முக்கியம். நீங்கள் ஒற்றுமையாகத் தொடர்ந்தும் பயணிக்கவேண்டும். இவ்வாறு ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட…
-
- 0 replies
- 429 views
-
-
உலகுக்கு உழைத்தது போதும் இனியாவது உங்களுக்காக உழையுங்கள் – விவியன் பாலகிருஷ்ணன்! தமிழர்களே நீங்கள் உலகத்திலுள்ள நாடுகளுக்கு உழைத்துக்கொடுத்தது போதும்: இனிமேலாவது உங்கள் அறிவையும், திறமையையும் உங்களுக்காகப் பயன்படுத்துங்கள் என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் செய்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்ததுடன் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டதுடன் நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”உலகத்திற்குச் சேவையாற்றக் கிடைத்த பொக்கிசமா கத் தமிழர்கள் இதுவரை உழைத்துக் கொடுத்ததுபோதும். உங்கள் அறிவும் திறமையும் …
-
- 8 replies
- 521 views
-
-
கடும் வரட்சியால் 31 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் மக்கள் குடிநீரின்றி பாதிப்பு கிளிநெச்சி மாவட்டத்தின் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 31 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விநியோகம் உள்ளிட்ட அவசரப்பணிக்காக 5 மில்லியன் ரூபா அரசிடமிருந்து கோரப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் சத்தியசீலன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளில் 31 கிராம அலுவலர் பிரிவுகள் வரட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தந்த கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்கு உள…
-
- 0 replies
- 212 views
-
-
தமிழக மீனவர்கள் எட்டு பேர் கைது பருத்திதுறை வடகிழக்கில் நாகை மாவட்டத்தைச்சேர்ந்த மீனவர்கள் எட்டு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாற்றின் பேரில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழக மீனவர்களின் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களையும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசாரணைகளுக்காக காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். விசாரணைகளுக்கு பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என கடற்படை பேச்சாளர் ஊடகங்…
-
- 0 replies
- 159 views
-
-
இலங்கையில் எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி உலகம் முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்திரம் 10 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் அறிவியல் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இலங்கையில் கடந்தாண்டில் மாத்திரம் 200 பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 53 சதவீதம் பேருக்கு மாத்திரமே உரிய மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. எனினும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் எய்ட்ஸ் நோ…
-
- 0 replies
- 286 views
-