ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
திரவ இயற்கை வாயு தொழிற்சாலை திருமலையில் அமைப்பதற்கு தீர்மானம்திரவ இயற்கை வாயு தொழிற்சாலை திருமலையில் அமைப்பதற்கு தீர்மானம் இந்திய – ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் (நமது நிருபர்) திருகோணமலையில் இந்தியா, ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனம் திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற முற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது திருகோணமலையில் திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை அமைப்பதற்கு இந்திய ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளிப்பதற்…
-
- 0 replies
- 260 views
-
-
ஊடகவியலாளரிடம் சிஐடீ விசாரணை - எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த் சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம், குற்றப்புலனாய்வுப் துறையினர் இன்று (18) இரண்டு மணிநேர விசாரணையை மேற்கொண்டனர். யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது என்றும் முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு வருகை தந்தால், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போமெனவும் தெ…
-
- 1 reply
- 254 views
-
-
ஞானசார தேரருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் ; கொழும்பு மேலதிக நீதிவான் மேன்முறையீட்டு நீதிமன்றில் சாட்சியம் 'தொலைபேசி மணி அடித்ததாலும், கொட்டாவி விட்ட தற்காகவும் நீதிமன்றை அவமதித்ததாக சிறைத் தண்டனை வழங்கப்பட்ட வரலாறுகள் எமது நீதித்துறையில் உள்ளன. இந் நிலையில் நீதிமன்ற விசாரணையின் இடை நடுவே, நீதி வானுக்கு நேராக தனது விரல்களை நீட்டி, எக்னெலிகொட வழக்கின் சந்தேக நபர்களான இராணுவ வீரர்களுக்கு பிணை வழங்குமாறு நீதிவானுக்கே கட்டளை இட்டும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியும் நீதிமன்றை அவமதித்த ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அதனாலேயே நான் இந்த வழக்கை அரசியலமைப்பின் 105 (3) ஆவது அத்தியாயத்துக்கு அமைய மேன் முறையீட்டு நீ…
-
- 0 replies
- 394 views
-
-
கூட்டமைப்பும் – ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டு அரசமைத்தால் நாட்டுக்குப் பேராபத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பது நாட்டுக்குப் பேராபத்தாக அமையும். இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி அபாய எச்சரிக்கையை நேற்று விடுத்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் மகிந்த சமரசிங்க கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: தற்போது கூட்டு அரசில் அங்கம் வகிப்பவர்களெல்லாம் விரும்பி வந்தவர்களே தவிர, அழுத்தங்களால் சேர்ந்தவர்கள் அல…
-
- 0 replies
- 204 views
-
-
"கேப்பாபுலவு மக்களின் ஒருதொகுதி காணிகள் நாளை விடுவிப்பு" சுவாமிநாதன் தமது சொந்த நிலங்களை மீட்க தொடர்ந்து 141 நாட்களாக கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக வாயில் முன்பாக கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் 140 நாளான நேற்றைய தினம் கேப்பாபுலவு மக்களிடம் மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தொலைபேசிவாயிலாக ஒரு தொகுதி காணிகள் நாளை விடுவிக்கப்படும் என்று உறுதியளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவித்தனர். 480 ஏக்கர்களுக்கும் அதிகமான காணிகள் கேப்பாபுலவில் விடுவிக்கப்படவேண்டி உள்ள நிலையில் நாளையத்தினம் முதல்கட்டமாக 180 ஏக்கர் காணிகள் மட்டுமே விடுவிக்கப்படும் என அமை…
-
- 3 replies
- 864 views
-
-
விக்கியிடம் ரெலோ கடிதம் கையளிப்பு வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோ சார்பில் உள்ள அமைச்சர் பா.டெனீஸ்வரனை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக விந்தன் கனகரட்ணத்தை நியமிக்கக் கோரும் கடிதத்தை, கட்சியின் செயலாளர் ந.சிறீக்காந்தா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று கையளித்துள்ளார். http://uthayandaily.com/story/12182.html
-
- 2 replies
- 798 views
-
-
பாடசாலை மைதானத்தை அத்துமீறி அபகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின் காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று காலை கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 8 மாதங்களாக பாடசாலைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் அத்துமீறி குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் இதுவரையில் உரிய நடவ…
-
- 0 replies
- 279 views
-
-
இலங்கையில் பெண்களின் பொருளாதார தேவைகளுக்கு தீர்வு கண்டு உதவிடும் வகையில் கிராமப்புற மகளிர் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த ஜேசுதாசன் ரஜிதா கூறும்போது, முதலில் சுனாமி வந்து எங்கள் சமூகத்தை அழித்தது. அடுத்ததாக போர். இப்போது சிறு வணிக கடன் நிறுவனங்கள் எங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. கடன் சுமையால் மிகவும் சிரமப்படுவதாக அன்றாடம் யாராவது ஒருவர் என்னிடம் புலம்பிக் கொண்டுதான் உள்ளார் என்றார். உள்நாட்டுப் போருக்குப் பிறகு வடக்கு, கிழக்கு மாகாண கிராமப்புற மக்களின் கடன் சுமை அதிகமாகிவிட்டது. குறிப்பாக மிக வும் வறிய மாவட்டங்களில் ஒன் றான மட்டக்களப்பு பகுதி மக்கள் கடன் பிரச்சினையால் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு சராசரி ம…
-
- 6 replies
- 636 views
-
-
ஊடகவியலாளர்களை வெளியேற்றிய வட மாகாண சபை அமைச்சர் வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தினை திறந்து செயற்படுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காணும் வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலிருந்து ஊடகவியலாளர்களை வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன வெளியேற்றினார். 195 மில்லியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட வவுனியா புதிய பேருந்து நிலையமானது கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. எனினும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து குறித்த பேருந்து நிலையம் மூடப்பட்டது. இந் நிலையில் குறித்த பேருந்து நிலையத்தினை மீள் இயங்க செய்வது …
-
- 0 replies
- 234 views
-
-
சக்தி டிவி செய்திகள் 18th July 2017, 8PM
-
- 0 replies
- 338 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தொலைபேசி உரையாடலை தன்னால் உறுதிப்படுத்தமுடியும் என ஜேர்மன் தொழிநுட்பவியலாளர் ஒருவர் சவால் விடுத்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஊடகவியலாளர் ஒருவரை மிகவும் கீழ்த்தரமாக வடக்கத்தையான் எனத் திட்டிய ஒலிவடிவம் ஊடகங்களில் வெளியானதையடுத்து, அவர் நேற்று மலையக மக்களைச் சந்தித்து தனது உரையாடலை தற்போதுள்ள தொழிநுட்பத்தின் மூலம் உறுதிப்படுத்துமாறும், அவ்வாறு உறுதிப்படுத்தினால் தான் பதவி விலகுவதாகவும் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், சிறிதரனின் சவாலினை ஜேர்மனியின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சுவுடு தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றிவரும் வொய்ஸ் அனலைசிஸ் (Voice Analysis) து…
-
- 0 replies
- 343 views
-
-
சூசையின் படகு குறித்த தகவல்கள் பொய்யானவை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் சூசை பயன்படுத்திய படகு ஒன்று முல்லைத்தீவு கடற் பரப்பில் சஞ்சரிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானது என கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இந்த படகு கடந்த நாட்களில் முல்லைத்தீவு கடற்பரப்பில் சஞ்சரித்தது என சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும் இந்த குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என கடற்படையின் பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய படகுகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த காரணத்திற்காகவும் அவை கடலில் வி…
-
- 0 replies
- 212 views
-
-
நேர்மையே தேவை அரச வளங்களைப் பங்கிடுவதில் உள்ள பாரபட்சம், நீதியின்மை, அரசியல் தலையீடுகள் என்பவை இனங்களுக்கு இடையே விரிசல்களையும், முரண்பாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்துவது இன்னமும் நின்றபாடாக இல்லை. இத்தகைய போக்குகளால் கடந்த காலங்களில் நீண்ட ஆயுதப் போராட்டம் ஒன்றைச் சந்தித்து நொந்துபோனதன் பின்னரும்கூட வரலாற்றிலிருந்து எவரும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. முல்லைத்தீவில் நேற்றுமுன்தினம் நடந்து முடிந்திருக்கும் இளைஞர்களின் ஊர்வலம், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இதைத்தான் எண்பிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது இனம்சார் தூண்டல்கள் போன்…
-
- 0 replies
- 215 views
-
-
இலங்கையில் சிறுமிகள் அதிகம் கர்ப்பம் தரிக்கும் மாவட்டம் எது தெரியுமா ? ; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் நாட்டில் மிகச் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சிறுமிகள் அதிகமுள்ளதாக பகுதியாக மாத்தளை மாவட்டத்தில் லக்கல, வில்கமுவ, நாவுல, அம்பங்கஸ்க ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன தெரிவித்துள்ளார். மாத்தளை செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சிறுமிகள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடளாவிய ரீதியில் சுகாதார அமைச்சு முன்னெடுத…
-
- 0 replies
- 322 views
-
-
சந்தைக் குறைபாடுகளை அறிய நேரில் சென்றார் வடக்கு முதலமைச்சர்! படங்கள்: செ.நிருஜன் (facebooK) கல்வியங்காடு பொதுச் சந்தையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று நேரில் சென்றார். மு.ப. 10 மணியளவில் அங்கு சென்ற முதலமைச்சர் அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்தார். 2015 தொடக்கம் மாநகர சபைக்கு முறையிட்டும் உரிய வசதி செய்து தரப்படவில்லை. மலசலகூட வசதிகள் சீரில்லை. உரிய முறையில் சந்தை சுத்தப்படுத்தப்படுவதில்லை. சந்தைத் கட்டடத் தொகுதியில் மேல் மாடியில் அமைந்துள்ள கடைகள் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை திறக்கப்படுவதில்லை. அவற்றை …
-
- 1 reply
- 424 views
-
-
வல்லையில் துப்பாக்கியின் பாகங்கள் மீட்பு - செல்வநாயகம் கபிலன், கே.மகா பருத்தித்துறை, யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள, வல்லை பாலத்தின் கீழ், துப்பாக்கியின் பாகங்கள், நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். பாலத்தின் கீழ் இறால் பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் வரட்சி காரணமாக கடல் நீரேரியில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. இதுவரை காலமும் நீருக்குள் புதையுண்டிருந்த நிலையில் துப்பாக்கியின் பாகங்கள் வெளியில் தென்பட்டுள்ளது. கடல் நீரில் இருந்தமை காரணமாக, மிகவும் உ…
-
- 0 replies
- 296 views
-
-
மன்னார் குழப்பம் ; சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு மன்னார் கரிசல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையடுத்து மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிந்த சந்தேக நபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார். மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் கடந்த 6 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயக் காணி எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. எனி…
-
- 0 replies
- 299 views
-
-
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டால் அரசியல் ரீதியான போராட்டம் தேவை என்பதற்காகவே பிரபாகரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எஸ்.வியாழேந்திரன் (மட்டு.சோபா) தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர், ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் அரசியல் ரீதியான போராட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படவேண்டும் என்ற தீர்க்க தரிசனத்தோடுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற 28 ஆவது வீரமக்கள் தின நிகழ…
-
- 2 replies
- 316 views
-
-
சிமெந்து ஆலை இரும்புகளை விற்க அனுமதிக்கவேயில்லை அரச தலைவர் ஆணைக்குழுவிடம் அடித்துக் கூறினார் கோத்தபாய காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையின், இயந்திரங்களை அகற்றுவதற்தோ அவற்றைப் பழைய இரும்புக்காக விற்பனை செய்வதற்கோ தான் அனுமதி வழங்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். “காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை இயந்திரங் களை வெட்டி அகற்றுவதற்கு அனுமதி அளிப்பதற்கான எந்த ஆவணமும், கையெழுத்திடுவதற்காக வந்ததை நான் பார்க்கவில்லை“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் அரச தல…
-
- 1 reply
- 265 views
-
-
எம்.ஜே. முஹம்மத்- 1621 இல் நடந்த போர்த்துக்கீசருக்கு எதிரான சண்டையில் தோல்வியுற்ற, முஸ்லிம் அரசன் சேகு சிக்கந்தர் முஹம்மத் இஸ்மாயில் கொல்லப்பட்டதால் முஸ்லிம்கள் பலமிழந்து போயினர். அதனைத் தொடர்ந்து 800 இக்கும் மேற்பட்ட முஸ்லிம் படைவீரர்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். 1200 பேர் தூக்கிலிடப்பட்டனர். முஸ்லிம்களுடன் இனைந்து நின்று போரிட்ட தமிழர்கள் ஆயிரம் பேரும் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. இதனால் அவனுடைய இளவரசர்கள் அக்காலத்தில் கொழும்பை ஆண்ட புவனேகபாகுவிடம் உதவி கேட்டனர். கொழும்பு கோட்டைப் பகுதியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்ததால் முஸ்லிம்களை வன்னியில் குடியேறுமாறு புவனேகபாகு கூறினான். முஸ்லிம்கள் தங்கள் இளவரசன் சகிதம் முல்லைத்…
-
- 14 replies
- 995 views
-
-
சம்பந்தன் என்னுடன் உறவாட தயங்குவதேன்? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-2 சம்பந்தன் என்னுடன் உறவாட தயங்குவதேன்? நேர்காணல் : ரொபட் அன்டனி யுத்த காலத்தில் தலைநகரில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தைரியமாக குரல் கொடுத்த அரசியல்வாதியான மனோ கணேசன் இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சராக பணிபுரிகின்றார். அன்று காணாமல் போன அல்லது கடத்தல் சம்பவம் இடம்பெற்றால் பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதற்கு முன்னர் இவரிடமே கூறும் வழக்கம் இருந்தது. வீதிகளில் இறங்கி போராடியவர். காணாமல் போதல், கடத்தல்கள் என்பனவற்றுக்கு எதிராகக்குரல் கொடுத்…
-
- 2 replies
- 639 views
-
-
"மைத்திரி - மஹிந்தவிற்கு இடையில் இனி சமரசப் பேச்சு கிடையாது" ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் எவ்விதமான இணக்கப்பாடுகளுக்கோ அந்த கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சமரச பேச்சுக்களுக்கோ இனி கூட்டு எதிர்க் கட்சி செல்லாது. நவம்பரில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெற்றால் கூட்டு எதிர்க் கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் கூடிய கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முக்கிய பல தீர்மானங்களை எடுத்…
-
- 0 replies
- 220 views
-
-
முல்லையில் வெடிப்புச் சம்பவம் – 3 மாணவர்கள் படுகாயம்!! முல்லைத்தீவு மாவட்டத்தில் புறநகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதில் 3 பாடசாலை மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். http://uthayandaily.com/story/12125.html
-
- 1 reply
- 260 views
-
-
கடினமான பயணமானாலும் நாம் தொடர்ந்து செல்வோம் தேசிய அரசாங்கம் தொடர்பில் பிரதமர் ரணில் (எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செல்வது மிகவும் கடினமான பயணமாகும். ஆனாலும் எச்சரிக்கையாக இந்தப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். செயற்பாடுகள் ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதவேண்டிய நிலை ஏற்படுமோ என்பது தெரியாதுள்ளது. எனினும் இவையனைத்தையும் அறிந்த பின்னரே தேசிய அரசாங்கத்தை நிறுவினோம். ஆகவே நாட்டின் நலனை கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்…
-
- 0 replies
- 352 views
-
-
11 தமிழர்கள் கடத்தல் குறித்து பொய் உரைக்கிறார் வீரவன்ச பெற்றோர்கள் விசனம் “கடற்படையினரின் சாட்சியங்களின் அடிப்படையில்தான் கொமடோர் தசநாயக்க கைது செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுவதைப் போன்று எங்கள் பிள்ளைகளுக்கு விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்புமில்லை. அரசியலுக்காக விமல் வீரவன்ச பொய் உரைக்கிறார்” இவ்வாறு தலைநகரில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டனர். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். “எமது பிள்ளைகள் கடத்தப்பட்டு காணா…
-
- 1 reply
- 397 views
-