ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டால் அரசியல் ரீதியான போராட்டம் தேவை என்பதற்காகவே பிரபாகரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எஸ்.வியாழேந்திரன் (மட்டு.சோபா) தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர், ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் அரசியல் ரீதியான போராட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்படவேண்டும் என்ற தீர்க்க தரிசனத்தோடுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற 28 ஆவது வீரமக்கள் தின நிகழ…
-
- 2 replies
- 317 views
-
-
சிமெந்து ஆலை இரும்புகளை விற்க அனுமதிக்கவேயில்லை அரச தலைவர் ஆணைக்குழுவிடம் அடித்துக் கூறினார் கோத்தபாய காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையின், இயந்திரங்களை அகற்றுவதற்தோ அவற்றைப் பழைய இரும்புக்காக விற்பனை செய்வதற்கோ தான் அனுமதி வழங்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். “காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை இயந்திரங் களை வெட்டி அகற்றுவதற்கு அனுமதி அளிப்பதற்கான எந்த ஆவணமும், கையெழுத்திடுவதற்காக வந்ததை நான் பார்க்கவில்லை“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் அரச தல…
-
- 1 reply
- 266 views
-
-
எம்.ஜே. முஹம்மத்- 1621 இல் நடந்த போர்த்துக்கீசருக்கு எதிரான சண்டையில் தோல்வியுற்ற, முஸ்லிம் அரசன் சேகு சிக்கந்தர் முஹம்மத் இஸ்மாயில் கொல்லப்பட்டதால் முஸ்லிம்கள் பலமிழந்து போயினர். அதனைத் தொடர்ந்து 800 இக்கும் மேற்பட்ட முஸ்லிம் படைவீரர்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொல்லப்பட்டனர். 1200 பேர் தூக்கிலிடப்பட்டனர். முஸ்லிம்களுடன் இனைந்து நின்று போரிட்ட தமிழர்கள் ஆயிரம் பேரும் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. இதனால் அவனுடைய இளவரசர்கள் அக்காலத்தில் கொழும்பை ஆண்ட புவனேகபாகுவிடம் உதவி கேட்டனர். கொழும்பு கோட்டைப் பகுதியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்ததால் முஸ்லிம்களை வன்னியில் குடியேறுமாறு புவனேகபாகு கூறினான். முஸ்லிம்கள் தங்கள் இளவரசன் சகிதம் முல்லைத்…
-
- 14 replies
- 996 views
-
-
சம்பந்தன் என்னுடன் உறவாட தயங்குவதேன்? http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-2 சம்பந்தன் என்னுடன் உறவாட தயங்குவதேன்? நேர்காணல் : ரொபட் அன்டனி யுத்த காலத்தில் தலைநகரில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக தைரியமாக குரல் கொடுத்த அரசியல்வாதியான மனோ கணேசன் இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சராக பணிபுரிகின்றார். அன்று காணாமல் போன அல்லது கடத்தல் சம்பவம் இடம்பெற்றால் பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதற்கு முன்னர் இவரிடமே கூறும் வழக்கம் இருந்தது. வீதிகளில் இறங்கி போராடியவர். காணாமல் போதல், கடத்தல்கள் என்பனவற்றுக்கு எதிராகக்குரல் கொடுத்…
-
- 2 replies
- 640 views
-
-
"மைத்திரி - மஹிந்தவிற்கு இடையில் இனி சமரசப் பேச்சு கிடையாது" ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் எவ்விதமான இணக்கப்பாடுகளுக்கோ அந்த கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சமரச பேச்சுக்களுக்கோ இனி கூட்டு எதிர்க் கட்சி செல்லாது. நவம்பரில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெற்றால் கூட்டு எதிர்க் கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் கூடிய கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முக்கிய பல தீர்மானங்களை எடுத்…
-
- 0 replies
- 221 views
-
-
முல்லையில் வெடிப்புச் சம்பவம் – 3 மாணவர்கள் படுகாயம்!! முல்லைத்தீவு மாவட்டத்தில் புறநகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதில் 3 பாடசாலை மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். http://uthayandaily.com/story/12125.html
-
- 1 reply
- 261 views
-
-
கடினமான பயணமானாலும் நாம் தொடர்ந்து செல்வோம் தேசிய அரசாங்கம் தொடர்பில் பிரதமர் ரணில் (எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செல்வது மிகவும் கடினமான பயணமாகும். ஆனாலும் எச்சரிக்கையாக இந்தப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். செயற்பாடுகள் ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதவேண்டிய நிலை ஏற்படுமோ என்பது தெரியாதுள்ளது. எனினும் இவையனைத்தையும் அறிந்த பின்னரே தேசிய அரசாங்கத்தை நிறுவினோம். ஆகவே நாட்டின் நலனை கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்…
-
- 0 replies
- 353 views
-
-
11 தமிழர்கள் கடத்தல் குறித்து பொய் உரைக்கிறார் வீரவன்ச பெற்றோர்கள் விசனம் “கடற்படையினரின் சாட்சியங்களின் அடிப்படையில்தான் கொமடோர் தசநாயக்க கைது செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுவதைப் போன்று எங்கள் பிள்ளைகளுக்கு விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்புமில்லை. அரசியலுக்காக விமல் வீரவன்ச பொய் உரைக்கிறார்” இவ்வாறு தலைநகரில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டனர். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். “எமது பிள்ளைகள் கடத்தப்பட்டு காணா…
-
- 1 reply
- 398 views
-
-
இலங்கை வந்தடைந்தார் சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் யாழ்ப்பாணத்தில் வட. மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் பயணமாக நேற்று இலங்கையை வந்தடைந்த அயலுறவுத்துறை அமைச்சர் சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களை யாழ். பொதுநூலகத்துக்கு கையளிக்கும் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து அரச தலைவர், தலைமை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் எனக்…
-
- 0 replies
- 327 views
-
-
பதவியைத் துறக்கும் எண்ணத்தில் தவராசா வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள்அந்தளவுக்கு மோசம் என்று அவர் விசனம் வடக்கு மாகாண சபையின் தற்போதைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது பேசாமல் பதவியைத் துறந்துவிட்டுச் செல்லலாமா என்று எண்ணத்தோன்றுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா விசனத்து டன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் நியமனம் மற்றும் தற்போது அதனோடு ஒட்டி நடைபெறும் விடயங்கள் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆளும் கட்சியின் உள் முரண்பாடே தற்போது பேசு பொருளா…
-
- 0 replies
- 230 views
-
-
இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒருபோதும் இடமளியோம் ஆர்.யசி புலிகளை விடுதலை செய்யமாட்டோம் : நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ கூறுகிறார் இலங்கையில் யுத்தக் குற் றம் ஒருபோதும் இடம்பெற வில்லை, யுத்தக் குற்றச் சாட்டு என்ற பெயரில் எமது இராணுவத்தை தண்டிக்க எவரே னும் வருவார்களாயின் அதற் கும் எமது அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. நாம் எமது இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ள புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 368 views
-
-
யார் அடுத்த அமைச்சர் ? ; ரெலோவுக்குள் குளப்ப நிலை வட மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்குப் பதிலாக ரெலோவின் சார்பில் அமைச்சரவைக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்கு அந்தக் கட்சிக்குள் ளேயேஎதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் அந்தக் கட்சியினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோவின் சார்பில், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பா.டெனீஸ்வரன் 2013ஆம் ஆண்டு போக்குவரத்து, மீன்பிடி, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். வடக்கு மாகாண சபையில் அண்மையில் எழுந்த சர்ச்சையில், …
-
- 1 reply
- 389 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி,பெப்ரவரியில் தேர்தல் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தில் உள்ள ஆணையாளர்கள் இன்னும் ஆறு மாதத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகார பொறுப்பை ஏற்கவேண்டும். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குப்பையினை வைத்து பெரும் மோசடிகள் நடக்கின்றன. குப்பை கொட்டுவதற்கு பாதாள உலக கோஷ்டிகளும் மோசடி கும்பல்களும் பெரும் தடையாக உள்ளன. எவ்வாறாயினும் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து குப்பை பிரச்சினையை தீர்ப்பேன். அடுத்த அரசாங்கத்திற்கு குப்பை பிரச்ச…
-
- 0 replies
- 334 views
-
-
கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களின் தலையை தடாவி கண்னை பிடுங்கிய சம்பவங்கள் இன்னும் மறைக்க முடியாமல் எம் மனதில் இருக்கும் போதும் மொழியால் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை சீர் குழைக்க மீள் குடியேற்றத்தை தமிழ் சமுதாயம் பயன்படுத்துமானால் அது தமிழ் மக்கள் செய்யும் பாரிய தவறாகவே இருக்கும் அது இலங்கை வரலாற்றில் எதிர்கால சந்ததிகள் தேடி படிக்கும் வரலாக இருக்கும் இப்படி இரு சமுதாயமும் ஏட்டிக்கு போட்டியாக வாழ வேண்டிய சூழ்நிலை வரும் அதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் கடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களை கொண்று குவித்து அழகு பார்த்தவர்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்களே. ஒரு மனிதாபிமானம் இல்லாமல் வட மாகாண முஸ்லிம்களை அவர்கள் அணிந்து இர…
-
- 8 replies
- 794 views
-
-
டெனீஸை பதவி நீக்க முதல்வர் என்னுடன் ஆலோசிக்கவில்லை கூறுகின்றார் சம்பந்தன் அமைச்சர் டெனீஸ்வரனைப் பதவி நீக்குவதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பில், ரெலோவோ அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரோ என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடந்த 13ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தது. தமது கட்சி சார்பான, தங்கள் அமைச்சரவையில் உள்ள பா.டெனீஸ்வரனை நீக்குமாறும், புதியவரது பெயரைத் தமது கட்சி பிரேரிக்கும் எனவும் தெரிவித்திருந்தது. இதற்குப் …
-
- 1 reply
- 308 views
-
-
சக்தி டிவி செய்திகள் 17th July 2017, 8PM
-
- 0 replies
- 301 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 17-07-2017
-
- 0 replies
- 193 views
-
-
நிரந்தர அரசியல் தீர்வு எனும் இலக்கை அடையும்வரையாவது மக்களுக்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதொரு அரசியல் தீர்வு எட்டப்படும் வரையிலாவது பொதுச்சிந்தனயுடன் மக்களுக்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம். நம்மிடையே உள்ள கட்சி பேதங்களை மறந்து நிரந்தனமான அரசியல்தீர்வு கிடைக்கும் வரையாவது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எனும் அரசியல் இயக்கம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். அதுவரை கூட்டமைப்பு உடைந்துபோவதை அனுமதிக்கமுடியாதென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா கோவில்குளத்தில் நேற்று (16.07) நடைபெற்ற வீரமக்கள் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர்…
-
- 0 replies
- 336 views
-
-
எமக்கும் ரணிலுக்கும் இடையில் டீல் இல்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த (ஆர்.யசி) அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி களை மறந்து வெறும் ஊழல் மோசடிகளை மாத்திரமே மேற்கொண்டு வருகின்றது. எம்மை பழிவாங்குவதென்ற ஒரே நோக்கம் மாத்திரமே அரசாங்கத்திடம் உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். எமக்கும் ரணிலுக்கும் இடையில் எந்தவொரு டீலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஆட்சியை கைப்பற்றும் வரையில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு …
-
- 0 replies
- 326 views
-
-
"ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது" எம்.எம்.மின்ஹாஜ் நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்கவே தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டது. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செல்வது மிகவும் கடினமான பயணமாகும். எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். ஓரளவு பிழைத்தாலும் எங்கு போய் மோதும் என்று தெரியாது. எனினும் இவையனைத்தையும் அறிந்த பின்னரே தேசிய அரசாங்கத்தை நிறுவினோம். ஆகவே நாட்டின் நலனை கருத்திற்கொண்டு தேசிய அரசாங்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் புதிய அடுக்குமாடி வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நடும…
-
- 0 replies
- 440 views
-
-
உடைக்கப்பட்ட மதிலுக்காக அஞ்சலித்த பழைய மாணவர் யாழ். இந்துக் கல்லூரியில் சம்பவம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விளையாட்டு மைதான சுற்று மதில் இடிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய மாணவர்கள் அதற்காக அஞ்சலி செலுத்தினர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. பாடசாலை மைதானத்தின் ஒரு பகுதி மதில் கடந்த வியாழக்கிழமை இடிக்கப்பட்டது. மதில் இடிக்கப்பட்டமைக்கு பழைய மாணவர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். சமூகவலைத் தளங்களில் இது தொடர்பான கண்டனப் பதிவுகளையும், அந்த மதில் தொடர்பான கடந்த கால நினைவுப் பதிவுகளையும் வெளியிட்டனர். சமூகவலைத் தளம் ஊடாக, இது தொடர்பான கலந்…
-
- 12 replies
- 854 views
-
-
கடற்றொழில் அமைச்சருக்கு 2 வாரங்கள் கால அவகாசம் எஸ்.நிதர்ஷன் முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழில்களில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்களை 2 வாரங்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், கடற்றொழில் அமைச்சருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளார். அத்துமீறல்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களை ஒன்று திரட்டி கொழும்பில் உள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல…
-
- 10 replies
- 835 views
-
-
நெடுந்தீவுக் கடலில் நங்கூரமிடும் தளம் தேவை கடற்றொழிலாளா்கள் கோரிக்கை நெடுந்தீவுப் பிரதேசத்தில் மீன்பிடிக் கலங்களைப் பாதுகாப்பாக நங்கூரமிட்டு தரித்து வைப்பதற்கும் பாதுகாப்பாகக் கரை சேருவதற்கும் நங்ககூரமிடுதளமோ அல்லது எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் பிரதேசத்தில் இல்லை என அந்தப் பகுதி கடற்றொழிலாளா்கள் விசனம் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் தெரிவித்தாவது, பல்வேறு நிலைகளிலும் பின்தங்கிக் காணப்படும் எமது நெடுந்தீவுப் பிரதேசத்தில் பெரும்பாலானோர் கடற்றொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றோம். ஆயிரத்து 200 கடற்றொழிலாளர்களைக் கொண்ட எமது …
-
- 0 replies
- 438 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடலில் நடந்து செல்வதற்கான வசதி அறிமுகம்; மகிழ்ச்சியில் மக்கள்! யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைக்கு பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரைச் சுற்றுலா மையத்தில் கடலில் நடக்கும் வசதி மேம்படுத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டத்துக்காக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு, யாழ். மா…
-
- 26 replies
- 2.3k views
-
-
‘ஊழல் புரிந்ததாக எங்கும் குறிப்பிடவில்லை’// பொ.ஐங்கரநேசன் “என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்த குழு, தனது அறிக்கையில், நான் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவோ, இலஞ்சம் வாங்கியதாகவோ, ஊழல் புரிந்ததாகவோ எங்கும் குறிப்பிடவில்லை. இவையெவையும் நிரூபிக்கப்படவில்லை என்று தங்களது அறிக்கையில் தெரிவித்திருக்கும் விசாரணைக்குழு, கடைசியில், இதற்கு முரணான வகையில், என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அவர்களது தீர்ப்பின்படி நான் இலஞ்சம் வாங்காததும் ஊழல் செய்யாததுமே அரசியலில் நான் செய்த குற்றமாக உள்ளது” என்று வட மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். …
-
- 10 replies
- 682 views
-