ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
திங்களன்று இலங்கை வருகிறார் ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐக்கியநாடுகளின் மனித உரிமை மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான விசேட நிபுணர் பென் எமர்சன் எதிர்வரும் 10 ஆம்திகதி இலங்கை வருகிறார். எதிர்வரும் 14 ஆம்திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐ.நா. நிபுணர் பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் அவை எவ்வாறு மனித உரிமையை ஊக்குவிப்பதிலும் பாதுகாப்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், ந…
-
- 0 replies
- 304 views
-
-
எனது அமைச்சை ஜனாதிபதி கேட்டால் கொடுக்கத் தயார் : சாகல ரத்நாயக்க அழுத்தங்கள் இன்றி நான் சுயாதீனமாகவே சட்டம் ஒழுங்கு அமைச்சின் கடமைகளை முன்னெடுக்கின்றேன். ஜனாதிபதி என்னிடம் இருந்து அமைச்சைப் பொறுப்பேற்று வேறு அமைச்சுப் பொறுப்பில் என்னை கடமை செய்யுமாறு பணிப்பாரானால் அது தொடர்பில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அந்த அமைச்சிலும் இதே போன்று சிறப்பாக சேவைகளை முன்னெடுப்பேன் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சார்க் நாடுகளின் சட்டம் ஒழுங்கு அமைச்சர்களின் கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக்வியலாளர் சந்திப்பில் கலந்துகொன்டு ஊடக்வியலாளர்களின் கேள்விக்கு…
-
- 0 replies
- 239 views
-
-
சிங்களத்தில் சீறிய தமிழ் அமைச்சர்; சிடுசிடுத்த எதிரணி உறுப்பினர்! யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் இன்றைய தினம் நாடாளுமன்றில் கடுந்தொனியில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. இன்றைய தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக அவர் பேசியபோது, எதிரணியைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. இதனால் கோபமடைந்த நிலையிலேயே அவர் சிங்கள மொழியில் ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது. எதிரணியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளரான தினேஸ் குணவர்தன உள்ளிட்ட சிலரே இவ்வாறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் ஆத்திரமுற்ர அமைச்சர், “அபிட்ட கத…
-
- 1 reply
- 765 views
-
-
யாழ். பல்கலையில் இராணுவத்தினர் பந்தல் அமைக்கும் பணியில்! யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் கலாச்சார நிகழ்வுகள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்றையதினம் இராணுவ வாகனங்களில் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் பந்தல் அமைப்பதற்கான பொருட்கள் கொண்டுசெல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. அதன்பின்னர், பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களுடன் இராணுவத்தினர் சிவிலுடையில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றர். யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினருக்கு என்ன வேலை? இது தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது http://thuliyam.com/?p=72804
-
- 1 reply
- 615 views
-
-
கொழும்பு வந்தார் தமிழிசை! - சிறிதரன்,சிறிநேசன் வரவேற்பு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவி வைத்திய கலாநிதி தமிழிசை சௌந்தர்ராஜன், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டு, இன்று காலை கொழும்பு வந்தடைந்தார். அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிவஞானம் சிறிதரன், ஞா.சிறிநேசன் ஆகியோர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர். தமிழிசை தலைமையிலான குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.seithy.com/listAllNews.php?newsID=185784&category=TamilNews&language=tamil
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
அரசியல் லாபங்களை ஒதுக்கி விட்டு மக்களுக்காக மட்டும் பேசுங்கள் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் இன்றைய தினம் -06- நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர், பொருத்து வீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிப்பவர்கள் சற்று சிந்தித்து விட்டு பேச வேண்டும். தெற்கிலும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவ்வாறான நிலையிலும் கூட வடக்கு கிழக்கிற்கு வீட்டுத்திட்டங்கள் எமது அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசின் திட்டங்களை குறை கூற வேண்டாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்க வேண்டியது அவசியம். வீடுகள் தொடர்பில் மக்கள் மூலம் எமக்கு 65,000…
-
- 1 reply
- 457 views
-
-
மகாத்மாக்களை புரியாததால்தான் கிட்டுகள் வேறு மொழியில் பேசினர் in செய்திகள், முக்கிய செய்திகள் July 6, 2017 மகாத்மாக்களின் அகிம்சை மொழியை சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்த கொள்ள மறுத்தார்கள். இதனால்தான் ஆயுதப் போராட்டம் கருக் கொண்டது. கிட்டுகள் தோன்றி வேறுமொழியில் பேசத் தொடங்கினார்கள். என்று வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சாவற்கட்டு மகாத்மா மைதானத்தில் நேற்று நடைபெற்ற மகாத்மா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில், கிட்டு முன்பள்ளி என்ற பெயரே இராணுவத்தின் நெருக்குதல் காரணமாக மகாத்மா முன்பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. …
-
- 1 reply
- 694 views
-
-
தீவகத்தில் 1000 லீற்றர் குடிநீர் 600 ரூபா, காசுள்ளவன் மட்டும் குடிக்கலாம்! யாழ். தீவகப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவிவரும் குடிநீர்ப் பிரச்சனைக்கு பிரதேசசபையோ, அரசியல்வாதிகளோ எந்தவொரு தீர்வையும் தரவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கு பிரதேச சபையினால் 1000 லீற்றர் குடிநீர் 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காசுள்ளவர்கள் மாத்திரமே நீரை வாங்குவதாகவும், ஏழைகள் குளத்துநீரை அல்லது கடல் நீரைப் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்பிரச்சனை தீவகத்தில் நீண்ட காலமாக நிலவி வருவதாகவும், இதனை பிரதேச சபை கண்டுகொள்ளாதிருப்பதுடன், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் அம்மக்கள் குற்றம் சாட்டியு…
-
- 0 replies
- 539 views
-
-
ஏகோபித்த தீர்மானித்தினை மீள்பரிசீலனை செய்யுங்கள் : 4 பௌத்த பீடங்களிடங்களையும் கோருகின்றது த.தே.கூ புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டின் பிரதான நான்கு பௌத்த பீடங்களும் எடுத்துள்ள தீர்மானமானம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் அழிப்பதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தீர்மானத்தினை மீள்பரிசீலனை செய்யுமாறும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய நிக்காய, அமரபுர நிக்காய ஆகிய நான்கு பீடங்களும் புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் சீர்திருத்தங்களோ அவசியமில்லை என கூட்டாக தீர்மானித்துள்ளதோடு அந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிப்பதாகவும் மு…
-
- 8 replies
- 503 views
-
-
முதலமைச்சராக தான் இருக்கவேண்டுமென நினைத்தே மக்கள் அணிதிரண்டனர் என விக்னேஸ்வரன் நினைத்தால் அது தவறு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! முதலமைச்சராகத் தான் தொடர்ந்தும் பதவி வகிக்கவேண்டுமென்றே பொதுமக்கள் தமது வீட்டின்முன் அணி திரண்டனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நினைத்தால் அது தவறு என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “மாகாண சபையில் முதலமைச்சரை தொடர்ந்தும் வைத்திருப்பதால் எங்களுக்கு நன்மை இல்லை. எங்களுக்கு ஓர் அமைச்சுப் பதவியும…
-
- 9 replies
- 723 views
-
-
ஆறு புதிய கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி புதிய ஆறு கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேரப்பிரிய தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்தற்காகன விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 92 கட்சிகளின் அனுமதி கோரியிருந்த நிலையிலேயே ஆறு கட்சிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.virakesari.lk/article/21584
-
- 0 replies
- 119 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (06/07/2017)
-
- 0 replies
- 390 views
-
-
வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுதலிலிருந்து ஆட்களை பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதென அரசாங்கம் இறுதி நேரத்தில் சபையில் அறிவித்திருந்தது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வலுக்கட்டாயமாக காணமல்போக்கப்படுதலிலிருந்து ஆட்களை பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயச் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்படுவதாக ஒழுங்குப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் சபாநாயகர் அறிவிப்பு, மனுக்களை தாக்கல் செய்தல், பிரதமரிடத்திலான கேள்வி நேரம், வாய்மூல விடைக்கான கேள்விநேரம் ஆகியன நிறைவட…
-
- 0 replies
- 402 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள்! [Thursday 2017-07-06 07:00] யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று கரும்புலிகள் நாள் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்தினையும், கரும்புலிகளாக இன்னுயிர் நினைவு சின்னத்திற்கு சுடரேற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=185808&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 577 views
-
-
கிழக்கின் புதிய ஆளுநருடன் இணைந்து செயற்படத்த தயார் ; கிழக்கு முதல்வர் கிழக்கின் புதிய ஆளுநராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரோஹித்த போகொல்லாகமவுடன் இணைந்து கிழக்கின் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளத் தான் தயாராக இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் புதிதாக கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித்த போகொல்லாகமவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/21564
-
- 1 reply
- 142 views
-
-
மக்களே அவதானம் : தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி (எம்.ஆா்.எம்.வஸீம்) இலங்கை மற்றும் கனடா அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினூடாக தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்து வந்த பெண்ணொருவரை பணியகத்தின் விசாரணைப்பிரிவு கைதுசெய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவிக்கையில், தொழில் தொடர்பான எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் அரசாங்கம் கனடாவுடன் செய்துகொண்டதில்லை. இவ்வாறான பொய் பிரசாரங்களை யாரும் நம்பவேண்டாம். அத்துடன் இதுபோன்ற தகவல்களை நம்பி வெளிநாட்டு தொழிலுக்கு செல்பவர்கள், பத்தரமுல்லையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்த…
-
- 2 replies
- 394 views
-
-
நாங்கள் செத்தாலும் பரவாயில்லை சம்பந்தன் ஐயா இந்த ஊருக்கு வந்தால் திருக்கை வாலால் அடிப்போம் – கிழக்கந்தைக் கிராம மக்கள்! அடுத்த தேர்தலுக்கு சம்பந்தன் ஐயாவோ அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் யாரும் இங்கு வாக்குக் கேட்டுவந்தால் திருக்கை வாலால் கட்டாயம் அடிப்பேன் என கிழக்கந்தை கிராமத்து ஆர்டிஎஸ் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், யுத்தம் இடம்பெற்றவேளை தாம் மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து சென்றவேளை சவக்காலையில் குடியமர்த்தப்பட்டதாகவும், பின்னர் யுத்தம் காரணமாக தாம் உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் மூன்றுஇடங்களுக்கு இடம்பெயர்ந்ததாகவும் மூன்று தடவையும் தாம் சவக்காலையில் குடியேற்றம் செய்யப்பட்டோம். நாங்கள் இறுதியாக கிளிவெட்டி என்ற இடத்த…
-
- 4 replies
- 595 views
-
-
வடக்கு மாகாண சபையின் 98ஆவது அமர்வு – காணொலி வடக்கு மாகாண சபையின் 98ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை அதன் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவென விசேட அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டப்படும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அமர்வில் அறிவித்தார். http://uthayandaily.com/
-
- 1 reply
- 415 views
-
-
சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது? ‘பாதுகாவலன்’ வாரஏட்டின் ஆசியர் தலையங்கம் புதிய அரசியல் யாப்பு தேவையில்லையென மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதை விமர்சித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கத்தோலிக்க திருச்சபையின் ‘பாதுகாவலன்’ வாரஏடு ஆசியர் தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது. ‘சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது?’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த ஆசிரியர் தலையங்கத்தில் மகாநாயக்க தேரர்களிடமே நாட்டை ஒப்படைத்து விடுங்கள் என கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தலையங்கம் முழுமையாக கீழே தரப்பட்டுள்ளது. சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்கள் எங்கே போவது 1920இல் இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் பௌத்தகுருமாரின் ஆதிக…
-
- 0 replies
- 465 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 06-07-2017
-
- 0 replies
- 163 views
-
-
அரசியல் என்பது வாய்ப்புக்கு ஏற்ப வளைவதுதான் இதுவரை காலமும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று கூறிவந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இப்போது தனது கொள்கையைக் கைவிட்டு அல்லது தளர்த்தி தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளது. வடக்கு மாகாண சபை தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல என்ற காரணத்தாலேயே, அதாவது மாகாண சபையை ஒரு தீர்வாகத் தாம் ஏற்காத காரணத்தாலேயே அந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அந்தக் கட்சி கூறிவந்தது. இப்போது அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது. அது நல்ல விடயம்தான். போருக்குப் பின்னர் இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தமிழ்த் தேச…
-
- 0 replies
- 389 views
-
-
திடீரெனத் தீப்பற்றிய பனை வடலிகள் தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பகுதியில் திடீரென பனை வடலிகளில் நேற்றுமுன்தினம் தீப்பற்றி பெரும் பகுதி காடு அழிந்துள்ளதென அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். வடலிப் பனைகளில் பற்றிய தீயை யாழ்.மாநகர தீயணைப்பு படையினரும் அப் பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரும் இணைந்து மூன்று மணி போhராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதெனவும் தெரிவி்க்கப்படுகிறது. http://uthayandaily.com/story/9820.html
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையம்! கிளிநொச்சியில் இலங்கையின் மிகப்பெரிய மாற்றுசக்தி மின் நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் இன்று காலை பூநகரி கௌதாரிமுனை மன்னித்தலை செபஸ்ரியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து குறித்த மாற்றுசக்தி மின் நிலையம் அமைய இருக்கின்ற இடத்தையும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர் காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைகொண்டு மாற்று மின்சக்தி நிலையங்களை உருவாக்குவதே குறித்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் சூரியச…
-
- 0 replies
- 386 views
-
-
இனவாதத்தை தூண்ட ஆதரவு அளிப்பது தண்டனைக்குரிய குற்றம் (ஆர்.ராம்) சபையில் வலியுறுத்தினார் பிரதமர் ரணில் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இனவாத, அடிப்படைவாதங்களை தூண்டுவதும் அவ்வாறு தூண்டுபவர்களுக்கு ஆதரவளிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என சபையில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிகாரத்திற்கு வர முயற்சிப்பவர்களே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இனவாத, மதவாதங்களை அடிப்படையாக கொண்டு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் இனவாத, அ…
-
- 0 replies
- 222 views
-
-
அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – TNA குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரியுள்ள அவர் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் செயற்படுவதே மிகவும் பொருத்தமானதாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார். http://glob…
-
- 0 replies
- 143 views
-