ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
முஸ்லிம் தலைவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்
-
- 2 replies
- 297 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (04/07/2017)
-
- 0 replies
- 221 views
-
-
கண்டியிலுள்ள மதிப்பாக போற்றப்படும் பல இனங்கள் கல்வி பயிலும் பிரபலமான பாடசாலையில் 7 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் ஒரு முஸ்லிம் மாணவன் அப்பாடசாலையிலுள்ள கராட்டிக் கழகத்தில் சேர்வதற்காக சென்ற போது அங்கிருந்த சிங்கள மாணவர்கள், “ISIS இல் இணைவதற்காகவா கராட்டி பழக வந்தீர்கள்.?” என்று நையாண்டி செய்து, அவரைக் குழப்பியிருக்கிறார்கள். அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அவர் அந்த கழகத்தில் சேரவில்லை. இனரீதியாக முடுக்கிவிடப்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக தேசிய ரீதியாக நஞ்சுட்டப்பட்ட இன விரோத கருத்தியலை பெரியவர்களோடு வளரும் எதிர்கால சந்ததியினரும் உள்வாங்கி இருப்பது அபாயகரமானது மட்டுமல்ல அது துரதிர்ஷ்டவசமான நிலையுமாகும். இந்த இனவாத சமூக விரோத சக்திகளை கையாளும் போது மிகவும் அவதானமானதும் ந…
-
- 1 reply
- 593 views
-
-
சம்பந்தன் நாடு திரும்பினார்; அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு பாராளுமன்றக் குழுவுடன் ஜேர்மனி சென்றிருந்த எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந் தன் நேற்று நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தணிப்பதற்கும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக சில உறுப்பினர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்து வதற்கும் அவசர கூட்டமொன்றுக்கு எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஏற்பாடு செய் வதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. http://valampurii.lk/valampurii/content.php?id=15041&ctype=news
-
- 0 replies
- 364 views
-
-
அரசாங்கத்தின் செயல் திறனற்ற தன்மையை மறைப்பதற்காக தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் அரசாங்கத்திற்கு எம்மீது உள்ள பயத்தின் காரணமாக வேறு விதமான கட்டமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றதாகவும் அவர் கூறியுள்ளார். திருகோணமலை நகர மண்டபத்திற்கு அருகில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தற்போது நாட்டின் தலைவர் யாரென்பது தெரியாமலுள்ளது. ஒவ்வொருவரும் தாமே தலைவர் என கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் மக்களும் தமது பிரச்சினைகளை யாரிடம் தெரிவிப்…
-
- 0 replies
- 334 views
-
-
மயிலிட்டித்துறை மக்களிடம் கையளிப்பு 27 ஆண்டுகளாகப் பாதுகாப்புத் தரப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த மயிலிட்டித் துறைமுகம் மக்களிடம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது. j/249 பிரதேச செயலர் பிரிவில் 54 ஏக்கர் நிலப் பரப்பு மக்கள் பாவனைக்கு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/9081.html
-
- 12 replies
- 891 views
-
-
சோதனை மிக்க தமிழர்களது எதிர்காலம் வடக்கு அரசிய லரங்கில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பனவாகவே காணப்படுகின்றன. அதேவேளை தமிழ் மக்கள், வாழ்க்கையே பிரச்சினைதான் என்பதுபோன்று சிரமத்தோடு தமது வாழ்நாளைக் கடத்தி வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்மென்ற அறிகுறிகூடத் தென்படவில்லை. அரசிடமும் இவர்களுக்கான மாற்றுத் திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்த் தலைவர்கள் என்னதான் உரத்துப் பேசினாலும் அரசைப் பொறுத்தவரையில் செவிடன் காதில் ஓதிய சங்கின் நிலைதான் காணப்படுகின்றது. இதனால் தம…
-
- 1 reply
- 381 views
-
-
காணாமல்போனவர்களுக்கு அரசே பொறுப்பு கூறவேண்டும் (எம்.எப்.எம்.பஸீர்) மட்டக்களப்பில் இரு தமிழ் இளைஞர்கள் கைதாகி காணாமல்போன சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு மட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நேற்று உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் பிரசாத் டெப் தலைமையிலான உபாலி அபேரத்ன, அனில் குணரத்ன ஆகியோருடன் கூடிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது. இந் நிலையில் இந்த காணாமல் போதலுக்கு பொறுப்பேற்று அரசாங்கம் காணாமல் போனோரின் அடிப்படை உரிமை…
-
- 1 reply
- 273 views
-
-
பிரபாகரனின் பெரியப்பாவாக விக்கி முயற்சி அமைச்சர் எஸ்.பி. சாடல் வடக்கு மாகாண முதல்வர் தனிஈழம் ஒன்றை அமைக்கும் கனவில் இருக்கின்றார். அவர் தமிழ் மக்களிடத்தில் பிரபலமாகிப் பிரபாகரனின் பெரியப்பாவாகவே முயற்சித்து வருகிறார். நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்று அவர் நினைப்பாராயின் அது கனவாக மாத்திரமே இருக்கும் என அமைச்சர் எஸ் பி.திஸாநாயக்க தெரிவித்தார். வடக்கு முதல்வர் கொழும்பின் பார்வை தீர்வுக்கு உதவாது எனக் கூறியமை குறித்து கருத்து தெரிவிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டில் வாழும் மூவின ம…
-
- 1 reply
- 512 views
-
-
“அனைத்து வணக்கஸ்தலங்களின் உண்டியலுக்கும் சீல் வைக்கப்படும்” விகாரைகளில் உள்ள உண்டியலுக்கு சீல் வைக்கப்பட்டதைப் போன்று எதிர்க்காலத்தில், ஏனைய கோயில் மற்றும் தேவாலயங்களுக்கு சீல் வைக்கப்படும் என, பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (4) தெரிவித்தார். கொழும்பில் இன்று (4) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இதைத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/அனைத்து-வணக்கஸ்தலங்களின்-உண்டியலுக்கும்-சீல்-வைக்கப்படும்/175-199901
-
- 3 replies
- 515 views
-
-
சவூதி இளவரசர் இலங்கைக்கு வந்தார். சவூதி அரேபிய இளவரசர் அல்வலீட் பின் தலால் பின் அப்துல்அஸிஸ் அல்சௌட், இன்று (4) காலை விசேட விமானம் ஒன்றின் ஊடாக, இலங்கைக்கு வந்தார். இதன்போது இவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஆகியோரைச் சந்தித்ததுடன், நாடாளுமன்ற வளாகத்துக்கும் சென்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சவூதி-இளவரசர்-இலங்கைக்கு-வந்தார்/175-199906 இலங்கையில் இளவரசர்... இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, சவூதி அரேபிய இராச்சியத்தின் இளவரசர் அல்வலீட் பின் தலால் அப்துல்அஸீஸ் அல் சௌத், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, இன்று (04) சந்தித்தார்.…
-
- 0 replies
- 418 views
-
-
முல்லையில் புதிய முஸ்லீம் குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம் : மக்கள் விசனம்! முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் ஒரு தொகுதி முஸ்லீம் மக்களை குடியேற்றம் செய்வதற்கான முதல்கட்ட வேலைகளே இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குடியேற்றதிற்கான மேற்பார்வைக்கு வருகைதந்த அதிகாரிகளுடன் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடியேற்றதிற்கு எதிராக வாய்த்தர்க்கதில் ஈடுபட்டிருந்தனர். இன்றைய தினம் கொழும்பிலிருந்து வருகைதந்த ஜானாதிபதியால் அமைக்கபட்ட ”மக்களின் தேவைகளுக்காக காணிகளை விடுவிக்கும் செயலணியால்” அதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக குடியேற்றம் செய்யவிருக்கும் பகுதி, மேற்பார்வை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலைய…
-
- 0 replies
- 242 views
-
-
தம்புள்ளை விகாரையின் ஒருநாள் வருமானம் எவ்வளவு.? இதோ (ஆர்.யசி) பௌத்த அடையாளங்களை வைத்து மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை விகாரையின் ஒருநாள் வருமானம் 80 இலட்சம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பௌத்த புராதான அடையாளங்களை மாத்திரம் அல்லாது சகல மத புராதான சொத்துக்களையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/21482
-
- 0 replies
- 297 views
-
-
மாவீரர் குடும்பங்கள், போராளிகளுக்கு நிதியைப் பெற்றுத்தர மறுத்தவர்கள் இன்று தமிழ்த் தேசியம் பேசுகிறார்கள் வடக்கு அமைச்சர் டெனீஸ்வரன் சாட்டை “முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்க ளுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்க நிதியைப் பெற்றுத்தராதவர்கள் இப்போது தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்” இவ்வாறு வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்திய அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் மறுவாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கான 2017ஆம் ஆண்டுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களை…
-
- 0 replies
- 234 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 04-07-2017
-
- 0 replies
- 221 views
-
-
ஜனாதிபதி அலுவலக சின்னத்தை பலப்படுத்துவோம் : ஜனாதிபதியின் புதிய செயலாளர் ஒஸ்டின் பெர்னண்டோ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வரையறை செய்யப்பட்ட கொள்கையை முன்னெடுப்பதும், திட்டவட்டமான கொள்கைகள் இல்லாத விடயங்களில் ஜனாதிபதியின் தொலைநோக்கிற்கு ஏற்ப புதிய கொள்கைகளை வகுப்பதும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின் பணியாகும் என புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார். அரசாங்க நிறுவனங்கள் அனைவருடனும் நெருங்கிப் பணியாற்றுவதுடன், ஜனாதிபதி அலுவலகத்தின் சின்னத்தை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கற்றுக்கொள்வதற்கு தான் எப்போதுமே விருப்பத்துடன் இருப்பதாக தெரிவித்த அவர், கற்றுக்கொள்வதற்கு காலம் கடந்…
-
- 0 replies
- 168 views
-
-
கடந்த காலச் சூழல் மீண்டும் வேண்டாம் மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற இராணுவம் தயார் என்கிறார் தளபதி கடந்த காலத்தில் நிலவிய விரக்தியான சூழ்நிலைக்கு நாம் மீண்டும் செல்லக்கூடாது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்காத மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நாம் தயாராக இருக்கின்றோம். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். மயிலிட்டித்துறைமுகம் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. மயிலிட்டித்துறை முகத்துக்கு அருகில் உள்ள ஆலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பந்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில்…
-
- 3 replies
- 569 views
-
-
கொட்டும் மழைக்கு மத்தியில் கிழக்கில் மஹிந்தவின் பேரணி (திருகோணமலையிலிருந்து எம்.சி.நஜிமுதீன்) நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த மக்கள் பேரணி நேற்று மாலை 3.00 மணிக்கு திருகோணமலை நகரசபைக்கு அருகிலுள்ள முற்றவெளியில் ஆரம்பமானது. அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி கிழக்கு மாகாணத் தில் ஆரம்பிக்கும் எழுச்சிப்பேரணியாக பிரகடனப்படுத்தியே இப்பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலிருந்தும் அதிகளவானோர் கலந்துகொண்டிருந்ததுடன் அநுராதபுரம், குருநாகல் மாவட்டங்களிலிருந்தும் கூட்டு எத…
-
- 0 replies
- 264 views
-
-
வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டுகள் மீட்பு வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் இருந்து வெடிக்காத நிலையில் 4 மோட்டார் குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கனகராயன்குளம் மன்னகுளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்காகச் சென்றவர்கள் அப்பகுதியில் வெடிக்காத நிலையிலிருந்த 4 மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர். இதையடுத்து பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டபோது மேலும் அப்பகுதியில் மோட்டார் குண்டுகள் இருப்பதாகவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அப்பகுத…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டுநகர் துயிலும் இல்லம் சீரமைப்பு மட்டக்களப்பு – வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள வளாகம் துப்பரவு செய்யும் சிரமதானப் பணி இன்று குறித்த பகுதி மக்களின் உதவியுடன் இடம்பெற்றது. வாகரை கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்குரிய ஜே.சி.பி கனரக வாகனம் மற்றும் உழவு இயந்திரங்களை கொண்டு ஆண்கள் பெண்கள் என அனைவரும் இணைந்து குறித்த இடத்தை சுத்தப்படுத்தினர். குறித்த சிரமதானப் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண உதவி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, எஸ்.நடராஜா, ஞா.கிஸ்ணப்பிள்ளை மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். http://newuthayan.com/stor…
-
- 2 replies
- 856 views
-
-
சைட்டத்தை மூடிவிடுங்கள் : அதிரடியாக முடிவை அறிவித்தார் அமைச்சர் சம்பிக்க (ஆர்.யசி) சைட்டம் தனியார் வைத்திய பீடத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற மக்கள் புரட்சி எழுந்துள்ளது. ஆகவே சைட்டம் நிறுவனத்தை நிரந்தரமாக மூடும் வகையில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும். நீதிமன்ற தீர்மானங்கள் வரும் வரையில் காத்திருக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். வைத்திய பீடத்திற்கு தகுதியான மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக கல்வியை தொடரும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தகுதி இல்லாத மாணவர்களுக்கான நிதியை திருப்பிக் கொடுக்க வேண்டும். சைட்டம் தனியார் வைத்திய பீட கட்டிடம் மற்றும் வைத்…
-
- 0 replies
- 309 views
-
-
இராணுவத் தளபதியாக மகேஸ் சேனநாயக்கா அமைச்சர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு இடையிலான இழுபறியினால் புதிய இராணுவத் தளபதி நியமனம் தாமதப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய இராணுவத் தளபதியாக, யாழ்ப்பாணத்தில் முன்னர் பணியாற்றிய மகேஸ் சேனநாயக்காக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது. இராணுவத் தளபதி பதவிக்கு மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மேஜர் ஜெனரல் சுதந்த ரணச…
-
- 0 replies
- 437 views
-
-
‘தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்’ - எஸ்.நிதர்ஷன் "தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்” எனும் தலைப்பில் கருத்துப் பகிர்வு நிகழ்வு, யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) காலை 9.15 மணிக்கு இடம்பெறவுள்ளது. மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், “இன விடுதலைக்கான அரசியல் பயணத்தில் , தமிழ் மக்கள் முகங்கொடுத்த பல்வேறு விதமான இழப்புக்கள்” எனும் தொனிப்பொருளிலான கருத்துப் பகிர்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில், கருத்தியல்வாதிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், இளைஞர்கள் ஆகியோரைக் கலந்து கொள் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தடுமாறாத-தமிழர்கள…
-
- 0 replies
- 217 views
-
-
அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது என அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை என அவர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான எவ்வித தாக்குதல் முனைப்புக்கள் பற்றிய தகவல்களும் கிடையாது எனவும் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் கருத்து வெளியிடப் போவ…
-
- 1 reply
- 358 views
-
-
"அமெரிக்க பெண்கள் எவ்வாறு எம்மை புகைப்படம் எடுக்க முடியும்" முச்சக்கரவண்டி சாரதிகள் கேள்வி முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்ட உத்தரவு குறித்த உண்மைகள் விரைவில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இருவாரத்துக்குள் உரிய பதில் வழங்கப்படவில்லையாயின் போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் என்பன முற்றுகையிடப்படும் என அச்சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன எச்சரிக்கை விடுத்தார். ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பிரயா…
-
- 0 replies
- 333 views
-