ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
நயினாதீவில் புத்தர் சிலை நிறுவும் பணிகளை நிறுத்த ரணில் பணிப்பு நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கும் பணி களை நிறுத்துமாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாண செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நயினாதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருவதாகவும் அதனை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் வலியுறுத்தினார். இதற்க…
-
- 1 reply
- 588 views
-
-
’18 மாதங்கள் தாமதித்தே ரணில் சென்றார்’ 18 மாதங்களாத் தாமதித்து வந்த மருத்துவ சிகிச்சைக்காகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன, மீண்டும் தள்ளிப்போட முடியாமல் போனதாலேயே அவர் சென்றதாகவும் தெரிவித்தார். பிரதமர் ரணில், தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு, கடந்த சனிக்கிழமை, ஐ.அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். இலங்கையில், பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் இவ்வாறு சென்றமை, அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது, அது தொடர்பாகக் கரு…
-
- 0 replies
- 509 views
-
-
வெள்ளம் வடிந்தபோதும் நீடிக்கிறது மக்களின் அவலம் : 196 பேர் பலி, 6,22,510 பேர் பாதிப்பு நாட்டில் கடந்த சில நாட்களாக தொடரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனுடன் இணைந்ததாக ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்கள் காரணமாக 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 93 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகா மைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களை பாதிக்கும் விதமாக ஏற்பட்ட இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக மொத்தமாக ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 287 views
-
-
அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் 3 ஆவது கப்பலும் வந்தது அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் மூன்றாவது கப்பலும் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. சீரற்ற காலநிலையினால் அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மூன்றாவது கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன் பொறுப்பேற்று, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர வி…
-
- 3 replies
- 380 views
-
-
கொட்டாஞ்சேனை கொலை விவகாரம்: ரியர் அட்மிரல் ஆனந்த குருகே, லெப்டினன் கொமான்டர் தயானந்த, கடற்படை சிப்பாய் சுசந்த நேரடியாக தொடர்பு கொட்டாஞ்சேனையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் இதுவரை உயிருடன் இருப்பதாக தகவல் இல்லாத நிலையில், சடலங்கள் கிடைக்காத போதும் சாட்சிகள் கட்டளைச் சட்டத்தின் 108 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் அவர்கள் உயிருடன் இல்லை என தீர்மனைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனயவுப் பிரிவு நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தது. அத்துடன் இவ்வாறு கடத்தப்ப்ட்டு தற்போது கொல்லப்ப்ட்டுள்ளதாக நம்பப்படும் இரு தமிழர்களுக்கும் சொந்தமான தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட…
-
- 0 replies
- 169 views
-
-
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தடை செய்யப்படுவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அரசாங்கம் விடுத்த இந்த அறிவிப்பு உலகுவாழ் இந்து மக்களுக்கு பலத்த ஆறுதலைத் தந்துள்ளது. இந்து சமயத்தவர்களைப் பொறுத்தவரை மாடுகள் அவர்களின் வழிபாட்டுக்குரியவைகள். தாய்க்கு ஈடாகப் பால் தரும் பசுக்களை கோமாதா என்று போற்றி வழிபடுகின்ற பண்பாடு இந்து சமயத்தில் உண்டு. பசுவின் பால் உலகுவாழ் மக்களின் நிறை உணவு. உலகம் முழுவதும் வாழும் மக்கள் பசுப்பாலை அருந்துகின்றனர். தவிர சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகிய சிவப்பரம்பொருளின் வாகனமாக எருது விளங்குகின்றது. தவிர இந்து சமயத்தவர்கள் அணியும் திருநீறு பசுச் சா…
-
- 2 replies
- 523 views
-
-
கங்காருகளிடம் அகப்பட்ட சுமந்திரன் ப.தெய்வீகன் அவுஸ்திரேலியாவில் அருவருப்புமிக்க நிகழ்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தேறியிருக்கிறது. அரசியல் நாகரிகம் தெரியாத அநாதைகளாக புலம்பெயர்ந்த தமிழினம் தூக்கி வீசப்பட்டுவிடுமோ என்று அச்சப்படக்கூடியளவுக்கு மிகவும் மன வேதனைக்குரிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிட்னி சம்பவம் முடிந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றுக்காக சிட்னியிலுள்ள ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலைக்கு சென்றபோது, அங்கு கூடியிருந்த 30-40 தமிழ் இளைஞர் கோஷ்டி போட்ட கூத்துக்களையும் சுமந்…
-
- 42 replies
- 3.3k views
-
-
பாகுபலி படம் பார்த்ததில் இருந்து கட்டப்பா பற்றிய எண்ணம்தான் நம் மனதில் நிழலாடுகிறது. மகிழ்மதி அரசுக்கு அடிமை என்ற ஒரே காரணத்துக்காக அமரேந்திர பாகுபலியின் முதுகில் குத்துவது எந்தளவுக்கு நியாயமானது என்ற கேள்விதான் கட்டப்பாவை நம் ஆழ் மனம் அடிக்கடி நினைத்துக் கொள்கிறது. கட்டப்பா நினைத்திருந்தால், பாகுபலியை கொல்வதற்கு மகிழ்மதியின் இராஜமாதா உத்தரவிட்ட செய்தியை பாகுபலியிடம் கூறியிருக்கலாம். அவ்வாறு கூறியிருந்தால் மிகப்பெரிய அழிவுகள் தடுக்கப்பட்டிருக்கும். இதுபற்றி நம் நண்பர்களுடன் கலந்துரையாடியபோது, அட அதைவிடு அமரேந்திர பாகுபலியின் மரணத்துக்குப் பின்னர் மகேந்திர பாகுபலியின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக வேனும் கட்டப்பா பல்வாள்தேவனின் அரசு மீது போர் தொ…
-
- 0 replies
- 521 views
-
-
கிளிநொச்சியில் பாரிய நீர்த்தாங்கி அமைந்திருந்த காணி விடுவிப்பு கிளிநொச்சியில் பாரிய நீர்த்தாங்கி அமைந்திருந்த காணி இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான குறித்த காணியை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரிடம் இன்று உத்தியோகப்பூர்வமாகக் கையளித்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன கூறினார். இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் யுத்த அடையாள சின்னமாக கடந்த 8 வருடங்களாக அந்த இடத்தை இராணுவத்தினர் நிர்வகித்து வந்தனர். நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு குறித்த காணியிலிருந்து வெளியேற இராணுவம் தீர்மானித்ததாக இராணுவ ஊடகப் பேச்ச…
-
- 1 reply
- 389 views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெங்காயத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பல வருடகால இடைவெளிக்குப் பின்னர் ஒரு அந்தர் வெங்காயம் 10 ஆயிரம் ரூபாவாக விற்கப்படுகின்றது. வடமராட்சி கம்பர்மலை, புலோலி, அல்வாய் கெருடாவில், திக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து விதை வெங்காயத்துக்காக வலிகாமம் பிரதேச விவசாயிகளும், புத்தளம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கவென அந்தப் பகுதியைச் சேர்ந்த வெங்காய வியாபாரிகளும் போட்டி போட்டு வெங்காயத்தைக் கொள்வனவு செய்து வருகின்றனர். காலபோக வெங்காயச் செய்கையின்போது கடும் மழை பெய்தது. அதனால் பெரும் எண்ணிக்கையான பரப்பளவில் வெய்காயப் பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்தது. தப்பிப்பிழைத்த வெங்காயம் அறுவடையின் பின்னர் மிக உச்ச விலையை எட்டிப் பிடித்துள்ளது. இருந்த…
-
- 0 replies
- 314 views
-
-
சக்தி டிவி செய்திகள் 30th May 2017, 8PM
-
- 0 replies
- 784 views
-
-
நாட்டின் ஒரு பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் கடும் வறட்சி நிலவுகிறது நாட்டின் ஒரு பகுதி மக்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வட மாகாணத்தில் பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனர்த்தங்கள் பதிவாகியுள்ள நிலையில், வட மாகாணத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாட்டங்களில் பயிர் செய்கைக்குப் போதுமான மழை வீழ்ச்சி கடந்த சில மாதங்களாக கிடைக்காமையினால் வயல் நில…
-
- 0 replies
- 314 views
-
-
வெள்ள நிவாரணத்துக்காகச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது! (படங்கள்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சென்ற விமானப்படையினரின் ஹெலிகொப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானியின் கட்டுப்பாட்டை இழந்த குறித்த எம்-17 ஹெலிகொப்டர் காலி - பெத்தேகம பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் குறித்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லைனெவும், ஹெலிகொப்டர் முற்றாக சேதடைந்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/20430
-
- 11 replies
- 945 views
-
-
அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் தோல்வியிலேயே முடியும் – சீ.வீ.கே அரசியல் தலைமைகளின் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக இந்த மண்ணின் மக்களே காணப்படுவார்கள். அரசியலில் புலம்பெயர் தமிழர்களின் தலையீடுகள் நிச்சயமாக தோல்வியிலேயே முடியும். தங்கள் அரசியல் தலைமைகளாக யாரை தெரிவுசெய்ய வேண்டும் என மக்களுக்கு தெரியும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞாணம் தெரிவித்தார். சுவிஸ் செந்தமிழ்ச் சோலை அமைப்பினரால் போரினால் பாதிக்கப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வீரசிங்கம் மண்டப முதலாம் மாடியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாற…
-
- 7 replies
- 863 views
-
-
கிளிநொச்சியில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் பொலிஸ் நிலையம் போன்ற இடங்களில், பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு, கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்டம் 100ஆவது நாளாக இன்று இடம்பெறுகின்றது. இந்நிலையிலேயே இவ்வாறு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் அசம்பாவிதங்கள் ஏற்படாலாம் எனக் கருதியே இவ்வாறு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/வன்னி/கிளிந…
-
- 4 replies
- 467 views
-
-
இரணைதீவு மக்களை நோக்கி கடற்படையினர் ஆபாச சைகை காட்டி மிரட்டினாரா ? கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இரணைதீவு மக்கள் தங்கள் பூர்வீக நிலைத்தினை தம்மிடமே மீள கையளிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை கடற்படையினர் எடுத்து வருவதாகவும் மக்களை நோக்கி கைகள் மூலம் ஆபாச சைகைகளை காட்டி அச்சுறுத்தி இருந்தனர் எனவும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. அந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரியும் நபர் ஒருவர் ‘ கடற்படையினர் புகைப்படம் எடு…
-
- 0 replies
- 300 views
-
-
முன்னாள் எம்.பி விநாயகமூர்த்தி உயிரிழப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கொழும்பு அப்பலோ மருத்துவமனையில் சற்று முன்னர் உயிரிழந்தார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது இறுதிக் கிரியைகள், கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது. http://uthayandaily.com/story/4380.html முன்னாள் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி அவர்கள் இன்று இயற்கை எய்தினார் முன்னாள் யாழ்மாவட்ட …
-
- 4 replies
- 629 views
-
-
மழையுடன் கூடிய காலநிலை செப்டெம்பர் வரை தொடரும் ; சூறாவளி வராது என்கிறது வளிமண்டலவியல் திணைக்களம் தற்போது நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் நீடிக்கும் சாத்தியம் உள்ளது. அதனால் இடி, மின்னலுடன் கூடிய மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. அதேநேரம் வங்களா விரிகுடாவில் மையம் கொண்டிருந்த உயர் அழுத்த காற்று இலங்கைக்கு அப்பால் பயணிப்பதால் சூறாவளி காற்று ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லாது போயுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் அதிகாரி அதுல கருணாரத்ன தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத…
-
- 0 replies
- 156 views
-
-
ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்: இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள சிங்கப்பூர் தற்போதைய இயற்கை அனர்த்த சூழ்நிலையில் இலங்கைக்குக் கைகொடுக்கும் வகையில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை சிங்கப்பூர் உதவியாக வழங்கவுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். சுமார் ஐந்து இலட்சம் பேர் இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் அரசு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க முன்வந்துள்ளது. இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ ஸீன் லூங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி வ…
-
- 2 replies
- 416 views
-
-
உயிரிழந்தவர்களுக்கு யாழில் அஞ்சலி -எஸ்.நிதர்ஷன், எஸ்.ஜெகநாதன் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், தென்னிலங்கையில் உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாவட்டத்தின் 2017ஆம் ஆண்டின் இரண்டாவது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெறுகின்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், தென்னிலங்கையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மூத்த நாடாளுமன…
-
- 0 replies
- 225 views
-
-
சீரற்றகாலநிலை ; மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா நிதி உதவி சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிவாரணங்களை பெற்று தருவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு, 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு, அவுஸ்திரேலியா உதவித்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதுடன், 99பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு மொத்தமாக 15 மாவட்டங்களில் 149 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 885 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 150 views
-
-
கிளிநொச்சி ஒரு நகரமாக மாற்றமடையாது இருப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும், இராணுவமும் முக்கிய தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒரு ங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் நகர திட்டமிடல் பற்றி கூட்டத்தில் விளக்க மளித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கிளிநொச்சி டிப்போச் சந்தியில் இருக்கின்ற இராணுவ நினைவுச் சின்னம் யாருக்காக இருக்கிறது? டிப்போச் சந்தியில் இருக்கின்ற செங்கல் சுவர்கள் எப்போது அமைக்கப்பட்டது? எங்கிருந்து செங்கற்கள் கொண்டு வரப்பட்டது? 2009 இற்கு முன் நாங்கள் இடம்பெயர்ந்…
-
- 1 reply
- 419 views
-
-
மோரா என்ற சுறாவளிக் காற்று இலங்கையை கடந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வங்களா விரிகுடாவில் இந்த சுறாவளிக் காற்று உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையை அண்டிய பகுதிகளில் மையம் கொண்டிருந்த சுறாவளிக் காற்று தற்போது பங்களாதேஸ் நோக்கி நகர்ந்துள்ளதாகவும் எனினும், இலங்கையில் தொடர்ந்தும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் மத்திய மலைநாட்டுப் பகுதியில் காற்றின் சீற்றம் அதிகளவில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://globaltamilnews.net/archives/28398
-
- 0 replies
- 625 views
-
-
உங்கள் அனைவரையும் விட, இலங்கை மீது அதிக அக்கறைகொண்டவன் நான்தான்’ என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்தவாரம் இடம்பெற்ற அரசியலமைப்புக் கவுன்ஸிலில் வாக்குவாதப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரசியலமைப்புக் கவுன்ஸிலின் உத்தேச வரைபு தயாரிப்பு தொடர்பிலான கலந்துரையாடல், கடந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அதிகாரப் பகர்வு மற்றும் ஆட்சிமுறைமை பற்றிய விடங்கள் பற்றி பிரதான விவாதம் இடம்பெற்றது. ஆட்சி முறைமை பற்றிய பரிந்துரையில் ‘ஏக்கய ராஜ்ய’ என்ற சிங்களப் பதம் அல்லது ‘ஒருமித்த நாடு’ என்ற தமிழ்ப் பதம் பயன்படுத்தப்படவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ‘Unitary…
-
- 0 replies
- 355 views
-
-
180 பேர் உயிரிழப்பு 110 பேரைக்காணவில்லை ஐந்தரை இலட்சம் பேர் பாதிப்பு 76 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம் தொடர்ந்தும் இயல்பு நிலை பாதிப்பு வெள்ள நீர் வழிந்தோட ஆரம்பம் போக்குவரத்தும் ஸ்தம்பிதம் (ஆர்.யசி,எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் தொடரும் மோசமான காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டு பலியானோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 110 பேர் காணாமல்போயுள்ளனர். அத்துடன் அனர்த்தங்களில் 1 இலட்சத்து 53 ஆயிரத்து 303 குடும்பங்களை சேர்ந்த 5 இலட்சத்து 88 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 18,845 குடும்பங்களை சேர…
-
- 0 replies
- 780 views
-