ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
நாமல் மீதான தாக்குதல் – இரு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டனர் ஊடகவியலாளர் நாமல் பெரேராவைத் தாக்கிய இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நேற்று அடையாள அணிவகுப்பின் போது, அடையாளம் காணப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் நாள், சிறிலங்கா பத்திரிகை நிறுவகத்தின் பயிற்சி நெறி இணைப்பாளராக பணியாற்றி நாமல் பெரேராவும், பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றிய அவரது நண்பரான மகேந்திர ரணவீரவும் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தனர். நாரஹேன்பிட்டிக்கும், கிருலப்பனைக்கும் இடைப்பட்ட மிகவும் பரபரப்பான வீதியில்- முக்கிய இராணுவ நிலை ஒன்று, அரச தகவல் திணைக்களம், நாரஹேன்பிட்டி பாலத்தில் உள்ள சோதனைச்சாவடி ஆகியவற்றுக்கு அருகில், வாகனத்தில்…
-
- 0 replies
- 207 views
-
-
சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் பங்கு போடுகிறது சிறிலங்கா திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து, கூட்டாக இயக்கவுள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியத் துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். சீனக்குடாவில் உள்ள மொத்தம் 99 எண்ணெய்க் குதங்களில், குறைந்தது 73 எண்ணெயக் குதங்கள் இந்தக் கூட்டு முயற்சித் திட்டத்தின் கீழ் இயக்கப்படவுள்ளன. ஏனைய 10 எண்ணெய்க் குதங்களை சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தானபம் பயன்படுத்திக் கொள்ளவுள்ளது. எஞ்சிய 14 எண்ணெய்க் குதங்களும் இந்தியாவுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான பேச்சுக்கள் தற்போது நடந்து வருகின்றன. …
-
- 0 replies
- 171 views
-
-
தமிழ் சிங்கள புத்தாண்டு சுபநேரங்கள் சித்திரைப் புத்தாண்டு பிறப்பதற்கான புண்ணியகாலம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று (13) மாலை 7.40 தொடக்கம் நாளை (14) காலை 8.28 வரையாகும். இதன்படி, நாளை 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.04 மணிக்கு ஏவிளம்பி புத்தாண்டு பிறக்கின்றது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி எதிர்வரும் 14.04.2017 வெள்ளிக்கிழமை (சித்திரை 01) அதிகாலை 12.48 மணிக்கு அபரபக்க திருதியை திதியில், விசாக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில், மகர லக்கினத்தில், மகர நவாம்சத்தில் ´ஏவிளம்பி´ வருடம் பிறக்கின்றது. ஏவிளம்பி புத்தாண்டு பிறப்பன்று மஞ்சள் மற்றும் கபில நிறத்திலான புத்தாடைகளை அணிவது சிறந்தது. சங்கிரம தோஷ நட்சத்திரங்கள். புனர்பூசம், …
-
- 0 replies
- 851 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வெப்பநிலை 15 ஆம் திகதிக்கு பின்னர் 36 பாகை செல்சியஸ் தொடக்கம் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ். வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கிடையில், நேற்றைய தினம் தொடக்கம் மாலை 02 மணிக்கு பின் ஒடுங்கல் மழைக்கான சாத்தியமும் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்த வெப்ப நிலையுடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையிலேயே யாழ்ப்பாண வானிலை அவதான நிலையம் தகவல் வௌியிட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தகவல் தருகையில், இலங்கையின் மத்திய பகுதியில் உச்சம் கொண்டிருக்கும் சூரியன் ப டிப்படியாக நகர்ந…
-
- 0 replies
- 145 views
-
-
கேப்பாபுலவில் 43நாட்களுக்கு மேலாக தொடரும் வீதி வாழ்க்கை முல்லைத்தீவு கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவித்து சொந்த நிலத்தில் தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி 43 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் 43வது நாளான இன்றையதினம் இதுவரை தமது சொந்த நிலங்களை கோரி தாம் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு அரசாங்கத்தால் உத்தோயோகபூர்வமாக எந்த பதிலும் நேரடிய…
-
- 0 replies
- 191 views
-
-
மோட்டார் சைக்கிளில் சென்ற நபருக்கு துப்பாக்கி சூடு ; மட்டக்களப்பில் சம்பவம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னங்குடா காஞ்சிலங்குடாவில் 34 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று புதன் கிழமை இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற க .புனித நாதன் வயது 34 என்பவருக்கே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு முன் ஏற்பட்ட வாய்த்தர்கமே இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கொக்கட்டி சேலை பொலிஸாரல் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளது.மேலதிக விசாரணைகளை சேர்கோ மற்றும் கொக்கட்டி சேல…
-
- 0 replies
- 280 views
-
-
யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி முதலமைச்சரை சந்தித்துள்ளார். யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து பேசியுள்ளார். முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு பல நல்ல விடயங்கள் தொடர்பாக பேச வைத்திருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். இங்குள்ள பிரதானமான பிரச்சினைகளை அவர் அறிந்துள்ளார் எனவும் இங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் காணிகளில் மீள்குடியேற்றுவது தனது பிரதான கடமை எனவும் தாமதமானாலும் மீள்குடியேற்றத்திற்கான நடவடி…
-
- 3 replies
- 720 views
-
-
தந்தையில்லாத மாணவியின் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியரிடம் விசாரணை யுத்தத்தின் போது தனது தந்தையை இழந்த மாணவி ஒருவரின் இளம் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கைகாக அறிக்கை ஒன்று மாகாண கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படும் என கிளிநொச்சி வலய பதில் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சியின் மேற்கு பிரதேசத்தில் நகரிலிருந்து பத்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள 1ஏபி பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 01-04-2017 அன்று மது போதையில் நள்ளிரவு 11.27 மணிக்கு குறித்த பெண்ணின் வீட்டுக்குள் ப…
-
- 3 replies
- 2.6k views
-
-
யாழில் இளைஞர் கடத்தல் – விசாரணைக்கு மல்லாகம் நீதிவான் உத்தரவு யாழில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, மல்லாகம் நீதிவான் இன்று புதன்கிழமை உத்தரவு இட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்திய நான்கு நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவில் உடையில் திரவியநாதன் நகுலேஸ்வரன் எனும் இளைஞனின் வீட்டுக்கு சென்று விசாரணைக்கு என அழைத்து சென்றுள்ளனர். அது தொடர்பில் அவரது மனைவி வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்த போது தாம் எவரையும் கைது செய்வி…
-
- 0 replies
- 358 views
-
-
அரசியல் கைதிகள் 93 பேரின் விபரங்களை வெளியிடத் தயார்: டி.எம்.சுவாமிநாதன் அரசியல் கைதிகள் 93 பேரின் விபரங்களை வெளியிடத் தாம் தயாராகவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பனைசார் உற்பத்தி, தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைக் கூறினார். இந்நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. காணொளியில் காண்க… http://newsfirst.lk/tamil/2017/04/அரசியல்-கைதிகள்-93-பேரின்-வ/
-
- 4 replies
- 330 views
-
-
மட்டக்களப்பில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் சுவரொட்டிகள் வ.துசாந்தன் பிறக்கவிருக்கின்ற புத்தாண்டுக்கு வாழ்த்துக்கூறும் முகமாக, வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்தில் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள் என எழுதப்பட்டும் அதன் கீழே, நாங்கள் தெருவோரப் பட்டதாரிகள் என குறிப்பிட்டும், மட்டக்களப்பு நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான நியமனத்தினை வழங்ககோரி, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (12), 51ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்த…
-
- 2 replies
- 380 views
-
-
-Kalai Marx- கருணாவை துரோகி என்று சொல்லித் திரியும் புலி ஆதரவு நபர்கள், அதே கருணா செய்த மிகப் பெரிய துரோகத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் முரண்நகையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்ட சம்பவத்தை தான் இங்கே குறிப்பிடுகிறேன். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் தலைக்குனிவையும், பெரும் பின்னடைவையும் ஏற்படுத்திய சம்பவம் அது.- சி.ஐ.ஏ. மற்றும் மேற்குலக மனித உரிமை நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளில், அது புலிகளால் நடத்தப் பட்ட இனச் சுத்திகரிப்பு எனத் தவறாமல் குறிப்பிடப் படும். மேலும் சிறிலங்கா அரசு அதை சுட்டிக் காட்டியே அரபு – முஸ்லிம் நாடுகளை…
-
- 2 replies
- 611 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பினர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 8 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த 8 பேரும் கட்டார் விமானச்சேவைக்கு சொந்தமான QR654 என்ற விமானத்தின் மூலம் இன்று மாலை 5:12 மணிக்கு இலங்கை சர்வதேச விமானநிலையத்திற்கு வந்தடைந்துள்ளனர். கடத்தப்பட்ட 8 பேரின் உறவினர்கள் பெருந்திரளானோர் விமானநிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது விமானநிலையச் செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19014
-
- 0 replies
- 216 views
-
-
இனவாத போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்த 'மஹசோன் பலகாய' உறுப்பினர் இருவர் கைது..! (எம்.எப்.எம்.பஸீர்) 'மஹசோன் பலகாய' எனும் அமைப்பின் உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் இருவர் ஒரு தொகை இனவாத போஸ்டர்களுடன் அம்பலாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 31, 26 வயதுகளை உடைய இருவரே இவ்வாறு கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் இனவாத செயற்பாடுகள் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/19006
-
- 0 replies
- 262 views
-
-
இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தை இன்று ஆரம்பித்தார் வவுனியா இளைஞர் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தினை வவுனியா இளைஞன் இன்று ஆரம்பித்துள்ளார். 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ‘அரச ஓய்வூதியம்’ வழங்கி உதவவேண்டும் என தெரிவித்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தினை தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இன்று ஆரம்பித்தார். சுமார் 11 நாட்கள் 1515 கிலோமீற்றர் தூரத்தினை துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்யவுள்ளார். http://newsfirst.lk/tamil/2017/04/இலங்கையை-சைக்கிளில்-சுற்/
-
- 1 reply
- 304 views
-
-
மே மாதத்தில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் மே மாதத்தில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக் கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரிச் சலுகை வழங்குவது குறித்து ஆராயும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தப் பிரதிநிதிகள் எதிர்வரும் 19ம் திகதி பெல்ஜியம் பிரசல்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய விசேட கூட்டத்தில் இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள், தொழிலார் உரிமைகள் போன்றன குறித்து ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இலங்கைக்கு வந்துள்ள பிரதிநிதிகள் ஆராய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/archive…
-
- 0 replies
- 224 views
-
-
தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நேரிடும் – இரா.சம்பந்தன் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். யுத்தத்தால் இடம்பெயர்ந்து, பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள 150 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிப்பதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். http://newsfirst.lk/tam…
-
- 19 replies
- 1.9k views
-
-
'ஹம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பு எம்மிடமே உள்ளது’ டோக்கியோவிலிருந்து மேனகா மூக்காண்டி சர்வதேச நாடுகளால் மேற்கொள்ளப் படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், இந்து சமுத்திரத்தின் நுழைவாயிலாக இலங்கையை மாற்றுவதே, தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோள்” என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “இந்து மற்றும் பசுபிக் சமுத்திரங்களை இணைக்கும் மூலோபாயத்தின் ஊடாக, ஜப்பானின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறினார். “அத்துடன், கொழும்புத் துறைமுகத்தின் வடக்குப் பிரிவை, 8 முதல் 10 மைல்கள் வரை (ஜா-எல பிரதேசம் வரை) நீடித்து, இந்து சமுத்திரத்தில் காணப்படும் பாரிய துறை…
-
- 0 replies
- 273 views
-
-
ஹம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம்:‘காலம் குறையும் சாத்தியம்’ டோக்கியோவிலிருந்து மேனகா மூக்காண்டி “ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம், இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும்” என்று, அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார். “அத்துடன், இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வருட குத்தகைக் காலத்தைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று அந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்படும்’ என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜப்பானுக்கான மூன்று நாட்கள் உத்தி…
-
- 0 replies
- 167 views
-
-
‘உயிரோடு இறந்த தலைவர் ரணில்’ ஜனனி ஞானசேகரன் “தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் அரச சொத்துக்களை விற்பனை செய்யும் வியாபாரத்தின் அடுத்த இலக்கு, திருகோணமலை எண்ணெய் தாங்கிப் பக்கம் திரும்பியுள்ளது” என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எம்.பியுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “திருகோணமலை துறைமுகத்தில், எண்ணெய்த் தாங்கிகள் 102 காணப்பட்டன. ஆனால், அதில…
-
- 0 replies
- 300 views
-
-
பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு: 'முறையிட்டால் நடவடிக்கை’ பேரின்பராஜா திபான் “இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடமோ அல்லது என்னிடமோ, பாதிக்கப்பட்ட பெண்ணினால் முறைப்பாடு செய்யப்படுமாயின், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்தார். சிறிதரன் எம்.பியின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமாகி வேழன் என்றழைக்கப்படும் அருணாச்சலம் வேழமாலிகிதன் என்பவர் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரினார் என்று, சமூகவலைத் தளங்களிலும் இணையத் தளங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது. …
-
- 0 replies
- 263 views
-
-
வடக்கு கிழக்கு சுகாதார அபிவிருத்தித் திட்டத்துக்கு 200 மில்லியன் ரூபா: லைக்கா இலங்கையின் வடக்கு கிழக்கில், 200 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய சுகாதார அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்ளத் தயார் என லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர்களில் ஒருவரும், லைக்கா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.இந்தத் திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியினையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் கடந்த 25 ஆண்டு காலமாக அடிப்படை வசதிகளற்ற நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த மக்களின் வீட்டுத் தேவையினை லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் ஊடாக பூர்த்தி செய்து வைத்…
-
- 3 replies
- 326 views
-
-
உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள்!! – வீ.ஆனந்தசங்கரி அன்புள்ள சுமந்திரன் அவர்களுக்கு, உண்மையை அறியுங்கள் உண்மையையே கூறுங்கள். எனது இச்சிறிய கடிதத்துக்கு மன்னிக்கவும் அன்றேல் இது பல பக்கங்களுக்கு நீடித்திருக்கும். 1959ம் ஆண்டு கொழும்பு மாநகரசபை வேட்பாளனாக அரசியலில் ஈடுபட்டபோது நீங்கள் பிறந்திருக்கவில்லை. 1991ம் ஆண்டு சட்டத்தரணியாக நீங்கள் சத்தியபிரமாணம் செய்தபோது அத்துறையில் நான் 27 ஆண்டுகளை கடந்துவிட்டேன். நான் ஒரு செல்வந்தன் அல்ல. பெரிய ஒரு குடும்பத்தில் உறுப்பினர் ஆகையால் அன்று எஸ்.எஸ்.சி இன்றைய க.பொ.த(சா.தரம்) வகுப்புக்கு மேல் எனது பெற்றோரால் கல்வியை தர முடியவில்லை. ஓர் ஆரம்ப பாடசாலையில் ஆசிரியனாகவும், பிரத்தியேக வக…
-
- 2 replies
- 694 views
-
-
கேப்பாபிலவு போராட்டத்துக்கு முழு ஆதவு காணியை மீட்டெடுக்க பங்களிப்பேன் – அமைச்சர் றிஷாட் கேப்பாபிலவு மக்களின் காணி மீட்புப்போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்தகாணியை மக்களுடன் பெற்றுக்கொடுப்பதற்கான உச்ச கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் றிஷாட் உறுதியளித்தார். இன்று காலை(11-04-2017) தேசிய ஜக்கிய முன்னனியின் தலைவர் அசாதக சாலி, மற்றும் சட்டத்தரணி என்.எம் சஹீட் ஆகியோருடன் அந்த இடத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடினார். பிரச்சினைகளை கேட்டறிந்த பின் மக்கள் மத்தியில் கருத்துத்தெரிவித்த போது, நல்லாட்சியை கொண்டுவர உழைத்த சிறுபான்மை மக்களை இன்று நடுத்தெருவில் நின்று போராட்டம் நடாத்துவதற்கு புதிய ஆட்சி தள்ளியுள்ள…
-
- 1 reply
- 329 views
-
-
நுண்நிதி நிறுவனங்களால் நொந்து நுாலாகும் நிலை கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள், ‘‘சிறுப்பிட்டியில் கில்லாடிப் பெண் கைது’’ என்ற தலைப்பில் உதயன் நாளி தழில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதனை வாசித்தபோது 64 குடும்பப் பெண்களிடமிருந்து, ஒருவரிடமிருந்து 5000 ரூபா வீதம் என்ற ரீதியில் 3,20,000 ரூபாவை ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட ‘கில்லாடிப் பெண்’ ஒருவரைத் தாம் கைது செய்திருப்பதாகப் பொலிசார் தெரிவித்திருந்தனர் என விவரம் வௌியிடப்பட்டிருந்தது. அரச வங்கி ஒன்றில் வேலை பார்ப்பதாகப் பொய்யாகத் தம்மை இனம் காட்டிக் கொண்ட அந்தப் பெண், வங்கியில் இருந்து ஒவ்வொரு வருக்கும் 5,00,000ரூபா வரையில் கடன் பெற்றுத் தருவ தாகக் கூறியே ஒவ்வொருவரிடம் இரு…
-
- 1 reply
- 642 views
-