ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143382 topics in this forum
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து ”முற்றுப்புள்ளியா” என்ற படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. 105 நிமிடங்களைக் கொண்ட திரைப்படத்தை யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட படத் தயாரிப்பாளரான Sherine Xavier என்ற பெண்ணே இயக்கியுள்ளார். இது தொடர்பில் இயக்குனர், தெரிவித்தததாவது, இந்த படத்தை திரையிடுவதால் இலங்கையின் அச்சுறுத்துலுககு முகங்கொடுக்கு நேரிடும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தன் கணவனைத் தேடி மூன்று பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுப்படும் பெண் தொடர்பான கதையே முற்றுப்புள்ளியா என திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இந்…
-
- 0 replies
- 413 views
-
-
கட்டுரைகள் Mar 2, 2017 932 புலிகளின் பெயரை தாங்கிவந்த போலியான மொட்டை அறிக்கை! தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் அடங்கிய அவர்களால் முன்பு மதிப்பளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களுக்கான மதிப்பளிக்கும் அதிகாரபூர்வ அறிக்கையொன்றை TCCஎனும் புலம்பெயர் கட்டமைப்புக்குள் ஊடுருவியுள்ள இலங்கை புலனாய்வாளர்கள் “பிரதிசெய்து” சில கருத்துமாற்றங்களை ஏற்படுத்தி அதை புலிகளின் பாணியில் ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளார்கள் என்பது தற்பொழுது நூறுவீதமும் நிரூபணமாகிவிட்டது. உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட எமது தேசப்பற்றாளர்களுக்கான மதிப்பளிக்கும் தமது சின்னம் தாங்கிய அறிக்கைகளில், அந்த அறிக்கை…
-
- 0 replies
- 616 views
-
-
கிறிஸ்டின் லெகார்டின் இலங்கைக்கான விஜயம் ரத்து.! சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லெகார்ட் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை அவர் இரத்து செய்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இலங்கைக்கு எதிர்காலத்தில் விஜயம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதி சந்தையின் ஸ்தீரதன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்தல், அடுத்த கடன் தொகைக்கான சூழலை பரிசீலித்தல் மற்றும் இலங்…
-
- 0 replies
- 278 views
-
-
நான் பேஸ்புக் பார்க்கமாட்டேன் : யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர். இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை தந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். 2017 ஆம் ஆண்டு …
-
- 7 replies
- 548 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – ரீட்டா இசாக் நாடியா இலங்கையில் புரையோடிக் காணப்படும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக, சமஷ்டி ஆட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் அதன் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை விவகார விசேடப் பிரதிநிதி ரீட்டா இசாக் நாடியா தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சென்றிருந்த போது சிறுபான்மையின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேரில் சென்று ஆராய்ந்த ரீட்டா இசாக்;, அது தொட…
-
- 0 replies
- 201 views
-
-
இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதா ? இல்லையா ? உறுப்பு நாடுகளின் முதலாவது முறைசாராக் கூட்டம் செவ்வாய்க்கிழமை லியோ நிரோஷ தர்ஷன் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பிலான முதலாவது முறைசாராக் கூட்டம் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ளது. இதற்கு அமைவான புதிய தீர்மானத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து முன் வைக்கும் சாத்தியம் காணப்படுகின்ற நிலையில் வாக்கெடுப்பின்றி தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இலங்கை மீண்டும் இணை அனுசரணை வழங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் இணை அனுசரணை நாடுகள், பேரவையின் உறுப்பு நாடுகள…
-
- 0 replies
- 182 views
-
-
காணாமல் போனோரின் உறவுகளை சந்திப்பதாகக் கூறி காணாமல் போன ஜனாதிபதி ரி.விரூஷன் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திப்பதாக தெரிவித்து அவர்களை அழைத்துவிட்டு இறுதியில் நிகழ்வு நிறைவடைந்ததும் அவர்களை சந்திக்காது சென்று விட் டார். இதனையடுத்து காணாமல் போனவர் களின் உறவினர்கள் மற்றும், வட மாகா ணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங் கம் ஆகியோர் வடமாகாண ஆளுநர் அலு வலகத்திற்கு முன்பாக ஏ9 பிரதான வீதியை வழிமறித்து ஜனாதிபதியின் இச் செயலுக்கு தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர். முன்னதாக காணாமல் போன உறவுகள் தொட…
-
- 0 replies
- 251 views
-
-
உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரையில் இலங்கை அனைத்துலக கண்காணிப்பின்கீழ் இருக்கவேண்டும் மற்றுமொரு தீர்மானத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை அழுத்தம் லியோ நிரோஷ தர்ஷன் இலங்கை அரசாங்கம் உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றும் வரையில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் அனைத்துலக கண்காணி ப்பு அவசியமாகும். ஏனெனில் அதற்கான அவசியத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. எனவே இலங்கை தொடர்பாக மற்றுமொரு உறு தியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை உறு ப்பு நாடுகள் முன்வைக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியறுத்தியுள்ளது. ஜெனீவாவில் இடம்பெறுகின்ற 34 ஆவது ஐக்கிய ந…
-
- 0 replies
- 160 views
-
-
முப்படையினர் மீது குற்றப்பத்திரிகை கொண்டுவர இடமளிக்கப் போவதில்லை பலாலியில் முப்படையினர் மத்தியில் ஜனாதிபதி நமது நிருபர் வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் கூறுவது போல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றப்பத்திரிகைகளை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கோ நான் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தார். பலாலி விமானப்படை முகாமிற்கு நேற்று முற்பகல் சென்று பார்வையிட்ட பின்னர் அங்கு முப்படையினரையும் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சந்தித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெ…
-
- 0 replies
- 243 views
-
-
வலைத்தளங்களில் வாட்டி எடுக்கப்படும் பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்திருந்த போராட்டத்தின்போது யாழ்.பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியொருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை மிக கேவலமான வார்த்தைகளால் பேசிய சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சியானது சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகின்றது. குறித்த பொலிஸ் அதிகாரியொருவர் 'எருமை மாடு மாதிரி கதைக்கிறியே, நீ படிச்சிருக்கியா, மண்டைக்குள்ள சரக்கு இருக்கா' போன்ற வார்த்தைகளால் பேசியதுடன், ஊடகவியலாளர் ஒருவரை மிக கேவல…
-
- 1 reply
- 375 views
-
-
பிறவிக்குறைபாட்டினால் வருடாந்தம் 3000 குழந்தைகள் மரணம் குழந்தைப் பருவத்தில் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார கல்விப் பணியகத்தில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்தார். இவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், உலகில் மனிதப்பிறவியே சிறந்த படைப்பு ஆனால் அங்கவீனம் ஒருவனுக்கு பிறக்கும் போதே தோன்றுமாயின் அது அவனது பெற்றோர் இழைக்கும் தவறாகும். இவர்கள் உண்ணும் முறையற்ற உணவும், குடிபானங்களும், அழகுசாதன பொருட்களும் இப்படியான மறைமுக தாக்கங்களை கர்ப்பத்திலே ஏற்ப…
-
- 0 replies
- 248 views
-
-
“செப்டெம்பரில் ஆட்சி மற்றம்… சகல ஏற்பாடுகளும் பூர்த்தி” நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்கு நேரெதிராகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே மக்களின் ஆதரவுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் அரசாங்கத்தை வீட்டுக்கனுப்பிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் வெற்றிகரமாக முன்னெடுப்கப்பட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்காலத் திட்டம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர…
-
- 0 replies
- 399 views
-
-
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்து, 24 மணி நேரத்துக்குள்ளாகவே, அதனைத் தான் நிராகரித்து விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கலப்பு விசாரணை நடத்தக் கோரும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அழைப்பை நிராகரித்து, அனைத்துலக சமூகத்துக்கு தனது முதுகெலும்பைக் காட்டி விட்டதாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில், வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணையை நடத்த அழைப்பு விடுத்திருந்தார். 24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே, நான், …
-
- 2 replies
- 352 views
-
-
கேப்பாப்புலவு காணி விடுவிப்பு நாடகமா? நாடெங்கிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் உண்ணாவிரத நிகழ்ச்சிகளையும் கவனயீர்ப்புப் போராட்டங்களையும் மக்கள் தாமாகவே முன்வந்து அரசாங்கத்திற்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் கேப்பாப்புலவு மக்களின் காணிகளை திரும்பவும் கையளிக்க முடியும் என்ற செய்தி தலைநகரில் இருந்து வரும் பத்திரிகைகளில் முன் பக்கச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. இச்செய்தியை வாசித்தவர்கள் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் வெற்றியைத் தந்துள்ளது, இனியாவது அப்பகுதி வாழ் மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாம் என்று ஆறுதல் பெருமூச்சு விட்டன…
-
- 1 reply
- 513 views
-
-
சர்வதேச நீதிபதிகளுடன் கலப்பு நீதிமன்றம் செயிட் அல்ஹுசைன் மீண்டும் ஆணித்தரம் ஐ.நா.கண்காணிப்பகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை (ரொபட் அன்டனி) நீதி வழங்கும் விடயத்தில் கவலைக்குரிய தாமதம் நீதி வழங்கும் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை நல்லிணக்க செயலணி முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் ஐ.நா. தொழில்நுட்ப உதவிகளை வழங்கவேண்டும் ஐ.நா. விசேட நிபுணர்களை அழைக்கவேண்டும் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கவேண்டும் சித்திரவதைகள் பழிவாங்கல்கள் நிறுத்தப்படவேண்டும் தனியார் காணிகளை விடுவிக்கவேண்டும் இராணுவம் சிவில…
-
- 2 replies
- 879 views
-
-
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் முதல்நிலை பிரதி சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு – இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளை கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத…
-
- 3 replies
- 499 views
-
-
ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில் (எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஐப்பான் முதலீட்டின் பயனாக இவ்வருடம் வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார். கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளன. இதன…
-
- 15 replies
- 3k views
-
-
போராட்டகார்களை காணாது மாற்றுபாதையூடாக சென்ற ஜனாதிபதி போராட்டகார்களை கவனிக்காது மாற்று பாதையூடாக வடமாகாண ஆளூநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடமாகாண ஆளூநர் அலுவலகத்தில் ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க ‘ அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். அதனை முன்னிட்டு வருகைதரும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ். மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை வேலை கோரி பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக ஆறாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக உள்ள வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மா…
-
- 1 reply
- 367 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜெனீவாவில் அறிவிப்பு பயங்கரவாதத் தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இல்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளையொட்டி நடைபெறும் இணைக் கூட்டமொன்றில் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளதாக தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் மனோ தித்தவல்ல தெரிவித்துள்ளார். அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு எதிராக பின்னர் ; …
-
- 0 replies
- 331 views
-
-
யாழில் பென்ஷனுக்கு தடை போடும் அதிகாரி; ( காதோடு காதாக) அராலியூர் குமாரசாமி ‘சங்கு ஊதி கடவுளுக்கு பூசையும் நடக்கும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் நிகழ்வுகளும் நடக்கும். சங்கானது வாழ்வுக்கும் இறப்புக்கும் தனது பங்களிப்பைச் செய்து சிறப்படைகிறது’. என்று யாழ்.வலிகாமப் பகுதி ஒன்றில் இயங்கும் பிரதேச அரச அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் எனது நண்பன் அக்கம் பக்கம் பார்த்தவாறு தத்துவம் சொல்லிக் கொண்டு வந்தான். அவன் பக்கத்தில் ஒருவரையும் காணவில்லையே யாருக்கு இந்த தத்துவத்தை சொல்கிறான் என்று கேட்பதற்காக அவன் பக்கம் சென்று ‘என்ன சொல்லுகிறாய்’; என்று கேட்டேன். அவனோ ‘சங்கானது மனிதனின் வாழ்வுக்கும் இறப்புக்கும் பயன்படுவது போல் இந்த அலுவலகம் தனது பணியைச் சரி…
-
- 0 replies
- 476 views
-
-
புதுக்குடியிருப்பு பகுதியளவில் விடுவிப்பு சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது, 7.5 ஏக்கர் காணி பகுதியளவில் விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய அம்மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. புதுக்குடியிருப்புப் பகுதியில் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு, படைமுகாம் அமைக்கப்பட்டுள்ள 19 ஏக்கரையும் வடுவிக்குமாறு, அக் காணியின் உரிமையாளர்களினால், கடந்த 2ஆம் திகதி த…
-
- 1 reply
- 517 views
-
-
ஐ.நாவில் கால அவகாசத்தினை கோரி பொறுப்புக் கூறல் விடையத்தில் இழுத்தடிப்பு வேலைகளை செய்வதற்கு அரசு முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு சம்பந்தனும் ஆதரவு வழங்குகின்றார். கடந்த 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையில் கைச்சாத்திட்டமையின் காரணமாக, கால அவகாசம் கோரி இழுத்தடிப்பு வேலைகளை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெல குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு பொறுப்பு கூறல் விடயத்தில் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ள கூற்றானது வரவேற்கத்தக்க விடயம். ஆனால், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவிக்கும் போது, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர…
-
- 0 replies
- 254 views
-
-
யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். யாழ். சாவகச்சேரியில் வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் உள்ள குறித்த நிலையத்தை இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார். இதில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா. மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின்போது பலத்த வரவேற்பளிக்கப்பட்டதுடன் பல கலைநிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. …
-
- 1 reply
- 803 views
-
-
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை எஸ்.நிதர்ஸன் யாழ்ப்பாணத்துக்கு இன்று (04) வருகை தரும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இதன்போது பட்டதாரிகளுக்குத் தீர்வை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்திருக்கும் மாவை சேனாதிராசா இப் பேச்சுவார்த்தையினூடாக எடுக்கப்படுகின்ற முடிவு பட்டதாரிகளுக்கு நல்லதோர் தீர்வான அமையும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் பட்டதாரிகள் மத்தியில் குறிப்பிட்டுள்ளார். வடக்க…
-
- 0 replies
- 158 views
-
-
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் பாதுகாவலர் சங்கத்தால் நடாத்தப்படுகின்றது. தமக்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு யாழ் பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியிடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilwin.com/community/01/137674?ref=home
-
- 0 replies
- 168 views
-