ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
சிறுவர் தினத்தன்று சிறுவன் கொலை தொடர்பில் நேற்று ஆர்ப்பாட்டம் editorenglishFebruary 10, 2025 சிறுவர் தினத்தன்று சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மாத்தளை மேல் நீதிமன்றத்தால் பிணைவழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 08 சந்தேக நபர்களின் பிணையை ரத்து செய்து சிறையில் மீண்டும் அடைக்கப்பட வேண்டும் என மாத்தளை மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள மாத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட மகாவில்ல நாலந்த தோட்டம் மடவல்ல உல்பத்த பிரதேச மக்கள் நேற்று (09) கவனயீர்ப்புப் பேராட்டம் ஒன்றை நடத்தினர் . இதன்போது பிரதேச மக்கள் சந்தேக நபர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சுலோகங்களையும் ஏந்தி ஊர்வலமாக சென்று தமது கவன ஈர்ப்பினை முன்னெடுத்தனர…
-
- 0 replies
- 109 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய தேசிய மக்கள் சக்தியின் வரவு-செலவுத் திட்டம் editorenglishFebruary 9, 2025 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு-செலவுத் திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதுடன், மார்ச் மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவ்வாறானதொரு நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் இந்த விடய…
-
- 1 reply
- 188 views
- 1 follower
-
-
அவயவங்களை இழந்த வன்னி மக்களுக்கு மறுவாழ்வு ; கனேடிய அரசு கனேடிய வர்த்தக சம்மேளனம் அனுசரணை 09 Feb, 2025 | 03:25 PM யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக திட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலையின் ஓய்வு நிலை பேராசிரியர் காசி விஸ்வனாதன் செல்வகுமார் மற்றும் கனடா - இலங்கைக்கான வர்த்தக சபையின் இணைப்பாளர் குலா செல்லத்துரை ஆகியோர் இதை தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த…
-
- 0 replies
- 234 views
-
-
வெள்ளை ஈ தாக்கம்! adminFebruary 9, 2025 தென்னை மரத்தில் மாத்திரமல்லாது ஏனைய விவசாயப் பயிர்களிலும் வெள்ளை ஈ தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரைவிடுத்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் விவசாயத்துறையினர் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் நேற்றைய சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிய வெள்ளை ஈ தாக்கம் தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. குளிரான காலநிலை காரணமாக அதன் தாக்கம் குறைவடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அது பரவத் தொடங்கியுள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். …
-
- 0 replies
- 153 views
-
-
08 FEB, 2025 | 04:53 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயமானது மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. அந்த வகையில் இந்திய உதவியுடன் 300 கோடி ரூபா மதிப்பிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்த இலங்கை தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போ தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி,…
-
-
- 2 replies
- 214 views
- 1 follower
-
-
ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை படைத்த இலங்கை வீரர்! இலங்கை தடகள சங்கத்தால் (Sri Lanka Athletics Association) நேற்று (08) தியகம மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்வுப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுமேத ரணசிங்க, 82.56 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் உலகில் ஈட்டி எறிதல் போட்டியில் ஒரு தடகள வீரர் எறிந்த அதிகபட்ச தூரம் இதுவாகும். சுமேதாவுக்கு முன்பு, இந்த ஆண்டு அதிக தூரம் ஈட்டி எறிந்த தடகள வீரர் இத்தாலியின் ஜியோவானி ஃப்ராட்டினி ஆவார், அவர் 75.85 மீட்டர் தூரம் எறிந்திருந்தார். இதற்கிடையில்நேற்று நடைபெற்ற தேர்வுப் போட்டியில் பங்கேற்ற ருமேஷ் தரங்கா, 79.58 மீட்டர் தூரம் எறிந்துள்ளார், இது…
-
- 0 replies
- 340 views
-
-
Acuity Partners நிறுவனத்தின் உரிமையாளரானது HNB வங்கி! இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB Acuity Partners நிறுவனத்தின் உரிமையை வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது. Acuity Partners முன்பு HNB மற்றும் வங்கியின் இணைந்த கூட்டு முயற்சியால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும், அக்யூட்டி ஸ்டொக் ப்ரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமானது கொழும்பு பங்குச் சந்தையின் உறுப்பினராகவும், முன்னணி பங்கு தரகர் நிறுவனமாகவும் உள்ளது. இந்த நிறுவனங்கள…
-
- 0 replies
- 134 views
-
-
கட்சியை காப்பாற்ற மும்மூர்த்திகள் பதவி விலக வேண்டும் February 2, 2025 12:40 pm தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டுமாக இருந்தால் பதில் மும்மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினரும், முல்லைத்தீவு கிளைத் தலைவருமான சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எனது அஞ்சலிகளை தெரிவ…
-
-
- 2 replies
- 465 views
-
-
(நா.தனுஜா) நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கான கருத்தடைக்கு முன்னரான தடுப்பூசி வழங்கலின் ஊடாக விசர்நாய்க்கடி நோயினால் (ரேபிஸ்) மனிதர்கள் மத்தியில் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை கணிசமானளவினால் வீழ்ச்சியடைந்திருப்பதாக விலங்குகள் நலன் கூட்டிணைவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கலாநிதி சமித் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். விசர்நாய்க்கடி மற்றும் தெருநாய்க்கடி போன்றவற்றால் பெரும் எண்ணிக்கையானோர் பாதிக்கப்படுவதாகக் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டுவரும் பின்னணியில், இதன் உண்மைத்தன்மை குறித்துத் தெளிவுபடுத்தியிருக்கும் சமித் நாணயக்கார, 'அண்மையில் நாய்க்கடியின் விளைவாக 6500 பேர் பதுளை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தியொன்று வெளியாகியிருந்தது. இருப்பி…
-
- 1 reply
- 239 views
-
-
மன்னாரில் காற்றாலை மூலம் 50 மெகாவாட் மின்சாரம் : தனியார் நிறுவனத்திற்கு வழங்க அனுமதி 06 Feb, 2025 | 02:43 PM மன்னாரில் 50 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மேம்படுத்த ஹேலிஸ் பென்டன்ஸ் லிமிடெடுக்கு ஒப்பந்தம் வழங்க அரசாங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவு, கொள்முதல் முறையீட்டு சபையின் (PAB) மேற்பார்வையில் நடத்தப்பட்ட விரிவான மற்றும் வெளிப்படையான முறையீட்டு செயல்முறைக்குப் பின்னர் எடுக்கப்பட்டுள்ளது.. ஆரம்பத்தில், ஹேலிஸ் பென்டன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்த விண்ணப்பம் திட்டக் குழுவால் பரிசீலிக்கப்படவில்லை. எனினும், 2024 ஆகஸ்ட…
-
- 1 reply
- 189 views
-
-
கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது. குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்டமா அதிபரின் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, நீதிமன்றத்தின் முன் விடயங்களை முன்வைத்து, குறித்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியை நிர்ணயிக்குமாறு கோரினா…
-
- 1 reply
- 183 views
-
-
Published By: DIGITAL DESK 2 08 FEB, 2025 | 04:54 PM (இராஜதுரை ஹஷான்) அரசியல் பழிவாங்கலுக்காக அரசாங்கம் நீதிக்கட்டமைப்பையும் பயன்படுத்துகிறது. சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலங்களில் பலர் கைதாகலாம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. அரசாங்கத்தின் மீது ம…
-
- 1 reply
- 223 views
- 1 follower
-
-
மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிவுக்குக் கொண்டுவந்தார்! மேற்குலகைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த போரை முடிப்பதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கினார் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், மேற்குலக நாடுகளைப் பகைத்துக்கொண்டுதான் மகிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டுவந்தார். போர் முடிவடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வந்தனர். அமெரிக்காவில் இருந்தும் குழுவொன்று வந்தது. போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவிடம் அவர்கள் வலியுறுத்தினர். ஏனெனில் பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல முயற்சித்தனர். அவர்…
-
-
- 5 replies
- 403 views
-
-
அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது - சத்தியலிங்கம் எம்.பி நாட்டில் உள்ள அரசியல் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒருபோதும் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்தமைக்கு வெறுமனே ஊழல் மாத்திரமே காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டார். எனவே இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய முக்கிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு உள்ளதாகவும் பத்மநாதன் சத்தியலிங்கம் கூறினார். தற்போது நாட்டின் பொருளாதார பிரச்சினையைத் தான் முதலில் தீர்க்க வேண்டும் எனவும் அதற்குரிய வழிவகைகளையே மேற்கொள்ள வேண்டும் எனவும்…
-
- 1 reply
- 181 views
-
-
சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாரிய மோசடியா? February 8, 2025 04:15 pm மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார். குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்…
-
- 0 replies
- 187 views
-
-
கொழும்பு – கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் 35ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ கட்டிடத்தின் 6 தளங்களுக்கும் பரவியுள்ளதாகவும், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் கடுமையாகப் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/315164
-
-
- 6 replies
- 387 views
- 1 follower
-
-
கடவுச்சீட்டு விவகாரம் - யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி! கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது ,தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/கடவுச்சீட்…
-
- 2 replies
- 328 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 07 FEB, 2025 | 10:55 AM முன்னைய அரசாங்கங்களைபோல தேசிய மக்கள் சக்தியும் வெளிநாட்டு தூதரகங்களிற்கு அரசியல் நியமனங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் வெளிநாட்டு சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என கடந்தகாலங்களில் விமர்சனங்களை முன்வைத்திருந்த போதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அரசியல் நியமனங்களில் ஈடுபடவுள்ளது. கடந்த வருடம் ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க பதவியேற்ற பின்னர் அமெரிக்க தூதுவர் மகிந்த சமரசிங்கவை தவிர அரசியல்ரீதியில் நியமிக்கப்பட்ட அனைத்து தூதுவர்களையும் அரச…
-
- 3 replies
- 410 views
- 1 follower
-
-
07 FEB, 2025 | 08:30 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு மக்கள் சேவைக்காக அன்றி அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே வழங்கப்படுகின்றது. ஆகவே இந்த நிதியை கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் . அரசியல்வாதிகள் ஓய்வூதியம் பெறுவதை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகவே உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்ய வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்…
-
- 1 reply
- 206 views
- 1 follower
-
-
தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த மத தொடர்புகளை வலுப்படுத்துவது பற்றி முன்மொழிவு. தாய்லாந்து உபோன் இராஜதானியின் பிரதான பௌத்த தேரர் உபோன் பிராகா வஜ்ஜிரகூன் தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய தூதுக்குழுவினர் கடந்த 05 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போது சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதிஹினிதும சுனில் செனெவி, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனத்தீர, நாடாளுமன்ற சட்டவாக்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர். தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் பௌத்த தொடர்புகளை வலுப்படுத்துவது தொடர்பான முன…
-
- 0 replies
- 113 views
-
-
மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி. எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். அத்துடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின் விலை 5,500,000 முதல் 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நாட்களில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டன. இதன்படி, எதிர்வரும் 2 அல்லத…
-
- 0 replies
- 102 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவது இலங்கைக்குச் சாதகமானது editorenglishFebruary 7, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதற்கான அமெரிக்காவின் தீர்மானம், இலங்கைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்தார். இந்த மாதம் 24 ஆம் திகதி தொடங்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது அமர்வில், இலங்கைக்கு எதிரான முந்தைய தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்த முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தீர்மானங்களை இயற்றுவதும் கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவதற்கான திட்டங்களைத் தொடங்குவதும் …
-
-
- 3 replies
- 225 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) வீட்டில் யாழ் கே.கே. எஸ் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில், மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த பதாகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. காட்சிப்படுத்தப்பட்ட பதாகை மேலும…
-
-
- 13 replies
- 841 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 2 07 FEB, 2025 | 08:01 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற எயா வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் இதன் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதோடு, பண்டைய வரலாற்றிலி…
-
- 1 reply
- 134 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 07 FEB, 2025 | 08:05 PM (எம்.மனோசித்ரா) மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துள்ளன. சனத்தொகை மதிப்பீட்டு ஆவணத்தில் அவர்கள் 'மலையகத் தமிழர்கள்" என அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும், பிறப்புசான்றிதழ் உள்ளிட்டவற்றில் அவ்வாறு அடையாளப்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகிறது. எனவே அந்த மக்களை சகல ஆவணங்களிலும் 'மலையகத் தமிழர்கள்" என அடையாளப்படுத்துமாறு அரசாங்கம் சுற்று நிரூபத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி பி.முத்துலிங்கம் வலியுறுத்தினார். கண்டி - சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து மலையக த…
-
- 1 reply
- 151 views
- 1 follower
-