Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை லூக் அவர்கள் தாக்கப்பட்டார் Published By: Vishnu 16 Dec, 2024 | 02:21 AM கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை.ம.லூக். சனிக்கிழமை (14) மாலை வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி முறிகண்டியை சேர்ந்த தன்னை சுயாதீன ஊடகவியலாளர் என அழைத்துக் கொள்ளும் நபர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தி அருட்தந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும். இத் தாக்குதல் தொடர்பாக கிளிநொச்சி பொ…

  2. வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உள்ளாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் Published By: Vishnu 16 Dec, 2024 (எம்.ஆர்.எம்.வசீம்) 2023, 2024 மதிப்பீட்டு வருடத்தின் எஞ்சிய வரி பணத்தை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்ளாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திகதிக்கு முன்னர் வரி பணம் செலுத்த தவறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாது என திணைக்களத்தின் ஆணையாளர் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். இதுவரை செலுத்தாத சுய மதிப்பீட்டு வரி மற்றும் எஞ்சிய வரி பணத்தை அறவிடுவதற்காக கள ஆய்வு மற்றும் …

  3. தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை! சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியி…

      • Like
      • Haha
    • 6 replies
    • 365 views
  4. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளை சுற்றி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அந்த அமைப்பு மெதுவாக உருவாகி வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் இரு தினங்களில் அது நாட்டின் வடபகுதிக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கைகள் கடல் பகுதிகளுக்கு, • காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்…

  5. யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளார். இளைஞன் யாழ்ப்பாணம் போதனா…

    • 0 replies
    • 247 views
  6. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 75 ஆயிரம் கிலோ நாட்டரிசி, மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. பாவனைக்கு உதவாத அரிசி அதன்படி தற்போது இந்தியாவில்(India) இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் சனிக்கிழமை வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது. அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்…

  7. மன்னார் மறை மாவட்ட ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் adminDecember 14, 2024 மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். -மன்னார் மறைமாவட்ட ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டு,அச் செய்தியை திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி ஊடாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (14) மாலை 4.15 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் மன்னார் …

  8. யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- கடற்றொழில் அமைச்சர். யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ‘தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார். மேலும் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக…

  9. 15 DEC, 2024 | 09:41 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயறபாடுகளை விரிவுப்படுத்துவது குறித்து சீனா ஆர்வம் செலுத்தியுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கத்துடன் எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பாரிய முதலீட்டில் நிர்மாணிக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் உருவாக்கி இந்த பிராந்தியத்தில் எண்ணெய் ஆதிக்கத்தை மாற்றுவதற்கான திட்டமாகவே இது உள்ளது. மேலும், ஜனாதிபத…

  10. மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேற்று (10) வழங்கிய கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபர் (மனித வள முகாமையாளர்) அறிவித்துள்ளதாக சட்டத்தரணி ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருந்…

  11. தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசித் தொகையில் பாவனைக்கு பொருத்தமற்ற 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசியை மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும். அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், …

  12. 13 DEC, 2024 | 05:09 PM வட மாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. அதேபோல வடக்கிலும் அவ்வாறான குழுவொன்று செயற்பட்டு வந்தது. அந்த குழுவால் வவுனியா நகரப் பகுதியிலிருந்து சிவப்பு நிற முச்சக்கரவண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கீழே விழுத்திவிட்டு, இந்த முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற சம்பவமொன்று பதிவாகிய…

  13. இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினமான இன்று (12) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல் எனும் தொனிப்பொருளில் வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா நகரசபை கலாசாரமண்டபத்தை அடைந்தது. ஏனைய நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றது. ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கை மனதில் உண்டு நம்பி கை கொடுங்கள், தொழில் உரிமை அனைவருக்கும் உண்டு, திறமைக்கு இயலாமைதடைகள் அல்ல போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர். குறித்த நிகழ்வு வவுனியா மாவட்டசெயலக…

  14. தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே நோக்கம்! தமிழரசுக்கட்சி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்றது. தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தேசியத்துடன் பயணிக்கும் தமிழ் கட்சிகளோடு ஆட்சியமைப்பதே ந…

  15. புதிய சபாநாயகர் தெரிவு எப்போது? December 14, 2024 08:41 am அசோக ரங்வலவின் ராஜினாமாவால் வெற்றிடமாகியுள்ள சபாநாயகர் பதவிக்கான புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் தடவை என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை சபாநாயகரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமோ அல்லது ஜனாதிபதியிடமோ வழங்க முடியும் என அவர…

  16. எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து விசாரணைகளை நடத்துமாறு எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் ! Posted on December 14, 2024 by தென்னவள் 8 0 ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகள் பக்கச்சார்பின்றியும், வெளிப்படைத்தன்மை வாய்ந்த விதத்திலும் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (ரிப்போட்டர்ஸ் வித்தௌட் போர்டர்ஸ்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. ‘லங்கா ஈ-நியூஸ்’ என்ற இணைய செய்தித்தளத்தில் கேலிச்சித்திர ஓவியராகவும், (கார்ட்டூனிஸ்ட்) அரசியல் பத்தி எழுத்தாளராகவும் பணிய…

    • 0 replies
    • 208 views
  17. பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை! வடக்கு ஆளுநர் December 14, 2024 “பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை”- இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் நிறுவுநர் நாளும் பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலையின் ஏழூர் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை பாடசாலை அதிபர் இ. கணேசானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர், சாதன…

  18. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தமது கடமையினை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று(13) காலை 08.45 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார். இந் நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், மாவட்ட செயலாளரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் உடனிருந்தார். மேலும், கடம…

  19. 14 DEC, 2024 | 01:47 PM (துரைநாயகம் சஞ்சீவன்) இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த அமைப்பினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில், இலங்கையின் அனைத்துப் பெண்களும் இன, மத, சமூக வேறுபாடுகளைக் கடந்து ஆணாதிக்க அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வர…

  20. இலங்கையர்களுக்கு ஜெமினிட் விண்கல் மழையை காணும் வாய்ப்பு! வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையினர் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் மிக அற்புதமான ஜெமினிட் விண்கல் மழையை இன்றும் நாளையும் இரவு நேரத்தில் வானில் காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை இரவு விண்கற்களின் அற்புதமான மற்றும் உச்சகட்ட பொழிவினை இலங்கையர்கள் பார்வையிடலாம். இரவு 9 மணிக்குப் பின்னர் வடகிழக்கு வானில் இந்த விண்கற்கள் பொழிவு தென்படும் என ஆர்தர் சி கிளார்க் மையத்தின் வானியல் சிரேஷ்ட ஆராய்ச்சி விஞ்ஞானி இந்திக மெதகங்கொட தெரிவித்தார். ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவ…

  21. 14 DEC, 2024 | 11:51 AM சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் இன்று சனிக்கிழமை (14) முதல் ஆரம்பமாகியுள்ளது. இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்னவின் ஒப்புதலில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/201243

  22. யாழில் 70 பேர் காய்ச்சலால் பாதிப்பு. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவிவரும் காய்ச்சலின் தாக்கம் தீவிரமாகப் பரவி வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்துள்ளார். இதுவரை 70 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நோய் நிலைமை காரணமாக, யாழ்ப்பாணத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்தனர். இதேவேளை திடீர் நோய் நிலைமை காரணமாகச் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டது. அவர்கள் பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கரவெட்டி மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் கண…

  23. தொடரும் சுற்றிவளைப்பு - வீழ்ச்சியடைந்த அரிசி விலை! December 14, 2024 08:47 am நாடளாவிய ரீதியில் அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (14) நாடளாவிய ரீதியில் சுமார் 75 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டதாக அதன் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். இனிவரும் காலங்களில் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சுற்றிவளைப்புக்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு சந்தைக்கு வருவதால் அரிசியின் விலை குறைந்துள்ளதோடு, சில பிரதேசங்களில் நெல் விலையும் குறைவடைந்துள்ளதாக தகவல்கள…

  24. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க! எதிர்வரும் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய பயணம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த பயணத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ம…

  25. 14 DEC, 2024 | 09:18 AM (எம்.நியூட்டன்) “வடக்கு கிழக்கு மாகாணம் போரினால் பாதிக்கப் பட்ட மாகாணம். எனவே அதற்கு என்று விசேட திட்டத்தை வகுத்து நிதிகளை ஒதுகிடு செய்தோ வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுங்கள்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு துறைசார்ந்த திட்டங்கள் தொடர்பில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு இருப்பதால் அதனை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.