ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
கிளிநொச்சியில் ஆலயக் காணி தனியாருக்கு வழங்கும் முயற்சி மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது (எஸ்.என்.நிபோஜன்)கிளிநொச்சி அரச அதிகாரிகளால் உதிரவேங்கை ஆலய காணி தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு நிலஅளவையும் கைவிடப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு கிளிநொச்சி தொண்டமான்நகர் உதிரவேங்கை வைரவர் ஆலய காணியை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு தொழிற்சாலை அமைப்பதற்காக வழங்க்கப்பட்டதனையடுத்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது.இதனை தொடர்ந்து ஆலய நிர்வாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில் காணி மீண்டும் ஆலயத்திற்கு கிடைத்தது.இந்த நிலையில் தற்போது குறித்த காணியில் அரை ஏக்கர் தனக்குச் சொந்தமானது என்று கூற…
-
- 1 reply
- 306 views
-
-
புலிகளை அழிக்க இந்தியா ஆயுதம் வழங்கியது -எம்.றொசாந்த் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் மற்றும் ஈரோஸ் ஆகிய ஆயுதக் குழுக்களுக்கு, இந்திய இராணுவம் ஆயுதங்களை வழங்கியதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவ்வேளையில், நாங்கள் நாட்டில் இருக்கவில்லை. இந்தியாவில் இருந்தோம் என்றார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/185527/ப-ல-கள-அழ-க-க-இந-த-ய-ஆய-தம-வழங-க-யத-#sthash.te3tI…
-
- 4 replies
- 696 views
-
-
'சம்பவம் நடந்தும் சமூகக்கட்டுப்பாட்டால் முறைப்பாடுகள் இல்லை' சொர்ணகுமார் சொரூபன் 'யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் இடம்பெறுகின்ற போதிலும், பொலிஸ் முறைபாடுகள் குறைவடைந்தமைக்கு சமூகக் கட்டுப்பாடுகளே காரணம்' என யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் பார்னஸ் ஆன்லேக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் கூறினர். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட மேற்படி இராஜாங்க அமைச்சர், திங்கட்கிழமை (07) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, பண்ணையில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பொலிஸ் நிலையத்துக்கு…
-
- 0 replies
- 345 views
-
-
யுத்தம் முடிவடைந்த பிறகு பின் தேர்தல் நடைபெற்றபோது நாங்கள் பல கட்சிகளாகப் பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தால் எல்லாக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று (06-11-2016) தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி முதன்மைப்பணிமனைத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தன் அவர்கள் மேலும் தெரிவித்தாதவது, இந்த நாட்டில் உள்ள ஆட்சிமுறை மாற்றப்பட வேண்டும் என்பதை முதலில் முன்வைத்தது தமிழரசுக் கட்சி. அந்தக் காலத்தில் பல தமிழ்த் தலைவர்கள் கூட அதை எதிர்த்தார்கள். 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் மு…
-
- 6 replies
- 644 views
-
-
த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினரின் மகன்கூட கும்பல்களுடன் தொடர்புள்ளதாக தகவல் : டக்ளஸ் ( ஆர்.கே.வி.) ஆவா குழுவென்பது சொல்லிக்கொள்ளத்தக்கதான கும்பலல்ல.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது மகன் கூட இத்தகைய கும்பல்களுடன் தொடர்புபட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தன. இதை நான் சொன்னால் அந்த பாராளுமன்ற உறுப்பினர் வாளினை தூக்கியவாறு தன்னை தாக்க வந்துவிடுவார் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆவா போன்ற குழுக்களிடம் இராணுவ கைக்குண்டுகள் இருப்பதாக கூறப்படுகின்றதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் யுத்தம் நடந்த பிரதேசத்தில் அவ்வாறு…
-
- 1 reply
- 424 views
-
-
‘உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஊடகவியலாளர்களே காரணம்’ “எனது உயிருக்கு, பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மேலதிக பாதுகாப்பை அரசாங்கத்திடம் கோரவேண்டிய நிலைமைக்கு நான் தள்ளப்பட்டேன், இவற்றுக்கெல்லாம் சில ஊடகவியலாளர்கள் தவறாகவும் மற்றும் திரிவு படுத்தியும், செய்திகளை வெளியிட்டமையே காரணமாகும்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளரான நடேஷபிள்ளை வித்தியாதரனினால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகையின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய முதலமைச்சர், “ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு நிமிடமும், உண்மையான மற்றும் சரியான தகவல்களை …
-
- 0 replies
- 192 views
-
-
வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவு வௌ்ளவத்தையில் சில பகுதிகளில் பொலிஸ் பதிவு மேற்கொள்வதற்காக, பொலிஸாரால் படிவங்கள், நேற்றுத் திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே, யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதிகளிலும், இவ்வாறான பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று, அதன் மூலமாக மக்களுக்கு இடர்கள் ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் பொலிஸ் பதிவு மேற்கொள்ளப்படுகிறதா என, மக்கள் அங்கலாய்த்தனர். குறிப்பாக, பொலிஸ் பதிவு இனிமேல் இடம்பெறாது என்றவாறான வாக்குறுதிகள், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நிலையிலேயே, இவ்வாறான படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்புகள் சில…
-
- 0 replies
- 439 views
-
-
மகிந்தவை அழைக்கிறது சீனா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த மாத பிற்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவு ள்ளார் என்று கூட்டு எதிரணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 23ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் இடம்பெறவுள்ளது.இதன்போது, அவர், சீன அரச தலைவர்கள் மற்றும் சீனாவில் உள்ள இலங்கை சமூகத்தினரைச் சந்திக்கவு ள்ளதாகவும் கூட்டு எதிரணி வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் எத்தனை நாட்கள் மகிந்த ராஜபக்ச சீனாவில்…
-
- 0 replies
- 260 views
-
-
'நீ, என்னை பல தடவைகள் வன்புணர்ந்துவிட்டீர்' பிரதான விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக சேவையாற்றுகின்ற பெண்ணை, ஒருசில மணிநேரத்துக்குள் பல தடவைகள் வன்புணர்ந்தவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெலிக்கடை பொலிஸ் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது. இராணுவ சேவையை கைவிட்டுவிட்டு, இராணுவத்திலிருந்து தப்பியோடியிருந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில், அந்த விமானப் பணிப்பெண், தனியாகவே வசித்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அந்தப்…
-
- 5 replies
- 660 views
-
-
ஆவாகுழுவுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தில் உடுவிலில் சகோதரர்கள் இருவர் கைது-மருதனார்மடத்தில் பதற்றம் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உடுவில் பகுதியில் சகோதரர்கள் இருவரை பயங்கரவாத தடைச்சட்ட ப்பிரிவினர் கைதுசெய்ததினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.பயங்கரவாத தடைச்சட்டப்பிரிவினரால் இந்திரகுமார் கபில் மற்றும் இந்திரகுமார் விதுசன் என்ற சகோதரர்களே கைது செய்யப்பட்டவர்களாவர். யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் வீட்டில் இருந்த சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர். கைது செய்த வேளையில், வீட்டில் இருந்தவர்க…
-
- 3 replies
- 400 views
-
-
முதலமைச்சர் அவர்கள் நேற்றைய காலைக்கதிர் நிகழ்வில் தெரிவித்த கருத்து தனது மனதைப் பாதித்துவிட்டதாகத் தெரிவித்த மாவை சேனாதிராஜா பதவிகிடைத்தால்தான் நாங்கள் அரசியலில் ஈடுபடுகிறோம் என்ற வரலாறு எமக்கு இல்லை என்றார். இன்று (06-11-2016) தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்தாவது, முதலமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் எனது முதல்வர் பதவியை தான் தட்டிப்பறித்துவிட்டேன் என சங்கடப்படுவதாக சொல்லிவருகின்றார். அப்படி சொல்வதன் மூலம் அவர் என்னை வேதனைப்படுத்துகின்றார்.நான் நினைத்திருந்தால் முதல்வர் பதவியில் இருந்திருக்கமுடியும். நான்தான் நிற்கபோகின்றேன் என சொல்லியிருந்தால் அதனை ஒருவரும் தடுத்திருக்கமாட்டார்க…
-
- 12 replies
- 880 views
-
-
கண்ணீர் புகை வீச்சு... அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது, கலகம் அடக்கும் பொலிஸார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, அவ்வார்ப்பாட்டத்தை கலைத்துள்ளனர். (படப்பிடிப்பு: பிரதீப் தில்ருக்ஷண) - See more at: http://www.tamilmirror.lk/185557/கண-ண-ர-ப-க-வ-ச-ச-#sthash.3hwVxA3l.dpuf
-
- 2 replies
- 512 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் தெற்கு இனவாதிகளுக்கும் இடையில் வித்தியாசமில்லை – சந்திரிக்கா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தெற்கின் இனவாதிகளுக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதத்திற்கும், தெற்கின் இனவாதத்திற்கும் இடையில் வித்தியாசம் எதுவும் கிடையாது எனவும் இரு தரப்பிற்கும் அழிவினை ஏற்படுத்தும் நோக்கமே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஹாவா குழுவுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு தொடர்பு உண்டா என்பதனை தாம் உறுதிபடக் கூற முடியாது எனவும் அதற்கான ஆதாரங்…
-
- 3 replies
- 352 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் குறித்த அறிக்கை தருமாறு பிரித்தானிய அமைச்சர் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெண்கள் மற்றும் கணவனை இழந்தோருக்கு எத்தகைய உதவிகள் தேவைப்படுகின்ற என்பது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா. மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பார்னோஸ் அனேலி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் சென்றுள்ள அவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து உரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், பா.டெனீஸ்வரன், த.குருகுலராசா மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர…
-
- 1 reply
- 290 views
-
-
சமஸ்டியுடன் , சுயாட்சி கூடிய அரசியலமைப்பே தேவை. – சி.வி. விக்னேஸ்வரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் எமக்கு சமஷ்டியுடன் கூடிய அரசியல் யாப்புத் தேவை. அது எமக்கு ஒரு விதத்தில் சுயாட்சியை தரும் வகையில் அமைய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட கனடாவின் உயர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அக் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கணவரை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகள், தாய் தந்தையை இழந்த சி…
-
- 0 replies
- 291 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அதிருப்தி தெரிவிப்பது எந்த விதத்திலும் கூட்டமைப்பை பாதிக்காது என்றும், அரசியல் கட்சிக்குள் ஜனநாயகம் முழுமை பெறுவது நல்ல விடயம்;தான் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புது டில்லி சென்றடைந்த அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிபிசி தமிழோசையின் ஃபேஸ் புக் நேரலையில் பங்கேற்றார். இதன் போது அங்கு கருத்துரைத்த சுமந்திரன், மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை ஏற்படாமல் இருப்பது நியாயமான விடயம் தான் அதற்காக மக்களுடைய கருத்தை முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் கூறுவதால் த.தே.கூட்டமைப்பு…
-
- 1 reply
- 414 views
-
-
ஏற்கனவே இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் புத்தகம் ஒன்றினை வெளியிட்டு பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மீண்டும் வெளிவந்துள்ளார். அண்மையில் குளோபல் இலங்கையர்கள் கருத்துக்களம் எனும் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இவர் உரையாற்றும் போது, இலங்கையில் தற்போது நல்லிணக்கம் இருக்கின்றதா என்பது சந்தேகமே. வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு ஒரு நீதியும் காணப்படுகின்றது. அதிகாரப்பகிர்வு வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கின்றார்கள், அவர்களிடம் நான் ஒன்று கேட்கின்றேன் எமக்கு கிடைத்து உங்களுக்கு கிடைக்காதது என்ன? எதற்காக வடக்கிற்கு புதிய அதிகார பகிர்வு கொடுக்கப்பட வேண்டும் தற்போது …
-
- 1 reply
- 480 views
-
-
யாழிற்கு இன்று(07) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளிற்கான அமைச்சர் பரோனெஸ் அனெலி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். போர்க்குற்ற சட்டம் எமது சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில் அடுத்த வருட மார்ச் மாதம் வரவேண்டிய செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைபெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக வந்தார். நாங்கள் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போதே பல கடிதங்களை எழுதியிருதேன்.அந்த கடிதங்களில் கூறிய விடயங்கள் தற்போது ந…
-
- 0 replies
- 224 views
-
-
தமிழ் மக்கள் மீள்குடியேறும் போது பாராபட்சம் காட்டிய இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தங்கள் இனம் சார்ந்தவர்களை குடியேற்றுவதற்கு தானாகவே பிரதேச செயலகம் சென்று மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.வாகரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! வாகரைப் பிரதேசத்திலிருந்து கடந்த கால யுத்த சூழலின் போது இடம்பெயர்ந்தவர்கள் தகுந்த ஆதாரத்துடன் வந்தால் அவர்களை மீளக்குடியேற்றுவதில் எந்த தடையும் இல்லை. தமிழ் மக்கள் மீள்குடியேறும் போது பாராபட்சம் காட்டிய இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தங்கள் இனம் சார்ந்தவர்களை குடியேற்றுவதற்கு தானா…
-
- 0 replies
- 285 views
-
-
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா எனக் கூறப்படும் குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேரில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர் இருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இராணுவச் சிப்பாய் பொறியியல் படைப்பிரிவில் கடமையாற்றி வருபவர் என அந்த தகவல்கள் கூறுகின்றன. பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த 6 சந்தேக நபர்களில் இராணுவச் சிப்பாய்க்கு மேலதிகமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், உடுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு, திருநெல்வேலி, கொக்குவில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். ஆவா குழு தொ…
-
- 0 replies
- 405 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது நடைபெற்ற விசாரணையின் இடையில் அவர் திடீரென சுகயீனமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் 90 கேள்விகளை விமல் வீரவன்சவிடம் கேட்டுள்ளனர். இதனால் அவரால் பதிலளிக்க முடியாமல் தலை வலிக்கின்றது, தலை சுற்றுகின்றது என கூறி மயக்கமடைந்ததன் பின்னர் விசாரணை பிரிவின் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விமல் வீரவன்சவுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைய இன்று காலை 9.39 மணியளவில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் விமல் வீரவன்ச ஆஜராகியிருந்தா…
-
- 0 replies
- 495 views
-
-
சந்திப்பு... போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்தியா - புதுடெல்லிக்குச் சென்றுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான, இலங்கைத் தூதுக் குழுவினர், இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துக்கொண்டனர். (படப்பிடிப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவு) http://www.tamilmirror.lk/185511/சந-த-ப-ப-
-
- 0 replies
- 304 views
-
-
மன்னார்-வங்காலையில் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 5 பேர் மன்னார் பொலி ஸாரால் இன்று(7) காலை கைது செய்யப்பட்டனர்.. மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட குறித்த ஹெரோயின் போதைப் பொருட்களின் நிறை 2 கிலோ கிராம் எனவும் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். http://www.onlineuthayan.com/news/19856
-
- 0 replies
- 219 views
-
-
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் நின்ற பல நூறு கால் நடைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பின்பே பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தைரிவிக்கின்றனர். வலி. வடக்கின் சில பகுதிகள் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பல நூறு ல்நடைகள் தங்கி வாழ்ந்துள்ளமைக்கான அடையாளங்களும் கால் தடங்களும் கானப்படுவதாகவும். இவை தாம் யுத்தம் ஆரம்பித்தவேளையில் 1990ம் ஆண்டில் இப்பகுதியில் கைவிட்டுச் சென்றவைகள். எமது பகுதியில் இவ்வளவு காலம் குந்தியிருந்த இராணுவத்தினர். பிரதேசங்களை கைவிட்டுச் செல்லும்போது இருப்பிடங்களை அழித்தும், சொத்துக்களை அபகரித்துச் சென்றதும் இல்லாமல் எமது வாழ்வாதார…
-
- 2 replies
- 334 views
-
-
அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தாம் சார்ந்த மக்களின் குரலாகவே தமிழ்பத்திரிகைகள் ஒலித்தன-முதல்வர் விக்கி பாராட்டு பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், தமிழ்ப் பத்திரிகைகள் தமது பத்திரிகை தர்மத்தைக்கை விட வில்லை. தாம் சார்ந்த மக்களின் குரலாகவே அவை எப்போதும் ஒலித்தன தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும்,மறைமுகமான யுத்தம் ஒன்றை,ஒடுக்குமுறை ஒன்றை நாம் எதிர்கொள்கி ன்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வாழ் நாள் சாதனையாளர் விருதுபெற்ற ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு க…
-
- 0 replies
- 312 views
-