ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
பிரபல அரசியல்வாதி மகனின் அட்டகாசம் இலங்கையின் பிரபல்யமான அரசியல்வாதியொருவரின் மகனால், கொழும்பில் உள்ள இரவு கேளிக்கை விடுதியொன்றில் அட்டகாசம் புரியப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில், அந்த இரவு கேளிக்கை விடுதியின் யன்னல் மற்றும் கதவுகளின் கண்ணாடிகள் அடிந்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. சம்பவத்தில், அந்த விடுதியில் கடமையிலிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்துச் சேவைகள் பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. …
-
- 10 replies
- 765 views
-
-
யாழில் இரு இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்: 16 இராணுவத்தினர் விளக்கமறியலில் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 16 இராணுவ வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998ம் ஆண்டு அச்சுவேலிப் பகுதி இராணுவ முகாமில் கடமையாற்றிய குறித்த இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் காணாமல் போய்விட்டதாக ஆதாரங்களுடன் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு 1999ம் ஆண்டு வரை நடைபெற்று வந்த போதும், பின்னர் வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை. இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபர் தி…
-
- 0 replies
- 350 views
-
-
புலிகள் தப்பிச் செல்ல உதவியவர் தாய்லாந்தில் கைது விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல பல வருடங்களாக உதவிய டொக்டர் என அழைக்கப்படும் ஒருவரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்து சிறையில் இருக்கும் குற்றச் செயல்களில் மூளையாக செயற்பட்டு வந்த இந்த நபர் ஆயிரக்கணக்கானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த புலனாய்வு விசாரணைகளை அடுத்தே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாங்கொக் பாதாள உலக குற்றவாளியான இந்த நபர் 2 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் அமெரிக்…
-
- 0 replies
- 316 views
-
-
வந்தார் றீட்டா ஐசக் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு இன்று வருகை தந்துள்ளார். இவர்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இங்கு தங்கியிருந்து, சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து நேரடியாக தகவ ல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும், தெரியவந்துள்ளது. இதன்பொருட்டு இவர் கொழும்புக்கு மேலதிகமாக வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் செல்லவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை க்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் றீட்டா ஐசக் அரசாங்க அதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளி …
-
- 0 replies
- 340 views
-
-
அடுத்த சில வருடங்களில் உலகின் பொருளாதார மத்திய நிலையமாக ஆசியா வளர்ச்சியடையும் -ஜனாதிபதி ஆசிய புரிந்துணர்வு கலந்துரையாடல் மாநாட்டின் முக்கிய தொனிப்பொருளான, தெற்காசிய பிராந்தியத்தின் விஞ்ஞான தொழில்நுட்பத்திலும், நவீன உற்பத்தித் துறையிலும் இலங்கை முன்னிலை வகிக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் பாங்கொங் நகரில் ஆரம்பமான ஆசிய புரிந்துணர்வு கலந்துரையாடல் அரச தலைவர்கள் மாநாட்டில் இன்று காலை உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விஞ்ஞான தொழில்நுட்பத்திலும், நவீன உற்பத்தித் துறையிலும் அபிவிருத்தியை நோக்கி, பிராந்திய நாடுகளுக்கிடையில் அறிவை மேம்படுத…
-
- 0 replies
- 236 views
-
-
இன்று திங்கட்கிழமை 10-10-2016 கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் மற்றும் ஜேர்மன் நாட்டு முதலீட்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து குறித்த தொழிற் பயிற்சி நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும், கிளிநொச்சியில் எவ்வாறான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன இங்கு எவ்வாறான தொழில் முயற்சிகளுக்கு முதலீடுகள் மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர் அதனைத்தொடர்ந்து இலங்கை ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனத்தின் கட்டட அமைவிடங்கள் கற்கை நிலையங்கள் , என்பவற்றை குறித்த குழுவினர் பார்வையிட்டதுடன் மாணவர்களிடமும் பயிற்சி நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் இருப்பிட வசதிகள் ச…
-
- 0 replies
- 278 views
-
-
வடக்கில் பல்வேறு இடங்களில் 'எழுந்து நிற்போம்' விழிப்புணர்வு போராட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் விபத்துக்களை தடுப்பதற்கான நோக்குடன் இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் எழுந்து நிற்போம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள சகல திணைக்களங்களும்,பாடசாலைகளிலும் இன்று முற்பகல் 10 மணி தொடக்கம் 11 மணிவரை எழுந்து நிற்போம் என்ற விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர் அண்மைக்கால வீதி விபத்துக்களால் ஏற்படுத்தும் உயிரிழப்புக்களை தடுக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு யாழ், போதனா வைத்தியசாலை , அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போன்றன முன்னெடுத்திருந்தன. இந்த விழிப்புணர்வு …
-
- 0 replies
- 551 views
-
-
மஹேலவை கட்டியணைக்க காரணமென்ன?விளக்குகிறார் அவரது ரசிகை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் முகமாக வடமராட்சியில் இடம்பெற்ற நடைபவனியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரவீரர்மஹேல ஜெயவர்த்தனவை கட்டியணைத்து பரபரப்பை கிளப்பிய பெண், மகிழ்ச்சியை அடக்க முடியாமல் அப்படி செய்து விட்டதாக விளக்கமளித்துள்ளதுடன் ஊடகங்கள் இதனை தவறான கண்ணோட்டத்துடன் அணுகு வதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். ‘எங்கள் குடும்பத்தில் அனைவரும் கிரிக்கெட் ரசிகர்கள். அதிலும் இலங்கை ரசிகர்கள். சங்ககார, மஹேல என்றால் அனைவருக்கும் உயிர். கடந்த தடவை சங்கா நடைபவனி வந்தபோது ஆயிரம் ரூபா கொடுத்தேன். மஹேலவை நேரில் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில்தான…
-
- 25 replies
- 1.8k views
-
-
சம்பந்தன்... அரசாங்க த்தால் நியமிக்கப்பட்ட, எதிர்க்கட்சித் தலைவர். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரே சம்பந்தன் என்றும் அவரது உதவி யாளர்களாக மக்கள் விடுதலை முன்னணியினர் உள்ளனர் எனவும் மஹிந்த தரப்பு நாடா ளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கல ந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. எல்லோரும் இந்த அரசின் கைப் பொம்மைகளாகவே இருக்கின்றனர். அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லை. சம்பந்தன் அரசாங்க த்தால் நிய…
-
- 1 reply
- 274 views
-
-
மறைமுகமான அச்சுறுத்தலால் பீதியடைந்துள்ள மக்கள்.! (பா. ருத்ரகுமார்) செவ்வாய்க்கு சென்றும் நிலத்தை கூறுபோட்டு விட்டோம். மனிதனின் தேவையை மட்டுப்படுத்த நிலத்தால் மட்டுமே முடியும். எனினும் ஒரு அடி நிலத்தை தனதாக்கிக்கொள்ள அவன் படும் பாடு சாதாரண குடிமகனுக்கு கூட நன்கு விளங்கியிருக்கும். கொழும்பில் அதுவும் செல்வச்செழிப்பு மிக்க ஒரு இடத்தில் வாழ வேண்டும் என்ற கனவு அனைவருக்குள்ளும் உண்டு. அக்கனவை நனவாக்கிக் கொண்டவர்களே பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் உள்ளவர்கள் எனக்கூட சொல்லலாம். 1952 ஆம் ஆண்டு தலைநகரில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடத்தில் குடியிருப்பு மனை தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டது. 10 ஏக்கர் நிலப்பரப்பில் …
-
- 1 reply
- 276 views
-
-
“நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடுக்கும் அவங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்" “புண்பட்ட இதயங்களுக்கு இசை மருந்து கொடுக்கவே யாழ்ப்பாணம் வந்தோம்” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- புண்பட்ட இதயங்களுக்கு இசை மருந்து கொடுக்கவே யாழ்ப்பாணம் வந்தோம் என பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழில் , ஞாயிற்றுக்கிழமை மாலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , கங்கை அமரன் உட்பட இந்திய கலைஞர்களின் இசை நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வின் ஆரம்பத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நம்ம நடுவில இப்போது இல்லாமல் மேல் இருந்து எமக்கு ஆசி கொடு…
-
- 2 replies
- 488 views
-
-
பயங்கரவாத தடை சட்டத்திற்கான மாற்றீடு பழைய வைனை புது கோப்பையில் தரும் முயற்சியா? பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக முன்வைக்கப்படவுள்ள புதிய சட்டம் பழைய வைனை புதிய கோப்பையில் இட்டு வழங்குவது போலாகிவிடக் கூடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அச்சம் வௌியிட்டுள்ளது. சட்ட ஆணைக்குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்படும் புதிய சட்டம், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு பரிந்துரைத்துள்ளது என, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். எனினும், இது தொடர்பாக, பாதுகாப்புத் துறையிடம் ஆலோசனை நடத்திய அரசாங்கம், சட்ட ஆணையத்தின் ஆலோசனைகளை நிராகரித்துவிட்டது என தான் கேள்வியுற்றதாக அவர்…
-
- 0 replies
- 284 views
-
-
‘சி.வியின் உயிருக்கு அச்சுறுத்தல்’: மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு ஐ.ஜி.பிக்கு கடிதம் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டமையால், தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமான பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானமே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்து, பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித் ஜயசுந்தரவுக்கு, கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளதாவது: “வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் உயிருக்கு தென்னிலங்கையில் உள்ள இனவாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்…
-
- 0 replies
- 186 views
-
-
யாழில் எஸ்.பி இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இன்று காலை கொழும்பை வந்தடைந்த தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிகொ ப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள். இவர்களை அதிகளவான ரசிகர்கள் வரவேற்ற நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை சுற்றி பார்வையிட்டனர். இதனையடுத்து இந்திய துணைத் தூதுவர் எஸ். நடராஜன் பாடகர் எஸ்.பி. …
-
- 15 replies
- 1.1k views
-
-
வடக்கு முதல்வரை சந்தித்தார் ஜேர்மன் தூதுவர் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் நேற்று மாலை 05.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு சென்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதல்வர் விக்னேஸ்வரன், வடமாகாணத்தில் ஜேர்மன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட ரீதியாக முன்னெடு க்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள், மீள்குடியேற்றங்கள், சுகாதார, கல்வி, வீடமைப்புத் திட்டங்கள், சமூக …
-
- 0 replies
- 215 views
-
-
அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை தருவதாக புதிய அரசியல் யாப்பு அமையவேண்டும்-சுவிஸ் சபாநாயகர் அறிவுறுத்து இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் சாசனம் நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்கக் கூடியதாக அமையும் என சுவிஸர்லாந்து சபாநாயகர் கிறிஸ்டா மார்க்வெல்டர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம்செய்துள்ள சுவிஸர்லாந்து சபாநாயகர் நேற்றைய தினம் கண்டிக்கு விஜயம்செய்து சிங்கள பௌத்த மக்களின் புனித ஸ்தலமான கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், மல்வது பீட மகாநாயக்கத் தேரரரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து ஊடகவியலாள…
-
- 0 replies
- 187 views
-
-
நல்லிணக்கம் தொடர்பாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசனுக்கும் சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா குமாரதுங்கவுக்குமிடையில் மோதல் நிலை உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் தேசிய நல்லிணக்கம் தொடர்பான தன்னுடைய செயற்பாட்டில் முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா குமாரதுங்க தலையிடுவதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போதைய தேசிய அரசாங்கத்தின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக உள்ளார். இந்நிலையில், தனது அமைச்சின் பணிகளில் சந்திரிக்கா தலையீடு செய்வதாகவும், இவ்வாற…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதிய அரசியலமைப்பு சுவிஸின் அரசியல் யாப்பின் அடிப்படையில் அமையவேண்டும்-சம்பந்தன் சுவிட்சர்லாந்தின் அரசியல்யாப்பை அடிப்படையாக கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட, வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் சபாநாயகரை இன்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டார் சுவிட்சர்லாந்தில் அமுலில் உள்ள அரசியல்யாப்பு அனைத்து சமூகத்திற்கும் சம உரிமையை வழங்கியிருக்கிறது.இதன் ஊடாக அந்த நாடு முன்னோக்கி பயணிக்கின்றது. அதற்கமைய இலங்கையின் அரசியல்யாப்பு தயாரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவ…
-
- 20 replies
- 799 views
-
-
“காட்டிக்கொடுப்பாளர்களை அடையாளம் காண தவறிவிட்டேன்” என்கிறார் மஹிந்த யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது யுத்தத்தை நிறுத்துமாறு சில மேற்கு நாடுகள் என்னிடம் வலியுறுத்தின. ஆனால் நான் அதனை நிராகரித்து விட்டேன். அதனால் தான் மேற்கு நாடுகள் என்னுடன் சிக்கலுக்குள்ளாகின. அந்த வலியுறுத்தலை கேட்டு நான் யுத்தத்தை நிறுத்தியிருந்தால் மேற்குலகம் என்னுடைய நண்பனாக இருந்திருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். ஆங்கில ஊடகமொன்றிற்கு விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். http://www.virakesari.lk/article/12236
-
- 2 replies
- 621 views
-
-
கொலை குற்றவாளிக்கு சட்ட ஆலோசனை வழங்கினாரா நீதியமைச்சர்? இலங்கை கடற்படையின் குழு ஒன்றினால் 10 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்ப வத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச சட்ட ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் கடற்படையினரால் கடத்தப்பட்ட 10 மாணவர்கள் திருகோணமலை கட ற்படை முகாமில் வைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விஜயதாச ராஜபக்சவின் செயற்பாடானது, நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு அதனை அழிக்கும் பயங்கரமான சதி த்திட்டம் என அரசியல் அவதானிகள் கூறியுள…
-
- 1 reply
- 303 views
-
-
புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேர்க்கும் நடைபவனி இயக்கச்சியை சென்றடைந்தது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முதல் ஹம்பாந்தோட்டையின் தேவேந்திரமுனை வரையிலான நடைபவனி, நான்காம் நாளாக இன்று 09-10-2016 கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியை வந்தடைந்துள்ளது. காராப்பிட்டியவில் அமையவுள்ள புற்றுநோய் வைத்தியசாலைக்கான நிதியை சேகரிக்கும் நோக்கில் விசேட நடைபவனியொன்று கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை புனித சேவியர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது தேவேந்திரமுனை வரை 28 நாட்கள் நடைபெறவுள்ள இந்த நடைபவனி யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் ஆரம்பமாகி, மிருசுவில், எழுதுமட்டுவாள், முகமாலை, புதுக்காடு, கரந்தாய் ஊடாக இயக்கச்சியை வந்தடைந்து…
-
- 0 replies
- 274 views
-
-
தமிழகத்திலுள்ள அகதிகளில் 30 பேர் நாடு திரும்புகின்றனர்.! உள்நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழல் காரணமாக இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களின் 30 பேர் எதிர்வரும் 18 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்த சமய அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானசோதி தெரிவித்துள்ளதாவது, இலங்கையிலிருந்து சென்று அகதிகளாக தமிழகத்தில் தங்கியுள்ளவர்களை படிப்படியாக மீண்டும் அழைத்து வரப்படுகின்றனர். அதன் பிரகாரம் மதுரையிலுள்ள இலங்கை அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் 30பேர் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் த…
-
- 0 replies
- 205 views
-
-
ரெலோவின் காரியாலயம் விசுவமடுவில் திறப்பு தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிராந்தியக் காரியாலயம் முல்லைத்தீவு விசுவமடு பகுதி யில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனால் இந்த பிராந்திய காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது. நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் கட்சியின் செயற்பா ட்டாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். இவ் அலுவலகத்தின் மூலம் அரசியல் செயற்பாடுகளுடன், பல சமூகப்பணிகளும் முன்னெடு க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://onlineuthayan.com/news/18740
-
- 0 replies
- 292 views
-
-
விக்கினேஸ்வரன் போட்ட குண்டு! 'தனது உயிருக்கு உலை வைக்கவும் தென்னிலங்கையில் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன' என்ற அவரது குற்றச்சாட்டு பாரதூரமானது. இலகுவாக ஒதுக்கித் தள்ளி விடமுடியாதது.அதனால் தான், பல்வேறு தரப்புகளில் இருந்தும் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப் பெற்றிருக்கிறது. தனது உயிருக்கு உலை வைத்து விட்டு அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கு தென்னிலங்கையில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த முதலாம் திகதி புதியதொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். …
-
- 2 replies
- 975 views
-
-
புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் ஒரே இலங்கையராக இருப்போம் எனக் கூறிவிட்டு கபடத்தனமாக பெரும்பான்மையின மதத்தை சிறுபான்மையின மக்கள் மீது திணிக்கும் செயற்பாடொன்றை நல்லாட்சி எனப்படும் அரசாங்கம் மறைமுகமாகத் திட்டமிட்டு வருவதாக தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசு எனப்படுவது தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கு உரிய நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதுவே நல்லாட்சிக்கான சிறந்த எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்துள்ளார். இதனைவிடுத்து இனம், மதம் இல்லாமல் ஒரே இலங்கையராக செயற்படுவோம் என கூறுவது கபடத்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தொக…
-
- 0 replies
- 429 views
-