Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியலில் ஈடுபட மாட்டேன் -கமால் என்னிடம் அரசியல் கட்சி இல்லை எனவே நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என இரா ணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். அவிஸ்ஸாவளையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையா ற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வர வேண்டும் என்றால் புதிதாகத்தான் பிறக்க வேண்டும், எனவே தனக்கு இது அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ‘நந்திக் கடலுக்கான பாதை’ எனும் 800 பக்கங்களைக் கொண்ட நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார். ஆனால் இறுதிக் கட்ட யுத்தத்தில…

  2. எக்நெலிகொட காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான படையினருக்கு பிணை லங்கா ஈ நியூஸ் ஊடகவிலயாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான படை உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவிசாவளை மேல் நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் நான்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.ne…

  3. மட்டக்களப்பு மாவட்டம் பாசிக்குடா கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இந்தச் சோகம் தாளாத அவர்களது பெற்றோர்கள் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, சண்முகம் சுரேஸ்குமார் (22), சண்முகம் சதீஸ்குமார் (18) ஆகிய இரண்டு சகோதரர்களும் கடலில் நீராடச் சென்ற நிலையில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் காணவில்லையெனப் பெற்றோர் தெரிவித்தனர். இந்நிலையில், காணாமல் போன இரு சகோதரர்களையும் தேடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இருப்பினும், இதுவரையும் இருவரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று காலைவரை பிள்ளைகளைக் காணாத பெற்றோர் வேலுப்பிள்ளை சண்முகம் மற்றும் சண்முகம் யோகலக்ஷ்மி ஆகியோர் தற…

  4. அதிகார பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு-யாழில் அமைச்சர் மனோ தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் தான் தீர்வு என்பதில் திட்டவட்டமான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் யாழில் தெரிவித்தார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய சகவாழ்வு மேம்பாட்டிற்கான ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வு இன்று (திங்கட்கிழமை) யாழ். ரில்கோ சிற்றி ஹொட்டலில் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு விசேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.' அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், இந்த நாட்ட…

  5. “வடக்கு முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும்” : உதய கம்மன்பில தமிழ் ஈழத்தை வழங்க முடியாமல் போனது தொடர்பில் கவலை அடைவதாக தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜே.ஆர்.ஜயவர்தன குறிப்பிட்டிருந்தாக வட.மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார். இது உண்மைக்கு புறம்பான விடயம். எனவே ஜே.ஆர்.ஜயவர்தனவின் மருமகனான பிரதமர் முன்னிலையில் நாட்டு மக்களுக்கு பொய்யான விடயங்களை தெரிவித்தமைக்காக வடக்கு முதலமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். தூய்மையா ஹெல உறுமைய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில்…

  6. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அதிபர் மைத்திரிபாலசிறிசேனவுடன் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் அமெரிக்கா புறப்பட்டுள்ளார். இதேவேளை உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பிலிருந்து ஐக்கியநாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சுரேன் சுரேந்திரன் என்பவரின் தலைமையில் 10பேர் அடங்கிய குழுவொன்று அமெரிக்கா புறப்பட்டுள்ளது. இக்குழு, வொஷிங்டனில் உள்ள ஹில்டன் விடுதியில் தங்கியிருப்பதாகவும் இவர்களுக்கான விடுதிக்கான கட்டணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் என அனைத்து செலவுகளை அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதரகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இக்குழுவை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ச…

  7. மாணவர்கள் பல்வேறு மொழிகளில்பாண்டித்தியம் பெற்றிருத்தல் அவசியம்-பிரதம நீதியரசர்ஸ்ரீபவன் மாணவர்கள் பல்வேறு மொழிகளிலே பாண்டித்தியம் பெற்றிருத்தல் இன்றியமையாததாகும்.தாய்மொழி தமிழை போற்றிப்பாதுகாக்க வேன்டியது எமது கடமை. அதே சமயம் எமது சகோதர மொழியாகிய சிங்களத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். இது மக்களிடையே கருத்துக்களை வெளியிடவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் உறுதுணையாக இருக்கும் என பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் தெரிவித்தார் யாழ் இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு வழா இன்றையதினம் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் கல்லூரி அதிபர் தயானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவ…

  8. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் திறப்பு கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று இடம்பெற்றது. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அதிபர் திரு. ஐயம்பிள்ளை ராஜரட்ணம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் கே.மதிவாணன் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, நுவான் குலசேகர ஆகியோர் பிர…

  9. பரிசில் இடம்பெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாடு மாவை சேனாதிராசாவின் ஆரம்பப் பேச்சோடு, பொதுமக்களின் கேள்விக்கணைகளோடு ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. பிரான்சு தலைநகர் பரிசில் இடம்பெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாட்டில் மேடையேறி உரையாற்றத்தொடங்கிய மாவை சேனாதிராசா 2009ல் ஜேர்மனியிலே கொண்டாடிய பின் இப்படியொரு நிகழ்வு இப்போதுதான் இடம்பெறுவதாக கூறியதைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்த இளைஞர்கள் எழுந்து, இனம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட வேளை யாரடா கொண்டாடினோம், நீ எங்கடா இருந்தாய் என்று கேள்வி கேட்கவே மாநாடு பெரும் குழப்பத்திற்குள்ளாகி நிகழ்வுகள் இரத்துச்செய்யப்பட்டது. இக்குழப்பத்தின் போது கண்ணீர்ப்புகையும் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன. மாநாட…

  10. மஹிந்த தோல்வியை இந்தியா கொண்டாடியது 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த தோல்வியடைந்து, மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதற்கு இந்தியா மகிழ்ச்சியடைந்தது என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டியதற்கு இந்தியா மகிழ்ச்சி அடைந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவரது இரண்டு செயற்பாடுகள் குறித்து இந்தியா அதிருப்தியுடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை வழங்க மஹிந்த முனைப்பு காட்டவில்லை எனவும், சீனா நோக்கி அதிகளவு விசுவாசம் காட்டியதாகவும் இந்த விடயங்கள் தொ…

  11. யாழ்ப்பாணத்தில் பாரிய சிறைச்சாலையொன்று அமைக்கப்பட உள்ளது யாழ்ப்பாணத்தில் பாரிய சிறைச்சாலையொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய வசதிகளைக் கொண்ட சிறைச்சாலையொன்று நிர்மானிக்கப்பட உள்ளது. சுமார் 623 மில்லியன் ரூபா செலவில் இந்த சிறைச்சாலையின் இரண்டாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக நிர்மானிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 130 கைதிகளை தடுத்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136060/language/ta-IN/article.aspx

    • 4 replies
    • 454 views
  12.  திருவள்ளுவர் சிலை திறப்பு... மு.இராமச்சநதிரன், ஆர்.ரமேஸ், எஸ்.கணேசன் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் முயற்சியின் பயனாக, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட 16 திருவள்ளுவர் சிலைகளின் முதலாவது சிலை, ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவில் இன்றுத் திங்கட்கிழமை பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் எம்.ரமேஸ்வரன் ஆகியோர் இணைந்து திருவள்ளுவர் சிலையை திறந்து வ…

  13. மாணவர்கள் அதிகம் கல்வியில் ஆர்வம் காட்டினால் யாழில் வன்முறைகளை தடுக்கமுடியும். யாழ்ப்பாணத்தில் பெருகிவரும் வன்முறையை கட்டுப்படுத்த மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று மனித உரிமை அமைப்பின் பாதுகாவலர் டிக்சன் தெரிவித்தார். உடுவில் பகுதி மாணவர்களுடனான சந்திப்பு உதயன் கல்வி நிறுவனத்தினரால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்தி ப்பின் கெளரவ விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை மனித உரிமை அமைப்பின் பாதுகாவலர் டிக்சன் கருத்து தெரி விக்கையில் தற்காலத்தில் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரை மாணவர்களின் கல்வித் தரம் குறைந்த பட்சத்தில் காணப்படுகின்றது அதே நேரம் வன்முறையில் மாணவர்கள்ஈடுபடும…

  14. உரிய தீர்வு இல்­லை­யேல் அர­சி­ய­ல­மைப்புக்கு எதிர்ப்பு ; சம்­பந்தன் தமிழ் மக்கள் நீண்ட கால­மாக கோரிவரும் முறை­யான அர­சியல் தீர்வை புதிய அர­சியல் சாசனம் கொண்­டி­ருக்­க­வில்­லை­யாயின் அதனை நாம் நிரா­க­ரிப்போம். ஆத­ரவு கொடுக்­கவும் மாட் டோம் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை மாவட்­டங்­களைச் சேர்ந்த நல்­லாட்­சிக்­கான பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பிர­தி­நி­திகள் எதிர்க்­கட்சித் தலை­வரை அவரின் திரு­கோ­ண­மலை இல்­லத்தில் சந்­தித்து இன்­றைய அர­சி­யலும் பெண்­களின் பங்­க­ளிப்பும் என்ற கருப்­பொ­ருளில் அவ­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­போதே அவர் மேற்­கொண்­ட­வாறு கூறினார். இக்­க­லந்­து­ரை­யா­டலில் மட…

    • 7 replies
    • 891 views
  15. இரசாயன ஊசி விவகாரம் - ஆர்வம் காட்டாத முன்னாள் போராளிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இரசாயன ஊசி விவகாரம் தொடர்பான பரிசோதனைகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தயக்கம் காட்டி வருவதாக வட மாகாண சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, அது குறித்த யோசனை ஒன்று வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இவர்களை வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டது. பிரதேச சுகாதார வைத்திய அலுவலகத்தின் ஊடாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதோடு, அதன் முதற்கட்டமாக முன்னாள் போராளிகளின் வைத்திய அறிக்கையை பெற்றுக் கொ…

  16. புகையிரதங்களில் பயணிப்போருக்கு இலத்திரனியல் பயணச்சீட்டு தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படு த்த இலங்கைப் புகையிரத திணைக்களம்தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புகையிரத நிலையங்களின் சேவைகளை இலகுவாக்க முடியும் என புகையிரதபொதுநிர்வாக அதிகாரி ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். குறித்த இலத்திரனியல் அனுமதிச்சீட்டுகளின் நிமித்தம் புகையிரத நிலையங்களுக்குஇரண்டு இயந்திரங்கள் வீதம் வழங்கப்பட வுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு இயந்திரம் புகையிரத நிலையங்களின் அலுவலகங்கள் ஊடாக பயணிகளுக்குஅனுமதிச…

  17. அநுராதபுரம் சிறைச்சாலையில் 21 முதல் தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதம் அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் தமிழ் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் …

  18. மனதை நெகிழச் செய்யும் கிளிநொச்சி வர்த்தகர்களின் சோகம் கிளிநொச்சி சந்தையில் இடம்பெற்ற தீ விபத்தானது கிளிநொச்சி நகரத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக வடமாகாண வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் பா. டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர் டெனீஸ்வரன், பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள், பிரதேச சபையின் செயலாளர், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தீயை அணைப்பதற்கு உதவிய இளைஞர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் பெண் தலைமைத்துவத்தை கொண்டவர்களும், புனர்வாழ்வு பெற்ற முன்…

  19. வடக்கு தமிழ் சமூகம், காவல்துறையினருடன் இணைந்து செயற்பட வேண்டும் - பூஜித் ஜயசுந்தர வடக்கு தமிழ் சமூகம் காவல்துறையினருடன் இணைந்து செயற்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஒட்டுசுட்டானில் காவல் நிலையமொன்றை திறந்து வைத்து உரையாற்றிய பொது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையிருனக்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையில் ஐக்கியம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.புதிய காவல் நிலையத்தை பிரதேச மக்கள் பாதுகாத்து பேணுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136100/language/ta-IN/article.…

  20. திலீபனின் நினைவுதினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு எஸ்.என். நிபோஜன் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அரசியல் துறை பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வை, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. குறித்த நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வேந்தன், செயலாளர் இ.கதிர், பொருளாளர் செ.விதுரன், ஊடக பேச்சாளர் க.துளச…

  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2016ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துவிடும் எனச் சொன்னார். 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் அவர் டேவிட் கமரூன் செய்ததைப்போல் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு அதில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் யாவும் ஆதரவு தெரிவிக்கையில் தமிழரசுக் கட்சிமாத்திரம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியாவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பொது அமைப்புடனான சந்திப்பின் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட ந…

  22. மாணவிகள் எவ்வாறு உடை அணிய வேண்டும் கொழும்பில் பிரபல பாடசாலை மதில்களில் சுவரொட்டிகள் கொழும்பின் பிரபல்யமான ஆண்கள் கல்லூரியின் சுவரொன்றில், மாணவிகள் எப்படியான உடை அணிந்து கல்லூரிக்கு வரவேண்டும் என்பது பற்றிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது, பலரின் கோபத்தைக் கிளறியுள்ளதாக பிபிசியின் இலங்கை நிருபர் ஆயிஷா பெரேரா கூறியுள்ளார். கொழும்பின் பிரபல்யமான ஆண்கள் கல்லூரியான சென்ட் ஜோசப் கல்லூரியில் 16 படங்கள் அடங்கிய சுவரொட்டி கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் 16 படங்களிலும் கல்லூரி மாணவிகள் வெவ்வேறு விதமான உடைகள் அணிந்து காணப்படுகின்றார்கள். இவற்றுள் எது அனுமதிக்கத் தக்கது என்பதை இந்த சுவரொட்டிகள் குறித்திருப்பதுதான் பலருக்கு கோபத்தை…

  23. நாடாளாவிய ரீதியில் முஸ்லீம் குடியேற்ற திட்டங்களையும் வீடமைப்பு திட்டங்களையும் செய்து வருகின்ற அமைச்சர் ஹிஸ்புல்லா தலைமையிலான ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஒல்லிக்குளம் மேற்கு, ஒல்லிக்குளம் கிழக்கு, மண்முனை மற்றும் கீச்சான்பள்ளம் பகுதிகளில் மாபெரும் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் கடந்த புதன்கிழமை நாட்டி வைக்கப்பட்டது. ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். ஏறாவூர், பாலமுனை, பொலன்னறுவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹிரா பௌண்டேஷன் அனுசரணையில் தேசிய ரீதியில் முஸ்லீம் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

    • 3 replies
    • 526 views
  24. ஏறாவூரில் பதற்றம்!! (காணொளி இணைப்பு) ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சற்றுமுன்னர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு பற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கைது செய்யத நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக முற்றுகையிட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11443

    • 3 replies
    • 523 views
  25. கிளிநொச்சி, பொதுச் சந்தை வளாக தீவிபத்து- விரைவில் மீளவும் நிர்மாணிக்க நடவடிக்கை - முதலமைச்சர் சீ.வி: கிளிநொச்சி, பொதுச் சந்தை வளாகத்தில் ஏற்பட்ட தீயினால் சேதமடைந்த வர்த்தகத் தொகுதிகளை விரைவில் மீளவும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் பேசி அந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு விரைவில் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாவும் அவர் கூறியுள்ளார். கடந்த 16ம் திகதி இரவு கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 100 கடைகள் சேதமடைந்தன. இதனால் கோடிக்கணக்கான நஸ்டம் ஏற்பட்டதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.