ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143425 topics in this forum
-
விச ஊசி விவகாரம் தொடர்பில் வட மாகாண மருத்துவர் மன்றம் ஆராயும் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் உதயமாகும் வட மாகாண மருத்துவர் மன்றம் ஆராய்ந்து சாதகமான முடிவுகளை எட்டும் என்று அம்மன்ற த்தில் தலைவர் வைத்தியர் ப.அச்சுதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக வடமாகாண சபை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் உள்ள வைத்தியர்களை ஒன்றிணைத்து வடமாகாண மருத்துவர் மன்றம் உருவாக்குதல் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் நாவலர் கலா சார மண்டபத்தில் நடைபெற்றது. …
-
- 0 replies
- 318 views
-
-
யாழ். வேம்படியில் உயர்கல்விக்கான வழிகாட்டல் கண்காட்சியும் தொழில்சந்தையும் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாணர்வர்களின் உயர்கல்விக்கான வழிகாட்டல் கண்காட்சியும் தொழி ல்சந்தையும் இன்றுகாலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் ஆரம்பமாகியது. வட மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில். பாடசாலை கல்வியின் பின்னர் மாண வர்கள் எதிர்கொள்ளும் உயர் கல்விக்கான சவால்களுக்கும்இபிரச்சினைகளுக்கும் வழிகாட்டியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. இக்கண்காட்சியில் யாழ் மாவட்டத்திலுள்ள அரச,அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களும் தமது காட்சிக் கூடங்களை அமை த்து…
-
- 0 replies
- 313 views
-
-
மற்றுமொரு உறுதிமொழி பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடு விக்குமாறு கோரி நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பரவிப்பா ஞ்சான் மக்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை மூன்று மாதத்திற்குள் மீளப் பெற்றுக்கொடுப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொலை பேசியில் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர். கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடு விக்குமாறு …
-
- 1 reply
- 376 views
-
-
திடீர் தேர்தல் ஒன்றுக்கு தயாராகிறது தேர்தல்கள் ஆணைக்குழு திடீர் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அவசரமாக தயா ராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்து ள்ளார் . நாடு முழுவதும் தேர்தல் மத்திய நிலையங்களை தெரிவு செய்தல் மற்றும் அவற்றை தயார்படுத்தும் நடவடிக்கைகள் என்பன கடந்த சில நாட்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு ள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், பாடசாலை விடுமுறை முடிவடைந்தவுடன் தேர்தல் நடவடிக்கைகளுக்கான அதிகாரிகள் தொடர்பான கணக்கெடுப்புக்கள் நடாத்தப்பட்டு பெயர் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்…
-
- 0 replies
- 309 views
-
-
நாடு கடத்தப்பட்டார் சுதன் சுப்பையா போலி இந்தியக் கடவுச்சீட்டு மூலம் ஜேர்மனிக்குச் செல்ல முயன்ற போது, புனே, லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்ய ப்பட்ட சுதன் சுப்பையா என்ற தமிழர், கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டார். பிராங்போர்ட் செல்ல முயன்ற போது, கடந்த முதலாம்திகதி, லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுதன் சுப்பையா, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர் என்று விசாரணைகளில் தெரிய வந்ததாக, இந்திய அதி காரிகள் தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு, ஆலங்கொட்டல் என்ற இடத்தைச் சேர்ந்த மாரிமுத்து ராஜு என்பவரின் கடவுச்சீட்டில் தனது ஒளிப்படத்தை ஒட்டி, இவர் ஜேர்மனி செல்ல முயன்ற போது, ஐபி எனப்படும் உள்ள…
-
- 3 replies
- 750 views
-
-
கீரிமலை கடற்கரைப்பகுதியில் கலாசார சீர்கேடுகள் -தடுக்குமாறு ஆர்வலர்கள் கோரிக்கை யாழ்ப்பாணம் - கீரிமலை கடற்கரைப் பகுதியில் பல கலாச்சாரச் சீரழிவுகள் இடம்பெறுகின்றன, பட்டப்பகலில் பாலியல் செயற்பா டுகள் தாராளமாக இடம்பெறுகின்றன, அவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாகவுள்ளது, மேலும் மாணவ, மாணவிகளும் இதில் உள்ளடங்குவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கீரிமலை கடற்பகுதி இறந்தவர்களுக்கு பிதிர்க்கடன் செய்யும் ஒரு புனித பிரதேசமாகும். கடற்கரையை அண்மித்து வரலாற்றுச் சிற ப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான நகுலேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. இங்கு நாளாந்தம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலி ருந்து…
-
- 18 replies
- 1k views
-
-
அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை குழப்புவதற்கு இனவாத சக்திகள் கடும் பிரயத்தனம் (எம்.சி.நஜிமுதீன்) நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எமது அரசாங்கத்தின் முயற்சிகளை குழப்பியடைப்பதற்கு இனவாத சக்திகள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றன. இனவாத சக்திகளின்செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அடிபணியாது நல்லிணக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சிறுவர் விவகாரங்களுக்கான இராஜங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளத்தில் இன்று கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இச்சம்மேளனத்தில் வரவேற்புரை ஆற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,…
-
- 0 replies
- 364 views
-
-
தேசிய இனப்பிரச்சினைக்கு 70 ஆண்டுகாலமாக தீர்வில்லை - ஐ.தே.க.மேடையில் ஜனாதிபதி தேசிய இனப்பிரச்சினைக்கு 70 அண்டுகாலமாக தீர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு சம்மேளனம் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று (10) இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கடந்த 70 ஆண்டுகாலமாக கடந்த அரசாங்கங்கள் தோல்வியுற்றுள்ளன. கடந்த காலத்தில் இருந்த அரசியல் தலைவர்கள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வே…
-
- 4 replies
- 515 views
-
-
கொத்துக்குண்டுகள் பயன்பாட்டினால் அவலநிலையில் திண்டாடும் மக்கள் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ; செல்வம் எம்.பி. இறுதி யுத்தத்தில் கொத்துக் குண்டுகள், இரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக இன்னும் எமது மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் தெரிவித்தார். தற்போது பிறக்கும் குழந்தைகள் கூட அதன்பாதிப்புக்குள்ளாவதாக சுட்டிக்காட்டிய அவர் உடலில் குண்டு துகள்களை சுமந்து கொண்டிருக்கும் அனைவரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உடன்…
-
- 3 replies
- 325 views
-
-
காணாமற்போனோர் தொடர்பான ஐ.நாசெயலணியுடன் இணைந்து பணியாற்ற தயாராகிறது இலங்கை காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக, இலங்கை அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா செயலணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம், 18 ஆம் திகதி வரை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னரே ஐ.நாவின் இந்த …
-
- 0 replies
- 285 views
-
-
ஐ.தே.க. மேடையில் ஜனாதிபதி மைத்திரி, சந்திரிகா ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டுள்ளார். இவர் சற்றுமுன்னர் கெம்பல் பாரக் மைதானத்திற்கு வருகைத்தந்துள்ளதுடன், அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார். இந்நிலையில் குறித்த ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11188
-
- 1 reply
- 312 views
-
-
கிழக்குப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா... -பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 20 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாக, நல்லையா மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (10) நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு,வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 893 பேர் இதன்போது பட்டம் பெற்றனர். நான்கு கட்டங்களாக நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் கலை கலாசாரம்,வர்த்தக முகாமைத்துவம்,விஞ்ஞான விவசாயம் மருத்துவம் போன்ற துறைகளில் உள்வாரியாக பட்டப்படிப்பை பூர்த்திசெய்த, 221 பேர் முதலாம் கட்டத்திலும் 243 …
-
- 0 replies
- 338 views
-
-
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும் - மஹிந்த எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலமாக அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தாது காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் முடிந்தால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலி;ல் கூட்டு எதிர்க்கட்சி சிறந…
-
- 0 replies
- 325 views
-
-
யாழ். மத்திய கல்லூரிக்கு நிதி வழங்குவதாக ஜனாதிபதி உறுதி -எஸ்.ஜெகநாதன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர் விடுதி அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை (09) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தங்கள் கல்லூரியின் மாணவர் விடுதி நீண்ட காலமாக புனரமைக்காமல் சேதமடைந்துள்ளதாகவும், அதனை மீள அமைக்க வேண்டிய தேவையுள்ளதால், நிதியுதவி தேவைப்படுவதாக கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கட்டடம் அமைப்பதற்கு 100 மில்லியன் ரூபாய் வழ…
-
- 0 replies
- 369 views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறியமைக்கு தேசியப்பிரச்சினைக்கான காரணத்தை கண்டறியாமையே காரணம்-அமைச்சர் மங்கள தேசியப்பிரச்சினைக்கான காரணத்தை கண்டறியாமையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாமற் போனமைக்கான காரணம் என என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சுலோவேனியாவுக்கு சென்றுள்ள அமைச்சர் அங்கு, மத்தியக்கிழக்கு மற்றும் போல்கன் கற்கைக்களுக்கான சர்வதேச நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது இவ்வாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது சமூகத்தில் ஏற்பட்ட பிரிவுகள் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் வேறுபட்டன. அத்துடன் பேச்சு சுதந்திரம் தடுக்கப்பட்டது. சமூகத்தில் பயம…
-
- 0 replies
- 377 views
-
-
மலேசியாவில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் தாக்கப்பட்டமைக்கும் தமது அமைப்பினருக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் சீமான் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கோலாலம்பூர் விமானத்தளத்தில் வைத்து தாக்கப்பட்டார். இதனையடுத்து குறித்த தாக்குதலை நாம் தமிழர் கட்சியின் மலேசிய ஆதரவாளர்களே நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் மீது தமது அதிருப்தியை ஜனநாயக ரீதியாகவே வெளிப்படுத்தி வருவதாக சீமான் குறிப்பிட்டுள்ளார். எனினும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசாங்கம் நிறுத்தும் வரையில், இவ்…
-
- 1 reply
- 487 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் போசாக்கு மட்டம் உயர்வடைந்து செல்கிறது மருத்துவர் மைதிலி:- 2012 ஆம் ஆண்டு கணிப்பின் படி இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம் போசாக்கு மட்டத்தில் கடைசி மாவட்டமாக காணப்பட்டது. ஆனால் தற்போது அதிலிருந்து முன்னேறிச் செல்கிறது. இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க முடியாது இருந்தும் மாவட்டத்தின் போசாக்கு மட்டத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மைதிலி தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை 09-09-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் போசாக்கு தொடர்பான தேசிய வேலைத்திட்ட முன்னேற்ற பரிசீலனை கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் போசாக்கு மட்டத்தை உயர்த்தும்…
-
- 1 reply
- 320 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு வருமாறு சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி அழைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு சுத்தமான கையுடன் அரங்கத்திற்கு வருமாறு தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கடிதமொன்றினூடாகவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பதம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அதன் நாணயத்தை இழந்துள்ளதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை எனவும் ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள…
-
- 9 replies
- 730 views
-
-
உடுவில் மகளிர் கல்லூரியில் மல்லாகம் நீதவான் உடுவில் மகளிர் கல்லூரியில் நேற்றைய தினம் மாணவிகள் மீதான தாக்குதலை அடுத்து தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் இன்றைய தினம் மல்லாகம் நீதிவானை சென்று சந்தித்த நிலையில் அந்த மாணவிகளை பாடசாலைக்கு செல்லுமாறு நீதவான் அறிவுறுத்தி அனுப்பினார். எனினும், குறித்த மாணவிகள் மீளவும் பாடசாலைக்கு வந்து பாடசாலை வளாகத்தினுள் செல்ல முயற்சித்த வேளை அங்கு நின்ற பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மாணவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காது வாயில் கதவை சாத்தியதால் அங்கு பெரும் களேபரம் இடம்பெற்றது. இந்தநிலையில் தற்போது உடுவில் மகளிர் கல்லூரிக்கு மல்லாகம் மாவட்ட நீதவான் யூட்சன் நேரடியாக வருகை தந்து மாண…
-
- 25 replies
- 5.9k views
- 1 follower
-
-
'வடக்கின் அபிவிருத்தி தடைகள் நிவர்த்தி செய்யப்படும்' -எஸ்.ஜெகநாதன் 'வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாகக் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக, திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வைப் பெற்றுத் தருவேன்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (09) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டார். இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். 'இரணைமடுக் குளம் புனரமைப்புப் பணிகளில்…
-
- 1 reply
- 408 views
-
-
சிறிலங்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளில், இந்தியர்களைப் பின்தள்ளிவிட்டு சீனர்கள் கடந்த இரண்டு மாதங்களாக முன்னிலை வகிக்கின்றனர். சீனாவிலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் 27,519 சுற்றுலாப் பயணிகள் சிறீலங்காவுக்குப் பயணம் செய்துள்ளனர். இது கடந்த மாதத்தைவிட 11 வீதம் அதிகமாகும். அதேவேளை, இந்த ஆண்டில், முதல் எட்டு மாதங்களில் மாத்திரம், சீனாவில் இருந்து 190,992 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 32 வீத அதிகரிப்பாகும். இதேவேளை ஓகஸ்ட் மாதம் 24,418 இந்திய சுற்றுலாப் பயணிகளே சிறிலங்கா வந்துள்ளனர். கடந்த காலங்களில் சிறீலங்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்பவர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக…
-
- 10 replies
- 594 views
- 1 follower
-
-
முப்படைகள், போலீஸ் துறைகளில் தமிழர்கள் கூடுதலாக இணைத்துக் கொள்ளப்படுவர்: ரணில் எதிர் காலத்தில் இலங்கை முப்படைகள் மற்றும் போலீஸ் துறைகளில் தமிழர்களை கூடுதலாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதில் வழங்கிய போது பிரதமர் இதனை அறிவித்தார். யுத்தம் ஆரம்பித்த பின்னர் அரசு பாதுகாப்பு தரப்பில் கடமையாற்றிய தமிழ் அதிகாரிகள் விடுதலை புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்த பிரதமர், இதன் காரணமாக தமிழர்கள் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு தயக்கம் காட்டியதாக தெரிவித்தார். அதே போன்று யுத்தம் இனவாத ரீதியில் மேட்கொள்ளப…
-
- 7 replies
- 684 views
-
-
யாழ். பொலிஸ் நிலையம் திறப்பு... யாழ்ப்பாணம், துரையப்பா விளையாட்டரங்கு முன்பாக அமைக்கப்பட்ட புதிய யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலைய கட்டடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று வெள்ளிக்கிழமை (09) திறந்து வைக்கப்பட்டது. (படப்பிடிப்பு: எஸ்.ஜெகநாதன்) - See more at: http://www.tamilmirror.lk/181530/ய-ழ-ப-ல-ஸ-ந-ல-யம-த-றப-ப-#sthash.twWsVeJv.dpuf
-
- 1 reply
- 544 views
-
-
மாத்தளையில் புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்பு மாத்தளை புதிய பிரதேச செயலகத்துக்கு கட்டடம் அமைப்பதற்காக அத்திபாரம் தோண்டிய போது, பல வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிகள் 137, ரிவோல்வர் 6இன் பாகங்கள் உள்ளிட்ட இன்னும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. துருபிடித்த நிலையில் காணப்பட்ட இந்த ஆயுதங்களை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பவுள்ளதாக பொலிஸார் கூறினர். கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகளை மாத்தளை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.பீ.எச்.எம்.ஷேசிறி ஹேரத, பார்வையிட்டார். குறித்த ஆயுதங்கள் அங்கு எப்படி அங்கு புதைக்கப்பட்டன என்ப…
-
- 0 replies
- 312 views
-
-
வெலிக்கடை சிறையில் மரணதண்டனை கைதிகளின் உடையில் துமிந்த பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சீ-3 சிறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அணியும் வெள்ளை சாரம் மற்றும் வெள்ளை சேட்டை நேற்று மாலை முதல் அவருக்கு அணிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தங்க வைக்கப்பட்டுள்ள சிறைப் பகுதியில் பலத்த பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக துமிந்த சில்வா தரப்பினர் மே…
-
- 1 reply
- 514 views
-