Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். விமானம் மூலம் பெங்களூருக்கு சென்ற ஜனாதிபதி, பின்னர் அங்கிருந்து காரில் சித்தூர், திருப்பதி வழியாக நேற்றிரவு 8.30 மணிக்கு திருமலையைச் சென்றடைந்தார். ஆந்திர வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி, திருப்பதி சுகுணா எம்.எல்.ஏ. மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் ஜனாதிபதிக்கு வரவேற்பளித்தனர். இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 2.15 மணிக்கு கோவிலுக்கு சென்ற ஜனாதிபதி, அதிகாலை 3 மணிக்கு நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் வருகையையொட்டி, திருப்பதி…

  2. காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இரவுத் தபால் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் பலியானார் இவ்விபத்தானது அநுராதபுரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரயிலில் இருந்து இறங்கி நீர் அருந்தி விட்டு மீண்டும் ரயிலில் ஏறுவதற்காக முற்பட்ட பொழுது இவ்விபத்து இடம்பெற்றதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்தில் பலியானவர் மானிப்பாயைச் சேர்ந்த குமரன் அரையன் (52 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். http://www.onlineuthayan.com/news/16519

    • 2 replies
    • 415 views
  3. கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் உள்ள 500 ஏக்கர் கஜு தோட்டத்தைப் பொதுப் பாவனைக்கு வழங்கச் சம்மதிக்கின்றோம். ஆனால், அவற்றுக்காகக் கடந்த ஏழு வருடங்களாகச் செலவுசெய்த பணத்தைத் தாருங்கள் என இராணுவத்தினர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். படையினர் வசம் உள்ள காணிகள் விடுவிப்புத் தொடர்பில் கடந்த வாரம் இராணுவமுகாமில் சந்திப்பு இடம்பெற்றது. அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முழங்காவிலில் உள்ள கஜு தோட்டம் விடுவிப்புத் தொடர்பில் ஆராயப்பட்டது. அந்தத் தோட்டத்தை விடுவிப்பதற்கு தற்போது படையினர் தயாராகவே உள்ளனர். அந்தப் பண்ணை 2010ஆம் ஆண்டு முதல் இன்றுவரை…

  4. யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இளநீர் வியாபாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. குறிப்பாக யாழ். நகர்ப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள், திருநெல்வேலி, மருதனார்மடம், சுன்னாகம், உரும்பிராய் உட்பட யாழ். குடாநாட்டின்பல்வேறு பகுதிகளிலும் இளநீர் வியாபாரம் அமோகமாக இடம்பெற்று வருகிறது. முன்னர் 50 ரூபா முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட இளநீரொன்று தற்போது 60 ரூபா முதல் 70 ரூபா வரை விற்பனையாகிறது. குருநாகல், கண்டி, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்களிருந்து எடுத்து வரப்பட்ட இளநீர்களேயே தாம் விற்பனை செய்வதாகவும் தற்போது வெளிநாடுகளுக்கு அதிக இளநீர்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் விற்பனைக்குத் தேவையான போதியளவு இளநீர்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக வியாபாரிகள் தெரிவி…

  5. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆட்டம் போடுவதற்கு இடமளிக்க முடியாது என சமூக நலன்புரி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இரனைமடுவில் பௌத்த சிலை நிர்மாணிப்பதனை தடுக்குமாறு கோரி வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விடயம் குறித்து சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் செயற்படுவதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் தயாரில்லை. இரணைமடு என்பது தமிழர்களுக்கு மட்டும் சொந்தமான பகுதி என நினைப்பது அவர்களின் முட்டாள்தனமாகும். மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அவற்றை அமுல்படுத்த அவர்கள…

  6. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படும் எந்தவொரு இராணுவ முகாமும்கிழக்கு மாகாணத்தில் இருந்து அகற்றப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர்கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எனினும் கிழக்கு மாகாணத்தில் உள்ள 64 இராணுவ முகாம்கள் டிசம்பர் மாதம் 31ம்திகதிக்கு முன் அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள்தெரிவித்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அகற்றப்படுவதாககூறப்பட்டுள்ளவை இராணுவ முகாம் அல்லவென்றும், அவை முகாம்கள் போன்று சிறியளவில்செயற்படுபவை என்றும் தெரிவித்துள்ள அவர் குறித்த சிறிய முகாம்கள் அனைத்தும்அகற்றப்பட்டு ஒரு இடத்தில் ஒன்றாக அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்…

  7. 26 ஆண்டுகளாக படையினர் வசமிருந்த வவுனியா கலாசார மண்டபம் எதிர்வரும் 24ஆம் திகதி கையளிக்கப்படும் என வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள நிலங்களை விடுவிப்பது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி வவுனியா இராணுவத் தலமையகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலமையில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போது வவுனியா கலாச்சார மண்டபம் , செட்டிகுளம் மெனிக்பாம் முகாம் பகுதி உள்ளிட்ட நிலங்களை மாவட்டச் செயலாளரிடம் கையளிக்க படையினர் சம்மதம் தெரிவித்தனர். இதன் பிரகாரம் கலாசார மண்டபம் எதிர்வரும்24ஆம் திகதி புதன்கிழமை கையளிக்கவுள்ளதாக படையினரால் வவுனியா மாவட்டச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த கலாசார மண்டபம் மீண்டும்…

  8. வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் முட்டாள்தனமானது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தேவைகளுக்கு அமைய இலங்கை மத்திய அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என அவர் தெரிவித்துள்ளார். இரணைமடுவில் புத்தர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரணைமடு பிரதேசம் தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தமானது என அவர்கள் நினைப்பது முட்டாள்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் ஆட இடமளித்து நாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க காணியில் இரணைமடுவில் புத்த…

  9. சம்பூர் பகுதியில் மீளக்குடியேறிய, கணவனை இழந்த 41 பேருக்கு, கனேடியத் தமிழர் பேரவை மற்றும் திருகோணமலை நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து, அமைத்துள்ள தற்காலிக வீடுகளில் 23ஐ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பயனாளிகளிடம் கையளித்தார். இத்திட்டத்தின் இணைப்பாளர் இ.கைலைவாசனின் தலைமையில், இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பயனாளிகளிடம் வீடுகளுக்கான சாவிகள் வழங்கி வைக்கப்பட்டன. 250,000 ரூபாய்கள் செலவில் 250 சதுர அடிகள் கொண்டதாக இவ்வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசி…

  10. சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலை புலி இயக்க உறுப்பினர்களுக்கு, புனர்வாழ்வு நடவடிக்கைகளின் போது விஷ ஊசி செலுத்தப்பட்டதாகவும், அதனால் பலர் சந்தேகத்துக்குட்பட்ட முறையில் இதுவரையில் மரணமடைந்துள்ளதாகவும் கூறி வடமாகாணசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு ஆகும். இப்படி சுமார் 105 பேர் மரணமடைந்துள்ளதாகவும் ஒரு தகவல் கூறப்பட்டது. இதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழுவிலும் ஒரு முன்னாள் போராளியால் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் மாகாணசபையின் அமைச்சர் திரு. டெனிஸ்வரன் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருவதையும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். எனவே இதுபற்றி, தேசிய சகவாழ்வு அமைச்சர் என்…

    • 14 replies
    • 2.6k views
  11. மனிதாபிமானத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளாகிய எங்கள் விடுதலைக்குவிரைந்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வேறு வழிகள் எதுவும் இன்றிசாத்வீகப் போராட்டத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம். அரசினால்உருவாக்கப் பட்ட சிறப்பு நீதிமன்றத்தையும் புறக்கணிப்புச் செய்ய வேண்டியதுர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதனை மிகவும் வேதனையுடன்தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் தமது உறவினர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ளசெய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- நல்லாட்சி அரசின் 8 மாதங்கள் நிறைவடைந்த வேளையிலும் கூட, அரசியல் கைதிகளாகியஎமது விடுதலைக்கான முயற்சி…

  12. வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையோ, புத்தர் சிலைகளையோ அகற்ற முடியாது என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு செய்ய தான் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பிரதேசங்களில் சைவ ஆலயங்களுக்கான காணிகளையும், தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளையும் அடாத்தாகப் பிடித்து அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்க ப்பட்டுவருவது தொடர்பில் நேற்று கிளிநொச்சிக்கு சென்றிருந்த அமைச்சர் சுவாமிநாதனிடம் மக…

    • 9 replies
    • 482 views
  13. கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை மறுதினம் திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து கரடிப் போக்கு சந்தி வரை இடம்பெறவுள்ள இந்தப் பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பில் ஆராயும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. தமிழர் தாயகத்தில் உள்ள மக்களின் மனங்களை புண்படுத்தி நல்லிணக்கத்திற்கு குந்தமாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்களை உடனடியாக நிறுத்துமாறும் பௌத்தர்கள் இல்லாத பிரதேசத…

    • 1 reply
    • 259 views
  14. தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் குழந்தைகளான 55 மாணவ-மாணவிகளின் பள்ளி தஸ்தாவேஜுகளில் குடியுரிமைக்கான ஆதாரங்கள் இல்லாமல் இருந்த காரணத்தினால் அச்சிறுப்பாக்கம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சென்னை பிரைட் தொண்டு நிறுவனம் இலங்கையை சேர்ந்த ஞானதீபன், ஞானநேந்திரன், ஞானராஜா இவரது சகோதரர்கள் இணைந்து நடாத்தி வருகின்றனர். இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இலங்கை அகதிகளின் குழந்தைகளை தங்க வைத்துள்ளனர். அந்த வீட்டில் தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் குழந்தைகள், பெங்களூரில் உள்ள அகதிகளின் குழந்தைகள…

  15. நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் சமமான அடிப்படை உரிமை வழங்கப்படாதபோது, அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினால் பயனேதும் இல்லை என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் இளவயது திருமணங்கள் இடம்பெறுவது, திருமணங்களின் போது பெண்களின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் விவாகரத்து நடைமுறைகளில் சம உரிமையின்மை, நிபந்தனைகளற்ற விதத்தில் அமைந்துள்ள பலதார திருமண முறைமை, ஒருதலைப்பட்சமான நஷ்ட ஈட்டு கொடுப்பனவு முறைமை போன்ற பல்வேறு வழிகளில், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள், முஸ்லிம் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, கடந்த…

  16. இலங்கையில் சிறுவர்கள் மீது 10732 துஷ்பிரயோக சம்பவங்கள் கடந்த வருடத்தில் மாத்திரம் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் சந்திரானி பண்டார மேலும் குறிப்பிடுகையில்க டந்த வருடம் நாடு முழுவதும் 10732 சிறுவர்கள் மீதான துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி 74 சிறுவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் பாரதூரமான விதத்தில் பதிவாகியுள்ளன. இவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில் குறித்த 74 சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்க மறியலில…

  17. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு பல கோடி ரூபாய்களுக்கு பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து வெற்றிபெற சிலர் கனவு கண்டதாக அவர் கூறியுள்ளார். நல்லாட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் முற்போக்கு கூட்டணியினரால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறினார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை வேட்பாளராக போட்டியிடுமாறும் அமைச்சர் திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்னன் ஆகியோரை தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பேரம் பேசப்பட்டதாக அவர் கூறினார். இதற்காக பல கோடி ரூபாய்களை தமக்கு வழங்குவதற்கு ஒரு கும்பல் முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்க டந்த 2005ம் ஆண்டில் விடு…

  18. யாழ்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்களை யாழ் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாழ் நீதிமன்ற நிதிபதி இழஞ்செழியன் பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் யாழ் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலை, முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளை சேர்ந்த 3 மாணவர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=163894&category=TamilNews&language=tamil

  19. வெளிநாடொன்றில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக, கட்சியின் மாநாட்டை புறக்கணிக்கும் மஹிந்த, ஐரோப்பாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் மஹிந்த ராஜபக்ச ஐரோப்பிய நாடு ஒன்றில் வைத்து கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய விஜயங்களில் மஹிந்த ராஜபக்ச ஒரு நாட்டின் தலைவர் என்ற பாதுகாப்பு அவருக்கு கிடைத்தமையினாலே அவர் கைது செய்யப்படவில்லை. எனினும் இறுதியாக பிரித்தானியாவிற்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தில் ஸ்காட்லாந்து யார்ட் பொலிஸாரின் ஆலோசனைக்கமைய மஹிந்த ராஜபக்ச மற்றும…

  20. விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த 6 ஆயிரம் படையினர் காணாமல்போயுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இந்த 6 ஆயிரம் படையினருக்கு என்ன நடந்தது, என்ன செய்தார்கள் என்பது இதுவரை எதுவும் தெரியவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இலங்கை குடிமக்களுக்குமே பாதுகாப்பு படையினர் உயிர்களை தியாகம் செய்து அமைதியை பெற்றுக்கொடுத்ததாகவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=163838&category=TamilNews&language=tamil

  21. நாங்கள் கடந்த ஒருவருடமாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இனியும் எம்மால் பொறுமையாக இருக்க முடியாது. தயவுசெய்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு எதிரணிக்கு தந்துவிடுங்கள் என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் நாங்கள் பல தடவைகள் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம்.51 உறுப்பினர்களுடன் செயற்படும் எமக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும். இந்தியா மற்றும் பிரிட்டனாக இருந்திருந்தால் இந்நேரம் எமது எதிரணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். …

  22. இற்றைக்கு பத்து ஆண்டுகளின் முன்னர் ஈழத்தின் வடக்கில் நான்காம் கட்ட ஈழப் போர் மூண்ட நாட்களில் நடந்த மிகப் பெரிய மனித உரிமை மீறல்களாக அருட்தந்தை ஜிம்பிரவுண் அடிகளார் காணாமல் போகச் செய்யப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனம் சிவமகாராஜா சுட்டுக்கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. ஜிம் பிறவுண் அடிகளார்: அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டிருந்த அருட்திரு ஜிம் பிறவுண் அடிகளார் தனது உதவியாளருடன் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 20 2006 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து அல்லைப்பிட்டிக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது காணாமல் போகச் செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு அல்லைப்பிட்டி சென்றதற்கான பதிவும், பிற்பகல் 1.50 மணிக்க…

  23. யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை போதைவஸ்துக்கு அடிமையாக்கி கல்வியினை சீர்குலைக்கும் முயற்சியில் கஞ்சாவிற்பனை செய்யும் குழு ஒன்று தொடர்பான தகவல் கசிந்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதியை அண்டிய பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மாணவர்களிற்கு கஞ்சாவிற்பனை செய்வதாகவும் அவர் பருத்தித்துறைப்பகுதியில் இருந்து கஞ்சா வினை எடுத்து வந்து விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியான கொக்குவில் பகுதியில் வைத்து கடந்த 18 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு நான்கு கிலோக்கிராம் கஞ்சாவினைக் கைப்பற்றிய மதுவரித்தி ணைக்களத்தினர் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு முன்பாக வசிப்பவர் எனத…

    • 0 replies
    • 260 views
  24. ஜேர்மனின் பிரேன்போர்ட் விமான நிலையத்தில் இருந்து, 261 பயணிகள் மற்றும் 14 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட ஸ்ரீலங்கா விமான சேவைக்கு சொந்தமான UL-554 விமானம் 15 மணித்தியாலயம் தாமதித்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இன்று (20) காலை ஜேர்மன் நேரத்தின்படி 6.20 புறப்பட்ட UL-554 விமானம் இன்று இரவு 7.22 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன. விமான சிப்பந்திகள் நேரம் தாமதித்து விமான நிலைத்திற்கு வருகைத் தந்ததனால் குறித்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/10462

    • 0 replies
    • 449 views
  25. யாழ்ப்பாணம் வடமராட்சிப் பிரதேசத்தின் உடுத்துறையில் இன்று மதுவரித் திணைக்களமும் கடற்படையும் இணைந்து 130கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன் பெறுமதி 2கோடியே 60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேக நபர்கள் 5பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 130 கிலோ கஞ்சாவும் கொழும்புக்கு கடத்தப்படவிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி மணற்காடு பகுதியில் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடுத்துறை பகுதியில் 30 கிலோ கஞ்சா கடத்திவந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட கஞ்சா பொதிகளும், கைதானவர்களும், படகுகளும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்…

    • 0 replies
    • 252 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.