ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு மற்றும் அடிப்படை பிரச்சினைகள் விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அதுல் கெஷாப்பிடம் தாம் சுட்டிக் காட்டியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கூறினார். இலங்கை எதிர்f;கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அதுல் கெஷாப் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர். யாழ்.மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதுல் கெஷாப் தலமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர். …
-
- 0 replies
- 302 views
-
-
- 36 -வடமலை ராஜ்குமார் சாம்பல் தீவுச் சந்தியிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் சுற்றளவில், பௌத்த மதத்தைச் சேர்ந்த எவருமே இல்லாதபோது, அந்தச் சந்தியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது ஏன் என்று கேட்டுள்ள உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் க.காந்தரூபன், இந்த விவகாரம் நல்லாட்சியைக் குழப்புவதற்கான சூழ்ச்சியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் (உப்புவெளி) தலைவராக இருந்து இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை அனுபவ ரீதியாக அறிந்திருந்தவன் என்ற அடிப்படையில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.…
-
- 6 replies
- 810 views
-
-
கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணையொன்றில் வெளிப்பட்ட இரு வேறு சட்ட விரோத கொடுக்கல், வாங்கல்கள் தொடர்பிலான விவகாரங்கள் குறித்து விமானப் பணிப்பெண்ணான நித்திய சேனாத்தி சமரநாயக்க நேற்று கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பிரதான சந்தேக நபரான அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை பிரதான நீதிவானும் கொழும்பு மேலதிக நீதிவானுமாகிய லங்கா ஜயரத்ன ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார் இந் நிலையிலேயே தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவரான குறித்த விமானப் பணிப்பெண் நேற்று கட்டுநாயக்க வ…
-
- 1 reply
- 393 views
-
-
கடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக நடக்கவில்லையென எங்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் இருவரும் ஒன்றுபட்டு தீர்மானம் எடுப்போம்' என மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். கட்சியின் தீர்மானத்துக்கமைய செயற்படவில்லையென மகளிர் அணித் தலைவி அனந்தி சசிதரன் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் வி.சிவகரன் ஆகியோர், கட்சியின் மத்திய குழுவால் பதவி இறக்கம் செய்யப்பட்டு, தொடர்ந்து 3 வருடங்களுக்கு சாதாரண உறுப்பினர் வரிசையில் வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளனர். இந்த தீர்மானம், வவுனியாவில் நடைபெற்ற மத்திய குழுத் தீர்மானத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனந்தியிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறி…
-
- 2 replies
- 694 views
-
-
நாட்டில் நிலவும் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிலையான நீதி மற்றும் நிலையான அமைதித் தீர்வு எட்டப்படுவதற்கு கூட்டாட்சி மாத்திரமே ஒரேயொரு வழி என வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த பதினெட்டு மாதங்களாக சிறிலங்காவில் ஆச்சரியப்படத்தக்க சில அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனவரி 2015ல், நீண்ட ஆண்டுகளாக நாட்டின் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் அதிபராக வரும் எண்ணத்துடன் நடத்திய அதிபர் தேர்தலில் எதிர்பாராத வகையில் தோல்வியுற்றார். இதன் பின்னா கூட்டணிக் கட்சிகளுடன் புதிய அரசாங்கம் ஆட்சியை அமைத்துக் கொண்டது. ஆழமான சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டாலும் கூட இக்க…
-
- 0 replies
- 307 views
-
-
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களினூடாக, கஞ்சா கடத்தல் சம்பவங்களை முறியடிக்கும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புலி முத்திரை குத்தப்படுவதாக உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன்மூலம், பெரும்பான்மையின பொலிஸ் உத்தியோகத்தர்களை விட திறமையாக செயற்படும் தமிழ் உத்தியோகத்தர்களின் திறமைகளை, மழுங்கடிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த மாத காலமாக பருத்தித்துறை, இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட கஞ்சா பொதிகளை விசேடமாக, தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைப்பற்றியிருந்தனர். குறிப்பாக வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்னவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இக்குற்றச்செயல்கள் இனங்காணப்பட்டு முறியடிப…
-
- 0 replies
- 557 views
-
-
'வடக்கில் இடம்பெற்றுவரும் சிங்களக் குடியேற்றம், இன அழிப்பின் ஓர் வடிவமாகவே பார்க்கிறோம். பௌத்த மயமாக்கலை ஓர் கலாசார படுகொலையாகவே நாம் நோக்குகின்றோம். அதனால், இதற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்' என யாழ்ப்பாணத்துக்கு திங்கட்கிழமை (15) விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுக்குழுவிடம், மாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க உயர்ஸ்தானிகர் தலைமையிலான தூதுக்குழுவினர், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களைச் சந்தித்து புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிவதற்கான சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். சுமார்; 1 ½ மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் சர்வேஸ்வரன் மேலும் கூறுகையில், 'தொடர்ந்து வந்த ஆட்சிகள் வடக்கு-கிழக…
-
- 0 replies
- 437 views
-
-
வாகரைப் பிரதேசத்தில் இறால் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்ள பல காடுகளை அழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகவுள்ளது என பால்ச்சேனை மீனவர் சங்கத் தலைவர் இ.இராசையா தெரிவித்தார். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமான போது அதில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கருத்துரை வழங்கும் போது! நாங்கள் தொழில் செய்ய ஆரம்பித்த காலம் தொட்டு இன்றுவரை மீன்பிடித் தொழிலையே மேற்கொண்டு வருகின்றோம். பனிச்சங்கேணி ஆற்றில் இறால், மீன் உற்பத்திகள் அதிகம் காணப்படுகின்றது. அதனை நம்பியே நாங்கள் எங்களது வாழ்க்கை நடா…
-
- 1 reply
- 622 views
-
-
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தைப் பகுதியில் வைத்து வீதியால் சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் இனம்தெரியதவர்களால் வான் ஒன்றில் நேற்று கடத்திச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு வழங்கிய அவசர தகவலையடுத்து, வெல்லாவெளி பிரதான வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் வானை நிறுத்த முற்பட்டபோது அவர்களின் சமிக்கையை மீறி தப்பிச் சென்றதாகவும் பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸார் வாகனச் சாரதி உட்பட இருவரை மீட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட நபர்கள் மூவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்திச்செல்லப்பட்ட மாணவியை தேடும்…
-
- 0 replies
- 400 views
-
-
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வடமாகாண அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு அனுமதி கோரி வடமாகாண முதலமைச்சரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை கடும் வாத பிரதிவாதங்களின் பின்னர் இன்று சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை கைதடியில் உள்ள வடமாகாண பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இம் அமர்விலேயே பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டது. கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற அமர்வின் போது, வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய குழு ஒன்றை அமைத்து விசாரிக்க சபையின் அனுமதியினை கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பிரேரணை கொண்டு வரப்பட்டது. குறித்த பிரேரணை தொடர்பில் சபையில் கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. நீண்ட நேர வாத பிரத…
-
- 0 replies
- 340 views
-
-
திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள சந்தை பகுதியை இராணுவத்தினர் நகரசபை அதிகாரிகளிடம் இன்று கையளித்தனர். 2010ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இச்சந்தை கட்டடம் நகரசபை அதிகாரிகளால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டது. 1997ஆம் ஆண்டு அப்போதைய நகரசபை தலைவராக இருந்த பெரியபோடி சூரியமூர்த்தி 65 இலட்சம் செலவில் இந்தச் சந்தைக் கட்டடத்தைப் புனரமைத்தார். இதனை 2000ஆம் ஆண்டு திறக்க முற்பட்ட காலப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை எழுந்திருந்தது. இதனைத் தொடர்ந்து குறித்த கட்டடம் திறக்கப்படாமலேயே இருந்து வந்தது. 2005ஆம் ஆண்டு கடற்படையினர் இச்சந்தை தொகுதியை கையகப்படுத்தி அங்கு முகாம் அமைத்து இருந்தனர். அவர்கள் 2010ஆம் ஆண்டு அகன்று செல்ல இலங்கை இராணுவத…
-
- 0 replies
- 567 views
-
-
மட்டக்களப்பில் இருந்து கடல் வழியாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 6 பேர், இன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர். இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்கள் குடிவரவு - குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 6 கடற்தொழிலாளர்கள் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி, வாழைச்சேனை கடல் வழியாக படகு ஒன்றின் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு பயணித்துள்ளனர். தொடர்ந்து 12 நாட்கள் படகில் பிரயாணித்த இவர்கள், அவுஸ்ரோலியா கடற்பரப்புக்குள் செல்லும்போது, படகு பழுதடைந்து 4 நாட்களாக கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து, அவுஸ்ரேலியா கடற்படையினர் இவர்களை மீட்டு கைது செய்ததுடன், அவர்கள் பயணி…
-
- 0 replies
- 352 views
-
-
கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்தி மையத்தை, வவுனியா தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தை நகரில் அமைப்பதா என்று இழுபறியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவுக்கு விஜயம் செய்த கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் மற்றும் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிகளாக வருகை தந்திருந்த அதிகாரிகள் சகிதம் வவுனியா பொருளாதார அபிவிருத்தி மையத்தை வவுனியா புறநகர்ப்பகுதியில் உள்ள மதகுவைத்தகுளம் மற்றும் வவுனியாவுக்கு வடக்கே மாங்குளம் நகரம் ஆகிய இரண்டு இடங்களில் அமைப்பதற்கான தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அமைச்சர்களும், …
-
- 2 replies
- 346 views
-
-
புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம். புலம்பெயர்ந்தவர்கள் எங்கள் மண்ணை மறந்து விடுவார்களோ! என்ற ஏக்கம் இப்போது மெல்லத் தணிந்து கொள்கிறது. நல்லூர்க் கந்தனின் மஹோற்சவத்தில் உங்களைக் காணும்போது நெஞ்சம் மகிழ்ந்து கொள்கிறோம். தேசம் கடந்து வாழ்ந்தாலும் வேர் விட்ட நிலத்தை மறக்க முடியுமா? என்பது போல புலம்பெயர் உறவுகள் தத்தம் குடும்பத்தோடு தாயகம் வந்திருப்பதும் நல்லூர்க் கந்தனின் மஹோற்சவத்தில் கலந்து கொள்வதும் ஆறுதலைத் தருவதாகும். அதேநேரம் இக் கடிதம் எழுத முனைந்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அதில் ஒன்று; இரட்டைப் பிரஜாவுரிமை என்ற விடயம் சம்பந்தமானது. புலம்பெயர்ந்திருக்கக்கூடிய தமிழ் உறவுகளே! நீங்கள் அனைவரும் உங்களின் பிரஜாவுரிமையை தாயகத்தில் பதிவு செய்து …
-
- 1 reply
- 853 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம் உள்நாட்டு முயற்சியாக கருதப்பட முடியாது, சர்வதேசத்தின் தேவைக்காகவே உருவாக்கப்படுகிறது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் இணைப்புச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தள்ளார். அவர் மேலும் கூறுகையில், காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் எழும் எதிர்ப்புக்களை சமாளிக்கும் நோக்கில்மே லோட்டமாக கொண்டு வரப்படும் திருத்தங்களினால் பயனில்லை. இதனால் இந்த சட்டத்தின் ஆபத்து எந்த வகையிலும் நீங்கப் போவதில்லை. இந்த சட்டத்தின் உள்ளடக்கத்தை நன்கு அவதானித்தால் அதன் ஆபத்தை புரிந்து கொள்ள முடியும்…
-
- 1 reply
- 325 views
-
-
நல்லூர் திருவிழா, மற்றும் நாக விகாரை ஆகிய தலங்களுக்குச் செல்லும் மக்கள் தாமரை பூக்களை விரும்பி வாங்குவதால் யாழ்நகரை அண்மித்த பகுதியான பண்ணை கடற்கரைப் பகுதியில் தாமரைப்பூ வியாபாரம் பிடித்துள்ளது. இப்பகுதியில் வவுனியா மற்றும் அனுராதபுர பகுதியில் இருந்து வரும் வியாபாரிளே இவ்வாறு வியாபாரத்தை ஆரம்பித்து உள்ளனர் . ஒரு பூவில் விலை 10 ரூபா முதல் விற்பனை செய்யப்படுகிறது. இப்பிரதேசத்தில் தமது ஓய்வு நேரங்களை கழிப்பதற்காக வரும் மக்கள் மற்றும் வெளிமாவட்ட உல்லாசப் பயணிகள் வந்து இறங்கும் முதல் இடமாக இருக்கின்றமையாலும் இப் பகுதியில் தாமரை பூ வியாபாரம் சூடு பிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கினறனர். http://www.onlineuthayan.com/news/16336
-
- 2 replies
- 652 views
-
-
காரைநகர் பகுதியில் காணாமல் போயிருந்த பாடசாலை மாணவியொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காரைநகர் திக்கரையை சேர்ந்த சண்முகராஜா துவாரகா என்ற 16 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் இரவு சுமார் எட்டு மணியளவில் வீட்டில் இருந்து குறித்த சிறுமி காணாமல் போயிருந்தார். இதனையடுத்து அவரை தேடி அவரது பெற்றோர் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து குறித்த மாணவியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் உறவினர்கள் இணைந்து ஈடுபட்டிருந்த போதும் குறித்த மாணவியை கண்டுபிடித்திருக்க முடியவில்லை. இந்நிலையி…
-
- 2 replies
- 628 views
-
-
யாழ் வேம்படிச் சந்திக்கருகில் உள்ள பிரதான வீதியில் நீர் குழாய் வெடிப்பொன்று ஏற்பட்டு நீர் கசிந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக யாழ் மாநகர சபையும் அக்கறை காட்டாது விட்டுள்ளது. http://www.onlineuthayan.com/news/16338
-
- 0 replies
- 305 views
-
-
உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள உரிமை கோரப்படாத பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் வகையிலான சட்டமொன்றை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அண்மைக்காலமாக நடத்திய விசாரணைகளின் போது உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் பணம் பற்றிய தகவல்கள் பெருமளவில் கிடைக்கப்பெற்றுள்ளது. உரிமை கோரப்படாத சொத்துக்கள், காணிகள், பணம் போன்றவற்றை அரசுடமையாக்குவதற்கு இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=163520&category=TamilNews&lan…
-
- 5 replies
- 701 views
-
-
இறுதிப் போரின்போது தமிழீழ விடுதலைப்புலிகள் சரணடைந்தமையின் பின்னணியில் இந்திய ரோ அமைப்புக்கு பாரிய பங்கிருந்ததாக நூல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் சரணடைந்தால், அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படாமல் சர்வதேச நாடுகளிடம் கையளிக்கப்படுவார்கள் என்று உறுதி மொழியை ரோ உளவு அமைப்பு வழங்கியிருந்தது. 'ராஜூவ் காந்தியின் கொலை' என்ற நூலில் அதன் ஆசிரியை லீனா கோபால் இதனை தெரிவித்துள்ளார். ஊடகவியலாளரான லீனா கோபால் ராஜூவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவரை செவ்விக்கண்டவராவார். 2009 ஆண்டு இறுதிப்போரின் இறுதி நாட்களில் விடுதலைப்புலிகளின் சரணடைதலை தெரிந்துக்கொண்ட ரோ அமைப்பு, இலங்கை அரசாங்கத்திடம் அவர்கள் கையளிக்கப்படமாட்டார்கள…
-
- 0 replies
- 389 views
-
-
தமிழ் மக்களுடன் தொடர்புடைய நல்லிணக்க செயற்பாடுகளை முறையாக அமுல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும், அதற்காக இலங்கை அரசாங்கத்தை மிகவும் அவதானமாக கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு 'ஒப்பரேஸன் பசுபிக் ஏஞ்சல் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் அமெரிக்காவுக் கும் இடையிலான தொடர்பு வரலாற்று முக்கியமிக்கதாகும் அதனைவிட அமெரிக்க மக்களுக்கும் யாழ். மக்களுக்கும் இடையிலான உறவு 200 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. 1832ஆம் ஆண்…
-
- 0 replies
- 276 views
-
-
தன் மீது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்டுவதற்கும், அதுபற்றிய விசாரணைகளில் வாக்குமூலம் அளிக்கவும், ரிவிர முன்னாள் பிரதம ஆசிரியர் உபாலி தென்னகோன் நாடு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளார். இந்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் தென்னகோனின் வாக்குமூலம் தேவை என்பதோடு நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணியாளர்கள் சார்ஜண்ட் பிரேம் தயானந்த உதலகமவிற்கு ரிவிர முன்னாள் எழுத்தாளர் உபாலி தென்னகோன் தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விக்கிரமதுங்க கொலை சம்பவத்திற்கு பின்னர்…
-
- 0 replies
- 296 views
-
-
இலங்கை – இந்தியா இடையே கைச்சாத்திடப்படவுள்ள வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கான (எட்கா) அடுத்த கட்ட பேச்சுகளில் பங்கெடுப்பதற்கு இந்திய அரசாங்கம் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா நேற்று தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் இருதரப்பினருக்கும் பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடிய வகையில் சாதகமான சூழ்நிலை களுடனான வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை உருவாக்க முடியுமெனவும் உயர்ஸ்தானிகர் சின்ஹா நம்பிக்கை தெரிவித்தார். ஒப்பந்தத்துக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் வெற்றி கரமாக முடிவடைந்துள்ள நிலையில் இதன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடரப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் …
-
- 0 replies
- 276 views
-
-
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு பகுதியில் மீதியாக உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர் பில் மீள்குடியேற்ற அமைச்சினால் விடுவிக்ககோரிய ஆயிரத்து 528 ஏக்கர் காணிகளில் 500 ஏக்கர் காணி களையே இராணுவத்தினர் விடுவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரியவருகிறது. வலி.வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் வரையில் வலி வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 5331.31 ஏக்கர் பொது மக்களுடைய காணிகளில் இது வரை 288.08 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மீதியாக 50 43.23 ஏக்கர் காணி இன்னமும் இராணுவத்தினர் வசம் உள்ளது. அந்த வகையில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆயிரத்து 528 ஏக்கர் காணிகளை வி…
-
- 0 replies
- 320 views
-
-
சிறிசேன - ரணில் அரசாங்கத்தால் தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது உலகத் தமிழர் பேரவை. காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கான அலுவலக சட்ட மூலத்தை இலங்கை அரசு நிறைவேற்றியமை உலகத் தமிழர் பேரவை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அந்த அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது குறித்து உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு: பொறுப்புக்கூறல் மற்றும் நீதி, நல்லிணக்கத்தின் முதல் படியாக இது அமைந்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சிறிசேன - ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் இந்த முயற்சி மூலம் காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கான ஆயிரக்கணக்கானவர்களின் நிலை என்னவென…
-
- 0 replies
- 405 views
-