ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
இந்திய இலங்கை பாலம் முற்றிலும் பொய் : ஜனாதிபதி இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் தலைமன்னாரிலிருந்து பாலமொன்று அமைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கமோ இலங்கை அரசாங்கமோ எந்தவிதமான கலந்துரையாடலையும் நடாத்தவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அத்தகையதொரு தேசத்துரோகமான நடவடிக்கையை அரசாங்கம் ஒருபோதும் செய்யாது என்பதுடன், அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் இத்தகைய கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தலவதுகொடை கனேலந்தை விகாரையில் நேற்று இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரவித்தார். தென் இந்தியாவில் நடைபெற்ற ஒரு மானிலத் தேர்தலின…
-
- 2 replies
- 325 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் இராணுவத்தினரால் சிகையலங்கார நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில், முறுகண்டி, இரணைமடுச்சந்தி, இயக்கச்சி ஆகிய இடங்களில் இந்த சிகையலங்கார நிலையங்கள் இயங்கி வருகின்றன. மாவட்ட சிகையலங்கார சங்கத்தின் கீழுள்ள சிகையலங்கார நிலையங்களில் 200 தொடக்கம் 250 ரூபாய் வரையில் சிகையலங்காரத்துக்கு கட்டணம் அறிவிடப்படும் நிலையில், இராணுவத்தினரின் சிகையலங்கார நிலையத்தில் 50 ரூபாய்க்கு சிகையலங்காரம் செய்ய முடியும். இராணுவத்தினரின் தேவைக்காக அமைக்கப்பட்ட இந்த சிகையலங்கார நிலையங்களில், கட்டணம் குறைவு காரணத்தால் பொதுமக்களும் செல்கின்றனர். இராணுவத்தினர் சிகையலங்கார நிலையம் நடத்துவதால் தங்களின் வாழ்வாதாரம்…
-
- 3 replies
- 345 views
-
-
இலங்கையில் குருநாகல் மாவட்டத்தின் தஹய்யாகமுவ மற்றும் தெனியாய பிரதேச வான்பரப்பில் நேற்றிரவு மர்ம ஒளி ஒன்றினை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் வேகத்துடன் குறித்த ஒளி மறைந்து சென்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒளி மறைந்து சென்ற சில நிமிடங்களில் புதுவகையான நறுமணம் ஒன்றை பிரதேசவாசிகளால் நுகரக் கூடியதாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நறுமணம் மல்லிகைப் பூவின் நறுமணத்தை ஒத்திருந்ததாகவும், இதனை நுகர்வதற்கு மிகவும் சிரமப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வண்டியின் சக்கரத்தை ஒத்ததாகவும்,சிவப்பு நிற தீப்பிழம்புகள் போன்று அதன் ஒளி காணப்பட்டதாகவும் இதனை நேரில் கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 336 views
-
-
கிளிநொச்சி – இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையை நிரந்தரமாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான நான்கரை ஏக்கர் காணி நிரந்தரமாக பறிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அச்சம் வெளியிட்டுள்ள ஆலய நிர்வாகம், குறித்த காணியை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கனகாம்பிகை அம்மன் ஆலயம் 1957 ஆம் ஆண்டு இரணைமடு குளத்தை தீர்த்தமாகக் கொண்டு யோகர் சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தம் காரணமாக கிளிநொச்சி உட்பட இரணைமடு பிரதேசத்தை விட்டு ஒட்டுமொத்தமாக மக்கள் மக்கள் இடம்பெயர்ந்திருந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு முதல…
-
- 2 replies
- 656 views
-
-
புறக்கோட்டையில் பிரபல ஆடை விற்பனை நிலையங்களுக்கு சீல் வைப்பு சட்டவிரோதமான முறையில் ஆடைகளை கொள்வனவு செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள 3 பிரபல ஆடை விற்பனை நிலையங்களுக்கு சுங்கத் திணைக்களத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பரிந்துரைக்கு அமைய, புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைக்கு பின்னரே மேற்படி மூன்று பிரபல ஆடை விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆடை விற்பனை நிலைய உரிமையாளர்கள் சுங்க அதிகாரிகளின் கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்க தவறியமையாலும் முறையான பற்றுச் சீட்டு மற…
-
- 7 replies
- 767 views
-
-
மலையகத்தில் புதிய அரசியல் அமைப்பு : தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம் மலையகத்தில் மீண்டும் ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நுவரெலியாவை மையமாகக் கொண்டே இவ்வமைப்பு உருவாக்கப்படவுள்ளது என்றும் அவ்வமைப்புக்கு தேசிய மக்கள் பேரவை என்று பெயரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. இது சம்பந்தமான, முக்கிய கூட்டமொன்று கடந்த 08ஆம் திகதியன்று நுவரெலியா நகரில் உள்ள வர்த்தகர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. முதல் சந்திப்பில், கடந்த காலங்களில் பிரதேச சபை தலைவர்களாக, உறுப்பினர்களாக, நகர மாநகர சபை உறுப்பினாகளாக இருந்தவர்களும் கலந்துகொண்டனர். …
-
- 0 replies
- 255 views
-
-
பாலியல் வல்லுறுவுக்கு குற்ற சாட்டுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மாத்திரம் போதும்: பாலியல் வல்லுறுவு வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மட்டும் போதுமானது என இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று புதன் கிழமை வாய் பேச முடியாத காது கேட்க முடியாத பெண்ணை கடத்தி பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் போதே அவ்வாறு சுட்டிக்காட்டினார். அது தொடர்பில் மேலும் தெரிவிகையில் , இத்தகைய குற்றங்கள் சாட்சியங்களோடு செய்யப்படுவதில்லை. எனவே பெண்ணின் சாட்சியத்தில் நீதிபதிக்கு திருப…
-
- 0 replies
- 203 views
-
-
வடமாகாண சபை விவகாரங்களில் அரசாங்கம் தலையிடு செய்வதில்லை – பிரதமர்: வடமாகாணசபை விவகாரங்களில் அரசாங்கம் தலையீடு செய்வதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வட மாகாண நிர்வாக விவகாரங்களில் தலையீடு செய்யும் எவ்வித திட்டங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் அரசாங்கம் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134834/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 124 views
-
-
காணாமற்போனோர் பணியகத்திற்கு தகவல் தருபவரின் இரகசியம் பாதுகாக்கப்படும்-அரசாங்கம் காணாமற் போனோர் தொடர்பாக அமைக்கப்படும் பணியகத்திற்கான சட்டமூலத்தினால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவித்த ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண, பணியகத்தில் தகவல் அளிப்பவர்களின் இரகசியத்தன்மை நிச்சயம் பேணப்படும் என்றும் உறுதியளித்தார். அத்துடன் பணியக விசாரணை நடவடிக்கைகள் நீதிமன்ற விசாரணைக்கு ஒப்பானதல்ல என்று கூறிய அவர், பணியக நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் …
-
- 0 replies
- 177 views
-
-
மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தோர் கைது செய்யப்படவேண்டும்- அமெரிக்கா இலங்கையில் மத சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும், எல்லா மக்களினதும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், உயர்மட்ட அரசாங்கத் தலைவர்களும் முன்வர வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான பிரிவினால், வெளியிடப்பட்டுள்ள, 2015ஆம் ஆண்டுக்கான அனைத்துலக மத சுதந்திர அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால…
-
- 0 replies
- 234 views
-
-
சந்திரிகா இன்று யாழ்.விஜயம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண முதலமைச்சர், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருடன் பொது நிகழ்வொன்றில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மழைநீர் சேகரிப்பதற்கான கருத்திட்டத்தை வடக்கு மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் மழைநீர் சேகரிக்கும் நீர்த் தாங்கிகளை பொதுமக்களிடம் கையளி…
-
- 0 replies
- 206 views
-
-
விசா காலம் நிறைவடைந்த பின்னரும் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்து தடுத்து வைப்பதற்கான முகாமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம்தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி தளத்தை அண்மித்த பகுதியில் இந்த தடுப்பு முகாம்அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 327 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த தடுப்பு முகாமிற்குஅமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/security/01/113788
-
- 1 reply
- 451 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளமை வெளிப்படையாக கூறப்படாவிட்டாலும் இலகுவில் அனைவருக்கும் புரிந்து விடக்கூடிய ஒன்றே. மஹிந்தவின் ஆட்சி காலத்தில் அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல்கள், போர்க்குற்றம், இன அழிப்பு, மனித உரிமை மீறல் என பல குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகளும் தற்போது இடம் பெற்று வருகின்றமை அறிந்ததே.இது இவ்வாறிருக்க மஹிந்த தனது ஆட்சி காலத்தில் மல்வத்த பீடத்தினை இரண்டாக பிளவு படுத்த முயன்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் வலுப்பெற்றுள்ளன. இது வரைக்காலமும் ரணிலால் மறைமுகமாகவும், நேரடியாகவும் காப்பாற்றப்பட்டு வந்த மஹி…
-
- 0 replies
- 464 views
-
-
சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா? அரசை தெளிவுபடுத்த உத்தரவிடமுடியாது-உச்ச நீதிமன்றம் தீர்ப்பு போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவார்களா எனபது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர தாக்கல் செய்த மனுவொன்றை தள்ளுப்படி செய்த பின்னர் தலைமை நிதிபதி ஸ்ரீபவன் இதனை அறிவித்தார். போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்…
-
- 2 replies
- 499 views
-
-
அவுஸ்திரேலிய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டுக்கான மக்கள் கணக்கெடுப்புக்காக இலங்கையை தமிழீழம் என்று குறிப்பிட்டுள்ளது. பல நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறி குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களின் நாடுகளை கணக்கெடுப்பின் போது அறிந்து கொள்ளுமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகாரம் மற்றும் வர்த்தக திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தது. இதனடிப்படையில், அவுஸ்திரேலிய புள்ளிவிபரத் திணைக்கள அலுவலகத்தில் இலங்கையை ஸ்ரீலங்கா என்றும் தமிழீழம் என்றும் 7107 என்ற இலக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான ரஞ்சித் சொய்சா என்பவர் அவுஸ்திரேலிய பிரதமர், பிரதிப் பிரதமர், அமைச்சர்கள், சட்டமா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கைய…
-
- 0 replies
- 389 views
-
-
காணமல்போனோர் அலுவலக சட்டமூலம் நாளை பாரளுமன்றில் காணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும்போது தேவை ஏற்படின் சர்வதேசத்திடம் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொள்ளமுடியும் என்று அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் இந்த காணமல்போனோர் குறித்த அலுவலகத்திற்கு சாட்சி வழங்கும் பாதிக்கப்பட்டோரின் இரகசியத் தன்மையை பாதுகாப்பதற்காக தகவல்களை பெற்றுக்கொள்வதில் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கின்றோம் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும…
-
- 1 reply
- 228 views
-
-
12 போர் விமானங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம் நாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடற்பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோககில் 8 தொடக்கம் 12 வரையான போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்தம் நோக்கில் ஓர…
-
- 3 replies
- 323 views
-
-
எஸ்.பி. திசாநாயக்க என்னதான் கூறினாலும் பஷில் செய்தது தவறு (ரொபட் அன்டனி) அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க என்னதான் கூறினாலும் ஜீ.ஐ குழாய்களை கொள்வனவு செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தவறு செய்திருக்கிறார். அதனை நான் மிகவும் தெ ளிவாக கூறுகின்றேன். இந்த விடயத்தில் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு எந்த தவறும் செய்யவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதாவது ஜீ.…
-
- 0 replies
- 336 views
-
-
மூன்று இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட கால வதிவிட வீசா : அரசாங்கம் அறிவிப்பு இலங்கையில் 3 இலட்சம் டொலர்களை வைப்பு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட காலத்துக்கான வதிவிட வீசாவை வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் அந்நியச் செலவாணிகளினை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு …
-
- 1 reply
- 302 views
-
-
தயா மாஸ்டர் சற்றுமுன்னர் கைது.! தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டர் என்றழைக்கழைப்படும் தயாநிதி சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, அவரை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல வவுனியா மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 5 இலட்சம் ரூபா காசுப்பிணை மற்றும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 அரச ஊழியர்களின் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், சரீரப் பிணை வழங்குபவர்களை நீதிமன்றம் பார்வையிட வேண்டும் என தெரிவித்து, அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு உத்தரவிட்டதுடன், அதுவரையில் தயா மாஸ்டரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பாலேந்திரன் சசி மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்…
-
- 0 replies
- 513 views
-
-
இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்ட பரவிப்பாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் இன்று புதன்கிழமை மீண்டும் குறித்த பகுதிகளில் உள்ள இராணுவ அதிகாரியை சந்திக்க சென்றிருந்தனர். சென்றிருந்த மக்களை, சிறிது நேரத்தில் அதிகாரி வருவார் என காக்க வைக்கப்பட்டதையடுத்து, இராணுவ மேயர் வெளியில் கலந்துரையாடல் ஒன்றுக்கு சென்றிருப்பதாகக் கூறி நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், குறித்த மேயர் வருகை தராததால் மக்கள் ஏமாற்றத்துடன், திருப்பியனுப்பப்பட்டனர். …
-
- 0 replies
- 257 views
-
-
சிசுவைக் கைவிட்ட தாய் கைது -செல்வநாயகம் கபிலன் யாழ். வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் பிறந்து 10 நாட்களேயான ஆண் சிசுவை பெட்டிக்குள் வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாயை இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டியைச் சேர்ந்த 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சிசு தனக்குப் பிறக்கவில்லையென்று கணவர் சண்டையிட்டமையால், சிசுவை வீதியில் விட்டுச் சென்றதாக அத்தாய்; கூறியுள்ளார். சைக்கிளொன்றில் வந்தவர்கள் சிசுவை அப்பகுதியில் வைத்துவிட்டுச் சென்றிருந்தனர். சிசுவை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இத…
-
- 1 reply
- 369 views
-
-
ஊமைப் பெண்ணைக் பாலியல் வல்லுறவு; சந்தேக நபர்களுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை ஊமைப் பெண்ணைக் கற்பழித்த நான்கு பேருக்கு யாழ் மேல் நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடூழிய சிறை விதித்து தீர்ப்பு வழங்கியது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஆடி மாதம் கைதடிப் பகுதியில் ஊமைப் பெண் ஓருவரை கடத்தி சென்று கற்பழித்த 4 பேருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்கள் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் குற்றவாளிகளுக்கு தலா 25000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நட்டயீடு கொடுக்குமாறும், அவற்றைக் கட்டத்தவறும் பட்சத்தில் மேலதிகமாக இரண்டரை வருடங்கள் சாதாரண சிறைத் தண்டணை…
-
- 0 replies
- 388 views
-
-
முன்னாள் போராளிகள் குறித்த சர்ச்சை: புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பதில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கவலை வௌியிட்டுள்ளார். அவர்களுக்கு இவ்வாறு இரசாயன ஊசியை உடலில் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், குறித்த முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும், இரசாயனம் க…
-
- 0 replies
- 469 views
-
-
யாழ்.திருநெல்வேலி பகுதியில் இளைஞர்கள் அட்டகாசம் யாழ் திருநெல்வேலி பகுதியில் கலாசாலை வீதி பாரதிபுரம் மைதானத்தில் இளைஞர்களின் அட்டகாசம் எல்லை மீறி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த மைதானத்தில் இரவு நேரங்களில் ஒன்று கூடும் இளைஞர்கள் கூச்சலிடுவதாகவும், பியர் பேன்ற மது பாவனையில் ஈடுபடுவதாகவும் இதனால் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் பெரிதும் சிரமப்படுவதாகவும் தெரிவிததுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் கவனமெடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர் http://onlineuthayan.com/news/16089
-
- 1 reply
- 253 views
-