Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இன்றைய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.: தியாகங்களின் பெறுமதி? ஜனதா விமுத்திப் பெரமுன (ஜே.வி.பி) ஆயுதப் புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென்று நம்பி, இரண்டு முறை ஆயுதக் கிளர்சியில் ஈடுபட்டது. இரண்டு தடவைகளும் படு மோசமான அழிவை சந்தித்தது - இறுதியில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களையும் இழந்து போனது. மகாவலியாற்றில் தினமும் சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. அதன் தலைவர் (ருகுணு) றோகண விஜயவீர படுகொலை செய்யப்பட்டார். அவர் அரை உயிரில் இருக்கும் போதே எரியூட்டப்பட்டதாகவே பின்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜே.வி.பியின் உறுப்பினர்களை அழித்தொழித்த விடயத்தில் உள்ளுக்குள்ளும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி அவர்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவல்லை. ஆனா…

      • Thanks
      • Like
      • Haha
    • 12 replies
    • 998 views
  2. யாழ் ஆரியகுளத்தடியில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர். இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை. டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. - சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.

  3. வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக கொட்டும் மழைக்கும் மத்தியில் நினைவேந்தப்பட்டது! 27 NOV, 2024 | 08:59 PM வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்…

  4. தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாமல், அனர்த்தங்களை எதிர்கொண்ட பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் - ஜனாதிபதி அறிவுறுத்தல் 27 NOV, 2024 | 04:53 PM தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டு செயற்படாமல் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களுக்கு சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதற்காக கீழ் மட்டத்திலிருந்து வலுவான பொறிமுறையொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள…

  5. 26 NOV, 2024 | 06:06 PM மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி மற்றும் மாவடிஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளதாக மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்தார. அப்பகுதியில் உள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்குச் சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர். இந்நிலையில், கடும் மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து, வயல் நிலங்கள் வ…

  6. 27 NOV, 2024 | 04:07 PM (நா.தனுஜா) இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த இரட்டைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறைக்குப் பதிலாக நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 'ஓரிரவு கொள்கை வீதம்' என அழைக்கப்படும் ஒற்றைக் கொள்கை வட்டிவீதப் பொறிமுறையை அறிமுகப்படுத்தியிருக்கும் இலங்கை மத்திய வங்கி, அதனை 8 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான இறுதி மீளாய்வுக்கூட்டத்தில் (6 ஆவது) மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பிலேயே மேற்குறித்த அறிவ…

  7. வடக்கின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெருமளவான வெள்ள நீர் வெளியேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களை நோக்கி கடந்து செல்வதனால் மக்கள் இடம்பெயரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அத்துடன் பலரது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கள் முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் …

  8. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் புகைப்படத்தை நீக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸார் அறிவுறுத்தல் 26 NOV, 2024 | 05:54 PM வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டிலான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பொலிஸார் இடைநுழைந்து அங்கிருந்தவர்களை அறிவுறுத்தியதற்கிணங்க, இயக்கத் தலைவரின் புகைப்படத்தை மறைத்து கேக் வெட்டி இன்று (26) கொண்டாடியுள்ளனர். வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணிக்குள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் …

  9. தமிழர் போராட்டத்தையும் ஜே.வி.பியின் போராட்டத்தையும் இணைத்து தமிழ் மக்கள் சித்தரிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் இந்த அரசாங்கம் கொண்டு வருவதாக கூறும் மாற்றமானது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான மாற்றமாக இருக்காது. தங்கள் ஆட்சியைப் பலமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கும், இந்த நாட்டைத் தனிச் சிங்கள நாடாக மாற்றும் மென்போக்கான நகர்வுகளாகவே அவை இருக்கும். எமது போராட்டத்தையும் ஜே.வி.பியின் போராட்டத்தையும் இணைத்து அதுவும் எமது தமிழ் மக்கள் சித்தரிப்பதென்பது நாமே நம்மை எண்ணி வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். மாவீரர் நாள் தொடர்பான அறிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமத…

  10. 27 NOV, 2024 | 11:31 AM நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருவதால் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள், இடர்ப்பாடுகள் தொடர்பில் அறிவிக்க தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேகமாக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் பேசும் மக்களுக்கள் 107 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அனர்த்தம் தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199814

  11. 27 NOV, 2024 | 09:12 AM நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு - கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது. அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புனாணை பகுதியில் புகையிரதப் பாதையை குறுக்கறுத்து நீர் அதிகரித்துச் செல்வதால் மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத சேவையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199797

  12. 26 NOV, 2024 | 05:36 PM வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை (25) முதல் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 120 ற்கும் மேற்ப்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளதுடன் அநேகமான குளங்கள் 90 சதவீதம் நீர் நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் வவுனியாக்குளம் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன் இன்று செவ்வாய்கிழமை (26) அதிகாலை முதல் மேலதிக நீர் வெளியேறி வருகின்றது. இதுவரை செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம்…

  13. 26 NOV, 2024 | 06:02 PM (இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். சட்டவாக்கத்துறையால் இயற்றப்பட்ட தீர்மானத்தையே ஆணைக்குழு செயற்படுத்துகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுத்தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இம்மாதம் …

  14. 26 NOV, 2024 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு நடைமுறையில் பிறிதொன்றை செயற்படுத்துவது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் குறை, நிறைகளை, இரண்டு மா…

  15. நூருல் ஹுதா உமர்- நாடு யுத்தம், அனர்த்தங்கள், அரசியல் நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற பலவற்றிலும் சிக்கித் தவித்த சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து நாட்டை மீட்க முஸ்லிம் அமைச்சர்களின் வகிபாகம் அதிகமாக இருந்துள்ளதை நாம் அறிவோம். இப்படியான நிலையில் அமைச்சரவைக்குள் முஸ்லிங்கள் உள்வாங்கப்பட்டமைக்கு காரணமாக முஸ்லிம் எம்.பிக்கள் அனுபவமற்ற தன்மை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கூறும் காரணங்கள் அவர்களின் வேட்பாளர்கள் அவர்களே குறைத்து எடை போடும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து அவர்கள் விடுபட்டு திறமையான பலரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்கள் அனுப்பியுள்ளார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் …

  16. தீர்வுத் திட்டம் குறித்து பேச தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு ! ShanaNovember 27, 2024 தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில், அவர்கள் அடுத்து வரும் காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பை உருவ…

  17. மோசமான காலநிலைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவேந்த தயாராகும் தமிழர் தாயகம் தமிழர் தேசத்தின் விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்று உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தமிழர் தாயகம் தயாராகியுள்ளது. வடக்கு, கிழக்கில் 25 இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படவுள்ளனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள், விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்கள் சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தலுக்குத் தயார் நிலையில் உள்ளன. இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும…

  18. புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை! ”தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை” என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை. அமைச்சு அதிகாரங்களை கையாள்வதில் மிகவும் திறமையான நபர்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். …

  19. உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு! -நளிந்த ஜயதிஸ்ஸ யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக்கூர அரசாங்கம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது என்பதுடன், தடைகளை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களை நினைவுக்கூர அரசாங்கம் அனுமதித்துள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரி…

  20. கொழும்பு-யாழ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு November 27, 2024 09:12 am யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று (27) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அக்குரஸ்ஸ, இம்புல்கொடவில் படகில் ஏறி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 16 வயது மாணவன் ஒருவரை 20 வயது இளைஞன் காப்பாற்றியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. களனி கங்கை நிரம்பி வழிவதால் க்ளென்கொஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில்வலா ஆறு நிரம்பி வழிவதால் பாணடுகம பிரதேசத்திற்…

  21. மோசமான வானிலையால் திருப்பி விடப்பட்ட ஆறு விமானங்கள்! மோசமான காலநிலை காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று இரவு தரையிறங்கவிருந்த 06 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மூன்று விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. மீதமுள்ள மூன்று விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. https://athavannews.com/2024/1410036

  22. மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – அரசாங்கம்! வடக்கு-கிழக்கிலுள்ள மக்கள் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் உள்ளது, எனினும் அவற்றில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அந்த அமைப்பின் சின்னங்கள், சீருடைகள் அல்லது அங்கத்தவர்களின் படங்களைப் பயன்படுத்தி கொண்டாட்டங்களை நடத்த முடியாது. எனவே, நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட…

      • Thanks
      • Sad
      • Like
    • 11 replies
    • 767 views
  23. நிதி அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிடுவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஒக்டோபர் மாதம், ஸ்ரீலங்கன் விமான சேவையை …

  24. 26 NOV, 2024 | 05:03 PM பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்காக எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படுவதை உறுதிசெய்வதற்காக ஐக்கிய நாடுகளின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் காணாமல்போனவர்கள் அலுவலகத்தை மாற்றுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும், நாட்டின் பல மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காணவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ( நவம்பர் 18) சர்வதேச மனித உரிமை க…

  25. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை! நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அதன்படி இன்று முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 170 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவிலும் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து நாளை மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.