Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 26 NOV, 2024 | 06:02 PM (இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். சட்டவாக்கத்துறையால் இயற்றப்பட்ட தீர்மானத்தையே ஆணைக்குழு செயற்படுத்துகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுத்தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இம்மாதம் …

  2. 26 NOV, 2024 | 05:29 PM (இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு நடைமுறையில் பிறிதொன்றை செயற்படுத்துவது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் குறை, நிறைகளை, இரண்டு மா…

  3. நூருல் ஹுதா உமர்- நாடு யுத்தம், அனர்த்தங்கள், அரசியல் நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற பலவற்றிலும் சிக்கித் தவித்த சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து நாட்டை மீட்க முஸ்லிம் அமைச்சர்களின் வகிபாகம் அதிகமாக இருந்துள்ளதை நாம் அறிவோம். இப்படியான நிலையில் அமைச்சரவைக்குள் முஸ்லிங்கள் உள்வாங்கப்பட்டமைக்கு காரணமாக முஸ்லிம் எம்.பிக்கள் அனுபவமற்ற தன்மை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கூறும் காரணங்கள் அவர்களின் வேட்பாளர்கள் அவர்களே குறைத்து எடை போடும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து அவர்கள் விடுபட்டு திறமையான பலரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்கள் அனுப்பியுள்ளார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் …

  4. தீர்வுத் திட்டம் குறித்து பேச தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு ! ShanaNovember 27, 2024 தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில், அவர்கள் அடுத்து வரும் காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பை உருவ…

  5. மோசமான காலநிலைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவேந்த தயாராகும் தமிழர் தாயகம் தமிழர் தேசத்தின் விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்று உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தமிழர் தாயகம் தயாராகியுள்ளது. வடக்கு, கிழக்கில் 25 இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படவுள்ளனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள், விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்கள் சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தலுக்குத் தயார் நிலையில் உள்ளன. இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும…

  6. புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை! ”தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை” என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை. அமைச்சு அதிகாரங்களை கையாள்வதில் மிகவும் திறமையான நபர்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். …

  7. உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூர அனைவருக்கும் உரிமை உண்டு! -நளிந்த ஜயதிஸ்ஸ யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுக்கூர அரசாங்கம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது என்பதுடன், தடைகளை ஏற்படுத்த அரசாங்கத்துக்கு அனுமதியும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்களை நினைவுக்கூர அரசாங்கம் அனுமதித்துள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரி…

  8. கொழும்பு-யாழ் வீதியின் போக்குவரத்து பாதிப்பு November 27, 2024 09:12 am யாழ்ப்பாணம்-கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் இன்று (27) காலை பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அக்குரஸ்ஸ, இம்புல்கொடவில் படகில் ஏறி வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 16 வயது மாணவன் ஒருவரை 20 வயது இளைஞன் காப்பாற்றியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. களனி கங்கை நிரம்பி வழிவதால் க்ளென்கொஸ், கித்துல்கல, தெரணியகல மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில்வலா ஆறு நிரம்பி வழிவதால் பாணடுகம பிரதேசத்திற்…

  9. மோசமான வானிலையால் திருப்பி விடப்பட்ட ஆறு விமானங்கள்! மோசமான காலநிலை காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று இரவு தரையிறங்கவிருந்த 06 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மூன்று விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. மீதமுள்ள மூன்று விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. https://athavannews.com/2024/1410036

  10. மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – அரசாங்கம்! வடக்கு-கிழக்கிலுள்ள மக்கள் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் உள்ளது, எனினும் அவற்றில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அந்த அமைப்பின் சின்னங்கள், சீருடைகள் அல்லது அங்கத்தவர்களின் படங்களைப் பயன்படுத்தி கொண்டாட்டங்களை நடத்த முடியாது. எனவே, நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட…

      • Thanks
      • Sad
      • Like
    • 11 replies
    • 767 views
  11. நிதி அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிடுவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஒக்டோபர் மாதம், ஸ்ரீலங்கன் விமான சேவையை …

  12. 26 NOV, 2024 | 05:03 PM பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்காக எதிர்காலத்தில் வழக்கு தொடரப்படுவதை உறுதிசெய்வதற்காக ஐக்கிய நாடுகளின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஆதரவளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் காணாமல்போனவர்கள் அலுவலகத்தை மாற்றுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும், நாட்டின் பல மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காணவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ( நவம்பர் 18) சர்வதேச மனித உரிமை க…

  13. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை! நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அதன்படி இன்று முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 170 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவிலும் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து நாளை மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில…

  14. முடிவுகளை அறிவிக்க வேண்டாம் Editorial / 2024 நவம்பர் 14 , பி.ப. 06:13 - தேர்தல்கள் ஆணைக்குழுவினால், உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலும், உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என்று ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/முடிவுகளை-அறிவிக்க-வேண்டாம்/150-347131

  15. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயும் சேயும் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற திருமணமாகி 10 வருடங்களே ஆன இளம் தாயே மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். முன்னதாகவே குறித்த பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருந்த போதிலும் உரிய விதமாக கவனிக்கப்படவில்லை எனவும் பெண் தனக்கு சிசேரியன் செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாகவும், வைத்தியர்கள் இயற்கை முறையில் பிரசிவிக்க முயற்சித்த நிலையில் தாயும் பிள்ளையும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே குறித்த மரண…

  16. ரெலோவின் மத்திய குழுவை உடன் கூட்டுமாறு கோரிக்கை - ஜனாவுக்கு வந்த கடிதம் Vhg நவம்பர் 25, 2024 ரெலோவின் மத்திய குழுவை உடனடியாகக் கூட்டவும், அனைத்து மத்திய குழு உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் அழைப்பிதழ் அனுப்பவும் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் செயலாளர் நாயகம் கோ.கருணாகரமிடம்(ஜனா), கட்சியின் நிர்வாகச் செயலாளர் என்.விந்தன் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கை கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சி சார்பில் நானும் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுவதற…

  17. இந்திய விஜயத்தின் பின், ஜனாதிபதி சீன விஜயம் தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தலைவரும், புதிய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க, இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் இலங்கைக்கான சீன தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார் என என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். டிசெம்பர் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் ஜனாதிபதியாக பதவியேற்றபின்னர் அவர் மேற்கொள்ளும் முதலவாது வெளிநாட்டு விஜயம் எனினும், இதற்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, …

  18. அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்ட சனல்- 4 காணொளியில் பல சாட்சியங்களை வெளிப்படுத்தியிருந்த அஷாத் மவுலானாவை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான் மற்றும் முன்னாள் அரச புலனாய்வு பணிப்பாளர் சுரேஷ் சலே ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக அஷாத் மவுலானா சனல்- 4 காணொளியில் நேரடியாகத் தோன்றி வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பில், தற்போது சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அஷாத் மவுலானாவிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அவரை நாடு கடத்துமாறு இலங்கை …

  19. அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் மூலம் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுத்தியதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே, 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பாணை உத்தரவை பிறப்பித்தார். https://athavannews.com/2024/1409898

  20. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை! புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதை கருத்திற் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், கொழும்பு, பேஸ்லைன் வீதியில் வீதி விபத்தொன்றை ஏற்படுத்தியதுடன், மற்றுமொரு வாகன சாரதியை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விசாரணையில் இன்று நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகத் தவறியதையடுத்து, யாழ…

  21. 26 NOV, 2024 | 11:25 AM 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும் 2025 ஜனவரி 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 2025 பெப்ரவரி 17ஆம் திகதியும், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199701

  22. 26 NOV, 2024 | 10:18 AM நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையையடுத்து, ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக உரிய பரீட்சை நிலையங்களுக்கு செல்லமுடியாத க.பொ.த. உயர்தர மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பரீட்சார்த்திகள், அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் அவரச தொடர்பு இலக்கமான 117 க்கும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https:…

  23. வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது என அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும், அத்தகைய நினைவேந்தல் சட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழுவுடன் எந்த தொடர்பும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “விடுதலைப் புலிகள் ஒரு நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும், நவம்பர் 27 அன்று மாவீரர் நாளின் போது அவர்களின் …

  24. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படாமல் போனது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் அரசாங்கத்திற்கு சார்பாகவே செயற்பட்டிருப்பார். எனவே, அவர் தேர்தலில் தோல்வியுற்றது அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனக் கூறப்படுகின்றது. சுமந்திரன் தமிழ் மக்களின் உரிமைக்காக தீவிரமாக போராடியிருந்தால் தென்னிலங்கையில் அவருக்கு இந்தளவுக்கு ஆதரவு இருந்துருக்காது. இவ்வளவு காலமும் அரசாங்கத்துக்கு சார்பாக சுமந்திரன் செயற்பட்டதாலேயே அவரை வடக்கு மாகாண மக்கள் நிராகரித்த போதும…

      • Haha
    • 2 replies
    • 390 views
  25. அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் – சபாநாயகர் தெரிவிப்பு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் எனவும், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் இடம்பெற்றபோது சபாநாயகர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை. எனவே அது குறித்து கருத்துத் தெரிவிப்பதற்கு முடியாது. எவ்வாறு இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். …

      • Haha
    • 13 replies
    • 906 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.