ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143438 topics in this forum
-
ஆலயங்களின் வேள்விகளில் மிருகபலி கொடுப்பதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரை நீடித்துள்ளார். ஆலயங்ளில் மிருகபலி கொடுப்பதைத் நிறுத்துவதற்குத் தடை ஆணை கோரி அகில இலங்கை இந்து மசா சபையின் தலைவர் சிவக்கொழுந்து சோதிமுத்து தடையீட்டு எழுத்தாணை மனு ஒன்றை யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். வலிகாமம் வடக்கு வலிகாமம் தெற்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் மேற்கு மற்றும் கோப்பாய் பிரதேசசபைகளின் செயலாளர்கள், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், தெல்லிப்பழை, சங்கானை, உடுவில், சண்டிலிப்பாய், கோப்பாய் ஆகிய பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகரிகள் மற்றும் யாழ் பிராந்திய சுகாத…
-
- 0 replies
- 602 views
-
-
பசில் ராஜபக்ஷ கைது நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காகச் சென்ற, பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார். திவிநெகும திணைக்களத்தின் நிதியில், பிளாஸ்டிக் குழாய்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக்கக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/177316/பச-ல-ர-ஜபக-ஷ-க-த-#sthash.B1QcuJsE.dpuf
-
- 2 replies
- 354 views
-
-
தமிழரின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியும் : யாழில் ஜனாதிபதி நாட்டில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழ முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். கிளிநொச்சியில் ஜேர்மன் அரசின் நிதியுதவியுடன் 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை, ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தை இன்று காலை திறந்து வதை;து உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் கவலையளிக்கின்றது. இவ்வாறான மோதல்கள் மீண்டும் ஏற்படாத வகையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் நடவடிக…
-
- 0 replies
- 215 views
-
-
தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்குச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் இன்று (18) கலந்துக் கொண்ணடார். இந்த மாநாடு சிங்கப்பூரிலுள்ள ரெபல்ஸ் நகர மாநாட்டு மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/177334/த-ற-க-ச-ய-ப-லம-ப-யர-ந-த-ர-ம-ந-ட-ட-ல-#sthash.rZSNLQr9.dpuf
-
- 0 replies
- 306 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அண்டிய வீதிகளில் கூட்டமாகப் பயணிப்போரை மறிக்கும் பொலிஸார், அவர்களை விசாரணை செய்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த சனிக்கிழமை (16) இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவி, விடுதிகளிலிருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழுவாக வீதியால் செல்பவர்களை மறித்து விசாரணை செய்யும் பொலிஸார், ஆள் அடையாளத்தையும், உரிய காரணங்களையும் நிரூப…
-
- 0 replies
- 240 views
-
-
அரச நிறுவனங்கள் துறை அமைச்சர் கபீர் ஹாசிம், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் வர்த்தக வகுப்பு ஆசனத்தைப் புறக்கணித்து சாதாரண பயணிகள் வகுப்பு ஆசனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த வாரம் குடும்பத்துடன் இந்தியாவுக்கு சென்ற அவரை வர்த்தக வகுப்பு ஆசனத்தில் அமர்ந்து செல்லுமாறு கோரப்பட்டபோதும் வரிசெலுத்துவோரின் பணத்தில் தாம் பயணம் செய்யவிரும்பவில்லை என்று கூறி அதற்கு மறுப்புத்தெரிவித்து விட்டார். கபீர் ஹாசிமின் அமைச்சின் கீழேயே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூம் உள்ளடங்குகிறது. இந்தநிலையில் அவரும் மனைவியும் சாதாரண இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அமைச்சரின் இந்த நடவடிக்கை, அவரின் அமைச்சரவை சகாக்களுக்கும் அமைச்சின் பணிப்பாளர்களுக்கும் பாடமாக இருக்கும…
-
- 4 replies
- 462 views
-
-
லசந்த கொலை குறித்த சந்தேக நபரை விடுவிக்க கோதபாய முயற்சித்தாரா? சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான சந்தேக நபரை விடுதலை செய்வதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ முயற்சித்தார் என இணைய ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், காவல்துறை மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்டுள்ள சார்ஜன்ட் மேஜர் உதலாகமவை விடுதலை செய்ய கோதபாய ராஜபக்ஸ முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய கொலை செய்த கும்பலுக்கு இந்த இராணுவ சார்ஜன்டே தலைமை தாங்கியதாக க…
-
- 0 replies
- 489 views
-
-
சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் மைதானம் சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் மைதானமொன்று அமைக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார் 400 மில்லியன் ரூபா செலவில் மைதானம் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளில் மைதானம் அமைக்கும் பணிகள் பூர்த்தியாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 50 ஏக்கர் பரப்பில் இந்த மைதானம் அமைக்கப்பட உள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் எந்த பகுதியில் அமைப்பது என்பது குறித்…
-
- 0 replies
- 280 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயல்பாடு குறித்து விமர்சனம் மன்னாரில் நடைபெற்ற தடம் மாறுகின்றதா தமிழ்த்தேசியம் என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்துப் பகிர்வு நிகழ்வொன்றில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த அமைப்பின் முக்கியஸ்தர் சிவகரன் தலைமையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. சர்வதேச அரங்கில் சரியான முறையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னெடுக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தவறிவிட்டார்கள். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமையில்லை. கூட்டமைப்பின் கட…
-
- 2 replies
- 663 views
-
-
வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (15.07.2016) திறந்துவைத்துள்ளார். போசாக்கான பாரம்பரிய உணவுகளை நுகரும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு விவசாய அமைச்சு மாவட்டம் தோறும் அம்மாச்சி என்ற பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவகங்களை அமைத்து வருகிறது. ஏற்கனவே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திறந்துவைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக இயங்கிவரும் நிலையில், தற்போது கிளிநொச்சியிலும் அம்மாச்சி திறந்துவைக்கப்பட்டுள்ளது. 5.5 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுத் திறந்துவைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில…
-
- 10 replies
- 1.3k views
-
-
மன்னார் சென்ற சம்பந்தன் முன்னாள் ஆயரையும் சந்தித்தார். மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இன்று காலை மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்' என்னும் கருத்தாய்வு இன்று மன்னார் ஞானோதயம் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் பங்கேற்பதற்காக இன்று மன்னாருக்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று முன்னாள் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் தற்போத…
-
- 1 reply
- 566 views
-
-
திருகோணமலை- தோப்பூர், உப்பூறல் பகுதியில், இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். தமிழ், முஸ்லிம் குழுக்களுக்கிடையில், இன்று காலை 10 மணியளவில் இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் காயமடைந்தவர்களி்ல் நால்வர் சேருநுவர வைத்தியசாலையிலும் இருவர் மூதூர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணியை உரிமை கொண்டாடுவதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கைகலப்பாக மாறியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம…
-
- 8 replies
- 545 views
-
-
நெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கில் அங்கு காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெருக்குமரத்தைப் பசுமைச்சின்னமாகப் பாதுகாத்துப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இப்பெருக்குமரம் அரேபிய வர்த்தகர்களால் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டு தற்போது இலங்கையில் எஞ்சியிருக்கும் 40 வரையான மரங்களில் நெடுந்தீவில் உள்ள பெருக்குமரமும் ஒன்றாகும். தலைகீழான மரம்போல விசித்திரமான தோற்றத்தில் காணப்படும் இம்மரம் நெடுந்தீவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் ஒரு பசுமைச் சின்னமாக உள்ளது. இம்மரத்தை பாதுகாத்துப் பராமரிக்கும் நோக்குடன் முருகைக் கல்லினால…
-
- 1 reply
- 577 views
-
-
வடக்கு கிழக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் உதவுவோம் ஹரி ஆனந்தசங்கரி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி:- வடக்கு கிழக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு புலம்பெயர்ந்த கனடாவில் வாழ்கின்ற உறவுகள் நாம் தொடர்ந்தும் உதவுவோம் என கனடா பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியான வீ.ஆனந்தசங்கரியின் மகனுமான ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஞாயிற்று கிழமை கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் பல்கலைகழக மாணவர்களின் கல்விக்கான கடன் வழங்கும் நிகழ்வின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்குமபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். …
-
- 1 reply
- 357 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படும் இரா.சம்பந்தன், வவுனியாவுக்கு நேற்று வருகை தந்திருந்த நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘செருப்பு மாலை’ அணிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற - மாகாணசபைகளின் உறுப்பினர்களை, வவுனியா 02ம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதியில் சம்பந்தன் நேற்று சந்தித்திருந்தார். இந்தநிலையில் ‘வன்னிஇன்’ விருந்தினர் விடுதிக்கு முன்பாக மின்சார கம்பத்தில் சம்பந்தனின் உருவம் அச்சிடப்பட்ட பொம்மை காட்சிப்படுத்தப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. ‘தாண்டிக்குளத்துக்கு வாக்கெடுப்பு நடத்தும் உனக்கு, சர்வதேச விசாரணையா? உள்நாட்டு விசாரணையா? எ…
-
- 6 replies
- 667 views
-
-
கதிர்காமம் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் !! இன்று சரியாக 12 மணியளவில் கதிர்காமத்தில் இருந்து 7 மலை செல்லும் வழியில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது . இது தொடர்பாக தெரியவருவதாவது வாகனத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கதிர்காமம் 7 மலை பகுதியை சேர்ந்த வாகன சாரதிக்கு முந்தி செல்ல இடமளிக்கவில்லை என கூறியே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது எமது இடம் உங்களை யார் வர சொன்னது என தகாதவார்த்தையால் திட்டியதுடன் கத்தியை கொண்டு குத்துவதற்கு முயன்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இலக்கனா மட்டக்களப்பை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதுடன் வாகனமும் சேதமடைந்துள்ளது . தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கதிர்காம பொலிஸி…
-
- 6 replies
- 1.1k views
-
-
யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு ; சீ.சி.டி.வி காணொளி ரி.விரூஷன் யாழ் நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்து சுமார் 9 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று திருடிச்செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த புதன்கிழமை யாழ் நீதிமன்றத்துக்கு நபரொருவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதன் போது அவர் தனது மோட்டார் சைக்கிளை நீதிமன்றுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். நீதிமன்றுள் சென்று திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் அங்கு இல்லை. இதனையடுத்து யாழ் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பான முறைப்பாடொன…
-
- 3 replies
- 372 views
-
-
சலாவ இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கு வெடிப்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இவ்வாரம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் பாதிப்பு விபரங்கள் மற்றும் சேதங்கள், இழப்புகள் தொடர்பான மதிப்பீடுகள் தொண்ணூறு வீதம் முடிவடைந்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த விபரங்களின் அடிப்படையில் இந்த வாரத்துக்குள் ஐம்பது வீத இழப்பீட்டு வழங்கப்படவுள்ளது. எஞ்சிய இழப்பீடு இன்னும் சில வாரங்களுக்குள் வழங்கப்படவுள்ளது. சாலாவ முகாம் ஆயுதக் கிடங்கு வெடிவிபத்தின் போது 237 சொத்துக்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சேதத்தை எதிர்கொண்டிருந்தன. மேலும் 1794 ஆதனங்கள் ஒரு மில்லியனுக்கும் குறைவான சேதத்துக்குள்ளாகி இருப்பதாகவும் நிதியமை…
-
- 0 replies
- 165 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக மோதலின் போது படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் மாணவனை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று பார்வையிட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக மோதலில் படுகாயமடைந்த மாணவர் ஒருவர் முதலில் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறித்த மாணவனைப் பார்வையிட்டு நலம் விசாரிப்பதற்காக தேசிய மருத்துவமனைக்கு விஜயம் செய்திருந்தார். அத்துடன் குறித்த மாணவனின் பெற்றோருடனும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே உரையாடல் ஒன்றை மேற்கொண்டு அவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்த மோதலில் சுமார் 25 மாணவர்கள் காயமடைந்திருந்ததுடன், நான்கு மாணவர்கள் ய…
-
- 0 replies
- 399 views
-
-
"1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையின் வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டு தலைவர் என்ற ரீதியில் என்னுடன் சில முக்கியமான ஊடகங்களை அழைத்துச்சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு சொல்லியிருக்கிறேன்" என்று கொழும்பு திரும்பியவுடன் டேவிட் கமரோன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். நாம் ஒவ்வொரு தலைவர்களையும் சந்திக்கும் போது எனக்கு இருக்கும் ஆனந்தம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று. அப்படியான ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது தான் கமரோன் சந்திப்பும். வெறுமனே ஆனந்தம் மட்டுமல்லாது ஒரு அதிர்ச்சசியும் கூட நவம்பர் மாதம் 15 ம் திகதி யாழ்ப்பாணம் மிகப்பிரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது அதற்கும் மேலாக ஊடகவியாளர்கள் வேகமாக செயற்பட்டுக்கொண்டிருந்தோம் சர்வதேச நாடுகள…
-
- 0 replies
- 464 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைக்குச் செல்லாமல் பாடசாலை நேரங்களில் வீடுகளிலும் வீதிகளிலும் பொழுது போக்கும் பாடசாலை மாணவர்களை இனங்கண்டு, அவர்கள் மீதும் இதற்குக் காரணமாக உள்ள பெற்றோர்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களில் பல சிறுவர்கள் பாடசாலை செல்ல வேண்டிய வயதில் வீடுகளிலும் வீதிகளிலும் வீணாக பொழுதை போக்குகின்றார்கள். பாடசாலை மாணவர்கள் பலர் பாடசாலை செல்லாதமைக்கு அவர்களது பெற்றோர், பாதுகாவலர்களே காரணமாகவிருந்து செயற்படுவதுடன் அவர்களின் நோக்கங்களுக்காக இந்தச் சிறுவர்களைப் பயன்படுத்தி வருகின்றார்கள். சில பகுதிகளில் சிறுவர்களைப் பயன்படுத்தி சட்ட விரோத மதுபான விற்பனை, போதைவஸ்த்தை இடம் மாற்றுதல் போன்ற நடவடிக்…
-
- 0 replies
- 191 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையம் எதிர்வரும் வருடம் மூடப்படும் கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முக்கிய விமான ஓடுபாதைகள் எதிர்வரும் வருட ஆரம்பகால 3 மாதங்கள் புனரமைப்பு பணிகளுக்காக மூடப்படவுள்ளது. குறித்த விமான நிலையமானது எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை காலை 8.30 இலிருந்து மாலை 4.30 வரையான காலப்பகுதியில் விமான பிரதான ஓடுபாதைகளை மூடவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து அதிகாரச் சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.சீ.நிமல்சிரி தெரிவித்தார். இதன்படி, இரவு வேளைகளில் மட்டும் விமானச் சேவைகள் இடம்பெறுவதுடன் மாற்றுச் செயற்பாடுகளுக்காக மத்தளை சர்வதேச விமான நிலையம் பயன்படுத்தப்படவுள்ளதாகவ…
-
- 2 replies
- 455 views
-
-
யாழ். பல்கலையில் கலவரம் : வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களும் மூடல் ரி.விரூஷன் யாழ்ப்பாண பல்கலைகழத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைகழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்பட்டிருந்த முதலாம் வருட மாணவர்களுக்குகான வரவேற்ப்பு நிகழ்வில் வழமைக்கு மாறான முறையில் கண்டிய நடணத்தை நடாத்தமுற்பட்டதையடுத்து தமிழ் சிங்கள மாணவர்களிடையே முரண்பாடு ஏற்ப்பட்டு பாரிய கலவரமாக உருப்பெற்றிருந்தது. இவ் சம்பவத்தை…
-
- 0 replies
- 372 views
-
-
சபாநாயகர் கரு ஜெயசூரிய தற்போது சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று வருகிறார். கடந்த 10ம் திகதி அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் உரிய விடுகைப் பத்திரம் இல்லாமை காரணமாக அவரின் சிங்கப்பூர் பயணம் 10 மணித்தியாலங்கள் தாமதித்தே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் சுகவீனத்துடன் அவரை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதில் மருத்துவரீதியில் பிரச்சினைகள் இருப்பதாக எமிரேட்ஸ்அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே அவர் சிகிச்சை பெற்ற வைத்தியசாலையில் இருந்து மருத்துவ விடுகைப் பத்திரம் தேவை என்று அவர்கள் வலியுறுத்தினர். எனினும் கரு ஜெயசூரியவின்மகள், சுமார் 20 வருடங்கள் மருத்துவராக தொழில் செய்யும் நிலையில் தம…
-
- 0 replies
- 295 views
-
-
சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி கருணாகுழுவை கையாளும்பணியில் ஈடுபட்டவர் என ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் இராணுவ உளவுப்பிரிவின் முதலாம் தர அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். எனினும் நேற்று பிற்பகலே அவரின் கைது தொடர்பில் பொலிஸ் தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. பிரேமானந்த உடலகம என்ற இந்த அதிகாரி, சீஐடியினரின் தீவிரமான விசாரணையின்பின்னரே கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். இவர், மீது சாட்சியை கடத்தியதுடன் அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இரு…
-
- 0 replies
- 197 views
-