ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
இலங்கையின் மின்சாரத் துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 200 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதன் ஊடாக மின்சாரம் பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிக அளவில் ஒருங்கிணைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், வீடுகளுக்கு 100% மின்சார விநியோகத்தை இலங்கை அடைந்தது. மேலும், இந்த நாட்டில் மின்சாரத் தேவை 2023 ஆம் ஆண்டில் அதிகபட்சமாகப் பதிவு செய்யப்பட்டதுடன், அதன் அளவு 2800 மெகாவோட் ஆகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தது. இது 2030 ஆம் ஆண்டில் கணிசமாக வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஆம்…
-
- 0 replies
- 482 views
- 1 follower
-
-
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்நில பிரதேசங்கள், வீதிகள் மற்றும் வீடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை,சம்மாந்துறை மற்றும் பல பிரதேசங்களிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தாழ்நில பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் முழ்கிக் காணப்படுவதால் மக்கள் பிரயாணம் செய்வதில் பல கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 566 views
- 1 follower
-
-
25 NOV, 2024 | 09:15 AM யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். இந்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடியவேளை அவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/199597
-
- 0 replies
- 524 views
- 1 follower
-
-
25 NOV, 2024 | 02:09 PM இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன. இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/199632
-
- 0 replies
- 545 views
- 1 follower
-
-
முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன்அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020 இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன். தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிச…
-
- 0 replies
- 605 views
- 1 follower
-
-
றிப்தி அலி கடந்த நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரிய வெற்றியினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சுவீகரித்தது. செப்டம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் சுமார் 120 ஆசனங்களையே அக்கட்சி பெறும் என ஆய்வாளர்கள் எதிர்வுகூறியிருந்தனர். இந்த எதிர்வுகூறலுக்கு முற்றிலும் மாற்றமாகவே பொதுமக்களின் வாக்களிப்பு அமையப் பெற்றிருந்தது. இலங்கை வரலாற்றில் எந்தவொரு தனிக் கட்சியும் கைப்பற்றதாக 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பறியுள்ளது. இந்த எண்ணிக்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்ம…
-
- 0 replies
- 215 views
-
-
வேலணையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு adminNovember 24, 2024 தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தீவகம் வேலணை துறையூர் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதிப்பளிக்கப்பட்டனர் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் வேலனை துறையூர் சந்தியில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க வேலணை ஐயானார் சனசமூக நிலைய மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மாவீரர் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணியப்பட்டு கண்ணீர் மல்க மலர் வணக்கம் செலுத்தப்பட்டது அதனை தொடர்நது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களை கௌரவிக்க…
-
- 0 replies
- 757 views
-
-
வரலாறு படைத்த மேக சூரியாராச்சி! வியட்நாமில் அண்மையில் இடம்பெற்ற ‘Mr World 2024′ போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மேக சூரியாராச்சி (Megha Sooriyaarachchi) மக்களின் விருப்பத் தேர்வு விருதினை வென்றுள்ளார். இலங்கையின் கலாசாரத்தை பெருமையுடனும், அழகுடனும் வெளிப்படுத்தியமைக்காக ‘தேசிய ஆடைக்கான மக்கள் தெரிவு’ விருதினையும் அவர் வென்றுள்ளார். இதேவேளை இப் போட்டியின் இறுதி கட்டத்தில் இரண்டு விருதுகளைப் பெற்ற ஒரே போட்டியாளர் மேக சூரியாராச்சி எனக் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது மிஸ்டர் வேர்ல்ட் போட்டியின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றையும் மேக சூரியாராச்சி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.c…
-
- 0 replies
- 664 views
-
-
25 NOV, 2024 | 10:00 AM இலங்கையில் அதானி குழுமத்தின் ஆதரவுடனான துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு 500 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்த அமெரிக்க நிறுவனம் கௌதம் அதானி உட்பட அதானி குழுமத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து துறைமுக அபிவிருத்தி திட்டம் குறித்து ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் என்ற அமைப்பு இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு கடன்வழங்குவது குறித்து இன்னமும் இறுதிமுடிவை எடுக்கவில்லை என அதிகாரியொருவர்தெரிவித்துள்ளார். கடன் வழங்குவதற்கு முன்னர் திட்டத்தின் அனைத்து அம்சங்களும் எங்களின் கடுமையான தராதரங்களை பின்பற்றப்படுவதை உறுத…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
25 NOV, 2024 | 09:15 AM நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இன்று திங்கட்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ் வைத்தியசாலை செல்லவேண்டியவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கு காரணமாகும். https://www.virakesari.lk/article/199598
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
22 NOV, 2024 | 07:04 AM வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிற்கு மேலாக நாளையளவில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகின்றது. இதன் பிற்பாடு இது தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும். இந்த தாழ் அமுக்கமானது மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் கிழக்குக் கரையை அண்மித்ததாக நகர்ந்து செல்லக்கூடும். ஆனபடியினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மேலும் வழங்கப்படுகின்ற வானிலை எதிர்வுகூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொது மக்கள் வேண்டிக்கொள்ளப் படுகின்றனர் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும…
-
- 1 reply
- 199 views
- 1 follower
-
-
வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். பொலன்னறுவை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதை முழுமையாக வரவேற்கிறோம். தெற்கு அரசியல் கட்சிக்கு வடக்கு மக்கள் ஆதரவளித்துள்ளமை சிறந்த அரசியல் மாற்றமாகும். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எளிமையானவர், பாராளுமன்றத்த…
-
- 0 replies
- 69 views
- 1 follower
-
-
தமிழரசுக்கட்சியை வடக்கிலும் கட்டியெழுப்ப தயார்! தமிழரசுக்கட்சியினை வடக்கிலும் நாங்கள் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றோம். எங்களை அழைத்தால் அங்கு சென்று வடமாகாணத்திலும் தமிழரசுக்கட்சியை கட்டியெழுப்பவதற்கு தயாராகயிருக்கின்றேன் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பொறுப்பினை தந்தால் தமிழரசுக்கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டியெழுப்பியதுபோன்று ஏனைய மாவட்டங்களிலும் கட்டியெழுப்ப தயாராகயிருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் அதிகூடிய விருப்பு வாக்கினைப்பெற்று வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினராக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக…
-
- 5 replies
- 472 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு(Ramanathan Archchuna) எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடானது இன்றையதினம்(20.11.2024) சமூக செயற்பாட்டாளர் எல். எம்.ஏ.ஜி அதிகாரி என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகப்புத்தக நேரலை நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் வெளியிட்ட முகப்புத்தக நேரலை தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணொளியில், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கருத்தை தெரிவித்ததாகவும், மேலும் அவரது முக நூலில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு புகைப்படம் ஆகியவை தொடர்பாகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். https://tam…
-
-
- 49 replies
- 2.6k views
- 2 followers
-
-
மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு! சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. 2024 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. மாவீரர்களின் பெற்றோரால் பொது உருவப்படம் ஏந்திவரப்பட்டது. எழுச்சி கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன், வீதி வளைவும் அமைக்கப்பட்டு பெற்றோர் அஞ்சலி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலிக்கப்பட்டது. இதன்போது மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வி…
-
- 1 reply
- 714 views
-
-
(எம்.மனோசித்ரா) கடற்படையினரால் மேற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென்றும், இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடற்படையினரால் இலங்கையின் மேற்கு திசையின் ஆழ்கடலில் வியாழக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, 1650 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் ஹெரோயின் கடத்தலுக்கு பயன்படுத்திய பல நாள் மீன்பிடிப் படகுடன் வெள்ளிக்கிழமை (15) காலி துறைமுகத்துக்கு அழை…
-
- 4 replies
- 260 views
- 1 follower
-
-
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என மன்னார் வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி தர்மரட்ணம் பிரதீபன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை சுற்றி வரும் நவம்பர் 25 ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ச்சியடைந்து நாட்டின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என்று நம்பப்படுகிறது. காங்கேசன்துறை, திருகோ…
-
- 0 replies
- 595 views
- 1 follower
-
-
வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம் “யாழ் பாடசாலைகள் சில நேரடியாக வெளிநாடுகளிலிருந்து பழைய மாணவர் சங்கங்களுடாக நிதியைப் பெறுகிறார்கள். ஆனால் அவை எவ்வாறு செலவிடப்படுகின்றது என்ற பொறுப்புக் கூறல் எதுவும் அங்கில்லை. இது ஊழலுக்கே இட்டுச் செல்லும்” என ஆளுநர் நா வேதநாயகம், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள சில முன்னணிப் பாடசாலைகள் சட்டவிரோதமாக அன்பளிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் லட்சக் கணக்கிலும் அன்பளிப்புக் கோருகின்றனர். பாடசாலைகளில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுக்கும் மாணவர்களிடமோ ஆசிரியர்களிடமோ பணம் கோரக்கூடாது என அளுநர் அங்கு அழுத்தம் திருத்தமாகத் த…
-
-
- 5 replies
- 483 views
-
-
மழையால் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் வாழ்விடங்கள் பாதிப்படைந்த நிலையில் மூளாய்ப் பகுதி (ஜே/171) மக்கள் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து அவர்களது நிலைமை குறித்து கலந்துரையாடினர். அதன் பின்னர் கடற்றொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்றையதினம் காக்கைதீவு மற்றும் மூளைப் பகுதிகளுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினோம். அவர்கள் மிகவும் பாதிப்படைந்திருதிப்பதை நாங்கள் அவதானித்தோம். உண்மையில் இந்த நிலைமைகளுக்கு த…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான லெப்.சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார். அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந்நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மேற…
-
- 3 replies
- 298 views
- 1 follower
-
-
எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன்! இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது இது ஒரு வரவேற்கத்தக்கது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். இன்று (19) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த பாராளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எனக்கும் என்னுடைய குழுவினருக்கும் ஆதரவு நல்கிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியத்தை நேசி…
-
- 0 replies
- 254 views
-
-
56ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஜனாதிபதி Vhg நவம்பர் 24, 2024 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார். அநுர குமார தனது பாடசாலைக் கல்வியை தம்புத்தேகமை காமினி மகா வித்தியாலயத்திலும், தம்புத்தேகமை மத்திய கல்லூரியிலும் கற்றார். தனது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவராக விளங்கிய இவர் பாடசாலை நாட்களில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்ததோடு, அக்கட்சியில் 1987இல் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் …
-
- 0 replies
- 787 views
-
-
ஆயுதப்படையின் நினைவாக பொப்பி மலர் தினம் ஆயுதப்படையின் நினைவு தின நிகழ்வு முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் திங்கட்கிழமை (24) முற்பகல் நடைபெற்றது. முதலாம் உலகப் போரிலிருந்து இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் தியாகம் செய்த சிப்பாய்களை நினைவுகூரும் முகமாக இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தினால் இராணுவத்தினர் ஒத்துழைப்புடன் வருடாந்தம் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. நிகழ்விடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலங்கை இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்றோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெப்டினன் கேணல…
-
- 0 replies
- 582 views
-
-
யாழ் பல்கலையில் மாவீரருக்கு அஞ்சலி November 23, 2024 யாழ்.பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2024/208561/
-
- 2 replies
- 891 views
-
-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (21) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசின் நாடாளுமன்றக் குழுவுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199367
-
-
- 23 replies
- 1.3k views
- 2 followers
-