Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் பல்கலையில் மாவீரருக்கு அஞ்சலி November 23, 2024 யாழ்.பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2024/208561/

    • 2 replies
    • 891 views
  2. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (21) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசின் நாடாளுமன்றக் குழுவுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/199367

  3. நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் adminNovember 23, 2024 மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட குறித்த கல்வெட்டுக்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. மாவீரரின் தாய் ஒருவரால் கொடி ஏற்றப்பட்டு பின்னர் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது https://globaltamilnews.net/2024/208576/

  4. வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் பதவி மீள பெறப்பட்டுள்ளது adminNovember 24, 2024 வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் எம்.ஜெகூவின் பதவி,உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் மீளப்பெறப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மன்னார் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவருக்கும் பொறியியலாளருக்கும் இடையில் நீண்டகாலமாக ஏற்பட்ட…

  5. உத்தியோகப்பூர்வ குடியிருப்புக்களை கையளிக்காத 30 முன்னாள் எம்.பி.க்கள்! சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உத்தியோகப்பூர்வ குடியிருப்புகளை இன்னும் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டியுள்ள தேவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீடுகளை காலி செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றுமுன்தினம் (22) ஏழு எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை, முன்னாள் எம்.பி.க்கள் குறித்த குடியிருப்புகளை காலி செய்யாவிடின் அந்த குடியிருப்புகளுக்கான நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அண்மையி…

  6. 24 NOV, 2024 | 10:40 AM இந்த ஆண்டில் எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், 66 மீன்பிடி படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இந்நாட்டு மீனவர்களின் கடற்றொழில் சார்ந்த பிரச்சினைகள், குறைபாடுகளை தீர்ப்பதற்கும் கடற்படை அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199521

  7. ஆர்.ராம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைக் காணுதல் உட்பட பத்தம்சங்களை முன்வைத்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான ஜயசூரிய கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மக்கள் வழங்கிய ஆணையை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்பதோடு நாட்டில் தேசிய ஒற்றுமை, சாந்தி, சமாதானத்தினை நிலைபெறச்செய்து சுபீட்சமான நாட்டில் அனைவரும் அச்சமின்றி இலங்கையர்களாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதனடிப்படையில் பின்வரும் விடயங்களில் அதிகமான கவனத்தினைக் கொள்கின்றேன…

  8. ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குங்கள் - தேர்தல் பிரசார வாக்குறுதியை நடைமுறைப்படுத்துமாறு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வலியுறுத்தல் 23 NOV, 2024 | 09:09 PM (நா.தனுஜா) பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து செயற்படவேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஊடக சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், தகவல் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரான்ஸின் பாரிஸ் நகர…

  9. அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் – விஜித ஹேரத் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். …

  10. விரைவில் சுகாதார அமைச்சர் யாழ் வருவார் - அமைச்சர் சந்திரசேகர் நம்பிக்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சாத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரைய…

  11. 23 NOV, 2024 | 05:47 PM இந்தியாவும் இலங்கையும் கடந்த வருடம் கைச்சாத்திட்ட ஆவணத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பிடிஐக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். நானும் பிரதமர் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தில் இரண்டு நாடுகளிற்கும் இடையில் எந்த எந்த துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுக்கவேண்டும் என்பது குறித்து நாங்கள் தெரிவித்துள்ளோம், திசநாயக்க முன்னோக்கி செயற்படவேண்டும் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என நான் கருதுகின்றேன் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். https://ww…

  12. தமிழ்த்தேசியத்தை தமிழர்கள் கைவிட்டுவிடவில்லை; தமிழ்த்தேசிய ஆதரவு அரசியல்வாதிகள் பிரிந்து நின்றதன் விளைவே தேர்தல் முடிவுகள் - சி.வி.விக்கினேஸ்வரன் அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச்செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிடவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாதத்துக்கொரு கேள்வி - பதில் பகுதியில் 'தமிழ்த்தேசியம் அழிந்துவிட்டதா? தேர்தல் முடிவுகள் அதனை உறுதிப்படுத்…

  13. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள திகதி அறிவிப்பு! 13 SEP, 2024 | 01:30 PM 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/193581

  14. 23 NOV, 2024 | 09:15 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சீனத் தூதுவர் கீ சென் ஹொங் ஆகியோர் வெளியுறவுச் செயலாளர் ரணராஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவரது நியமனத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர்கள் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர். இந்திய உயர்ஸ்தானிகர் தனது சந்திப்பின் போது வெளிவிவகார செயலாளர் அருணி ரணராஜாவின் புதிய பொறுப்புக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், பரந்தளவிலான இருதரப்பு விவகாரங்கள் குறித்தும் பன்முகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சீன தூ…

  15. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 30 பேர் தங்களுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை மீள ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து உடமைகளை அகற்றி வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாசஸ்தலங்களை வழங்க வேண்டியுள்ளதாக தெரிவித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறித்த வீடுகளை மீள ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று (22) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் தங்களுடைய வாசஸ்தலங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை, குறித்த வீடுகளை ஒப்படைக்காவிடின், நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என பாராளுமன்றத…

  16. 23 NOV, 2024 | 07:32 PM மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக 2,045 குடும்பங்களை சேர்ந்த 7,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்மழை காரணமாக முறையற்ற கழிவு நீர் முகாமைத்துவத்தினால் மழை நீர் வழிந்தோட முடியாமல் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வழமையான வெள்ள பாதிப்புகளை அதிகமாக அனுபவித்து வரும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சாந்திபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர மக்கள் இம்முறையும் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அப்பகுதி மக்களின் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளதால் எழுத்தூர் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். …

  17. (இராஜதுரை ஹஷான்) வடக்கு மக்கள் இனவாதம், பிரிவினைவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்பட கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிப…

  18. சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு: வெளியானது அறிவிப்பு இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு அறிவித்துள்ளது. இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தம் நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையும் முகாமைத்துவமும் அங்கீகரித்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டு விரைவில் நான்காம் கட்ட கடன் வழங்கப்படும் என்றும் நான்காம் கட்ட கடனாக இலங்கைக்கு 330 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான கடந்த 17ஆம் திகதி இலங்கைக்கு வர…

  19. சட்டங்களை மீறாத வகையில் மாவீரர் நாளை நினைவு கூர காவல்துறை ஆலோசனை! November 23, 2024 நாட்டின் சட்டங்களை மீறாத வகையில் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்குமாறு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்த வருடம் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவால் நினைவேந்தல் செய்ய முடியாமல் போனது. இம்முறை பயங்கரவாத தடைச்சட்டத்தை மீறாத வகையில் நினைவேந்தல் செய்வதற்கான ஆலோசனைகளை சம்பூர் காவல்துறையினர் வழங்கி…

  20. கோடிக் கணக்கில் பண மோசடி யாழில் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறை யாழ்ப்பாணத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பதாக கூறி கோடிக்கணக்கான பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக இளையோரிடம் பணத்தினை பெற்று மோசடி செய்து வந்தமை தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளில், சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தினை மோசடியாக பெற்றமை, பண மோசடியில் ஈடுபட்டமை, அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக அடையாளப்படுத்தி மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்…

    • 1 reply
    • 724 views
  21. 13 பற்றி கதைக்கும் தருணம் இதுவல்ல; புதிய அரசமைப்பை உடன் இயற்றுங்கள்; சஜித் அணி வேண்டுகோள் “அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி கதைப்பதற்கான தருணம் இதுவல்ல. எனவே, வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணிகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்க வேண்டும். அதற்கு ஆதரவு வழங்கப்படும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா கூறியவை வருமாறு:- “13,14,15 என கதைத்துக்கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. நாட்டுக்குப் புதியதொரு அரசமைப்பு அவசியம். நாடாளுமன்றத்தில் இதனை செய்வதற…

  22. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 27 இல் மாவீரர் நினைவேந்தல் November 22, 2024 அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் 27 இல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அதற்கு ஆளும் அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழு நடாத்திய ஊடக சந்திப்பில் பணிக்குழுவின் தலைவர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை( குட்டிமணி மாஸ்டர்) ஆகியோர் இணைந்து தெரிவித்தனர். இவ் ஊடகச் சந்திப்பு பாண்டிருப்பிலுள்ள சமூக செயற்பாட்டாளர் இரா.பிரகாசின் இல்லத்தில் அவரது ஏற்பாட்டில் நடைபெற்றது. கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்த…

  23. விபத்தில் படுகாயமடைந்த யாழ் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2019 ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மகியங்கன வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்தனர். …

  24. நினைவாலய திறப்புக்கு அழைப்பு. 982 கார்த்திகை 27 லிருந்து 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில்,தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் , விபரங்கள் பெற்றுக்கொள்ள முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும், சில தகவல்களையும் உள்ளடக்கிய நினைவாலயம் இன்று (23) மாலை 6 மணிக்கு நல்லூர் தியாக தீபம் நினைவுத்தூபிக்கு முன்பாக மாவீர் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த வருடம் முல்லைத்தீவு, நல்லூர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட நினைவாலயங்களில், தங்களுடைய பிள்ளைகளின் பெயர்கள் தவறவிடப்பட்டதாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் பதியப்பட்டவர்களின் கல்லறைகளையும் கொண்டுதாக நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளத…

  25. உயிர் அச்சுறுத்தல் காரணமாக இடமாற்றம் கோரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதனால் உடனடியாக வடமாகாணத்திலிருந்து இடமாற்றம் வழங்குமாறு கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.ஹனிபா சுகாதார அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற தாயும் அவரது சிசுவும் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதிக் கோரி அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தநிலையில், மகப்பேற்று விடுதிக்குள் நுழைந்த குழுவொன்று வைத்தியசாலையின் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தமது கடிதத்தில் சுட்டிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.